Home Blog Page 5701

அழகான குடும்பம் இருந்தும் நிம்மதி இல்லாததால் கணவன் எடுத்த விபரீத முடிவு! தொழில் இல்லையேல் வாழ்க்கை இல்லையா?

0

அழகான குடும்பம் இருந்தும் நிம்மதி இல்லாததால் கணவன் எடுத்த விபரீத முடிவு! தொழில் இல்லையேல் வாழ்க்கை இல்லையா?

நீண்ட நாட்களாக மன அழுத்தம் காரணமாக நிம்மதி இல்லாமல் இருந்த பிரபல திருப்பூர் பனியன் கம்பெனி நிறுவன உரிமையாளரின் மருமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சூரிய பிரகாஷ் பனியன் கம்பெனியை நடத்தி வந்தார். இவருக்கும் மற்றொரு பனியன் கம்பெனி நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி என்பவரது மகளுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகியது. இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மன அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சூரியபிரகாஷ் சிகிச்சை பெற்று வந்தார். இதன் பின்னர் நேற்று பெங்களூரு செல்வதாக தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு கோவைக்கு வந்துள்ளார்.

கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள பிரபல ரெசிடன்சியில் ஒரு அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து நேற்றிரவு தங்கியிருந்த அறையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையில் முதற்கட்ட விசாரணையில் தொழில் நஷ்டம் காரணமாக சூர்யபிரகாஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்றும் அப்பகுதி பந்தய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி காட்டுப்பகுதியில் நடந்த திடீர் தீவிபத்து! மூன்று குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்த கோர சம்பவம்!

0

தேனி காட்டுப்பகுதியில் நடந்த திடீர் தீவிபத்து! மூன்று குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்த கோர சம்பவம்!

காட்டுக்குள் நடைபயணமாக சென்றபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள அரலியூத்து வனத்தில் காட்டுத்தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது. கொரோனோ பாதுகாப்பிற்காக தரைவழிப் போக்குவரத்து அனைத்தும் துண்டிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், கேரளா வனப் பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் காட்டு வழியாக வந்த நபர்கள் தீயில் மாட்டிக் கொண்டனர்.

காற்று வேகமாக வீசியதால் காட்டுத் தீ சுழன்று அடித்ததால் அதிலிருந்து தப்ப முடியாமல் தவித்துள்ளனர். ஆபத்தில் மாட்டிக் கொண்டவர்களில் 3 குழந்தைகள் உட்பட மொத்தமாக 8 பேர் தீயில் கருகி பலியாகினர். வீட்டில் இருந்து வெளியே போனால்தான் கொரோனா பாதிப்பு என்றால், காட்டுவழி சென்ற அப்பாவிகளுக்கு தீ விபத்து ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கியவர்கள் கேரளாவில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என்று தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பினால் மாநில எல்லை முடக்கம் மற்றும் விடுமுறை காரணமாக தனது சொந்த ஊருக்கு செல்ல முற்பட்டுள்ளனர். இதன்மூலம் காட்டுவழியாக போடிநாயக்கனூர் சென்றபோது இந்த விபத்து எதிர்பாராத விதமாக நடந்துள்ளது. தீயில் மாட்டிக் கொண்டவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த மீட்பு நடவடிக்கையில் 100 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்து இளவரசருக்கு கொரோனா தொற்று : அச்சத்தில் உலக தலைவர்கள்!

0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. அந்த நாடுகளில் மக்கள் பொது இடங்களில் கூட்டம் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மேலும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த நாடுகளின் சுகாதாரத்துறை மக்களை தொடர்ந்து பாதுகாப்போடும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கூறி வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கோரோனா அறிகுறி இருந்ததாக தெரிகிறது, இதனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இச்சோதனையில் சார்லஸுக்கு நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இந்தச் செய்தி உலக தலைவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்கு பாய்ந்தது : காவல்துறை அதிரடி நடவடிக்கை!

0

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை பறித்து வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேர்வதைப் தவிர்க்குமாறு கூறியிருந்தது.

இந்த நிலையில் நேற்று பாரத பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்குமாறு அறிவித்து இருந்தார். மேலும் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்ப்பதோடு முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதில் கூறியிருந்தார்.

இதைப் பொருட்படுத்தாத பொது மக்கள் பொழுதுபோக்க சாலையில் சுற்றித் திரிவதாக புகார்கள் எழுந்தது. அவ்வாறு சாலையில் சுற்றித்திரியும் இளைஞர்களை போலீசார் கண்டித்து அனுப்பியதாக தெரிகிறது.

புதுச்சேரியில் எச்சரிக்கையையும் மீறி வீதிகளில் அலட்சியமாக சுற்றி திரிந்தவர்களை பிடித்த காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 42 பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த நடவடிக்கையை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்காக பிசிசிஐ தலைவர் கங்குலி் வெளியிட்ட புதிய அறிவிப்பு

0

கொரோனா சிகிச்சைக்காக பிசிசிஐ தலைவர் கங்குலி் வெளியிட்ட புதிய அறிவிப்பு

உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவிலும் அதனுடைய பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இதனையடுத்து கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் அரசிற்கு உதவும் விதமாக கொரோனா சிகிச்சைக்காக ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்கும் அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என பிசிசிஐ தலைவர் கங்குலி் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கமானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் தற்போது வரை இந்தியா முழுவதும் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஏறக்குறைய 600 க்கு அருகில் நெருங்குகிறது. இதனையடுத்து இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் ஒவ்வொரு மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்ற வகையில் மருத்துவமனையில் உள்ள படுக்கைகளை அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில் மேற்கு வங்காளத்திலும் இந்த கொடிய கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்கு ஒருவேளை சிகிக்சை அளிக்க இடம் தேவை என்றால் ஈடன் கார்டன் மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கொரோனா சிகிச்சைக்காக அரசு எங்களிடம் கேட்டால், நாங்கள் கொடுப்பதற்காக தயாராக உள்ளோம். இந்த நேரத்திலிருந்து எது தேவையென்றாலும் அதை செய்ய இருக்கிறோம். இதில் எந்தவித பிரச்சனையும் இல்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்.

சவுரவ் கங்கலி தற்போது பதவி வகித்து வரும் பிசிசிஐ தலைவராக பதவி ஏற்பதற்கு முன் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஏற்கனவே புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கமும் கொரோனா சிகிச்சைக்காக இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு பணிக்கு முதல் நபராக அன்புமணி ராமதாஸ் ரூ. 3 கோடி நிதியுதவி

0

கொரோனா தடுப்பு பணிக்கு முதல் நபராக அன்புமணி ராமதாஸ் ரூ. 3 கோடி நிதியுதவி

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் ஆரம்பித்திருக்கிறது. இதனையடுத்து இந்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறே ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களுடைய மாநில மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருத்துவக் கருவிகள் வாங்க பாமக இளைஞர் அணி தலைவரும்,முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்பி அவர்கள் முதல்கட்டமாக ரூ. 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது.

கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. இதற்காக மத்திய அரசு ரூ.15,000 கோடியும், மாநில அரசுகள் பல்லாயிரம் கோடியும் நிதி ஒதுக்கியுள்ள போதிலும், கொரோனா வைரஸ் நோயின் புதிய பரிமாணம் காரணமாகவும், பிற நோய்களை தடுக்கும் முறைகளில் இருந்து இந்நோயை சோதித்து, தடுக்கும் முறை மாறுபட்டது என்பதாலும், அது போதுமானதல்ல.

காரோனா வைரசால் எவரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதைக் கண்டறிவதற்கான தெர்மல் ஸ்கேனர்கள், நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவச கருவிகள், கொரோனா சோதனைக் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள் (Ventilators) முகக் கவசங்கள், கையுறைகள், கிருமி நீக்கும் மருந்துகள் மற்றும் கொரோனா நோயை கட்டுப்படுத்தத் தேவைப்படும் பிற கருவிகளை வாங்க தமிழ்நாடு அரசுக்கு பெருந்தொகை தேவைப்படுகிறது.

தமிழக அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையைப் பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தேர்வு நடத்த முடியாத காரணத்தால் 1 முதல் 9ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்.!! புதுவை மாணவர்கள் மகிழ்ச்சி! (முழுத்தகவல்)

0

தேர்வு நடத்த முடியாத காரணத்தால் 1 முதல் 9ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்.!! புதுவை மாணவர்கள் மகிழ்ச்சி!

கொரோனா வைரஸ் நாடு முழுக்க பரவி வருவதால் மாணவர்களுக்கான இறுதி ஆண்டுத் தேர்வு நடத்த முடியவில்லை. இதன் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி கல்விதுறை வெளிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது; (புதுச்சேரியின் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு இன்று வெளியிட்ட உத்தரவு)

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகின்ற ஏப்ரல்
14 ஆம்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இதனால் மாணவர்களுக்கான இறுதி ஆண்டுத்தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான் மாணவர்களுக்கு இறுதித் தேர்வு புதுவையில் ரத்து செய்யப்படுகிறது. ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்திலும் 11 ஆம் வகுப்புக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டு வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல் நேற்று அரை மணிநேரம் தாமதமாக தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நேற்றோடு முடிவடைந்தது. மேலும் போக்குவரத்து முடங்கியதால் நேற்று 34,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாலையில் நடமாடினால் சுட்டுத் தள்ளவும் தயங்கமாட்டோம்! கடுமையாக எச்சரித்த தெலுங்கானா முதல்வர்! நடந்தது என்ன.?

0

சாலையில் நடமாடினால் சுட்டுத் தள்ளவும் தயங்கமாட்டோம்! பீதியை கிளப்பிய தெலுங்கான முதல்வர்! நடந்தது என்ன.?

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றித் திரிபவர்களை சுட்டுத் தள்ளவும் அரசு தயங்காது என்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தெலுங்கானா முதல்வர் பேசியது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுக்க இன்னும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்திய அளவில் மாநிலங்கள் முடக்கம், மாநில அளவில் மாவட்ட எல்லைகள் முடக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்த அச்சத்தை உணராமல் பண்டிகைக்கு விடுமுறை அளித்ததை போல பலர் சாலையில் நடமாடுவதும், இருசக்கர வாகனங்களில் வழக்கம் போலவே சுற்றித் திரிகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கானாவில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றித் திரிபவர்களை சுட்டுத் தள்ளவும் அரசு தயங்காது என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இவரது பேச்சு தெலுங்கானா மக்களின் வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக அமைந்துள்ளது. அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டாலும் சிலர் அதை பின்பற்றாமல் போவதனாலே இதுபோன்ற கடுமையான எச்சரிக்கைகள் வெளி வருவதாக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் இன்று காலை மதுரையில் கொரோனா பாதித்த நபர் இறந்தது பலருக்கு கொரோனா மீதான பயத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால், அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் யாரும் வரவேண்டாம் என்றும், வாகனங்களில் சுற்றினாலும் காவல்துறை உங்கள் மீது வழக்கு தொடுக்கும் என்றும் தமிழக அரசின் சார்ப்பாக கூறப்பட்டுள்ளது.

ரோட்டில் சுற்றித் திரிந்தால் நூதன தண்டனை தரும் போலீஸ் : பாராட்டும் பொது மக்கள்!

0

கொரோனா உலகம் முழுவதும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை கொன்று வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேர்வதைப் தவிர்க்குமாறு கூறியிருந்தது.

இந்த நிலையில் நேற்று பாரத பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்குமாறு அறிவித்து இருந்தார். மேலும் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்ப்பதோடு முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதில் கூறியிருந்தார்.

இதைப் பொருட்படுத்தாத பொது மக்கள் பொழுதுபோக்க சாலையில் சுற்றித் திரிவதாக புகார்கள் எழுந்தது. அவ்வாறு சாலையில் சுற்றித்திரியும் இளைஞர்களை போலீசார் கண்டித்து அனுப்பியதாக தெரிகிறது.

இளைஞர்கள் இது போல் சுற்றி திரிவதை கண்ட மகாராஷ்டிர போலீஸ் நூதன தண்டனை ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி சாலையில் சுற்றித்திரியும் இளைஞர்கள் பெண்கள் உட்பட அனைவரையும் தோப்புக்கரணம் போட வைத்து சூழ்நிலையை விளக்கி கூறி வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த செயலை பார்த்த பொதுமக்கள் காவல்துறையை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திடீரென பிளந்துகொண்ட சாலை! சுனாமி வர வாய்ப்புள்ளதாக தகவல்! எங்கே நடந்தது தெரியுமா.?

0

திடீரென பிளந்துகொண்ட சாலை! சுனாமி வர வாய்ப்புள்ளதாக தகவல்! எங்கே நடந்தது தெரியுமா.?

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சாலை விரிசலுடன் பிளந்து கொண்டன. இதனால் அங்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு சாலைகளில் பிளவு ஏற்பட்டு, சுனாமியும் வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலில் 35 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் 7.8 ரிக்டர் அளவிற்கு பதிவாகியது. இதனால் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சுனாமி வரவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.

உலக வெப்பமயமாதல், பருவ மாற்றம் மற்றும் இயற்கை சீற்றங்களால் இதுபோன்ற திடீர் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்க ஹவாய் தீவிலும் சுனாமி வரலாம் என்றும் கூறப்படுகிறது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளை கொரோனா பாதிப்பு ஆக்கிரமித்த நிலையில் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களும் உருவானால் உலகம் பேரழிவை சந்திக்க நேரலாம்.

இந்த ஆண்டின் தொடக்கமே பல்வேறு ஆபத்துடன் தொடர்ந்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே ஒருமுறை சுனாமி வந்து பெரும் உயிரிழப்பையும், பொருளாதார இழப்பையும் தமிழகம் பேரிழப்பாக சந்தித்தது குறிப்பிடத்தக்கது.