Home Blog Page 5690

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்த சென்னை இளைஞர்

0

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்த சென்னை இளைஞர்

உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை லட்சத்தை எட்டியுள்ளது. இதில் நோய் பாதித்தவர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இது போன்ற உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஹேம்நாத்.

இவர் தயாரித்த ரோபோவை வயர்லெஸ் ஆப் பின் வசதியைக் கொண்டு இயங்க வைக் முடியும். இந்த ரோபோ கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவும் மருந்தும் கொண்டு தர உதவுகிறது.

அது மட்டுமின்றி அவர்களுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்பதை அந்த ரோபோவே ஆராய்ந்துக் கூறி விடும். மேலும் தனிமையில் வாடும் கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்த சென்னை இளைஞர்

அவர்களின் தனிமையைப் போக்கி அவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறது இந்த ரோபோ. இந்த ரோபோ மிகக் குறைந்தச் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனால் நோய் பாதித்தவர்களிடமிருந்து மருத்துவர்களும் செவிலியர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். இந்த அரிய கண்டுபிடிப்பை அரசாங்கத்தின் அனுமதிப் பெற்று அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவருடைய ஆசை.

இஎம்ஐ கட்டச்சொல்லி செல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறதா.? நீங்கள் இதை செய்யுங்கள் போதும்.!!

0

இஎம்ஐ கட்டச்சொல்லி செல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறதா.? நீங்கள் இதை செய்யுங்கள் போதும்.!!

வங்கி அல்லது தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடனுக்காகவோ அல்லது மற்ற தவணைகளுக்கோ இஎம்ஐ கட்டச் சொல்லி உங்கள் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்தால் அதனை உடனடியாக கட்ட வேண்டுமா அல்லது அரசு அறிவித்த மூன்று மாதங்களுக்கு பிறகு கட்டலாமா என்கிற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

வங்கியில் வாங்கிய கடனை 3 மாதங்களுக்கு பிறகு வட்டி இல்லாமல் செலுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்லமுடியாத நிலையும், ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இந்தியன் வங்கி சார்ப்பில் நடமாடும் ஏடிஎம் மக்கள் தேவைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பல இடங்களில் பொதுமக்கள் பணத்தை எடுத்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்றும் கூறினார்.

மேலும், ரிசர்வ் வங்கி அறிவித்தது போல் பொது மக்கள் தங்களின் தவணைத் தொகையை 3 மாதங்களுக்கு கட்டத் தேவையில்லை, கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிறகு கட்டலாம் என்று கூறினார். இந்த விதிமுறையானது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும், மேலும் மூன்று மாதம் கழித்து கட்டப்படும் தவணை தொகைகளுக்கு வட்டி மற்றும் இதர பிடித்தம் இருக்காது என்றும், மக்களுக்கு அரசு வழங்கி வரும் ஓய்வூதிய தொகை மற்ற சலுகை பணமும் அவரவர் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என்று தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்கள் மூலம் கடன் வாங்கிய நபர்களுக்கு இஎம்ஐ கட்டச்சொல்லி அந்தந்த நிறுவனங்கள் குறுஞ்செய்தி (SMS) அனுப்பி வருகின்றன. இந்நிலையில் அரசு அறிவித்த மூன்றுமாத கால அவகாசம் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்துமா என்ற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் நிறுவனங்கள் சிறிய விளக்கத்தை கூறியுள்ளன.

உங்களது மாத தவணையை கட்ட முடிந்தால் தற்போது கட்டிவிடுங்கள் பணம் இல்லாத நபர்கள் மூன்று மாதம் கழித்து கட்டலாம் ஆனால், 3 மாத கால அவகாசத்திற்கான வட்டி வசூலிக்கப்படும் என்று தனியார் நிறுவனங்கள் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகையால் கையில் பணம் வைத்திருக்கும் நபர்கள் வங்கிகணக்கு மூலமோ அல்லது ஆன்லைன் மூலமோ கட்டிவிடுவது நல்லது. மூன்று மாதம் கழித்து தவணை கட்ட நினைப்பவர்கள் வட்டியோடு கட்ட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ரிசர்வ் வங்கி அறிவித்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

0

ரிசர்வ் வங்கி அறிவித்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

உலக அளவில் வளரும் பொருளாதாரத்திற்கேற்ப வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மேலும் உலக அளவில் பெரிய வங்கிகளாக உருவாக்கவும் சமீபத்தில் பொதுத்துறை வங்கிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய வங்கிகள் பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன.

இந்நிலையில் மேலும் 10 பொதுத்துறை வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் இந்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடன் இன்று இணைகிறது. இனிமேல், அலகாபாத் வங்கிக்கிளைகள் அனைத்தும் இந்தியன் வங்கிக் கிளைகளாக செயல்படும்.

அதே போல் கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைகின்றன. அதனால், கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கிக்கிளைகள் இதற்கு பிறகு யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளைகளாக செயல்படும். மேலும் சிண்டிகேட் வங்கி இன்று முதல் கனரா வங்கியுடன் இணைகிறது. இனிமேல் சிண்டிகேட் வங்கிக்கிளைகள் அனைத்தும் கனரா வங்கிக் கிளைகளாக செயல்படும்.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கி ஆகியவை வங்கிகள் இன்று முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. மேற்கண்ட இந்த 2 வங்கிக் கிளைகளும் இனிமேல் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைகளாக செயல்படும். இந்த இணைப்பின் மூலமாக 10 பொதுத்துறை வங்கிகள் இணைந்து 4 வங்கிகளாக உருவாகிறது.

இந்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்பாணையை ஏற்கனவே ரிசர்வ் வங்கியானது வெளியிட்டுள்ளது. இந்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பைத் தொடர்ந்து, தற்போது நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைகிறது.

மேலும் இத்துடன், பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து நாட்டின் 2 வது பெரிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி உருவெடுக்கிறது. அதனையடுத்து பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை அதற்கு அடுத்தடுத்த இடங்களை பிடிக்கின்றன.

பத்திரிகையாளர் சந்திப்பில் முதல் முறையாக உலரிய முதல்வர் பழனிச்சாமி! என்ன சொன்னார் தெரியுமா?

0

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காட்டுத்தீ போல் பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இந்த அதிரடி உத்தரவை அடுத்து மக்கள் கூட்டம் கூடும் பொது இடங்களை மூடுமாறு முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

இதனால் உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு அம்மா உணவகம் புகலிடமாக இருந்துவந்தது. இவ்வாறு நாளுக்கு நாள் அம்மா உணவகத்தில் மக்கள் அதிகமாக வருவதால் இன்று முதல்வர் அம்மா உணவகம் ஒன்றில் அதிரடியாக ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் முதல்வர் பழனிசாமி அம்மா உணவகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், உணவருந்தும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் மக்கள் பயன்படுத்தும் தட்டுகள் சரியாக சுத்திகரிக்க படுகின்றனவா உணவகங்கள் சுகாதாரமாக இருக்கின்றனவா என்று பார்வையிட்டார்.

இதற்கிடையில் உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதனை செய்ய மக்களோடு மக்களாக சேர்ந்து தட்டில் உணவருந்தினார். ஆய்வு செய்ய வந்த முதல்வர் இவ்வாறு தங்களுடன் எளிமையாக உணவு அருந்தியது அங்கிருந்த மக்களை நெகிழச் செய்தது.

முதல்வர் செய்த இந்த ஆய்வுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அம்மா உணவகங்களில் தினந்தோறும் பொதுமக்கள் உணவருந்தி வருவதன் எண்ணிக்கை தவறாக கூறிய முதல்வர் பின்னர் அருகில் இருந்த அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டு ‘4 லட்சம் பேர் உணவருந்துகின்றனர்’ என்ற சரியான தகவலை அளித்தார்.

மேலும் பத்திரிகையாளர் பலர் அவரிடம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை, டெல்லி நிஜாமுதீன் கூட்டம் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு வரிசையாக பதிலளித்தார். இந்த ஆய்வின்போது முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

கொரோனா தடுப்பு: நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் நிதியுதவி!

0

கொரோனா தடுப்பு: நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனோ நிதியுதவியாக ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்தில் 144 தனைவிதித்த நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்பின்னர் வ இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இக்கட்டான சூழலில் நடந்து வந்தாலும், நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதிகள், தனிமைபடுத்த அவசிய வார்டுகள் மற்றும் பிற ஏற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செயல்படுத்தி வருகிறது. இதனிடையே மருத்துவ சிகிச்சை மற்றும் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதியுதவி அளிக்குமாறு அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் தடுப்பு முயற்சிக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாயை நிதி உதவியாக அளித்துள்ளார். இந்த நிதி தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பப்படும். சினிமா படப்பிடிப்பு தடை செய்யப்பட்டதால் அந்த துறையில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் 10 லட்சம் ரூபாயை சிவகார்த்திகேயன் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

அம்மா உணவகங்களில் அதிரடி விசிட்..! வெவ்வேறு இடங்களில் தமிழக முதல்வர் ஆய்வு!

0

அம்மா உணவகங்களில் அதிரடி விசிட்..! வெவ்வேறு இடங்களில் தமிழக முதல்வர் ஆய்வு!

கொரோனா பாதிப்பினால் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் உணவகங்கள் மூடப்பட்டு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட அம்மா உணவகம் இக்கட்டான சூழலில் மிகப்பெரும் ஆறுதலாய் அமைந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அம்மா உணவகங்களில் தமிழக முதல்வர் அதிரடி விசிட் செய்து வருகிறார். அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் தரமாக உள்ளனவா என்றும், உணவை தயாரிக்க போதிய சமையற் பொருட்கள் உள்ளதா என்றும் நேரடியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்கு முதல் சென்று உணவுகளின் தரம் மற்றும் ஆய்வினை மேற்கொண்டார். இதனையடுத்து கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவக பகுதியிலும் எடப்பாடி பழனிச்சாமி உணவு குறித்த ஆய்வுகளை தொடர்ந்து நேரடியாக களத்தில் இறங்கி மேற்கொண்டு வருகிறார்.

அம்மா உணவகங்களில் ஒரு நாளைக்கு மட்டுமே பல லட்சம் இட்லி மற்றும் சப்பாத்தி உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் ஓட்டல்கள் மூடப்பட்ட நிலையில் வீடில்லாத ஏழைகளும், வீடு இருந்தும் உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு அம்மா உணவகத்தின் சேவை அத்தியாவசியமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அதிபரை சந்தித்தவருக்கு கொரோனா தொற்று : புதின் நோயை பரப்பினாரா?

0

சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கு காட்டுத்தீ போல பரவியுள்ளது. இந்த நோய் தொற்றால் பல நாடுகளில் இதுவரை 8,56,917 நபர்களுக்கு பரவியுள்ளது, இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,107-ஐ கடந்துள்ளது.

உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவிலும் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இந்த வைரஸால் 2,337 நபர்களுக்கு பரவியுள்ளது, மேலும் 17 நபர்கள் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் வருகிறது.

இதற்கிடையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதின் கடந்த மார்ச் 24ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்துள்ளார். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் என அனைவரிடமும் தலைமை மருத்துவர் டென்னிஸ் புரோட்சென்கோவுடன் சந்தித்து பேசியுள்ளார்.

அந்த சந்திப்பில் குறிப்பாக டென்னிஸிடம் பேசும்போது அதிபர் பாதுகாப்புக்காக முகமூடி, கையுறை எதுவும் அணியாமல், கைகளை குலுக்கி இயல்பாக பேசியுள்ளார். அதிபர் புதினுக்கு பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கும் போது இவ்வாறு அஜாக்கிரதையாக நடந்து கொண்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் தலைமை மருத்துவர் டென்னிஸுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த இந்த சர்ச்சைக்குரிய சந்திப்பால் அதிபர் புதினுக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இதனால் அவசரஅவசரமாக புதினை தனிமைப்படுத்தி உள்ளனர் மேலும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக அதிபர் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தும் அமெரிக்கா! தினசரி அதிகரிக்கும் உயிரிழப்பு

0

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தும் அமெரிக்கா! தினசரி அதிகரிக்கும் உயிரிழப்பு

உலக நாடுகளில் பரவி பலாயிரம் உயிரை பலிவாங்கிய கொரோனா சீனாவில் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது சீனாவின் உயிர்பலியை விட அமெரிக்காவில் அதிக உயிரிழப்பு ஏற்படவுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு சீனாவை முந்தும் விதமாக இருந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக அமெரிக்காவில் கொரோனா தொற்று புதிதாக 18,000 பேருக்கு மேல் பரவியுள்ளது. உச்சகட்டமாக நேற்றைய முன்தினம் மட்டுமே 573 பேர் பலியாகினர். இதுவரை கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்ட ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,170 ஆகும். சீனாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,309 ஆகும். இதனால் விரைவில் சீனாவை அமெரிக்க முந்தும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் கொத்து கொத்தாக இறந்துபோனவர்களின் உடல்கள் குளிரூட்டிய வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்படும் காட்சி அனைவரையும் பீதி அடையச் செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த இரண்டு வாரத்தில் உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க அதிபர் கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் பேசியபோது; இன்றும் இரண்டு வாரங்களுக்கு அமெரிக்காவில் உச்சகட்டத்தை அடையலாம், இது சாவாலான நாட்கள் என்றாலும் எனது முதல் நோக்கம் மக்களைக் காப்பதுதான், இதன் பிறகே நம் பொருளாதாரம் காக்கப்படும் என்றும் நம் தியாகமும், நமது நம்பிக்கையுமே வைரசுக்கு எதிரான வெற்றியை தீர்மானிக்கும் என்று கூறினார்.

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் படுமோசமான உயிரிழப்பு நடந்து கொண்டிருந்தாலும், அங்கு தற்போது கொரோனா பாதிப்பு நோயாளிகள் குணமடைந்து வருவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. இந்த இரண்டு நாடுகளில் ஒரேநாளில் 1,701 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் 11 ஆயிரத்தையும், ஸ்பெயினில் 8 ஆயிரம் உயிரிழப்புகளையும் அந்நாடுகள் சந்தித்துள்ளன.

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,000 தாண்டியுள்ளது. மேலும் உலக நாடுகளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரம் பேரின் உடல்நிலை மோசமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களிடையே கொரோனா பற்றிய அச்சம் இன்னும் தணியவில்லை என்றே கூறலாம்.

மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்! – தமிழக அரசு அறிவிப்பு

0

மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்! – தமிழக அரசு அறிவிப்பு

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடனாக வாங்கிய தொகையை தவணையாக செலுத்தி வந்த நிலையில், இனி 3 மாதங்கள் இஎம்ஐ தொகையை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருவதால் அனைத்து வகையான தொழிலாளர்கள் மற்றும் கூலிப் பணியாளர்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தமிழக அரசும், ரிசர்வ் வங்கியும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
அடுத்த 3 மாதங்களுக்கான இஎம்ஐ தவணை மற்றும் வட்டி ஆகியவை வங்கிகள் மூலமாக வசூலிக்கப்படாது என்று தெரிவித்தார். ரிசர்ச் வங்கியின் உத்தரவின் அடிப்படையில் அந்தந்த வங்கிகளின் இணையபக்கத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது.

மேலும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தவணை முறையில் கடன் வசூலிக்கும் பிற நிறுவனங்களும் மூன்று மாதங்களுக்கு கடன் தொகையை வசூலிக்க வேண்டாம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. கொரோனா பாதிப்பால் வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு தமிழக அரசின் அறிவிப்பு சற்று ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளது.

இந்தியாவில் இவ்வளவு பேருக்கு கொரோனாவா? தொடரும் அச்சுறுத்தல்!

0

இந்தியாவில் இவ்வளவு பேருக்கு கொரோனாவா? தொடரும் அச்சுறுத்தல்!

உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பானது உலக அளவில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்தவாறே உள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸானது இந்தியா உள்ளிட்ட ஏறக்குறைய 150 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா,இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கமானது காணப்பட்டு வருகிறது. உலக அளவில் இதுவரை இந்த கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏறக்குறைய 42   ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சீனாவை விட அமெரிக்கா இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் இந்த கொரோனா வைரசின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக ஆரம்பத்தில் மகாராஷ்ரா, கேரளா போன்ற மாநிலங்களில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களிலும் இந்த வைரஸ் தாக்குதலானது அதிகரித்தவண்ணமே உள்ளது.

இந்த நிலையில், இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது  1,397 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவை பொருத்த வரையில் இந்த கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கையானது 35 ஆகவும், பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையானது 123  ஆகவும் உள்ளது.