Home Blog Page 5710

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

0

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியிருந்து சென்னைக்கு வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவருடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதிசெய்யப்பட்டதாகவும், மேலும் அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையுடன், கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் ஓமனில் இருந்து திரும்பிய போது கொரோனா வைரசாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று தான் அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதன் மூலமாக தற்போது வரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 152 ஆக உயர்ந்துள்ளது.

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய பங்கு சந்தை சரிவு

0

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய பங்கு சந்தை சரிவு

இந்தியாவில் தொடரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்திய பங்கு சந்தை தொடர்
சரிவை சந்தித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமில்லாமல் உச்ச நீதிமன்றம் ஏஜிஆர் நிலுவைத்
தொகை குறித்த விவகாரங்களில் எடுத்த நிலைபாடுகளினால் பெரும்பாலான
முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள பங்குகளை விற்று அவர்களது முதலீடுகளை
பாதுக்காக்க நினைத்தனர். இவ்வாறு பெரும்பாலான நபர்கள் தங்களிடமுள்ள
பங்குகளை விற்றதும் ஒரு வகையில் இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

இதுமட்டுமில்லாமல் நிறைய வங்கிகள், தொலைத் தொடர்பு துறை நிறுவனங்களுக்கு
கொடுத்த கடனினால் கடுமையான சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. அதனால் வங்கி
பங்குகளும் சரிவை சந்தித்தன.மீதியுள்ள துறைகளில் ஐடி துறையை சார்ந்த
பங்குகள் மட்டுமே ஓரளவு ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வந்தது.

இவ்வாறு கடந்த சில நாட்களாக தொடந்து வீழ்ச்சி கண்டு வரும் இந்திய பங்கு
சந்தையானது தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கியே செல்கிறது. குறிப்பாக தேசிய
பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,709 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு,
28,869 ஆக வர்த்தகமாகி வந்தது. இதே போல மும்பை பங்கு சந்தை குறியீடான
நிஃப்டி 498 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8468 என்ற நிலையிலும்
வர்த்தகமாகியது. இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின்
மதிப்பு 74.27 ரூபாய் என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் இந்திய
பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் இன்று மட்டும் 4.12
லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மதிப்பினை இழந்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்து வரும்
நிலையில், இன்று வரை கொரோனாவினால் ஏறக்குறைய 150 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று வரை மூன்று பேர் பலியாகியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு பெருகி வரும் இந்த கொரோனா வைரஸினால் பெரும்பாலான மாநிலங்களில்
உள்ள உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஜிம்கள், மால்கள் ,
கோவில்கள் என அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே இந்திய
பங்கு சந்தை சரிவினை சந்தித்துள்ள நிலையில், இவ்வாறு கொரோனா தொற்று
அதிகரித்து வரும் இந்த நிலையில் இதன் தாக்கமானது இந்திய பங்கு சந்தையில்
இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்ததாக உச்ச நீதிமன்றம் தனது விசாரணையில் தொலைத் தொடர்பு துறையை
சேர்ந்த நிறுவனங்கள் தங்களை சுயமதிப்பீடு செய்யக் கூறியது. மேலும்
குறிப்பிட்ட தேதிக்குள் தவனையை கட்ட தவறியதை அடுத்து தொலைத்தொடர்பு துறை
நிறுவனங்களை உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் அனுப்பியது. மேலும்
குறிப்பிட்ட தொகையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டாயம் செலுத்தியாக
வேண்டும் என்றும் எச்சரித்து அனுப்பியது.

ஆனால் தொலைத் தொடர்பு துறை நிறுவனங்கள் தங்களது கணக்கீட்டின் படி குறைந்த
தொகையை செலுத்த வேண்டியுள்ளது என்று கூறியுள்ளன. மேலும் இதனால் உச்ச
நீதிமன்றமானது இந்த நிலுவை தொகையினை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும்
தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. ஆனால் உச்சநீதிமன்றம்
இந்த நிலுவை தொகையில் எந்த மாற்றமும் இல்லை என்று கறாராக தெரிவித்து
விட்டது. மேலும் இந்த நிலுவை தொகையை கட்டத் தவறினால், தொலைத்தொடர்பு துறை
நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் சிறைசெல்ல நேரிடும் எனவும் உச்ச
நீதிமன்றம் எச்சரித்துள்ளது.இதனால் தொலைத்தொடர்பு துறை சார்ந்த பங்குகள்
மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடன் வாங்கிய வங்கி பங்குகளும் சரிவை
சந்தித்தன.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் தொடர்ந்து அந்நிய முதலீடுகள் வெளியேறி
வருவது,சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணங்களாலும் இந்திய பங்கு
சந்தையானது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர் சரிவை
சந்தித்து வருகிறது.

10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்யும் வணிகவளாகங்களை மூடுங்கள் : மாவட்ட ஆட்சியர் அதிரடி!

0

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், பூங்கா, திரையரங்கம் உள்ளிட்ட இடங்களை மூட தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கும் பொருட்டு ஏற்கனவே மாவட்டத்தில் கல்விநிறுவனங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், மதுபானக் கூடங்கள் மற்றும் சுற்றுலா மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக அத்தியாவசிய பொருட்களான உணவுபொருட்கள், பால், மருந்து போன்ற நிறுவனங்களைத் தவிர்த்து 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணி புரியும் வணிக வளாகங்களை 31-ஆம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பீதி கடலூர் மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை : அடுத்தடுத்து நடவடிக்கை!

0

உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது. இதனால் தமிழக அரசு மற்றும் சுகாதார துறையும் இனைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.

இதனை அடுத்து பெருநகரங்களில் பொது மக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், பூங்கா, தியேட்டர் உள்ளிட்ட இடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அபாயம் இன்னும் குறையவில்லை என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இதனால் கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக கடலூர் மற்றும் சிதம்பரம் நகரங்களில் பெரு வணிக வளாகங்களான கே.வி டெக்ஸ், பக்ஷீ, சுமங்கலி, நூதனம், கஸ்தூரி பாய், மிலன், சங்கம், மெட்ரோ, அனைத்து திரையரங்குகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், உடற்பயிற்சி கூடம் மற்றும் அனைத்து பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 20/03/2020 முதல் 31/03/2020 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வல்லரசுகளை ஒடுக்கும் கொரோனா : வெளியான ஷாக் ரிப்போர்ட், அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா!

0

லண்டனில் உள்ள பிரபல கல்லூரியின் ஆய்வுக்குழுவினர் நடத்திய கள ஆய்வில் கரோனா வைரஸ்க்கு அமெரிக்காவில் சுமார் 22 லட்சம் நபர்களும் பிரிட்டனில் சுமார் 5 லட்சம் நபர்களும் மரணமடையக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் பிரபல கல்லூரியின் கணித உயிரியல்(Mathematical Biology)
பேராசிரியர் நீல்பெர்கூஷன் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ராய்ட்டர்ஸ் எக்ஸ்பிரஸ் மீடியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

கோவிட்-19 நோய் கிருமி பரவலை 1918 புளூ காய்ச்சல் வைரஸுடன் ஒப்பிட்ட பேராசிரியர் நீல்பெர்கூஷன் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தாவிட்டால், பிரிட்டனில் 5 லட்சத்திற்கும் மேலான உயிரிழப்புகளும் அமெரிக்காவில் சுமார் 22 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்படும் என்ற அதிர்ச்சிக்குரிய தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாசதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதும், பயணங்களுக்கான கட்டுப்பாடுகளும் விதிப்பது மட்டும் போதாது எனக்கூறும் இந்த ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கைகளையும் எடுக்காவிட்டால் 2 லட்சத்து 50 ஆயிரம் நபர்கள் பலியாக வாய்ப்புள்ளது என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆபத்து என்ற உடன் மருத்துவர் அன்புமணியை அழைக்கும் தமிழக ஊடகங்கள் ஓடிவந்து உதவும் மருத்துவர் அன்புமணி

0

ஆபத்து என்ற உடன் மருத்துவர் அன்புமணியை அழைக்கும் தமிழக ஊடகங்கள் ஓடிவந்து உதவும் மருத்துவர் அன்புமணி

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு மாற்றங்களை முன்னிருத்தி புதிய பாணியில் அரசியலை கையிலெடுத்து தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வேட்கையில் பல்வேறு துறையில் தான் செய்யப்போகும் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்தும் விரிவான தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிட்டது பாட்டாளி மக்கள் கட்சியே. ஆனாலும் அக்கட்சியின் சார்பாக யாரும் சட்டமன்ற உருப்பினராக தேர்ந்தெடுக்கப் படவில்லை.

எனினும் தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை கொண்ட பாமகவும் மருத்துவர் அன்புமணி ராமதாசும் தொடர்ந்து தமிழக மக்களிடையே நீர் நிலைநிலைகளை காப்பதற்காக காவிரியை காப்போம், பாலாற்றை காப்போம் என ஒவ்வொரு ஆற்றுப்பாசன பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட கால திட்டமான காவிரி டெல்டா பகுதியை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை தற்போது அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது.

ஆனாலும் அக்கட்சியினரின் மிகப்பெரிய குற்றச்சாட்டு இத்தனை நலத்திட்டங்கள் பாட்டாளி மக்கள் கட்சி செய்தாலும், அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் இதனை சரியாக மக்களிடையே கொண்டு செல்வதே இல்லை என பத்திரிக்கை துறையின் மீதான தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக ஊடகங்களில் ரஜினியின் அரசியல் வருகையே நேரிலையில் காட்டப்படும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழ்நாட்டின் நலன் சார்ந்து வெளியிடும் அறிக்கைகளையும், நடத்தப்படும் போராட்டங்களும் தமிழக ஊடகங்களில் வராதது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்து வந்தனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுயும் பேட்டி எடுத்த ஊடகங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அன்புமணி ராமதாசிடம் எந்த பேட்டியும் எடுக்கவில்லை. ஆனால் கொரோனோ வைரஸ் உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில் தமிழக ஊடகங்களின் பார்வையில் முதலில் பட்டவர் அன்புமணியே.

அந்த வகையிலே மருத்துவரும் முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழ்நாட்டின் பிரபலமான செய்தி தொலைகாட்சிகள் முதல் ரேடியோ சேனல்கள் வரை அனைத்திலும் மருத்துவர் அன்புமணி ராமதாசின் பேட்டிகளே ஒளிபரப்பாகிறது.

இதுநாள் வரை ரஜினி , கமல் என அரசியல் பேசிய ஊடகங்கள் பொதுமக்களுக்கு ஆபத்து என்றவுடன் யாரிடம் அறிவுரை கேட்கவேண்டுமோ அவரிடம் வந்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது என பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள்

0

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள்

கொரோனோ வைரஸ் உலகத்தையே ஆட்டிவைத்து வரும் நிலையில் உலகின் தலைசிறந்த பொருளாதாரமாகவும் உயர் மருத்துவ சேவைகள் கிடைக்கும் எந்த முன்னேறிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

அந்தவகையிலே கொரோனோ வைரஸ் பாதிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் அந்த நாட்டில் அவசர நிலையை பிரகடணப் படுத்தினார். மேலும் செய்தியாளர்களிடம் கொரோனோ வைரஸ் குறித்த தகவல்களை சேகரிக்க கூகுல் நிறுவனம் தனி வளையதளம் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து கூகுல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்க அதிபர் கூறியதுபோல எந்த ஒரு வளையதளமும் கூகுல் சார்பாக உருவாக்கவில்லை. ஆனால் கூகுல் நிறுவனத்தின் தாய் நிறுவனபான ஆல்பபெட் சார்பாக ஒரு வளையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தளம் கூட கலிபோர்னியா மாகாணத்தில் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து அதிபர்
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் சில போலி செய்தி நிறுவனங்கள் தவறான செய்தியை பரப்பி வருகின்றன. கூகுல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தன்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டதாகவும் அவர் மிகவும் நல்ல மனிதர் என்றும் புகழாரம் சூட்டி உள்ளார்.

இதனையடுத்து அமெரிக்க அதிபரை பல நெட்டிசனகளும் “யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார்” என்று சமூக வளையதளங்களில் பதிவிட்டு வருகின்றர்.

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா? குழப்பத்தில் ரசிகர்கள்

0

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா? குழப்பத்தில் ரசிகர்கள்

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான வலிமை படத்தை வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் தல அஜித் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை மற்றும் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வந்தது. இதற்கு பிறகு சில காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க வலிமை படக்குழு திட்டமிட்டிருந்தது. 

ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக கொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக படக்குழுவினர் எந்த நாட்டிற்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனால் ஏற்கனவே திட்டமிட்டுள்ள வலிமை படப்பிடிப்புகள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே திட்டமிட்ட படி இப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்கிற அஜித் ரசிகர்கள் சந்தேகம் எழுந்துள்ளது. இது ஆவலுடன் காத்து கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூடுங்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மக்களுக்கு வேண்டுகோள்

0

அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூடுங்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மக்களுக்கு வேண்டுகோள்

கொரோனோ வைரஸ் விழிப்புணர்வும் அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து தனியார் தொலைக்காட்சியில் நேரலையில் முன்னாள் மத்திய குடும்ப மற்றும் நலவாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே போதிய அளவு ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. மக்கள் நடமாட்டம் நிச்சயமாக குறைக்க வேண்டும். சென்னையில் உள்ள வணிக வளாகங்களிலும் தியாகராயநகர் போன்ற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் சிறிதளவு கூட குறையாமல் உள்ளது மிகுந்த வேதனை அளிக்ககூடியதாக உள்ளது.

மற்ற நாடுகளில் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் உள்ள நிலையில் இந்தியாவில்குறிப்பாக தமிழகத்தில் இந்த வைரசின் வீரியம் தெரியாமல் மக்கள் பொது வெளிகளில் உலாவுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மத்திய அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளதாகவே தோன்றுகிறது எனினும் மாநில அரசும் தங்களுடைய பங்கை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நான் ஒரு மருத்துவர் என்ற முறையிலே கூறுகிறேன் இந்தியாவில் உள்ள மக்கள் தொகைக்கு இந்த வைரஸ் சிறு பாதிப்பை ஏற்படுத்தினால் கூட போதிய மருத்துவ வசதி இல்லாமல் பல ஆயிரம் மக்கள் இறக்க நேரிடும் ஏனெனில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் மக்கள் அடர்த்தி மிகவும் அதிகம்.

தமிழ்நாடு அரசு அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும் மக்கள் பொருப்புணர்வுடன் செயல்பட வேண்டும். போருளாதாரத்தை விட உயிர் மிகவும் முக்கியம். பொருளாதாரம் எத்தகைய இழப்பை சந்தித்தாலும் பரவாயில்லை மக்கள் உயிரை காப்பதே நமது முக்கிய நோக்கமாக இருத்தல் வேண்டும்.

இவ்வாறு கொரோனோ வைரஸ் குறித்து யாருமே அறியாத பல்வேறு கருத்துக்களை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் புள்ளி விவரத்துடன் எடுத்துறைத்தார்.

முன்பதிவு செய்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி நடவடிக்கைகள்

0

முன்பதிவு செய்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி நடவடிக்கைகள்

திருப்பதி என்ற பெயரை அறியாதவர் இந்தியாவில் இருக்க முடியாது ஏன் உலக அளவில் பேசப்படும் ஒரு திருத்தளமாக விளங்குவது திருப்பதி ஏழுமலையான் கொவில். நாளொன்றுக்கு சுமார் ஒருலட்சம் மக்கள் கூடும் திருத்தலமாக இருப்பது திருப்பதியே.

கொரோனா வைரஸின் தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற நாள்தோரும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. மக்கள் அதிகம் பொதுவெளியில் கூட வேண்டாம் என அறிவுறுத்தியதோடு மட்டும் இல்லாமல் அவ்வாறு கூடவும் பல்வேறு கட்டுப்பாடுகளையும்
விதித்துள்ளது.

கொரோனோ வைரஸ் கட்டுப்பாடுகளால் திருப்பதியில் தினம் தினம் மக்கள் கூட்டம் குறைந்து வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான செயலாகவே அனைத்து தரப்பு மக்களாலும் பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இனி பக்தர்கள் யாரும் காத்திருப்பு அவையில் தங்கவைக்கப் போவது இல்லை. இனி பக்தர்கள் தங்களது ஆதார் கார்டை வைத்து தங்களுக்கான தரிசன நேரத்தை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதைப்போலவே 300 ரூபாய் தரிசனம் மற்றும் திவ்ய தரிசனம் போன்ற அனைத்துமே குறித்த நேரத்தில் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

எப்போதும் பக்கதர்கள் கூட்டம் மிதமிஞ்சி காணப்பட்ட திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைந்து பேருந்துகளும், கடைவீதிகளும், மோட்டைபோடும் இடம், அன்னசத்திரம் என அனைத்து இடங்களும் பக்தர்கள் இல்லாமல் இருப்பது புதுவிதமாக உள்ளது என திருப்பதிவாசிகள் கூறுகின்றர்.