Home Blog Page 5724

வீரர்களின் மடியில் கைவைத்த பிசிசிஐ: பரிசுத் தொகை இவ்வளவுதானா ?

0

வீரர்களின் மடியில் கைவைத்த பிசிசிஐ: பரிசுத் தொகை இவ்வளவுதானா ?

இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசாக 10 கோடி ரூபாய் மட்டுமே அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் எந்த தொடர்களையும் அமைத்துக் கொள்வதில்லை.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் 2020 ஆம்  ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் முறையாக நடக்க இருக்கிறது. இதுவே அவரின் கடைசி தொடராகவும் இருக்கும் என்பதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் மும்பையில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் அதிக பணம் கொழிக்கும் லீக் தொடராக ஐபிஎல் இருப்பதால் வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இந்த ஆண்டு வீரர்களின் கனவை கெடுக்கும் விதமாக பிசிசிஐ ஒரு முடிவை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை வென்று சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பரிசுத் தொகையில் பாதிதான் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. வழக்கமாக சாம்பியன் அணிக்கு வழக்கமாக வழங்கும் பரிசுத்தொகையான 20 கோடிக்குப் பதில் 10 கோடி பரிசாகவும், இறுதிப் போட்டியில் தோற்கும் அணிக்கு 4.30 கோடியும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த முடிவை அறிவித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த முடிவால் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இலங்கை வீரர்களோடு கைகுலுக்க மறுக்கும் இங்கிலாந்து வீரர்கள்: ஏன் தெரியுமா ?

0

இலங்கை வீரர்களோடு கைகுலுக்க மறுக்கும் இங்கிலாந்து வீரர்கள்: ஏன் தெரியுமா ?

இலங்கையில் நடக்க இருக்கும் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று இங்கிலாந்து அணி 3 வடிவிலான தொடர்களிலும் விளையாடியது. சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றாலும் அத்தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. தொடரில் பல வீரர்கள் காய்ச்சல் மற்றும் உணவுக்குழல் பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதையடுத்து இப்போது இங்கிலாந்து இலங்கை அணிக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. 19 ஆம் தேதி தொடங்க இருக்கும் முதல் போட்டியின் போது நோய்த் தொற்று காரணமாக இலங்கை வீரர்களுடன் கைகுலுக்க மாட்டோம் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் கொரோனா வைரஸ் பீதி மக்களை அச்சுறுத்தி வரும் தொடுதல் மூலமாக அந்நோய் பரவும் என சொல்லப்படுகிறது. இலங்கையிலும் இப்போது அதன் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இலங்கை வீரர்களை தொட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதைஇது சம்மந்தமாக ஜோ ரூட் அளித்த நேர்காணலில் ‘தென்னாப்பிரிக்க தொடரில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் தொட்டுக் கொள்ள் வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம். ஆனால் அதற்குப் பதிலாக கையை மடக்கி, லேசாக முட்டிக் கொள்ள முடிவு செய்து இருக்கிறோம். பாதுகாப்புக் காரணமாக சீரான இடைவெளியில் கை கழுவி. பாக்டீரியா, கிருமிகள் பரவுவதை தவிர்க்கும் வகையில் எங்களது மருத்துவ குழு இந்த அறிவுரை வழங்கியுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

37 பந்துகளில் சதம்: 5 மாதத்துக்குப் பின் வானவேடிக்கைக் காட்டிய ஹர்திக் பாண்ட்யா !

0

37 பந்துகளில் சதம்: 5 மாதத்துக்குப் பின் வானவேடிக்கைக் காட்டிய ஹர்திக் பாண்ட்யா !

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 37 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது அதிரடியான பேட்டிங்காலும், விக்கெட் எடுக்கும் பவுலிங் திறமையாலும் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக வலம் வந்து கொண்டு இருந்தார். ஆனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்தார்.

காயம் ஆறிய பின்னர் இந்திய அணியில் இடம்பெறுவதற்காக பயிற்சியில் ஈடுபட்ட அவர் தற்போது உள்நாட்டு போட்டிகளில் விளையாடி அணியில் இடம்பிடிக்க முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக டாக்டர் டி ஒய் படேல் கோப்பையில் ரிலையன்ஸ் -1 அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இதில் அவர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தனது திறமையை அவர் நிருபித்துள்ளார்.

முதல் போட்டியில் அவர் களமிறங்கி 20 பந்துகளில் 37 ரன்கள் அடித்தது மட்டும் இல்லாமல், 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். அதையடுத்து இன்று நடந்த சிஏஜி  அணிக்கு எதிரானப் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதில் 10 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடக்கம். இந்த அதிரடியான ஆட்டத்தின் மூலம் அவர் தனது உடல்தகுதியை இந்திய தேர்வுக்குழுவுக்கு நிருபித்துள்ளார்.

தென் ஆப்ப்ரிக்க அணி, இந்தியா வந்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணியில் பாண்ட்யாவுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாண்ட்யாவின் இந்த சதம் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

படம் வாய்ப்பு இல்லையா என்று ரசிகர் கேட்க; லோக்கலாக பதிலளித்த ரித்விகா.! ஒரு நடிகை இப்படியா பேசுவது..?

0

படம் வாய்ப்பு இல்லையா என்று ரசிகர் கேட்க; லோக்கலாக பதிலளித்த ரித்விகா.! ஒரு நடிகை இப்படியா பேசுவது..?

நடிகை ரித்விகா பல படங்களில் நடித்து இருந்தாலும் பெரிய அளவில் சினிமா ரசிகர்களை ஈர்க்க முடியாமல் அடையாளம் தெரியாமல் இருந்தார். மெட்ராஸ் படத்தின் நடிப்பு மூலம் நல்ல அடையாளம் கிடைத்தது. சில வருடங்களாக மட்டுமே சினிமாவில் அடையாளம் தெரியக்கூடிய நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக படவாய்ப்பு இல்லாமல் போனதால் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் பல்வேறு காட்சிகள் மக்களிடம் முகம்சுழிக்க வைத்தது ஒரு பக்கம் இருந்தாலும் பொதுமக்களிடையே அந்த நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு இல்லை. இணையத்தின் வாசல் மட்டுமே அதற்கான கடைசி எல்லை என்று கூறலாம்.

சினிமாவில் ஆரம்ப காலத்தில் அமைதியாக நல்லவர்போல் இருந்த ரித்விகாவின் உண்மையான இன்னொரு முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது. எப்பேர்பட்ட சிறந்த நடிகராக இருந்தாலும் அவர்களிடம் தனிமனித ஒழுக்கம் இருக்கும், அவர்களிடம் நாகரிகமான பேச்சும் இருக்கும். ஆனால், ரித்விகா பெரிய கதாநாயகியும் இல்லை பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவரும் இல்லை.

படம் வாய்ப்பு இல்லையா என்று ரசிகர் கேட்க; லோக்கலாக பதிலளித்த ரித்விகா.! ஒரு நடிகை இப்படியா பேசுவது..?

சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை ரித்விகா பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகர் ரசிகர் ஒருவர், “ஐயோ பாவம் பட வாய்ப்பு இல்லாமல் இப்படி வெட்டியாக இருக்கிறார் போல” என்று கமண்ட் செய்திருந்தார். ரசிகரின் கமண்ட்டிற்கு சிறிதும் பொறுமை இல்லாமல், தர லோக்கல் நபரைபோல் மூடிட்டு போடா என்று அநாகரிகமாக பதிலளித்துள்ளார். இந்த விவகாரம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் சாதித்து கொடிகட்டி பறக்கும் எந்த நடிகையும் இப்படி பொது தளங்களில் அநாகரிகமாக பதிவு செய்ததில்லை. நடிகை ராஷ்மிகா படத்தையும் வடிவேலு படத்தையும் இணைத்து மீம்ஸ் உருவான போது அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அதை ரசித்து ராஷ்மிகா பதில் கூறினார். சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப்பை சைக்கிளில் அமரவைத்து ஓட்டிச் செல்வது போலவும், இன்னொருவர் தாஜ்மகால் முன்பு இவான்காவுடன் அமர்ந்திருப்பது போல புகைப்படத்தை எடிட் செய்து வைத்திருந்தார். இதை கவனித்த இவான்கா அனைவருக்கும் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியளித்தார்.

சினிமாவில் எதையுமே தனித்துவமாக சாதிக்காத ரித்விகா இப்போதே மூடிட்டு போடா என்று பொதுத்தளத்தில் அநாகரிகமாக பேசுகிறார். இன்னும் பெரிய நடிகையாகி பணம், பேருடன் கோடியில் வாழ்ந்தால் ரசிகர்களின் நிலை என்னாகுமோ என்று பலர் சமூகவலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

வாக்கு மாறாத எடப்பாடி அரசு.! சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுவிழா!

0

வாக்கு மாறாத எடப்பாடி அரசு.! சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுவிழா!

சேலம் மேட்டூர் அணையில் மழைக் காலங்களில் நிரம்பி வழியும் உபரி நீரை சரபங்கா பகுதி ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடும் திட்டத்திற்கு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டுகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜீலையில் மேட்டூர்-சரபங்கா திட்டத்திற்கு வழிவகுப்பதாக சட்டசபையில் எடப்பாடி தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்தினை சரியான முறையில் செயல்படுத்த  பொதுப்பணித்துறை சார்பில் துரிதமான  ஆய்வு மேற்கொண்டு மேடு பள்ளமான பகுதிகளை மட்டப்படுத்தவும் மற்றும் நீர்வளத்துறையின் மூலமாக உபரிநீரை கொண்டு செல்ல திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையும் அரசு அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர்-சரபங்கா நீரேற்றும்  திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டத்தின் இருப்பாளி கிராமத்தின் அருகே உள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் இன்று நடைபெற இருக்கிறது.

இத்திட்டத்திற்காக 565 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மேட்டூர் அணையின் உபரி நீரை சரபங்கா பகுதியில் பல்வேறு ஏரிகளில் நிரப்பப்பட உள்ளது. இதன் பயனாக மேச்சேரி, நங்கவள்ளி, தாரமங்கலம், ஓமலூர், செங்கவல்லி மற்றும் எடப்பாடி உள்ளிட்ட ஒன்றிய தொகுதிகள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் இவற்றின் தாலுக்காவில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படும்.

ஏற்கனவே, அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அளவை எடுக்கும் பணியும், அடுத்தகட்ட நடவடிக்கையும் நடந்து வருகிறது. அண்மையில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளின் எதிர்கால வாழ்க்கையை அதிமுக அரசு உறுதி செய்துள்ளது.

படிக்க பணம் இல்லை..! வேதனையில் எலிமருந்து சாப்பிட்ட மாணவனுக்கு உதவிய இன்ஸ்பெக்டர்.! பொதுமக்கள் பாராட்டு..!!

0

படிக்க பணம் இல்லை..! வேதனையில் எலிமருந்து சாப்பிட்ட மாணவனுக்கு உதவிய இன்ஸ்பெக்டர்.! பொதுமக்கள் பாராட்டு..!!

சென்னை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர் சரவணன் என்பவர் சென்னை நெற்குன்றத்தில் இருக்கு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி, நுங்கம்பாக்கம் தனியார் கல்லூரியில் இளங்கலை 3 ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது குடும்ப பொருளாதாரம் வறுமையின் காரணமாக மிக மோசமான நிலையில் இருந்ததால், தேர்வுக்கான பணத்தை செலுத்த முடியாமல் வேதனையடைந்தார். இந்நிலையில் படிப்பை தொடரமுடியாத விரக்தியில் சரவணன் எலிமருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மாணவரின் தற்கொலை சம்பவம் குறித்து அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் கோயம்பேடு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். மாணவரின் நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் விடுதியை நோக்கி போலீசார் விரைந்து, சரவணனை உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சைக்கு பிறகு மாணவர் குணமடைந்தார்.

இந்நிலையில், மாணவரிடம் தற்கொலை குறித்து விசாரிக்கப்பட்டது. தேர்வுக்கு பணம் செலுத்த முடியவில்லை என்பதால் தற்கொலைக்கு முயன்றாக மாணவன் தெரிவித்தார். இதனையடுத்து மாணவர் சரவணனின் தேர்வு கட்டணத்திற்காக தனது 4000 ரூபாய் சொந்த பணத்தை இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் செலுத்தினார். மாணவருக்கு ஆறுதல் சொல்லி, அறிவுரை கூறி படிப்புக்கு உதவிய இன்ஸ்பெக்டரை கமிஷனர் உட்பட பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் எதிரொலி – வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு டுவிட்டர் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்!

0

கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு டுவிட்டர் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் பரவி உள்ளது. அமெரிக்காவிலும் கொரோனா வைரசுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 2 பேர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்ற நாடுகளைப் போல், அமெரிக்காவும் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரின் தலைமை அலுவலகம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளின் டுவிட்டர் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அவரவர் வீடுகளில் இருந்தபடி பணியாற்றுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பால்,தயிர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு பரிசீலனை…

0

பால், தயிர், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க பரிசீலித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் டீ கப் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், தொடர்ந்த வழங்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் அதன் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றும் அத்துமீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 52 தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  பால், தயிர், எண்ணெய் பாக்கெட் மற்றும் சீலிட்ட கவரில் விற்பனை செய்யப்படுவதற்கு அளித்த அனுமதியை தளர்த்தக்கோரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், அதன்படி பால் பாக்கெட் உள்ளிட்ட விலக்கு அளிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறதுஎன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள், உணவு பொருட்களை பிளாஸ்டிக் பையில் விற்பனை செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஆவின் பால் பாக்கெட்டில் இருந்து தொடங்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும்,  விசாரணையை ஏப்ரல் 28-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

0

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..!!

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒட்டுமொத்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடங்களுடன் தொடங்குகிறது. இந்த பொதுத்தேர்வில் 8,32,000 பேர் எழுதுகின்றனர். ஒட்டுமொத்தமாக 3016 தேர்வு மையங்கள் சரியான விதிமுறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேர்வுகளில் முறைகேடுகள் நடவாமல் இருக்க 4000 பறக்கும்படையினர், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் சிறப்பு தனிப்படை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறைக்குள் செல்போன் மற்றும் தேர்வுக்கு சம்பந்தமில்லாத பொருட்கள் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுத்தேர்வில் பிட் அடிப்பது, மற்ற மாணவர்கள் எழுதிய விடைத்தாளை மாற்றிக் கொள்வது மற்றும் பிற தேர்வு அறைக்கு ஒழுக்கமில்லாத செயல்களை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 24 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்று,
மே மாதம் 14 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!!

0

பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!!

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கி வரச்சொல்லி வேலை வாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி கிராமத்தில் நடக்கும் தினசரி நிகழ்வு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பந்தல்குடியில் இயங்கிவரும் தெற்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு டீ, வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை அங்கு படிக்கும் மாணவர்களை தினந்தோறும் வாங்கி வரச்சொல்லி வேலை வாங்குகின்றனர். ஆசிரியர் சொன்னபடியே மாணவர்களும் வேலையை செய்கின்றனர்.

பந்தல்குடியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் பல்வேறு வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இந்த ஆபத்தான சாலையை கடந்து தான் மாணவர்கள் தினந்தோறும் ஆசிரியர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்க வேண்டும். படிக்கும் மாணவர்களை டீ வாங்க சொல்வது தவறு என்று அப்பகுதி மக்கள் பலமுறை தலைமை ஆசிரியரிடம் எடுத்துக் கூறியும், இது எனது பள்ளி எனக்கு தெரியும் என்று சர்வசாதாரமாக கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இதுவரை இது கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவில்லை. தற்போது மாணவர்கள் டீ வாங்கி வரும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில வாரங்களுக்க முன்பு அரசு பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த சம்பவமும் செய்திகளில் வெளியாகியது. பள்ளி மாணவர்களை எந்த வேலையும் வாங்க கூடாது என்று நீதிமன்றமும் ஏற்கனவே கூறியுள்ளது. விருதுநகர் நுழைவு, காமராஜரின் திருவுருவச் சிலையை சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.