குடும்ப வறுமை காரணமாக சவாலுடன் பேருந்தை ஓட்டும் சிங்கப்பெண்! தடை அதை உடை… புது சரித்திரம் படை..!!

0
129

குடும்ப வறுமை காரணமாக சவாலுடன் பேருந்தை ஓட்டும் சிங்கப்பெண்! தடை அதை உடை… புது சரித்திரம் படை..!!

கொல்கத்தா வடக்கு புறநகர் பகுதியின் அருகேயுள்ள நோபாரா என்ற இடத்தில் கல்பனா என்னும் 21 வயது இளம்பெண் பேருந்தை ஓட்டிவரும் காட்சி அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

கல்பனாவிற்கு ஒரு அக்காவும் இரண்டு அண்ணன்களும் உள்ளனர். தனது குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லமுடியாத சூழ்நிலையால் வீட்டு வேலையில் அம்மாவிற்கு உதவிய பின் காலையில் பேருந்தில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்வதோடு சிறுவயதிலேயே தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தையும் தொடருகிறார். நாள்தோறும் ஆண்களால் கடினமாக செய்யக்கூடிய வேலையை இளம்பெண் செய்வதை பார்த்து பலரும் வியப்பில் ஆழ்ந்து போயுள்ளனர்.

கொல்கத்தா நகரத்தின் பரபரப்பான சாலையில் கல்பனா மன தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பேருந்தை அசராமல் இயக்குகிறார். இந்த கடினமாக வேலையின் காரணமாக அவரது கைகள் காப்பு காய்ச்சியது போல் ஆகிவிட்டது. தினமும் சாப்பிடும் வழக்கமான உணவின் அளவை விட சற்று கூடுதலாக உண்ண வேண்டிய அவசியம் உள்ளதாக கூறுகிறார். உலகத்தில் பலர் ஈசியான வேலைகளை செய்வதற்கே சோம்பல் கொண்டிருக்கும் வேளையில்,

குடும்பத்தின் அடிப்படை பொருளாதார முன்னேற்றத்திற்கும் தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்காகவும் எதிர்நீச்சல் போடும் சிங்கப்பெண் கல்பனாவின் வீடியோ இணையத்தில் பரவி பொதுமக்களிடையே பலரது பாராட்டை பெற்று வருகிறது.

“வாகனம் ஓட்டுவது வேலையல்ல’ அது ஒரு கலை”

author avatar
Jayachandiran