ஆபத்து என்ற உடன் மருத்துவர் அன்புமணியை அழைக்கும் தமிழக ஊடகங்கள் ஓடிவந்து உதவும் மருத்துவர் அன்புமணி

0
87

ஆபத்து என்ற உடன் மருத்துவர் அன்புமணியை அழைக்கும் தமிழக ஊடகங்கள் ஓடிவந்து உதவும் மருத்துவர் அன்புமணி

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு மாற்றங்களை முன்னிருத்தி புதிய பாணியில் அரசியலை கையிலெடுத்து தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வேட்கையில் பல்வேறு துறையில் தான் செய்யப்போகும் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்தும் விரிவான தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிட்டது பாட்டாளி மக்கள் கட்சியே. ஆனாலும் அக்கட்சியின் சார்பாக யாரும் சட்டமன்ற உருப்பினராக தேர்ந்தெடுக்கப் படவில்லை.

எனினும் தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை கொண்ட பாமகவும் மருத்துவர் அன்புமணி ராமதாசும் தொடர்ந்து தமிழக மக்களிடையே நீர் நிலைநிலைகளை காப்பதற்காக காவிரியை காப்போம், பாலாற்றை காப்போம் என ஒவ்வொரு ஆற்றுப்பாசன பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட கால திட்டமான காவிரி டெல்டா பகுதியை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை தற்போது அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது.

ஆனாலும் அக்கட்சியினரின் மிகப்பெரிய குற்றச்சாட்டு இத்தனை நலத்திட்டங்கள் பாட்டாளி மக்கள் கட்சி செய்தாலும், அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் இதனை சரியாக மக்களிடையே கொண்டு செல்வதே இல்லை என பத்திரிக்கை துறையின் மீதான தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக ஊடகங்களில் ரஜினியின் அரசியல் வருகையே நேரிலையில் காட்டப்படும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழ்நாட்டின் நலன் சார்ந்து வெளியிடும் அறிக்கைகளையும், நடத்தப்படும் போராட்டங்களும் தமிழக ஊடகங்களில் வராதது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்து வந்தனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுயும் பேட்டி எடுத்த ஊடகங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அன்புமணி ராமதாசிடம் எந்த பேட்டியும் எடுக்கவில்லை. ஆனால் கொரோனோ வைரஸ் உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில் தமிழக ஊடகங்களின் பார்வையில் முதலில் பட்டவர் அன்புமணியே.

அந்த வகையிலே மருத்துவரும் முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழ்நாட்டின் பிரபலமான செய்தி தொலைகாட்சிகள் முதல் ரேடியோ சேனல்கள் வரை அனைத்திலும் மருத்துவர் அன்புமணி ராமதாசின் பேட்டிகளே ஒளிபரப்பாகிறது.

இதுநாள் வரை ரஜினி , கமல் என அரசியல் பேசிய ஊடகங்கள் பொதுமக்களுக்கு ஆபத்து என்றவுடன் யாரிடம் அறிவுரை கேட்கவேண்டுமோ அவரிடம் வந்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது என பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

author avatar
Parthipan K