Home Blog Page 5695

வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை! கொரோனாவால் உலக நாடுகள் வேதனை! அங்கே என்னதான் நடக்கிறது.?

0

வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை! கொரோனாவால் உலக நாடுகள் வேதனை! அங்கே என்னதான் நடக்கிறது.?

வடகொரியாவில் ஏவுகணை சோதனை நடத்தி வரும் சம்பவம் உலக நாடுகளிடையே வேறு விதமான பார்வையை உண்டாக்கியுள்ளது.

அமெரிக்கா, சைனா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஸ்பெயின், பிரான்சு, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகள் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பை சந்தித்து வருகிறது. இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வளரும் நாடுகளும் இந்த வைரஸால் ஆடிப்போய் அவசர சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், கொரோனா தடுப்பு தேவைக்கான நிவாரண நிதியையும் பொதுமக்களிடம் இருந்து வாங்கி அதிகப்படியான சிகிச்சையை உண்டாக்கி நோயாளிகளை குணப்படுத்தி வருகின்றனர். இந்த ஆபத்தான சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனையை செய்து வருவது பல்வேறு நாடுகளை வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்பு இல்லாததை விட தற்போது அதிகளவில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வடகொரியாவின் கடலோரப் பகுதியான வொன்சன் பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு பாயும் 2 ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன. இந்த ஏவுகணைகள் குறைந்தபட்சமாக 230 கி.மீட்டர் உயரத்திலும் அதிகபட்சமாக 30 கி.மீட்டர் உயரத்திலும் பறந்ததாக தென்கொரியா தளபதிகள் தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் அனைத்து நாடுகளும் சிக்கி பல்வேறு இழப்புகளை சந்தித்து வரும் வேளையில், வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை மிகவும் பொருத்தமற்றது என்றும், இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று
தென் கொரியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக யோன்ஹாப் என்னும் செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தில் ஏவப்பட்ட நான்கு சுற்று சோதனைகளில் 8 வது ற்றும் ஒன்பதாவது சோதனையாக கூறப்படுகிறது.

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை வல்லாதிக்க நாடுகளையே சற்று பயத்தில் ஆழ்த்தியது ஒருபக்கம் இருந்தாலும் தற்போதைய சூழலில் வடகொரியாவின் இந்த நடவடிக்கை தேவையற்றதாகவே பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் அரச குடும்பத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு : மற்றவர்கள் நிலை என்ன?

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருவதால் உலகெங்கும் 300 கோடி நபர்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பல நாடுகளின் அரசியல் தலைவர்களும் அரச குடும்பத்தினரும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கத்திய நாடுகளான இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.

இந்த நிலையில் ஸ்பெயினில் உள்ள அரச குடும்பத்தைச் சார்ந்த இளவரசி மரியா தரசா கடந்த 26ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த இளவரசி மரியா இன்று சிகிச்சை பலனின்றி அகாலமரணம் அடைந்தார்.

பேரிஸில் பேராசிரியராக பணியாற்றி வரும் 86 வயதான இளவரசி மரியா ஸ்பெயினின் அரச குடும்பமான House of Bourbon-Paramaவை சேர்ந்தவர். உலக நாடுகளில் உள்ள அரச குடும்பங்களில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.

இந்த இந்த தகவலை அவரது சகோதரர் S.A.R. Don Sixto Enrique De Bourbon தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசி மரியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களையும் பணியாற்றினார்களையும் தனிமைபடுத்தியுள்ளனர் இதனால் அவர்களது நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 1400 கடந்துள்ளது வேதனைக்குரிய விஷயமாகும்.

https://www.facebook.com/19500671771/posts/10158048260566772/

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! கடவுள் போல காப்பாற்றிய காவலர்! உண்மையான துரைசிங்கத்திற்கு பொதுமக்கள் பாராட்டு..!!

0

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! கடவுள் போல காப்பாற்றிய காவலர்! உண்மையான துரைசிங்கத்திற்கு பொதுமக்கள் பாராட்டு..!!

பிரசவ வலியல் துடித்த பெண்ணை சரியான நேரத்தில் காவல்துறை அதிகாரி மருத்துவமனைக்கு அனுப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் பொதுமக்கள் யாரும் வெளியில் வரமுடியாத சூழல் நிலவுகிறது. உலக நாடுகளில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா இந்தியாவில் 1000 பேரை பாதித்தது மற்றும் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தின் 144 தடையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் வெளிநாடு மற்றும் வெளியூர் போன்ற இடங்களில் குடும்பத்தைப் பிரிந்து பலர் தவிக்கின்றனர். 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவில் சில தினங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், மக்களின் அன்றாட தேவைக்கு வெளியில் செல்வதும் சொந்த ஊருக்கு வந்து சேர்வதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் கணவன் சென்னையில் சிக்கிக் கொண்ட சூழலில், பிரசவ வலியால் துடித்த பெண்ணை காவல்துறை உதவி ஆய்வாளர் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. மதுரை தேவி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், சென்னையில் உள்ள நிதிநிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீமதி மதுரையில் வசித்து வந்துள்ளார். விடுமுறையின் காரணமாக சொந்த ஊருக்கு செல்ல மணிகண்டன் தயாராக இருந்த நிலையில் போக்குவரத்து முடக்கம் மற்றும் மாவட்ட எல்லைகள் முடக்கம் காரணமாக மதுரைக்கு செல்ல முடியவில்லை.

இதனையடுத்து, ஸ்ரீமதிக்கு திடீரென்று பிரசவ வலி அதிகரித்து உறவினர் முருகேசன் என்பவரிடம் வலியில் துடித்தபடி கூறினார். இக்கட்டான சூழலில் வாகனம் இல்லாமல் தவித்த முருகேசன் வேகமாக அங்கிருந்த காவல் சோதனைச் சாவடிக்கு சென்று அவசர தகவலை கூறியுள்ளார். தகவலை கேட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உடனடியாக அந்தவழியே சென்ற காரை மறித்து கர்ப்பிணியை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், டீசல் செலவுக்கான பணத்தையும் கொடுத்து வேகமாக செல்ல அறிவுறுத்தினார்.

சரியான நேரத்தில் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் ஆபத்தான நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட உதவிஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் அவர்களை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இத்தாலியில் 10,000 பேர் பலி! கன்னியாகுமரியில் சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!!

0

இத்தாலியில் 10,000 பேர் பலி! கன்னியாகுமரியில் சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!!

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.

உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒவ்வொரு நாடுகளிலும் உயிரிழப்பு தினமும் அதிகரித்து வருகிறது. சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது இத்தாலி நாட்டில் உச்சகட்ட உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இத்தாலியில் 10,023 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.மேலும் 92,472 பேர் பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் 144 தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்திய பிரதமர் மோடி கொரோனா பாதிப்பை தடுக்க மக்களிடம் தாராள நிதி கேட்ட நிலையில், பல்வேறு நிறுவனங்கள், சினிமா பிரபல நடிகர், நடிகைகள் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். தேசிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட பின்னர், தமிழகத்தின் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு கொரோனா மருத்துவ வார்டுகள் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களிடையே தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறுது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் நேற்று மட்டும் 3 பேர் இறந்தனர். இதனையடுத்து இன்றும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு வாரத்தில் நாகர்கோவில் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது.

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,62,967 நபர்களாக உயர்ந்துள்ளது.

முன்விரோதத்தால் திருச்செந்தூரில் மெக்கானிக் சரமாரியாக வெட்டி படுகொலை

0

முன்விரோதத்தால் திருச்செந்தூரில் மெக்கானிக் சரமாரியாக வெட்டி படுகொலை

திருச்செந்தூரில் மெக்கானிக் மற்றும் அவருடைய சித்தப்பாவிற்கு அரிவாள் வெட்டு.இதில் மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் மற்றும் அவருடைய சித்தப்பா படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கொண்ட அந்த கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியிலுள்ள நா.முத்தையாபுரம் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவரின் மகன் ராஜதுரை. மெக்கானிக்கான இவர் திருச்செந்தூர் தோப்பூரில் இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையை நடத்தி வந்துள்ளார். மேலும் திருமணமான இவருக்கு தெய்வக்கனி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அவருடைய சித்தப்பா கணேசன் திருச்செந்தூர் தோப்பூரைச் சேர்ந்தவர். 57 வயதாகும் அவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ராஜதுரை தனது மெக்கானிக் கடையை திறக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ராஜதுரையும் அவரது சித்தப்பாவும் நண்டு பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் தோப்பூர் கடற்கரை நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல் திடீரென்று மோட்டார் சைக்கிளில் சென்ற அவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜதுரை, கணேசன் ஆகிய 2 பேரும் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றனர். விடாமல் துரத்திய அந்த கும்பல் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ராஜதுரை, கணேசன் ஆகிய 2 பேரும் அலறி துடித்தவாறு தோப்பூர் நோக்கி ஓடி வந்தனர்.

இந்நிலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜதுரை மற்றும் கணேசன் ஆகிய 2 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி வெட்டுபட்ட ராஜதுரை நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த கணேசனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில் ஏற்கனவே திருச்செந்தூர் தோப்பூரைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், பக்கத்து தெருவான வண்ணாந்திரைவிளையைச் சேர்ந்த மற்றொரு பிரிவினருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 25 ஆம் தேதி வண்ணாந்திரைவிளையைச் சேர்ந்த பாலமுருகன், வதன்ராஜ், ரஞ்சித் ஆகிய 3 பேரையும் தோப்பூரைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த பாலமுருகன், வதன்ராஜ், மற்றும் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் பழிக்குப் பழியாக எதிர்தரப்பினரை தாக்க திட்டமிட்டு வந்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவில் அவர்கள் ராஜதுரை, கணேசன் ஆகிய 2 பேர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருச்செந்தூர் கோவில் காவல்துறையினர் தலைமறைவான பாலமுருகன், வதன்ராஜ், ரஞ்சித் மற்றும் அவர்களுடைய நண்பர்களான ராஜசேகர், ஆனந்தன், அஜய் பாரதி, குரு, ராகுல், மகேந்திரன் ஆகிய 9 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மீன் பிடிக்க மோட்டார் சைக்கிளில் சித்தப்பாவுடன் சென்ற மெக்கானிக்கை முன்விரோதம் காரணமாக 9 பேர் கொண்ட கும்பல் இவ்வாறு சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராமிய பாடகி: நடிகை பரவை முனியம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்!

0

கிராமிய பாடகி: நடிகை பரவை முனியம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்!

சினிமா திரைப்படங்களில் பல்வேறு கிராமிய நாட்டுப்புற பாடல்கள் பாடியும் மற்றும் குணச்சித்திர நடிகையாக வலம்வந்த பரவை முனியம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

தமிழ்திரைப்படங்களில் பல்வேறி குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பரவை முனியம்மாள். “ஏ சிங்கம்போலே நடந்து வரான் செல்லப்பேராண்டி’ என்கிற இவர் பாடிய பாடல் மிகவும் பிரபலமானதாகும். இப்படம் நடிகர் விக்ரம் நடித்த தூள் படத்தில் இடம் பெற்ற பாடலாகும். இதை தவிர்த்து பல்வேறு கிராமிய நாட்டுப்புற பாடல்களையும் சிறப்பாக பாடியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படம் உட்பட 34 திரைப்படங்களில் நடித்துள்ளார். மிக எளிமையாகவும் கிராமத்து வாசனையை பாடல்களின் மூலமும் நடிப்பின் மூலமும் வெளிப்படுத்தி மக்களிடையே வரவேற்பை பெற்றவர். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்களைப் பாடி மக்களை ரசிக்க வைத்தவர்.

இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு “கலைமாமணி” விருதை வழங்கி இவரை கெளரவித்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு சதுரடி 3500 என்ற திரைப்படமே இவர் நடித்த கடைசி திரைப்படமாகும். தமிழ் திரைப்படம் மட்டுமல்லாது மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமா, கிராமிய நாட்டுப் புற பாடல் மட்டுமே இல்லாமல் தமிழரின் பாரம்பரிய உணவுகளை பற்றி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ஆரோக்கியமான உணவுகள் குறித்த தகவலையும் தொலைக்காட்சிகளின் மூலமாக மக்களுக்கு கொண்டு சென்றவர். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் பரவை முனியம்மாள் உயிரிழந்துள்ளார். சமீபத்தில் நடிகரும் இயக்குனருமான சேதுராமன் இறப்பும் சினிமா துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து பரவை முனியம்மாள் அவர்களின் திடீர் இறப்பும் சினிமா மற்றும் பொதுமக்களிடையே அடுத்தடுத்த சோகத்தை உண்டாக்கியுள்ளது.

25கோடி நிவாரண நிதி வழங்கிய ரஜினி பட வில்லன் : பாராட்டு மழையில் நடிகர்!

0

பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 909 க்கும் மேற்பட்ட நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 19 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 79 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தள்ளனர் மற்றவர்கள் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு போதிய நிதி இல்லாமல் திணறியது.

இதனையடுத்து கொரோனா நிவாரண நிதி வழங்கும்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. அவ்வாறு நிவாரணம் வழங்கும் தனி நபர் அல்லது நிறுவனத்தின் தொகைக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் மத்திய அரசின் பொது நிவாரண நிதியில் 25 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். நடிகர் அக்ஷய்குமார் ரஜினி நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தளதளவென தொடையை காட்டி கவர்ச்சி கடலென யாஷிகா ஆனந்த் : கோபத்தில் கொதித்த நெட்டிசன்கள்!

0

விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற சில படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

யாஷிகா சினிமா படங்களில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டு வருவார். இவர் சினிமாவில் வந்தாலும் சின்னத்திரையில் வந்தாலும் உடுத்தும் உடையில் கவர்ச்சிக்கு மட்டும் எப்போதும் பஞ்சம் இருக்காது.

நடிகை யாஷிகா சினிமாவிலும் சின்னத்திரையிலும் பிஸியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்களில் பிஸியாகவே இருப்பார். ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது படு கவர்ச்சியான படங்களை இணையத்தில் பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில் யாஷிகா சமீபத்தில் கருப்பு நிற உடையில் மார்பகங்கள் மற்றும் தொடை கவர்ச்சியாக தெரியும்படி ஒரு போட்டோவை ட்விட்டரில் போட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இருக்கிற கொரோனா பீதியில் இதெல்லாம் தேவையா என வாய்க்கு வந்தபடி அர்ச்சனை செய்துள்ளனர்.

குட்டி ஆல்யாவின் அழகான புகைப்படம்! முதல்முறையாக இணையத்தில் வெளியட்ட காதல் தம்பதி! (குட்டி பப்பு படம் உள்ளே)

0

குட்டி ஆல்யாவின் அழகான புகைப்படம்! முதல்முறையாக இணையத்தில் வெளியட்ட காதல் தம்பதி! (குட்டி பப்பு படம் உள்ளே)

தனது குழந்தையின் புகைப்படத்தை முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் தொடரில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஜோடி சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடியாகும்.

சீரியலில் நடித்த இவர்கள் உண்மையான காதல் ஜோடியாக வலம் வந்த நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் அசத்தும் வகையில் பிரம்மாண்டமாக இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து, ஆல்யமானசா கர்ப்பமான சூழலில் அவருக்கு சிறப்பான முறையில் வளைகாப்பு நடைபெற்றது. இந்நிலையில் அந்த காதல் ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதாவது “குட்டி இளவரசி” பிறந்ததை தனது இன்ஸ்டாகிராமில் ஆல்யா மகிழ்ச்சியுடன் பதிவிட்டு அதில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. “தாயும் சேயும்” நலமாக உள்ளோம், உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் தேவை என்றும் அப்போது மகிழ்ச்சியுடன் கூறினார்.

குட்டி ஆல்யாவின் அழகான புகைப்படம்! முதல்முறையாக இணையத்தில் வெளியட்ட காதல் தம்பதி! (குட்டி பப்பு படம் உள்ளே)

மேலும் சஞ்சீவ் பப்பு குட்டிக்கு இன்னொரு பப்பு குட்டி வந்தாச்சு என்றும் குதூகலமாக பதிவிட்டிருந்தார். இதனையடுத்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது குட்டி இளவரசியின் அழகான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். குழந்தையின் அழகான கைவிரல்களை மட்டும் பதிவிட்டு எல்லோரும் வீட்டில் பத்திரமாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.  இப்படம் சமூக வலை தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

சீனாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய கொரோனா : வெளியான பகீர் தகவல்!

0

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல உயிர்களைக் கொன்று உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நோய் தொற்று அபாயகரமாக பரவி வருவதால் பல நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

சீனாவில் இந்த நோய் பரவ ஆரம்பித்தாலும் அந்த நாடு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வேகமாக நோயாளிகளை குணப்படுத்தியது. இதனால் ஒரு வாரத்திற்கு முன்பு சீனாவில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை என்ற தகவல் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கி பூரண குணமடைந்த வூஹான் மாகாணத்தை சேர்ந்த சிலருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அவர்களை மருத்துவ பரிசோதனை செய்ததில் ஏற்கனவே நோய் தொற்று ஏற்பட்டு குணம் ஆகியவர்களையே 5% முதல் 10% மீண்டும் வைரஸ் தாக்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த தகவலை கேட்ட மருத்துவ நிபுணர்கள் கொரோனா வைரஸ் சீனாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது என்று பதறவைக்கும் விதமாக கருத்து கூறியுள்ளனர்.