Home Blog Page 5703

கொரோனாவை தடுக்க 500 கோடி ஒதுக்கீடு! சட்டசபையில் தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

0

கொரோனாவை தடுக்க 500 கோடி ஒதுக்கீடு! சட்டசபையில் தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.500 ஒதுக்கீடு செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நேற்று அறிவித்தார்.

கொரோனா பாதிப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி சட்டப்பேரவையில் நேற்று பேசினார். அப்போது, பிரதமர் கூறிய ஊரடங்கு உத்தரவை நாடெங்கும் செயல்பட்டதோடு, தமிழகத்தில் முழுமையாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாகவும், ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு நன்றி கூறினார். கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

மேலும், கொரோனா பற்றிய வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்களை தொடர்ந்து மருத்துவ ரீதியாக கண்காணிப்பு நடந்து வருவதாகவும் கூறினார். இந்த அசாதாரண சூழலில் மருத்துவப் பணியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதற்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.?

0

கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.?

கொரோனாவால் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட காரணத்தால், அந்த துறை சார்ந்த பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா அச்சத்தின் பிடியில் பல்வேறு துறைசார்ந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 19 ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு நிகழ்வுகளும் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெஃப்சி மூலம் பணிபுரியும் 25,000 உறுப்பினர்களில் தினமும் பத்தாயிரம் பேர் பாதிக்கப்படுவதாக பெஃப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், திரைப்படத் துறையில் நல்லநிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் போன்றோர் இந்த இக்கட்டான சூழலில் உதவி புரியுமாறு தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

இதுகுறித்து ஆர்.கே.செல்வமணி அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இந்த திடீர் வேலை நிறுத்த காரணத்தால்
15 ஆயிரம் பெஃப்சி ஊழியர்களின் ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சியை குடித்தாவது உயிர்வாழ முடியும். 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை சுமாரான அரிசி தருவதாக இருந்தால், ஒரு மூட்டை அரிசி ரூ.1250 என்று கணக்கு வைத்தால் மொத்தம் ரூ.2 கோடி ஆகிறது.

கருணை உள்ளம் கொண்ட நீங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்துவரும் பல்வேறு குடும்பங்களுக்கு உதவி புரிவீர், அவர்களுக்கு வாழ்வு அளிப்பீர் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பெஃப்சி உறுப்பினர்களுக்கு உதவும் விதமாக 10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். இதற்கு முன்னர் நடிகர் சிவக்குமார் குடும்பமும் 10 லட்சம் நிதியுதவி அளித்திருந்து குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!!

0

கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!!

மருத்துவமனை செல்வதற்காக வாகனம் இல்லாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு தனது சொந்த வாகனத்தை அனுப்பிய ருசிகர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் கடை அடைப்பு மற்றும் போக்குவரத்து தடை அமலில் இருப்பதால் பயணிகள் வெளியூர் செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கோயம்பேடு, பெருங்களத்தூர் போன்ற பேருந்து நிலையங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம் அலை மோதியது. தமிழக மாநில எல்லைகள் மூடியது மட்டுமல்லாமல் கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து மாவட்ட எல்லைகளும் அதிரடியாக மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா கடந்த திங்களன்று நகரி பகுதியில் இயங்கி வரும் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பு குறித்த நடவடிக்கைகளை பார்வையிட்டார். அப்போது சரஸ்வதி என்ற கர்ப்பிணி பெண் அங்கு அவசரமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் திருப்பதி மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அப்பெண்ணிடம் கூறியுள்ளனர்

அரசு மருத்துவமனையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் இயங்காத காரணத்தால், இந்த தகவலை எம்எல்ஏ ரோஜாவின் கவனத்திற்கு அங்கிருந்தவர்கள் கொண்டு சென்றனர். இதனையடுத்து தனது சொந்த காரை அனுப்பி உடனே மருத்துவமனைக்கு செல்லுமாறும், மேலும் திருப்பதி மருத்துவமனைக்கு போன் செய்து கர்ப்பிணிக்கு தேவையான உடனடி மருத்துவ ஏற்பாடுகள் செய்யுமாறும் ரோஜா கூறினார். அவசர காலத்தில் கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ ரோஜாவிற்கு மக்களிடையா பாராட்டு குவிந்து வருகிறது.

ஒருவரும் ஒத்துழைக்கவில்லை மேலிடத்தில் முறையிட்ட முருகன் தமிழக பாஜகவில் சலகலப்பு

0

ஒருவரும் ஒத்துழைக்கவில்லை மேலிடத்தில் முறையிட்ட முருகன் தமிழக பாஜகவில் சலகலப்பு

தமிழ்நாட்டின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை அவர்கள் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்பு தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவர் பதவி காலியாகவே இருந்தது சமீபத்தில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக இஉந்த முருகன் அவர்கள் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு எச்.ராஜா அவர்கள் நியமிக்கப்படுவார் என அனைத்து தரப்பு ஊடகங்களாலும் பேசப்பட்டது. அவர் இல்லை என்றாலும் அந்த பதவிக்கான போட்டி என்பது பொன்.ராதாகிருஷ்ணன்,கே.டி.ராகவன், வானதி சீனுவாசன், நாகேந்திரன் என பலமுனைப் போட்டி நிலவியது.ஆனால் இவர்களை அனைவரையும் ஒதுக்கி பாஜக தலைமையானது தமிழக மக்களுக்கு அறிமுகமே இல்லாத எல்.முருகன் என்பவரை தலைவராக நியமித்து அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவர் தலைவராக நியமிக்கப்பட்ட நாள் முதலே இந்த பதவிக்காக போட்டியிட்ட பலரும் மிகுந்த கோபத்திலும் இவருக்கு எந்த வித ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்று தெரிகிறது. கொரோனோ வைரஸ் பாதிப்பு மிகுதியாக உள்ள இந்த நேரத்தில் மற்ற யாராக இருந்தாலும் மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடையே கொண்டு சென்று இருப்பர். ஆனால் புதிய தலைவரோ இதுவரை ஒரு பேட்டி கூட அளிக்கவில்லை.

இதுகுறித்து மிகுந்த வருத்தத்துடன் தற்போதைய தலைவர் நட்டா அவர்களிடமும் முன்னாள் தலைவர் அமித்ஷா அவரிடமும் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்கள் பாஜக முன்னோடிகளை அழைத்து விசாரித்தற்கு கொரோனோவை காரணம் காட்டி தப்பித்துள்ளனர். இனி போல நடக்ஙாது எனவும் உறுதியளித்துள்ளனர்.

கொரோனோ நோயாளிகளுக்கு தனி மருத்துவமனை அமைக்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

0

கொரோனோ நோயாளிகளுக்கு தனி மருத்துவமனை அமைக்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

கொரோனோ வைரஸ் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் கடும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.இதில் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமும் இனைந்து செயல்பட முன்வந்துள்ளது‌.

ரிலையன்ஸ் நிறுவனம் மும்பையில் அரசாங்கத்துடன் இனைந்து கொரோனோ நோயாளிகளை தன்மைப்படுத்த தனி மருத்துவமனையை உருவாக்க உள்ளது.இதில் சுமார் 100 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்தியேகமாக உயர் தரத்தில் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.இதுவே இப்நியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்படுத்தும் முதல் மருத்துவை என்பது குறிப்பிடத்ததக்கது.

இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்தத்திலும் நிரந்தரப் பணியாளர்களாகவும் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தடையின்றி சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக சுமார் ஒருலட்சம் மாஸ்குகள் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

மேலும் கொரோனோ பாதிப்புகளில் உதவும் வாகனங்களுக்கு எரிபொருள் இலவசமாக வழங்கப்படும் என்றும் ஆதரவற்ற மற்றும் சாலை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்ற பல்வேறு அறிக்கைகளை ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 4000 புள்ளிகள் சரிவு

0

இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 4000 புள்ளிகள் சரிவு

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பின் காரணமாக இந்திய பங்கு சந்தை தொடர் சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே தொடர் சரிவை சந்தித்து வந்தது.

இன்றைய வர்த்தகம் தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்திற்குள்ளேயே, இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் ஏறக்குறைய 10 சதவிகிதமான 2,990 புள்ளிகள் சரிந்து லோயர் சர்க்யூட் பிரேக்கரைத் தொட்டது. இதனையடுத்து வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து வர்த்தகம் ஆரம்பித்ததும் மீண்டும் சரிவை நோக்கி இந்திய பங்கு சந்தை சென்றது. இதனையடுத்து இந்தியப் பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் ஏறக்குறைய 4000 இறங்கி 26000 க்குக் கீழ் வர்தகமாகி வந்தது.

இதே போல மும்பை பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 1150 புள்ளிகள் குறைந்து 7500 என்ற அளவில் வர்த்தகமாகி வந்தது. பங்கு சந்தையில் இன்று ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்கு கொரோனா பதிப்பு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் குறிப்பாக இந்திய ரூபாயின் வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியது மற்றும் இந்திய ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை நிறுத்தியது போன்றவைகளும் காரணமாக பார்க்கப்படுகிறது.

வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெப்சி நிறுவனத்திற்கு சூர்யா அள்ளிக்கொடுத்த உதவித்தொகை

0

வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெப்சி நிறுவனத்திற்கு சூர்யா அள்ளிக்கொடுத்த உதவித்தொகை

நடிகர் சூர்யா திரைப்பட உலகில் சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் சமூக சேவகரும் கூட இது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அவரது அகரம் நிறுவனத்திலிருந்து தற்போது பலரும் மிக சிறந்த முறையில் படித்து வருகிறார்கள்.

தற்போது உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள ஒன்று கொரோனா வைரஸ். இதனால் பலர் தங்களது அன்றாட வேலையை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இது சினிமா துறையையும் விட்டு வைக்கவில்லை.

சினிமா உலகைச் சேர்ந்த பலரும் பலவிதமான நஷ்டங்களை ஏற்படுத்தி உள்ளது. பெப்சி நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கு உதவ வேண்டும் என்று தலைவர் ஆர்கே செல்வமணி பிரபல நடிகர், நடிகைகளை கேட்டுக்கொண்டார். அதற்காக தற்போது நடிகர் சிவகுமார் ,சூர்யா ,கார்த்தி அவர்களது குடும்பத்தின் சார்பாக 10 லட்சம் உதவித்தொகை கொடுத்துள்ளார்கள் .

இந்த வேலைநிறுத்தத்தால் சூர்யாவின் சூரரை போற்று படத்தின் தொழில்நுட்ப வேலைகள் மற்றும் அறுவா படப்பிடிப்பு நின்று போனது குறிப்பிடத்தக்கது.

மக்களின் தேவையை அறிக்கையாக வெளியிட்ட‌ மருத்துவர் ராமதாஸ் செயல் படுத்துமா மத்திய மாநில அரசுகள்

0

மக்களின் தேவையை அறிக்கையாக வெளியிட்ட‌ மருத்துவர் ராமதாஸ் செயல்படுத்துமா மத்திய மாநில அரசுகள்

கொரோனோ வைரஸ் நோய் பரவாமல் தடுக்க இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை தினம் தினம் எடுத்து வருகின்றனர். இதில் முக்கிய அம்சமாக மக்கள் அனைவரும் தங்களை தனிமைப் படுத்திக்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகள் குறித்தும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாக மருத்துவர் ராமதாஸ் விரிவான அறிக்கையை அளித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுளதாவது :
மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் பொருளாதாரம் மிகவும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. தானி, மகிழுந்து உள்ளிட்ட வாடகை ஊர்திகளின் இயக்கம் கிட்டத்தட்ட முடங்கி விட்டது. இதனால் அதை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் அனைவரும் உணவு மற்றும் அன்றாடச் செலவுகளுக்கே சிரமப்படும் நிலையில், அவர்களால் வாகனக் கடனுக்கான மாதாந்திர தவணையை செலுத்துவது என்பது எந்த வகையிலும் சாத்தியமற்ற விஷயமாகும்.

அமைப்பு சார்ந்த பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் அவர்கள் ஏற்கனவே வாங்கியுள்ள பல்வேறு வகை கடன்களுக்கான மாதத்தவணைகளை அடுத்த சில மாதங்களுக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, அவற்றை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதுடன், அக்காலத்திற்கான வட்டியையும் ரத்து செய்ய வேண்டும். அதேபோல், காப்பீட்டுக்கான பிரிமியம், கடன் அட்டை தவணைகள், குழந்தைகளுக்கான பள்ளிக்கல்விக் கட்டணங்கள் ஆகியவற்றையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்குவதுடன், வங்கிக் கடனும் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை அலட்சியப்படுத்திய மக்கள்! பிரதமர் மோடி கவலை

0

கொரோனா வைரஸை அலட்சியப்படுத்திய மக்கள்! பிரதமர் மோடி கவலை

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மிகவும் அலட்சியப்படுத்துவது பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் யாரும் மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கைகளை பின்பற்றவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அதன் தீவிரத்தை யாரும் உணராமல் அலட்சியமாக மக்கள் வெளியே செல்கின்றனர் தயவு செய்து வெளியே செல்லாமல் உங்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். மக்கள் உரிய நடவடிக்கையை பின்பற்ற மாநில அரசுகள் மிகவும் கடுமையாக்க வேண்டும் இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

கொரோனோ அச்சுருத்தலை பயன் படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சி – இணைய தளத்தை முடக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

0

கொரோனோ அச்சுருத்தலை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சி – இணைய தளத்தை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவிட்19 வைரஸ் உலகம் முழு
வதும் வேகமாக பரவி வரும் நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் கடும் சாவாலை சந்தித்து வருகின்றனர். கொத்து கொத்தாக மக்கள் உயிரிழப்பு உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா மட்டுமே இதற்கான மருந்தை பரிசோதித்து வருகிறது. அந்த மருந்தை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுத்து தீவிரமாக கணிகாணித்து வருகிறது. எனினும் இதனால் முழுமையாக குணப்படுத்திவிட முடியும் என யாரும் உறுதியாக கூறவில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஒரு குறிப்பிட்ட இணையதளம் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்காவை சார்ந்த coronovirusmedicalkid.com என்ற இணையதளம் தாஙகள் கொரோனோ வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும் 4.95 அமெரிக்க டாலர் செலுத்தினால் மருந்தை விநியோகிப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இது உலக அளவில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.இது குறித்து விசாரித்த அமெரிக்காவின் டெக்ஸாஸ் நீதிபதி உடனடியாக இணையதளத்தை முடக்க உத்தரவிட்டார்.