Home Blog Page 5709

கடவுளுக்கு கரோனா இருக்கா..? வேலை இல்லாத நாட்களில் சம்பளத்தை பிடிக்க வேண்டாம்! பிரதமர் மோடி வேண்டுகோள்!

0

கடவுளுக்கு கரோனா இருக்கா..? வேலை இல்லாத நாட்களில் சம்பளத்தை பிடிக்க வேண்டாம்! பிரதமர் மோடி வேண்டுகோள்!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 22 ஆம் தேதி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பலாயிரம் உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் அதில் இருந்து விழிப்புணர்வு நடவடிக்கை பற்றியும் நாட்டு மக்களிடம் மோடி நேற்று உரையாற்றினார்.

கொரோனா வைரஸை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள வேண்டும். தங்களை முடிந்தவரை தனிமையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். வருகின்ற 22 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அவசிய மற்றும் அத்தியாவசிய வேலையில் ஈடுபடுவோரை தவிர்த்து மற்ற எவரும் வெளியில் வர வேண்டாம். அன்றைய தினம் கொரோனா வைரஸ்க்கு எதிரான சோதனை ஓட்ட தினமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி கூறியவை :

  • மருத்துவர்கள், ஊடகத்தினர், போக்குவரத்து துறையினருக்கு தொந்தரவு தர வேண்டாம்.
  • 22 ஆம் தேதி அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோருக்கு வீட்டு வாயிலில் நின்று நன்றி தெரிவிக்க வேண்டும்
  • மருத்துவர்களுக்கு உங்களின் கைதட்டல் மூலம் நன்றியை தெரிவியுங்கள், கொரோனா வைரஸை தடுத்து நம் வலிமையை நிரூபிப்போம்.
  • பொருளாதார மந்த நிலையை போக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • வேலை இல்லாத காரணத்தால் ஏழைகள்
    பாதிக்கப்பட கூடாது. கொரோனா அச்சத்தினால் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம்.
  • பொது மக்களுக்காக அவர்களே கூறும் ஊரடங்கு உத்தரவாகும். ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்து பேருக்கு இந்த தகவலை தெரிவியுங்கள்.
  • வேலை இல்லாத நாள்களில் பணியாளர்களின் சம்பளத்தை நிறுவனங்கள் பிடிக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி நேற்றைய உரையில் கூறியுள்ளார்.

உத்திர பிரதேச மாநிலத்தில் கடவுளுக்கு கரோனோ வைரஸ் இருக்கிறதா என்று மருத்துவர்கள் சோதனை செய்யுமாறு அம்மாநில முதலவர் கூறியதால், ஜகன்னாத் என்ற கோயிலில் சாமி சிலைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று மருத்துவர்கள் சோதனை நடத்தினர்.

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்! டெல்லி திஹார் சிறையில் பாதுகாப்பு படையினர் குவிப்பு!!

0

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்! டெல்லி திஹார் சிறையில் பாதுகாப்பு படையினர் குவிப்பு!!

மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் கைதான நால்வருக்கு இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு பின்னர், மருத்துவ சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இந்த வழக்கில் மொத்தமாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் சிறார் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து மற்ற ஐந்து பேரையும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் தற்கொலை செய்து கொள்ள மீதி நால்வரான வினய் சர்மா, பவன்குப்தா, முகேஷ்சிங், அக்‌ஷய்குமார் சிங் ஆகிய நால்வருக்கு நீதிமன்றத்தின் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சார்பாக மேல் முறையீடு மற்றும் கருணை மனுவை தொடர்ந்து அளித்த காரணங்களால் சட்ட காரணங்களால் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இவ்வழக்கில் ஏற்கனவே மூன்று முறை தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து நிர்பயா குற்றவாளிகளில் இருவரான முகேஷ் சிங் மற்றும் அக்‌ஷய்குமார் சிங் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, சட்டரீதியான வழிமுறை எல்லாம் முடிந்துவிட இறுதியாக தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. இதில் அக்‌ஷய் குமாரின் கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து குடியரசுத் தலைவரிடம் மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. கற்பழிப்பு சம்பவத்தின் போது தான் டெல்லியில் இல்லை என்று பவன்குப்தா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், நேற்று உச்சநீதிமன்றம் இவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து, இன்று காலை 5:30 மணிக்கு தூக்கில் போடுவது உறுதியானது. இதனையடுத்து தூக்கு தண்டனைக்கான ஏற்பாடுகளை சிறைத்துறை நிர்வாகம் சட்டப்படி செய்தது. சிறையின் வெளியே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, இன்று காலை சரியாக 5:30 மணிக்கு நால்வரும் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில் நிர்பயாவுக்கு நீதி கிடைத்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சட்டப்பேரவையில் அதிமுக அரசை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் கடுப்பானார் ஸ்டாலின்

0

சட்டப்பேரவையில் அதிமுக அரசை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் கடுப்பானார் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தினமும் ஒவ்வொரு துறையின் மீதான மானியக் கோரிக்கையும் அதன் மீதான விவாதமும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டின் நலன் சார்ந்து பல ஆக்கப்பூர்வமான செயல்கள் நடந்து வருவதை தினமும் அறிகிறோம்.

அந்த வகையிலே ஒவ்வொரு சட்டமன்ற உருப்பினரும் தங்கள் தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை முதல்வரிடமும் துறை சார்ந்த அமைச்சரிடமும் கோரிக்கைகளாக வைத்து வருகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதனா விவாதத்தில் மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்ற வாசகம் எங்கே எழுதப்பட்டுள்ளது தெரியுமா? அது அந்த பாட்டிலேயே எழுதப்பட்டுள்ளது எனற குற்றச்சாட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்ப, உடனே எழுந்த அமைச்சர் தங்கமணி அவர்கள் உங்கள் ஆட்சியிலே பாட்டிலே என்ன திருக்குறளா எழுதப்பட்டிருந்தது என்று கேட்க திமுகவினரோ வாயடைத்துப் போனார்கள்.

இன்றைக்கு மின்துறை மீதான விவாதத்தின் போது மின்சாரத்துறையில் புதிதாக உருவாக்க உள்ள துணைமின் நிலையங்கள் மற்றும் திட்டங்களை அறகவித்து முடித்த பின்பு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்களுக்கு எந்த வித காகிதமும் கையில் இல்லாமல் சிறு தடுமாற்றம் கூட இல்லாமல் அமைச்சர் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இதனால் வியந்துபோன எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அவர்கள் எழுந்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திறமையான அமைச்சரை பார்க்கிறேன். இதுபோல எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு எந்த வித துண்டு சீட்டும் இல்லாமல் பதிலளிப்பதே ஒரு “கெத்து” என்று பாராட்டினார்.

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் மீது பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர் எப்போதும் கையில் துண்டு சீட்டு இல்லாமல் பேச மாட்டார் என்பதே.
எதிர்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் திருமுருகன் பேசி இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர்.

அந்த நேரத்திலே எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கடும் கோபம் கொண்டு துரைமுருகன் அவர்களை பார்த்துள்ளார். துரைமுருகன் அவர்கள் பாராட்டியது ஒரு ஆரோக்கியமான அரசியலாக பார்க்கப்பட்டாலும் அவர் திமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்பார் என்ற செய்திகள் வரும் நேரத்தில் இதுபோன்று பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது

அப்பாவுடன் சேர்ந்து ஆல்கஹாலா.? ரசிகரின் பின்னூட்டத்தால் அதிர்ந்துபோன நடிகை! (படம் உள்ளே)

0

அப்பாவுடன் சேர்ந்து ஆல்கஹாலா.? ரசிகரின் பின்னூட்டத்தால் அதிர்ந்துபோன நடிகை! (படம் உள்ளே)

பிக்பாஸ் நடிகையான அனுயா தனது அப்பாவுடன் பியர் கோப்பை வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதள கணக்கான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்து பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் போன நடிகை அனுயா, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓரளவு பேமஸ் ஆனார். இருந்தும் முதல் வாரத்திலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். சுசீ லீக் என்ற சர்ச்சை கருத்தில் இவரது பெயர் அடிபட்டதால் மீண்டும் இணையத்தில் இவரைப்பற்றி பேசப்பட்டது.

அப்பாவுடன் சேர்ந்து ஆல்கஹாலா.? ரசிகரின் பின்னூட்டத்தால் அதிர்ந்துபோன நடிகை! (படம் உள்ளே)

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியான வரிகளுடன் அவரது அப்பாவுடன் அமர்ந்து இருப்பது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். மேலும், அனுயாவின் கையில் பியர் கோப்பை இருப்பது போலும் அப்படம் அமைந்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர் ஒருவர், கையில் பியரை வைத்துக் கொண்டு அப்பாவுடன் போஸ் கொடுக்கலாமா? என்று கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். பலர் இதேபோன்று அவரது பதிவில் பின்னூட்டம் போட்டுள்ளனர்.

சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் மது குடிப்பதை மிக இயல்பான பழக்கமாக வைத்துள்ளனர். நவீன காலத்தில் சில நடிகைகளும் மது குடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். படத்தில் வரும் காட்சிகளை விட நிஜ வாழ்க்கையில் சிலரது செயல்பாடு ஆச்சரியப்படுத்துவதாகவே உள்ளது.

அரசு உத்தரவை மீறி வணிக வளாகத்தை திறந்த துணிக்கடை நிறுவணம் : விசாரித்த அதிகாரியை மிரட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டிய மேலாளர்!

0

பல நாட்டுகளில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 தாண்டி வேகமாக உயர்ந்து வருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 15 நபர்கள் முழுவதும் குணமடைந்துள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகம், திரையரங்கம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்னை நகரில் உள்ள பெரிய கடைகள், வணிக நிறுவனங்களை மூட மாநகராட்சி ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள முன்னணி வணிக வளாகம் உத்தரவை மீறி திறக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அதன் மேலாளரை நேரில் தொடர்பு கொண்டு விசாரித்த போது கடையை மூட மறுத்து ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

அந்த அதிகாரிகள் கடையை மூட முயற்சி செய்த போது அவர்களை தடுத்து மிரட்டியுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் மற்றும் அதன் மேலாளர் மீதும் பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டியது மற்றும் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

பல முன்னணி வணிக வளாகங்கள் அரசு உத்தரவை ஏற்று முடியுள்ள நிலையில் இந்த நிறுவனத்தின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உடைந்து போன செல்போனை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்! அவர் கூறிய ஆச்சரியமான பதில்..???

0

உடைந்து போன செல்போனை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்! அவர் கூறிய ஆச்சரியமான பதில்..???

உலக அளவில் கால்பந்து விளையாட்டில் தனக்கென்று தனி முத்திரை பதித்து புகழ் பெற்ற மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘சாடியோ மானே” தனது உடைந்து போன செல்போன் குறித்து ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான சாடியா மானே எங்கு சென்றாலும் தனது உடைந்து போன பழைய ஐபோனுடன்தான் செல்கிறார். ஒரு வாரத்திற்கு மட்டுமே இந்திய ரூபாயின் மதிப்பில் 140 மில்லியன் சம்பாதிப்பதாக கூறப்படும் இவர், உடைந்துபோன ஐபோனை பயன்படுத்துவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பேட்டியின் போது உடைந்துபோன செல்போனை பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு அவர் கூறிய பதில் பின்வருமாறு;
நான் நினைத்தால் உடைந்துபோன எனது செல்போனை உடனடியாக சரி செய்ய முடியும். அதுமட்டுமல்ல விலை உயர்ந்த கார்களையும், ஜெட் விமானங்களையும், தங்கம் மற்றும் வைர கடிகாரங்களையும் வாங்க முடியும். வாங்கலாம் என்பதற்காக இதையெல்லாம் நான் எதற்காக வாங்க வேண்டும்.? சிறுவயதில் வறுமையை அனுபவித்துள்ளேன் என்னால் படிக்க முடியவில்லை என்பதால் தற்போதைய மாணவர்களுக்காக பள்ளிக்கூடத்தை உருவாக்கியுள்ளேன்.

ஒரு நேரத்தில் விளையாடுவதற்கு காலணி இல்லை, சரியான உணவு இல்லை. இன்று எல்லா வசதிகளையும் விளையாட்டின் மூலம் பெற்றுள்ளேன். நல்லவர்போல் நடிப்பதை விட என் மக்களுக்கு உண்மையாக இருக்கிறேன் என்று அவர் கூறினார். பணம் இருக்கிறது என்பதற்காக எதையும் வாங்க கூடாது. தேவை இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தின் மூலம் சாடியோ மானே கூறியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு – வெளியானது அதிரடி உத்தரவு!

0

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. நாடு முழுவதும் 160 க்கும் மேற்பட்டோர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை 3 நபர்கள் பல்வேறு காரணங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர், மேலும் 15 பெயர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் விதிவிலக்காக கல்லூரிகள் மட்டும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யுஜிசி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது;

‘நாடு முழுவதும் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கவும் மேலும் விடைத்தாள் மதிப்பீடு வேலைகளை இம்மாத இறுதி வரை ஒத்திவைக்க பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது’ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

காதலித்து திருமணம் செய்தகொண்ட ஜோடி! மனைவியின் தவறான செயலால் கணவன் செய்த வெறிச்செயல்..!!

0

காதலித்து திருமணம் செய்தகொண்ட ஜோடி! மனைவியின் தவறான செயலால் கணவன் செய்த வெறிச்செயல்..!!

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கவணனே அவரை கொடூரமாக கொலை செய்த கொடூர சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள ஹார்விபட்டி பகுதியில் இருக்கும் எஸ்.ஆர்.வி நகரைச் சேர்ந்ந அசோக் என்பவர், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், மனைவி சுதா வேலைக்கு சென்று வந்த நிலையில் அவரிடம் பணத்தை வாங்கி அசோக் குடித்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவரிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வேலை நிமித்தமாக சுதா கோயம்புத்தூர் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவி மீது சந்தேகமடைந்த அசோக், தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கோயம்புத்தூரில் இருந்து வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய சுதா, தனது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வருமாறு கணவனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து குழந்தைகளை அழைத்து வராமல் தனியாக வந்த கணவரிடம் குழந்தைகள் எங்கே என்று சுதா கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் சுதாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணையில், மனைவி சுதா டிக்-டாக் மூலம் பலருடன் பழகியது கணவனுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். இதனால் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தலைமறைவான அசோக் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவரின் விழிப்புணர்வு நடவடிக்கை களுக்கு மோடி பாராட்டு

0

மருத்துவரின் விழிப்புணர்வு
நடவடிக்கைகளுக்கு மோடி பாராட்டு

உலக அளவில் பெரும் மாற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் பெயர் கொரோனா. இந்த வைரஸின் பாதிபில் இருந்து மக்களை பாதுகாக்க ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்திய அளவில் தினம் தினம் புதுப்புது விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஒரே வழி மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதே.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை மக்களிடையே கொண்டு செல்ல டெல்லியை சார்ந்த மருத்துவர் ஒருவர் தனது கையில் பதாகையை ஏந்தியவாறு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.அவர் கையில் உள்ள அந்த பதாகையில் “நாங்கள் உங்களுக்காக சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் எங்களுக்காக வெளியே வராமல் இருங்கள்” என எழுதப்பட்டுள்ளது.

இதனை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் மோடி குறிப்பிட்டுள்ளதாவது இன்றைக்கு கொரோனோவை அழிக்க போராடும் ஒவ்வொருவரின் செயலையும் எந்த வார்த்தை கொண்டு பாராட்டினாலும் அதற்கு ஈடு இல்லை. அந்த வகையிலே மருத்துவரின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மிகவும் போற்றுதலுக்கு உரியது என பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!! ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ!

0

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!!
ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ!

கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாக்க எல்லா நாடுகளிலும் முகத்தில் மாஸ்க் அணிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் நடந்த திருமணம் ஒன்றில் மணமக்கள் மாஸ்க் அணிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் வூகான் பகுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கு பரவி பொதுமக்களிடையே உயிர் பயத்தை உண்டாக்கி வருகிறது. மொத்தமாக கொரோனாவால் மட்டுமே இதுவரை 4000 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் அதிகம்  தாக்கத்தை ஏற்படுத்தி பலரை காவுவாங்கிய கொரோனா இந்தியாவிலும் தற்போது தனது வேலையை காட்டத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸால் 140 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நோயில் இருந்து மக்களை பாதுக்காக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, போன்ற பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது போல தமிழ்நாட்டிலும் கொரோனோ பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திராவில் நடந்த திருமணம் ஒன்றில் திருமண தம்பதிகள் முகத்தில் மாஸ் அணிந்து கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்த காணொளியில் மணமக்களை சுற்றி இருந்த சொந்தபந்தங்களும் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு வாழ்த்துவது போல் நின்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.