Home Blog Page 5723

இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம்!

0

இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம்!

தொடர்ந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல திரைப்படங்களை தயாரித்து வரும் எஸ் ஆர் பிரபு தமிழ் சினிமாவின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து முகநூலில் ஒரு நீண்ட கடிதத்தை எழுதியுள்ளார்.

எஸ் ஆர் பிரபுவின் முகநூல் கடிதம் :-

திரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது. தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்குனர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது நாம் இருக்கும் துறை மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையாமல் இருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தாலும் இனம் புரியாத கவலை ஒரு ஓரமாக எட்டிப் பார்க்கிறது. பல்வேறுபட்ட துறைகள் இங்கு இருந்தாலும், திரைத்துறை என்று வரும்பொழுது அதன் மேலுள்ள கனவும் எதிர்பார்ப்பும் அளப்பறியது. இந்த கனவுகளுக்குப் பின் ஒரு தனி நபரல்லாது அவரது உறவுகள் தொடங்கி நண்பர், ஊர், வட்டம் என பலரது ஆசை, நிராசைகள் அடங்கி உள்ளதை எண்ணும் பொழுது ஒரு கதையை நிராகரிப்பது ஒருவரின் வாழ்க்கைக் கனவை குறைந்தது ஆறு மாதகாலம் தள்ளிப்போடும் செயலாகவே தோன்றும். ஆனால் இவ்வளவு போட்டியும் பொறாமையும் உள்ள ஒரு தொழிலில் உச்சபட்ச திறன் மட்டுமே குறைந்தபட்ச அதிர்ஷ்டத்தின் உதவியுடன் வெற்றியை தரமுடியும். அந்த வெற்றி தான் பலரது வாழ்க்கையை ஒருசேர முன்னேற்றும் தன்மை உடையது என்பதால் அந்தப் பொறுப்புணர்வு ஒவ்வொரு முறையும் பாரபட்சம் பாராமல் எங்களை முடிவெடுக்க வைக்கிறது.

இந்த நிராகரிப்புகளின் போது நாங்கள் எதிர்கொள்ளும் நண்பர்களின் எதிர்வினைகள் பலவிதமாக இருக்கும். இதனை சமாளிப்பது இன்னும் கடினமான விசயமாகவே உள்ளது. பலர் உங்களுக்கு என்ன மாதிரியான கதை வேண்டும் என்று கேட்பதுண்டு. என்றும் அதற்கான ஒரே பதில், நன்றாக இருக்கும் எக்கதையும் சரி என்பதேயாகும். கடந்த வருடத்தில் நாங்கள் படித்த சுமார் 300 கதைகளில் 3 கதைகள் மட்டுமே எங்களுக்கு பிடித்த கதையாக இருந்தது. சிலசமயம் நமக்கு பிடிக்காத கதை வேறு ஒருவருக்கு பிடித்துவிடும், அப்படி சில படங்கள் வந்து வெற்றி பெறுவதும் உண்டு. ஆக நாம் மட்டுமே ஒரு நல்ல கதையை அங்கீகரிக்கும் திறன் உள்ளவர் என்ற வாதமும் முற்றிலும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் தயாராகி வெளியாகும் படங்களின் மொத்த வெற்றி சதவீதத்தைப் பார்த்தால் இன்னும் 5% ஐ சுற்றித்தான் இருக்கிறது. இந்த வெற்றி சதவீதம் என்னை என்றும் உறுத்திக்கொண்டே உள்ளது. இது ஏன் உயரக்கூடாது என்ற கேள்வி வரும்பொழுது எல்லாம் எனக்குத் தோன்றிய சில விசயங்களை இங்கே எழுத முயல்கிறேன். இது இங்கே இடைவிடாது முயற்சி செய்துவரும் ஏதேனும் ஒரு திரைஆர்வலருக்கு உதவுகிறதோ இல்லையோ, என்னை அன்றாடம் இம்சை செய்துவரும் எண்ணப்பாரத்தை இறக்கி வைத்த திருப்தியையாவது தரும் என்று நம்புகிறேன்!

உதவி இயக்குனர்களுக்கு ( இளைய கதாசிரியர்கள் ) டிஜிட்டல் யுகம் ஒருவகையில் கடந்த கால கஷ்டங்களை குறைத்து இருந்தாலும் இன்னும் முதல் பட வெற்றிப்குப் பின்தான் தாடி எடுப்பது என்பது முதல் வாகனம், வீடு, திருமணம் குழந்தை என பல விசயங்களை தேக்கி வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் உள்ளதை காண்கிறேன். இதை பார்க்கையில் கிபி, கிமு போன்று முதல் படத்திற்கு முன், பின் என்ற மந்திரத்தை உடைப்பதற்கான தருணம் வந்துவிட்டது என்று உரக்கச் சொல்ல தோன்றுகிறது. ஏனென்றால் வருடத்திற்கு 2 அல்லது 3 பேரைத்தவிர எவருக்கும் முதல் படத்திற்குப் பின் வெற்றியோ/தோல்வியோ அது எவ்வித முன்னேற்றமும் தருவதில்லை என்பதே எதார்த்தம் ஆகும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அது முன்பைவிட மோசமான நிலையைத்தான் பல இயக்குனர்களுக்குத் தருகிறது. ஒருவர் ஒரு படம் இயக்கி, அது வெளிவந்து விட்டாலே அவர் முந்தைய வட்டத்தில் இருந்து அடுத்த வட்டத்திற்கு போர் விமானத்தில் இருந்து எஜக்ட் செய்யப்பட்ட விமானி போல் வந்து விழுகிறார். இதை சமாளிக்கவே கவுன்சிலிங் போன்ற உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது என எண்ணுகிறேன்.

முதல் படம் வெளியாகும் வரை ஒருவருக்கு அவரை சுற்றியுள்ளவர்கள் ஏதேனும் ஒருவகையில் அனுசரனையுடன் இருப்பார்கள். அதற்குப்பின் அவர் மேல் இருந்த அனுதாபமும், அனுசரனையும் பெரும்பாலும் மாறி ஏதேனும் ஒரு எதிர்பார்ப்பை தனக்காகவோ இன்னொருவருக்காகவோ திணிப்பார்கள். குறைந்தபட்சம் தன்னிடம் முன்பு போலவே நடந்துகொள்கிறாரா என்று இடைவிடாது பரீட்சித்துக்கொண்டாவது இருப்பார்கள். இதனால் அவர்கள் சந்தர்ப்பவாதிகளோ, தவறான எண்ணம் கொண்டவர்களோ, பாசமற்றவர்களோ அல்ல. அவர்களும் அந்த இயக்குனர் போலவே முதல் படத்திற்குப்பிறகு வாழ்க்கை மொத்தமும் மாறிவிடும் என்ற பிம்பத்துடன் அவருடன் பயணித்திருப்பார்கள். இது வெற்றி பெற்ற அல்லது தோல்வியுற்ற இருதரப்பினருக்கும் பொருந்தும். இந்த புது அழுத்தம் பெரும்பாலும் அந்த இயக்குனரை சிதைத்து விடுகிறது. ஆக ஒரு இயக்குனர் தனது முதல் படத்திற்கு வாய்ப்பு தேடுவது மட்டுமல்லாமல் அதன் வெற்றி அல்லது தோல்விக்கு தன்னை முன்னரே தயார்படுத்திக்கொள்ளும் போது தான் அவரது படைப்புகளையும், வாழ்க்கையையும் வெகுகாலம் நிலையாக வைத்துக்கொள்ள முடியும்.

இங்கு தோல்வியுற்றவர்களுக்கு எந்த அளவு பக்குவம் தேவைப்படுகிறதோ அதைவிட அதிகளவு பக்குவம் வெற்றி பெற்றவர்களுக்கு தேவைப்படுகிறது. அது தவறும் பொழுது தமது ஆரம்ப காலத்தில் கவனம் ஈர்த்த பலர் அதற்குப்பின் இங்கு அடையாளம் இழந்து விடுகிறார்கள். ஹாலிவுட்டில் மட்டும் 75 வயதில் இன்னும் எப்படி சிறப்பான படங்களை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பலரும் அடிக்கடி என்னிடம் குறைபட்டு கேட்பதுண்டு. அதற்கு சில காரணங்கள் உள்ளது, அதைப்பற்றி பேசினாலே மனக்கசப்போ, பகையோ ஏற்படும் என்பதால் பலரும் பேச தயங்குகிறார்கள். ஆனால் நாம் இருக்கும் துறை நன்றாக இருக்க வேண்டும் என்ற என் ஆர்வம், கோளாறு ஆனாலும் பரவாயில்லை என்றே இங்கே பதிவிடுகிறேன். அதுமட்டுமல்ல சமீபத்தில் நிராகரிப்புக்கு ஆளாகி மனச்சிதைவு ஏற்பட்டு ரோட்டோரத்தில் ஏதோ எழுதிக்கொண்டே இருக்கும் ஒரு முன்னாள் உதவி இயக்குனரின் நிலையும் என்னை இதை எழுத தூண்டியது.

ஒரு பட அனுபவம் பெற்றவர்கள் தங்கள் ஆசை நிராசை என அனைத்தையும் கண்மூடித்தனமாக அடக்கிக் கொண்டே ஒவ்வொரு விசயத்தையும் படம் முடியட்டும் என கடந்துவிடுகிறார்கள். அதன் பின்னர் இவ்வளவு பொறுத்துவிட்டேன் இனியும் பொறுக்க வேண்டுமா என பலகுண நலன்களை மாற்றியமைக்கிறார்களோ என்றே எனக்கு தோன்றுகிறது அவ்வாறான உளவியல் மாற்றமே இங்கு பல இயக்குனர்களின் திரைவாழ்க்கையை முடக்கிவிடுகிறது என நான் நம்புகிறேன். அப்படியானவற்றில் சிலதையும இங்கே பார்க்கலாம

ஈகோ:
படைப்பாளிக்கே உண்டான அடிப்படை குணாதிசயமான ஈகோ, அளவாக இருப்பின் படைப்பையும், படைப்பாளியையும் காக்கும் கவசமாக இருக்கிறது. அளவை மீறும் போது இயக்குனர்களின் படைப்பை, நட்பை, உறவை, பொருளாதாரத்தை என பலவற்றை இழக்க காரணமாக உள்ளது. இதை அடிக்கடி சுய அளவீட்டிற்கு உற்படுத்திக்கொள்வதின் மூலம் பல இழப்புகளை தவிர்க்க இயலும்.

சமூகம்:
வெற்றி பெறுபவர் அனைவரையும் நல்லவர் எனவும், திறமைசாலி எனவும் கண்மூடித்தனமாக நம்பி கொண்டாடும் நம் சமூகத்திடமும் பிரச்சினை உள்ளது. இவ்வாறான கொண்டாட்டங்கள் வெற்றி பற்றிய தவறான புரிதலை படைப்பாளிகளுக்கு கொடுக்கிறது. தான் ஒவ்வொரு முறை கொண்டாடப்படும் பொழுதும் இது நிரந்தரமானதல்ல என்பதை நினைவுபடுத்திக்கொள்ள தன்னால் இயலாவிட்டாலும் தன்னுடன் உள்ள நபர் உணர்த்தும்படியான சூல்நிலையையாவது பாதுகாத்தல் நல்லது.

பயம்:
பெற்ற வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்ற பயம் பெரிய இடைவெளியை இயக்குனருக்கும் அவரது குழுவிற்கும் இடையே ஏற்படுத்துகிறது. இது அந்த படைப்பாளியை அவரது பலம் பலவீனங்களை அறிந்து அவரை அதுவரை தாங்கி நிற்கும் நபர்களை இழக்கச் செய்கிறது. இதே பயம் படம் உருவாகும் தருணத்தில் சில இயக்குனர்களை Trauma நிலைக்கு தள்ளி ஒருவித உயிர்ப்பயத்தில் அவதிப்படும் சூழ்நிலையையும் கண்டுள்ளேன். எனவே இந்த நிலைக்கு வருவதற்குள் தங்களைப் பக்குவப்படுத்தி நிதானமாக செயல்படும் மனநிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் முதல் படத்திற்காக 10 வருடம் வரை காத்திருக்கவும் தயாராயிருப்பவர்கள், காத்திருப்பிற்கு பயந்து அடுத்த படவாய்ப்பை அவசரப்பட்டு உறுதிசெய்துவிட்டு கஷ்டப்படுகிறார்கள். இல்லையேல் படப்பிடிப்புக்கு செல்வதையே குறிக்கோளாக கொண்டு மற்ற விசையங்களை கோட்டை விட்டுவிடுகிறார்கள்.

போதை:
ஒருவர் வெற்றி பெறும் வரை தனது வளர்ச்சிக்கு தடையாக கருதி பலதரப்பட்ட போதை தரும் விசயங்களை ஒதுக்கி வைத்திருப்பார். வெற்றிக்குப்பின் அதுவரை இருந்த வைராக்கியம் வலுவிழந்து விடுகிறது. அதுமட்டுமல்ல அதுவரை எட்டாக்கனியாக இருந்த விசயங்கள் அனாயசமாக அருகில் வந்து உரசி விரசமாக்கிச் செல்லும். சாம்ராஜ்ஜியங்களையே அழித்த சில பலகீனங்களுக்கு ஓரிரு பட வெற்றி கண்டவர்கள் எம்மாத்திரமே. இங்கே நான் யாரையும் சன்னியாசியாக வாழ பிரசாரம் செய்யவில்லை அந்த சூழ்நிலைக்கு தள்ளப்படாமல் பார்த்துக்கொள்ளவே சொல்கிறேன்.

விரோதம்:
ஒரு படம் உருவாகும்போது கருத்து வேறுபாடுகள் இயல்பாகவே உருவாகும். ஆனால் படம் வெளியான பின் அது விரோதமாக மாறுவதும், அதனடிப்படையில் தமது அணுகுமுறையில் தவறான மாற்றம் கொண்டுவருவதும் அடுத்து பல நல்ல படைப்புகள் வீணாகக் காரணமாகிறது. தவறாக ஒரு முடிவு எடுத்து விட்டால் பின்னர் அதற்கு நேரெதிரான முடிவு எடுப்பது சரியாகிவிடாது. நடந்த தவறை சிலமுறை யோசித்து அடுத்து கண்மூடித்தனமாக முடிவெடுக்காமல் சரியான முறையில் அதை அணுகவேண்டும் என்பதே என் யோசனையாகும்.

மாற்றம்:
மாற்றம் ஒன்றே மாறாதது என மாறிமாறி பேசிக்கொண்டாலும் கால மாற்றத்திற்கு தகுந்தாற்பால் தங்களை புதுப்பித்துக்கொள்ள பலர் தவறி விடுகிறார்கள். தன்னை அல்லது தனது படைப்பை பற்றிய கருத்துக்களையோ அல்லது மற்ற படைப்புகளை பற்றியோ தான் பேசுவதை குறைத்து அடுத்தவர் பேசுவதை கவனித்து மட்டுமே வந்தால் நம்மால் நம்மை சுற்றி நடக்கும் மாற்றங்களை உணர முடியும் என நம்புகிறேன். இது தவறும்போது ஒருவர் அடுத்தடுத்து சமகால படங்கள் எடுக்க பெரும் தடங்கலாகி விடுகிறது.

கதாசிரியர்:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என நான்கு முக்கிய இலாகாக்களில் ஒருவரே சிறப்பாக செயல்பட்டு அவரே தொடர்ச்சியாக எல்லா படங்களும் எடுப்பது இயலாத காரியம். முன்பு போன்று ஸ்டுடியோக்கள் இங்கே இல்லாத சூழ்நிலையில் 80- ற்குப் பிறகு இயக்குனர், நடிகர்களை நம்பியே திரைத்துறை இயங்கி வருகிறத. கதாசிரியர்களை ஊக்குவிக்காமல், சரியான ஊதியம் வாங்கித் தராமல் தானே எல்லாம் செய்ய ஆரம்பிக்க இங்கே கதைப்பஞ்சம் உருவாகி விட்டது. தென்னிந்திய திரைத்துறைக்கே தலைமையிடமாக விளங்கிய தமிழ்நாட்டில் கதாசிரியர் பஞ்சம் என்றால் அது இன்றைய காலகட்டத்தில் படம் எடுக்கும் அனைவரையுமே சாரும். இன்றைய சூல்நிலையில் ஒரு இயக்குனர் நினைத்தால் மட்டுமே ஒரு கதாசிரியர் உருவாக முடியும். இனியாவது அது நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

பொறுமை:
தன்னை விட அனுபவம், அறிவு, வெற்றி, வயது என ஏதேனும் குறைந்தவரிடம் மற்றவர்கள் எளிதில் பொறுமை இழப்பதும், சகிப்புத்தன்மை இல்லாமல் எரிந்து விழுவதும், அவர்களுக்கெல்லாம் என்ன தெரியும் என்ற அலட்சியமும், அவர்களிடம் இருந்தும் ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்றில்லாமல் தங்கள் சுயபெருமை பேசியும் ஓடவிடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவர் தனது படத்தை பார்க்கவில்லை என்றாலோ, அல்லது பிடிக்கவில்லை என்றாலோ அவரை எதிரியாக பாவிக்கும் மனப்பான்மை இன்னும் உள்ளதை காண்கிறேன். இவற்றில் எல்லாம் மாற்றம் உருவாகும் பொழுது எந்த வயதானாலும் அந்த காலகட்டத்திற்கு தகுந்த படங்கள் எடுக்க இயலும்

ஆக கதை எழுத, படம் இயக்க ஆசைப்படுபவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், திரைத்துறையை தாம் சென்றடையப் போகும் இறுதியான இடமாகப் பார்க்காமல், தான் அனுபவித்து பயணிக்க விரும்பும் வாழ்க்கைப் பாதையாக பார்த்தால் வாழநாள் முழுக்க இதை ரசித்து வேலை செய்யலாம். என்னால் முடிந்தவரை இங்கே பதிவாக்கிவிட்டேன். இது எல்லோருக்கும் பொருந்தும் விசயமாக இருந்தாலும் அதிகம் இயக்குனர்களை மனதில் கொண்டே எழுதப்பட்டது. மேற்கண்ட விசயங்கள் யாருக்கும் தெரியாதது அல்ல. அடுத்தவருக்கு சொல்லும் போது சரியாகவும் தனக்கென்று வருகையில் தவறாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. அவ்வளவே! மேலும் இது தனிப்பட்ட எவரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதும் அல்ல. இவ்வளவு காலம் நான் கண்ட, கேட்ட, உணர்ந்த விசயங்களிலிருந்தே எழுதப்பட்டது. இதை யாரேனும் ஒருவராவது சரியாக புரிந்து அவருக்குப் பயன்பட்டாலே அது என் பெரும் பாக்கியம்.

-எஸ். ஆர். பிரபு

திரௌபதி திரைப்படம் மராத்திய மொழியில் ரீமேக் ஆக உள்ளது : உற்சாகத்தில் படக்குழு

0

திரௌபதி திரைப்படம் மராத்திய மொழியில் ரீமேக் ஆக உள்ளது : உற்சாகத்தில் படக்குழு

கடந்த 28 ஆம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பெற்றோர்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திரௌபதி படம் ட்ரைலர் ரிலீஸ் ஆன நாளில் இருந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. இதனால் படம் ரிலீஸ் ஆகுமா? சென்சாரில் தப்புமா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தது.

அத்தனை சர்ச்சைகளையும் கடந்து சென்சார் போர்டின் U/A சான்றுடன் 330 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. படம் ரிலீஸ் ஆகும் வரை பல சர்ச்சைகளை சந்தித்த திரௌபதி படம் அதன் பிறகு சாதனைகளாக படைத்தது வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு மராத்திய நடிகர் அங்குஷ் சௌதிரி இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுகளை சமூக வலைத்தளம் மூலமாக வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் திரௌபதி படத்தை மராத்திய மொழியில் ரீமேக் செய்ய உள்ளதாக திரையுலக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை ரீமேக் செய்ய முடியாவிட்டால் இந்த படத்தை மராத்தியில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இந்த படம் மராத்தியில் எப்படி வெளியிடப்பட்டாலும் அதனை வரவேற்க தயாராக இருப்பதாக திரௌபதி படக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.

ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்..! மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸ்ஸ்!! நடந்தது என்ன..?

0

ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்..! மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸ்ஸ்!! நடந்தது என்ன..?

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஏமாற்றம் மிஞ்சியதாக பேட்டி அளித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்று கட்சி ஆரம்ப நிலை குறித்தும் அடுத்தடுத்த செயல்பாடுகள் என்ன என்பதை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு முன்பு நடிகர் ரஜினிகாழ்ந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஒரு வருடம் கழித்து மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினேன். இந்த ஆலோசனைக்கு பிறகு ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு திருப்தியில்லை, ஏமாற்றம் கிடைத்தது. இந்த ஏமாற்றத்தை பற்றி பிறகு தெரிவிக்கிறேன். சிஏஏ போராட்டம் குறித்து இஸ்லாமியர் அமைப்புடன் முன்பு விவாதம் நடத்தினேன் என்று கூறினார்.

ரஜினி மக்கள் மன்றத்தில் அதிக உறுப்பினர்களை இணைக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சிலர் மட்டுமே நிர்ணயித்த இலக்கை எட்டியுள்ளனர். பலர் அதிக உறுப்பினர்களை சேர்க்கவில்லை. இதனால் ரஜினிக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது கட்சியில் இருக்கும் பலர் முக்கிய பதவிகளை அடைய நினைப்பதற்காக ரஜினியிடம் அதிகம் நெருக்கம் காட்டுவதாகவும், கட்சி ஆரம்பித்தவுடன் எம்எல்ஏ ஆக வேண்டும் என்கிற பதவி ஆசையில் இருப்பதாக கூறப்படுகிறது.

திமுகவின் “தமிழ் மக்கு” போஸ்டர்! ஆக இப்படித்தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா..? இணையத்தில் விமர்சனம்

0

திமுகவின் “தமிழ் மக்கு” போஸ்டர்! ஆக இப்படித்தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா..? இணையத்தில் விமர்சனம்

திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் அவரது கட்சியினரால் கொட்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு எழுத்துப்பிழையுடன் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று கேலி கிண்டலுக்கு வழிவகுத்துள்ளது.

சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் போஸ்டர் அடித்துள்ளனர். அதில் எங்கள் கழகத்தின் “தமிழ் மக்கு” பிறந்தநாள் வாழ்த்துகள் என்று எழுத்து பிழையுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது. திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் எதுவும் தேவையில்லை என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஸ்டாலின் பேச்சை கேட்காமல் பல இடங்களில் கேக் வெட்டியும், அன்னதானம் வழங்கியும், போஸ்டர் ஒட்டியும் பிறந்தநாள் வாழ்த்து கொண்டாடியது பலருக்கு சங்கடத்தை ஏற படுத்தியது. இந்நிலையில் சென்னையில் ஒட்டப்பட்ட மக்கு போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் சமூக வலைதளங்களில் திமுகவையும், ஸ்டாலினையும் பலர் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

கரோனா வைரஸால் பயப்பட வேண்டாம்; விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்! அன்புமணி ஆலோசனை!!

0

கரோனா வைரஸால் பயப்பட வேண்டாம்; விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்! அன்புமணி ஆலோசனை!!

கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம், நிதானமும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் என்று பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவின் வூகான் பகுதியில் உருவான கரோனா வைரஸ் இதுவரை 3000 பேரை பலிவாங்கியுள்ளது. சீனாவின் அண்டை நாடுகளான இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா போன்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அண்டை நாடுகளில் மட்டுமே பரவியிருந்த வைரஸ் தற்போது சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளை கடந்து இந்தியாவின் ஆந்திர மாநிலம், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலிங்களிலும் பதம் பார்த்து வருகிறது.

இதுவரை இந்தியாவில் மட்டுமே 28 பேர் கரோனா வைரஸ் நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதை மத்திய சுகாதார அமைச்சகம் உறுத்திபடுத்தியுள்ளது, இதனால் பொதுமக்கள் வைரஸ் குறித்த அச்சத்தில் தன்னை பாதுகாத்து வருகின்றனர்.தினமும் சுத்தமாக இருப்பதாலும், விழிப்புடனும் இருந்தால் இதில் இருந்து தப்பிக்கலாம்.

இந்த பாதிப்பினால் சீனாவில் மட்டுமள 80,270 பேர், தென்கொரியாவில் 5,328 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலில் 3,190 பேர் பலியாகியுள்ளனர். இதில் 2,981 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெரும் பாதிப்பு இல்லை எனலாம். உலகின் அதிக மக்கள் தொகையும், சுகாதாரமில்லாத பொது இடங்களும் இந்தியாவில் அதிகம் இருப்பதால் இந்திய மக்களும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.

கரோனா வைரஸின் அறிகுறிகள் :

இந்த வரைஸ் தாக்கிய உடன் காய்ச்சல், இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் அதிகமாக இருக்கும். உடலை தாக்கிய இரண்டு வாரங்களில் இவை அதிகமாகலாம் ஆகவே இந்த அறிகுறி இரு தனியாக இருப்பதும், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதும் மிக அவசியமானது.

கரோனா வைரஸில் இருந்து இதுவரை 44,000 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மற்றவர்களின் உடல்நலமும் தேறி வருவதாக கூறப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த மூவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுமையான குணம் அடைந்தவுடன் சவுதிக்கு வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளனர்.

கரோனா வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகளும், மிகைப்படுத்தப்பட்ட தகவலும் பொதுமக்களிடையே தேவையற்று பரப்பப் படுகிறது. இதனை தவிர்க்க சில நடவடிக்கைகளை கையாள வேண்டும். பொதுவான மருத்துவ அறிவுரை மற்றும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கூடங்களுக்காக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து பள்ளி மாணவர்களும் கடைபிடிக்க வேண்டும், அதை அரசும் உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.

சந்தானத்தின் வித்தியாசமான லுக்கில் பிஸ்கோத் போஸ்டர் !

0

சந்தானத்தின் வித்தியாசமான லுக்கில் பிஸ்கோத் போஸ்டர் !

தான் நடித்து வரும் பிஸ்கோத் என்ற திரைப்படத்தின் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தானம்.

2004 ஆம் ஆண்டு மன்மதன் படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமான சந்தானம் வடிவேலுவின் திரையுலக விலகலுக்குப் பின் உச்சநட்சத்திரமாக மாறினார். அதன் பின் தொலைக்காட்சியில் இருந்து வந்த சிவகார்த்திகேயனின் வெற்றியைப் பார்த்து தானும் ஹீரோ அரிதாரம் பூசினார். ஆரம்பத்தில் அவர் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும் ஆக்‌ஷன் ரூட்டில் அவர் இறங்கிய படங்களான வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் போன்ற படங்கள் சறுக்கின. அதனால் சந்தானம் சறுக்கி விட்டாரோ என்று நினைத்து வேளையில் தில்லுக்கு துட்டு 1,2 , ஏ 1 ஆகிய படங்களின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இப்போது சந்தானம் மீண்டும் வரிசையாக படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்த வரிசையில் ஏ1 பட இயக்குனருடன் மீண்டும் ஒரு படத்தில் ஒப்பந்தமான அவர் இப்போது இயக்குனர் அர் கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் பிஸ்கோத் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடித்த கண்டேன் காதலை மற்றும் வந்தான் வென்றான் ஆகிய படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவை. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்துக்கு அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் இசையமைக்கிறார்.

சந்தானத்தின் வித்தியாசமான லுக்கில் பிஸ்கோத் போஸ்டர் !

இயக்குனர் ஆர் கண்ணன் இதற்கு முன்னர் ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான், சேட்டை , கண்டேன் காதலை ஆகிய படங்களில் சந்தானத்தோடு பணிபுரிந்துள்ளார். அந்த படங்களில் சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள் சிறப்பாக அமைந்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றன. இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்துள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு உருவானது. ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சந்தானம் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த போஸ்டரில் 80 களின் ரெட்ரோ லுக்கில் சந்தானம் புல்லட்டை ஓட்டி வருவது மாதிரி அமைக்கப்பட்டு உள்ளது.

மாரி செல்வராஜின் அடுத்த கதாநாயகன் இவர் தான்: புதிய கூட்டணி!

0

மாரி செல்வராஜின் அடுத்த கதாநாயகன் இவர் தான்: புதிய கூட்டணி!

மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் பரியேறும் பெருமாளும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முக்கிய விருதுகளில் இப்படம் விருதுகளை அள்ளியது. இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பாரட்டப்பட்டார். இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த ஓராண்டாக நடந்த திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிவுற்று இப்போது கர்ணன் எனப் பெயர் சூட்டப்பட்டு அந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மாஞ்சோலை கலவரத்தில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் தனுஷ் தேயிலை தோட்ட தொழிலாளியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. விறுவிறுவென நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டது.

மாரி செல்வராஜின் அடுத்த கதாநாயகன் இவர் தான்: புதிய கூட்டணி!

இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தினைப் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவரது மூன்றாவது படத்தில் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். த்ருவ் விக்ரம் நடித்த  ஆதித்ய வர்மா படத்தில் அவரின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நீலம் புரொடக்‌ஷன் சார்பில் இயக்குனர் ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக சொல்லபடுகிறது. இந்த கூட்டணியால் இப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

யாருமே என் பெயரை சொல்லி அழைப்பதில்லை; இப்படிதான் அழைக்கிறார்கள் ! தோனி பெருமை !

0

யாருமே என் பெயரை சொல்லி அழைப்பதில்லை; இப்படிதான் அழைக்கிறார்கள் ! தோனி பெருமை !

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தமிழக ரசிகர்கள் தன்னை தல என்று அழைப்பது பற்றி பெருமையாகப் பேசியுள்ளார்.

உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பின் தோனி 6 மாதமாக இந்திய அணிக்காக எந்த வொரு போட்டியிலும் விளையாடவில்லை. இதையெல்லாம் கணக்கில் தோனியின் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக அனைவரும் கருத ஆரம்பித்துள்ளனர். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இது குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தார். அதனால் தோனியின் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ஐபிஎல் போட்டிகள்தான்.

ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் ஆனதில் இருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனி சென்னை தனது இரண்டாவது தாய்வீடு என சொல்லி இருக்கிறார். தற்போது 38 வயதாகும் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் –ல் சென்னை அணிக்கு தலைமை தாங்க உள்ளார். ஆனால் அடுத்த ஆண்டு வீரர்களை முழுவதுமாக விடுவிக்கும் ஏலம் நடக்க இருப்பதால், தோனியை சி எஸ் கே அணி நிர்வாகம் தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

யாருமே என் பெயரை சொல்லி அழைப்பதில்லை; இப்படிதான் அழைக்கிறார்கள் ! தோனி பெருமை !

இம்மாதம் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னையில் முகாமிட்டு பயிற்சி செய்து வரும் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் ‘தமிழக ரசிகர்கள் யாருமே என்னை பெயரை சொல்லி அழைப்பதில்லை. எல்லோருக்கும் நான் தல தான். அந்த பெயரால்தான் நான் இவ்வளவு ரசிகர்களை பெற்றேன். தல என அவர்கள் அழைக்கும் போது நான் சகோதரன் என்ற உணர்வையே பெறுகிறேன். ஒவ்வொரு முறை அவர்கள் தல என்று அழைக்கும் போது என் மீதான அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாக உணர்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் சென்னை அணி குறித்து ‘2008 ஆம் ஆண்டு ஐபிஎல் பயணம் தொடங்கியது. மைதானத்திலும்,  வெளியேயும் ஒரு மனிதாகவும், கிரிக்கெட் வீரனாகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் கலையை ஐபிஎல்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தது’ என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பெண்ணை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவர்! திரெளபதி படத்தை நினைவுகூறும் அதிர்ச்சி சம்பவம்! அந்த பெண்ணிற்கு 1.5 லட்சம் சம்பளமாம்!

0

இஸ்லாமிய பெண்ணை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவர்! திரெளபதி படத்தை நினைவுகூறும் அதிர்ச்சி சம்பவம்! அந்த பெண்ணிற்கு 1.5 லட்சம் சம்பளமாம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த ஷபீர் என்பவர் தனது மகளான ஷாரிகா அஞ்சும் (21) கடத்தப்பட்டுள்ளதாக ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

புகாரில் கூறியிருப்பதாவது;

என்னுடைய மகள் ஷாரிகா அஞ்சும் சென்னை ஏர்போர்ட்டில் வேலை செய்கிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி ஆம்பூரில் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு 25 ஆம் தேதி அன்று மதியம் வேலைக்கு செல்வதாக கூறி சென்னைக்கு புறப்பட்டார். அன்று இரவே என் மகளுக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. உடனே ஷாரிகா தங்கியிருக்கும் விடுதிக்கு போன் செய்து வந்துவிட்டாரா என்று கேட்டதற்கு, இன்னும் வரவில்லை என்று பதில் கூறினர்.

உடனே நான் செனைக்கு சென்று தங்கு விடுதியில் நேரடியாக கேட்டதற்கு உங்கள் மகள் இங்கு வரவில்லை என்று கூறினார்கள். பிறகு வேலை செய்யும் இடத்திற்கு சென்று விசாரித்தேன் அங்கேயும் வரவில்லை என்று கூறினார்கள். பின்னர் பல இடங்களில் தேடிப்பார்த்தபோது குடியாத்தம் மோடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் என் மகளை கடத்திச் சென்றுள்ளார்.

நாங்கள் மோடிகுப்பம் சென்று அருண் என்பவரின் பெற்றோரிடம் என் மகளை காட்டுங்கள் என்று கேட்டதற்கு உன் மகளை காட்டமுடியாது, அவள் உங்களுடன் வரமாட்டாள் உங்களை பார்க்கமாட்டேன் என்று கூறிவிட்டாள் நீங்கள் போகலாம் என்று மிரட்டி அனுப்பிவிட்டார்கள். என் மகள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று பயமாக உள்ளது. ஐயா, உடனடியாக மோடிகுப்பத்தை சேர்ந்த அருண் என்பவரை அழைத்து விசாரித்து தக்க நடவடிக்கையின் மூலம் என் மகளை மீட்டுத்தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகாரில் ஷபீர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

ஏர்போர்ட்டில் வேலை பார்க்கும் “ஷாரிகா அஞ்சும்’ மாதம் 1.5 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆட்டோ டிரைவரான அருண் திட்டமிட்டு கூட்டிச் சென்றாரா என்பது விசாரணையின் பின்னரே தெரியவரும். இந்த சம்பவத்தை பார்க்கும் போது சமீபத்தில் வெளியான திரெளபதி படத்தில் வரும் நாடக காதல் சம்பவங்களை மேலும் உறுதிபடுத்துகிறது. பெண் பிள்ளையை பெற்றவர்கள் படும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாததாக உள்ளது.

குடும்ப வறுமை காரணமாக சவாலுடன் பேருந்தை ஓட்டும் சிங்கப்பெண்! தடை அதை உடை… புது சரித்திரம் படை..!!

0

குடும்ப வறுமை காரணமாக சவாலுடன் பேருந்தை ஓட்டும் சிங்கப்பெண்! தடை அதை உடை… புது சரித்திரம் படை..!!

கொல்கத்தா வடக்கு புறநகர் பகுதியின் அருகேயுள்ள நோபாரா என்ற இடத்தில் கல்பனா என்னும் 21 வயது இளம்பெண் பேருந்தை ஓட்டிவரும் காட்சி அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

கல்பனாவிற்கு ஒரு அக்காவும் இரண்டு அண்ணன்களும் உள்ளனர். தனது குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லமுடியாத சூழ்நிலையால் வீட்டு வேலையில் அம்மாவிற்கு உதவிய பின் காலையில் பேருந்தில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்வதோடு சிறுவயதிலேயே தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தையும் தொடருகிறார். நாள்தோறும் ஆண்களால் கடினமாக செய்யக்கூடிய வேலையை இளம்பெண் செய்வதை பார்த்து பலரும் வியப்பில் ஆழ்ந்து போயுள்ளனர்.

கொல்கத்தா நகரத்தின் பரபரப்பான சாலையில் கல்பனா மன தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பேருந்தை அசராமல் இயக்குகிறார். இந்த கடினமாக வேலையின் காரணமாக அவரது கைகள் காப்பு காய்ச்சியது போல் ஆகிவிட்டது. தினமும் சாப்பிடும் வழக்கமான உணவின் அளவை விட சற்று கூடுதலாக உண்ண வேண்டிய அவசியம் உள்ளதாக கூறுகிறார். உலகத்தில் பலர் ஈசியான வேலைகளை செய்வதற்கே சோம்பல் கொண்டிருக்கும் வேளையில்,

குடும்பத்தின் அடிப்படை பொருளாதார முன்னேற்றத்திற்கும் தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்காகவும் எதிர்நீச்சல் போடும் சிங்கப்பெண் கல்பனாவின் வீடியோ இணையத்தில் பரவி பொதுமக்களிடையே பலரது பாராட்டை பெற்று வருகிறது.

“வாகனம் ஓட்டுவது வேலையல்ல’ அது ஒரு கலை”