Home Blog Page 5725

ஒரு மணி நேரத்தில் என் தவறை புரிந்து கொண்டேன்! இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்! மன்னிப்பு கேட்ட சீமானின் தம்பி!

0

ஒரு மணி நேரத்தில் என் தவறை புரிந்து கொண்டேன்! இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்! மன்னிப்பு கேட்ட சீமானின் தம்பி!

ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அவரது போட்டோவிற்கு முன்பு நின்று கொண்டு சீமான் பேசிய வசனத்தை நாதகவின் சாட்டை துரைமுருகன் என்பவர் பேசியது பெரும் சர்ச்சையானது.

இதனையடுத்து காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் கொடுத்தனர். இந்த வீடியோ தொடர்பாக வருத்தம் தெரிவித்து புதிய வீடியோவை துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது;

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நான் விளையாட்டாக ஒரு டிக்டாக் பேசி சமூக வலைதளத்தில் பதிவு செய்தேன். பின்னர், நான் செய்தது தவறு என்று ஒரு மணி நேரத்தில் இணையத்தில் பதிவேற்றிய வீடியோவை நீக்கிவிட்டேன். அந்த ஒரு மணி நேரத்தில் பலர் நான் பேசிய வீடியோவை டவுன்லோடு செய்து சமூகவலைதளங்களில் பரப்பி விட்டுள்ளதாக கூறினார்.

மேலும், நான் அப்படி செய்தது தவறுதான் இனிமேல் அப்படி செய்யமாட்டேன் இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இதுபோன்ற மன்னிப்பு சம்பவங்களை அரசியல் கட்சியினரிடையே மிகவும் சாதாரணமாகிவிட்டது. நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு குற்றங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடைபயிற்சி சென்றபோது அமைச்சரின் செல்போனை திருடிய புள்ளீங்கோ! பாதுகாப்பு அதிகாரி இருந்தும் பாதுகாப்பு இல்லை!!

0

நடைபயிற்சி சென்றபோது அமைச்சரின் செல்போனை திருடிய புள்ளீங்கோ! பாதுகாப்பு அதிகாரி இருந்தும் பாதுகாப்பு இல்லை!!

புதுச்சேரி கடற்கரை சாலையில் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் வாக்கிங் சென்ற அமைச்சரின் செல்போனை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் உடல் ஆரோக்கியத்திற்காக இரவு நேரங்களில் வாக்கிங் செய்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல இரவு நடைபயிற்சியை முடித்துவிட்டு தனது பாதுகாப்பு அதிகாரியுடன் வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். திடீரென அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியின் கையில் இருந்த செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த திருட்டு புள்ளீங்கோ பறித்துக் கொண்டு சிட்டாக பறந்து சென்றனர்.

இதனையடுத்து சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருடர்கள் பறித்துச் சென்ற தொலைபேசி அமைச்சர் கமலக்கண்ணன் அவர்களுடையதாகும். ஒரு அமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்று பலரும் அச்சத்துடன் திகைத்துப் போயுள்ளனர். தமிழகத்திலும் இதுபோன்ற திருட்டு வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை தேனாம்பேட்டையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு!

0

சென்னை தேனாம்பேட்டையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு!

சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து வீசிய வெடிகுண்டு உடனே பலத்த சத்தத்துடன் வெடித்தது. இந்த பாலத்தின் அருகே வியாபார நிறுவனங்களும், பூங்காவும், ஓட்டல்களும் பல்வேறு அலுவலக கட்டிடங்களும் உள்ளன.

ஜெமினி பாலத்தின் கீழ் அல்லது மேல் பகுதியில் எப்போதும் போக்குவரத்து காவல்துறையினர் எப்போதும் இருப்பார்கள். இந்த பாலம் தி.நகரில் இருந்து மவுண்ட் ரோடு வழியாக சென்று மெரினா கடற்கரை, பாரிஸ், சென்னை நீதிமன்றத்திற்கு செல்வதற்கான முக்கியமான வழியாகும். அதுமட்டுமல்லாமல் எப்போதுமே போக்குவரத்து அதிகம் இருக்கும் பாலமாகும்.

இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மேல் மர்ம நபர்கள் பைக்கில் சென்றபோது வெடிகுண்டை வீசியுள்ளனர். வெடிகுண்டு வெடித்ததில் சம்பவ இடத்தின் அருகே இருந்த காரின் கண்ணாடி உடைந்துள்ளது. இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு சிசிடிவி மூலமாக சோதனை செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திடீரென குண்டுவெடித்த சம்பவம் தேனாம்பேட்டை பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவிகள் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட டிக்-டாக் வீடியோவை வைத்து மிரட்டி வாலிபர் செய்த காரியம்

0

கல்லூரி மாணவிகள் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட டிக்-டாக் வீடியோவை வைத்து மிரட்டி வாலிபர் செய்த காரியம்

தென்காசி மாவட்டதிலுள்ள சுரண்டை அருகேயுள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் தான் செல்வராஜ். இவரது 19 வயதுடைய மகன் கண்ணன் என்பவர் 9 ஆம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். இவர் காதல் மன்னன் என்ற பெயரில் டிக்-டாக்கில் பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இதுவரை சுமார் ஏறக்குறைய 1,000 வீடியோக்களுக்கு மேல் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் இவரை டிக் டாக்கில் ஏறக்குறைய 4.18 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

இதனால் இவர் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு வீடியோக்களுக்கும் அதிக எண்ணிக்கையிலான லைக்குகள் மற்றும் பார்வையாளர்கள் கிடைத்து வந்தது. இந்நிலையில் இவ்வளவு வரவேற்பை பார்த்து உற்சாகம் அடைந்த கண்ணன் இதனையடுத்து ஏராளமான வீடியோக்களை டிக் டாக்கில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில்இவர் தன்னை கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் என்றும், வசதியான வீட்டுப்பையன் என்றும் டிப்-டாப் உடையணிந்து பல மாணவிகளிடம் கூறி பழகி வந்துள்ளார்.

இதை பயன்படுத்தி கொண்டு தன்னிடம் பழகி வரும் அந்த கல்லூரி மாணவிகளிடம் செல்பி போட்டோ மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை எடுத்துள்ளார். மேலும் இவர்கள் மட்டுமில்லாமல் சில திருமணமான பெண்களின் போட்டோக்களை மார்பிங் செய்தும் அவர் வைத்துள்ள டிக்-டாக்கில் வெளியிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இவர் வெளியிட்டுள்ள இந்த மார்பிங் போட்டோக்களை வைத்து கொண்டும் சில பெண்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இந்த மிரட்டல்களுக்கு பயந்த சில பெண்கள் தான் அணிந்திருந்த மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளை அவரிடம் கொடுத்துள்ளனர். எனினும் தொடர்ந்து சில பெண்களிடம் இவ்வாறு அவர் மிரட்டி வந்ததால் இது குறித்துஅந்த பெண்கள் தென்காசி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி.உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட காவல் துறையினர் முறையான விசாரணை நடத்தி குற்றவாளியான கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ஸ்மார்ட் போன்கள், மெமரி கார்ட், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட கண்ணன் மீது மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் சிலரையும்காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏணி சின்னத்துல ஒரு குத்து; தென்னமர சின்னத்துல ஒரு குத்து! ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்! வைரலாகும் வீடியோ!

0

ஏணி சின்னத்துல ஒரு குத்து; தென்னமர சின்னத்துல ஒரு குத்து! ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்! வைரலாகும் வீடியோ!

உத்திர பிரதேச இளைஞர் ஒருவர் தான் காதலித்த இரண்டு பெண்களுக்கும் தாலிகட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

வட மாநிலங்களில் புதுப்புது சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஒரு இளைஞர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை ஏமாற்றுவதாக கூறி இரண்டு பெண்களும் இளைஞருடன் சண்டையிட்டுள்ளனர்.

இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் சிலர் உடனே இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

காதலனை விட்டுக் கொடுக்காமல் இரண்டு பெண்களும் தனக்குள்ளே சண்டை போட தொடங்கியதால் இருவரையும் சமாதானம் செய்து கோயிலில் வைத்து இருவரின் நெற்றியிலும் குங்குமம் இட்டு இருவரின் கழுத்திலும் ஒரே நேரத்தில் தாலியை கட்டினார்.

இச்சம்பவம் இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் வடிவேலுவின் அரசியல் நகைச்சுவை காட்சியை பார்த்திருப்போம். அதில் தென்னை மர சின்னத்தில் ஒரு குத்து, ஏணி சின்னத்தில் ஒரு குத்து என்ற நகைச்சுவையை போல் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்த சம்பவமும் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்து நாடு எங்கே செல்கிறது என்று பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பற்றி அச்சப்பட வேண்டாம்! பெண்களிடம் ஒப்படைக்க நினைக்கிறேன்! மோடி பேச்சு!

0

கொரோனா வைரஸ் பற்றி அச்சப்பட வேண்டாம்! பெண்களிடம் ஒப்படைக்க நினைக்கிறேன்! மோடி பேச்சு!

கொரோனா வைரஸ் தொற்றினை பற்றி யாரும் கவலைப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீனாவின் உருவான கொரோனா என்னும் தொற்றுக் கிருமியால் இதுவரை 3000 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். தற்போது சீனாவின் அண்டை நாடுகளுக்கும் வைரஸ் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.

வடகொரியா, தென்கொரியா போன்ற சீனாவின் அண்டை அனைத்தும் வைரஸால் பயந்து நடுங்கியுள்ளன் இந்நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கும், டில்லியில் ஒரு குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸால் அச்சப்படும் மக்களுக்கு தைரியம் கொடுக்கும் வகையில் மோடி டுவிட்டரில் சில ஆலோசனை கூறியுள்ளார்.

டுவிட்டரில் கூறியிருப்பதாவது ; கொரோனா வைரஸால் அச்சம்கொள்ள தேவையில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணமிது, சில முன் எரிச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுங்கள், கையை கழுவாமல் வாய்,மூக்கு போன்றவற்றை தொட வேண்டாம். மேலும் வெளியிடங்களில் கவனமாக இருங்கள் என்று ஒரு விழிப்புணர்வு போஸ்டரையும் இணைத்து பதிந்துள்ளார். இவ்வாறு டுவிட்டரில் கூறியிருந்தார்.

தனது இன்னொரு டுவிட்டரில், பெண்களை கெளரவப்படுத்தும் விதமாக வருகின்ற மகளிர் தினத்தன்று அவரது சமூக வலைதளத்திற்கு அட்மினாக பெண்களை நியமிக்க இருப்பதாக நரேந்திரமோடி கூறியுள்ளார். நேற்று சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவதாக கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இன்று பெண்களை சிறப்பிக்கும் வகையில் டுவிட்டர் பதிவு இட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களில் மக்களிடையே தனது டுவிட்டரையே அதிகம் பேச வைத்துள்ளார்.

500 கோடி செலவில் மகளுக்கு பிரம்மாண்ட திருமணம்! மிரள வைக்கும் பாஜக அமைச்சர்! முக்கியமாக கல்யாணத்தில் இதுவும் உண்டு..!

0

500 கோடி செலவில் மகளுக்கு பிரம்மாண்ட திருமணம்! மிரள வைக்கும் பாஜக அமைச்சர்! முக்கியமாக கல்யாணத்தில் இதுவும் உண்டு..!

கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளின் திருமணத்திற்காக ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமான திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். திருமணத்திற்கு மத்திய அரசின் முக்கிய பதவியில் இருக்கும் பல்வேறு அமைச்சர்களும் பிற கட்சி அரசியல்வாதிகளும் வர இருப்பதால், திருமண வரவேற்பு இடங்கள் அனைத்தும் கடந்த ஒன்பது நாட்களாக வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 27 ஆம் தேதியில் இருந்தே பெங்களூரு பேலஸ் மைதானம் திருமண கொண்டாட்டம் காரணமாக களைகட்டி வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் திருமண அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழுடன் குங்குமம், சந்தனம், அரிசி மற்றும் செந்தூரம் வழங்கப்படுகிறது. மேலும் திருமண விழாவிற்காக ஹம்பியில் உள்ள பாரம்பரிய விருபாக்க்ஷி கோயிலை போன்று 4 ஏக்கர் அளவில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்ப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இத்திருமணத்தில் முக்கியமாக பிரபல நடிகை தீபிகா படுகோனின் மேக்கப்மேன் மணப்பெண் ரக்க்ஷிதாவை அழகுபடுத்த நியமிக்கப்பட்டுள்ளார். இத்திருமண நிகழ்வை வீடியோ கவரேஜ் செய்வதற்கு முகேஷ் அம்பானியின் மகள் கல்யாணத்திற்கு வீடியோ எடுத்தவர்களையே அமர்த்தியுள்ளனர். நாளை மறுநாள் திருமணம் நடக்க இருக்கிறது. ஒரு திருமணத்தற்காக இத்தனை கோடி செலவுகளா என்று பலர் வாயை பிளக்கின்றனர்.

வீட்டை விட்டு ஓடிய மாணவர்கள்; பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாததால் எடுத்த விபரீத முடிவு!

0

வீட்டை விட்டு ஓடிய மாணவர்கள்; பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாததால் எடுத்த விபரீத முடிவு!

அரசு பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்கள் படிக்க அதிகம் செலவாகிறது என்பதாலும், வீட்டுக்கு பாரமாக இல்லாமல் ஊரைவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை காஞ்சி கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த தருண்ஸ்ரீ, விஜய், மவுலி, மிதுன் ரித்தீஷ் நால்வரும் நேற்று பள்ளிக்கூடத்திற்கு சென்று பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவர்கள் மாயமான தகவலை அறிந்த பெற்றோர்கள் பதட்டத்துடன் காஞ்சிக்கோயில் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தனர்.

இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் பள்ளியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணை நடத்தியதில், படிப்பதற்கு அதிகம் செலவாகிறது என்பதால் வீட்டுக்கு பாரமாக இல்லாமல் மாணவர்கள் ஊரைவிட்டு ஓடியது தெரியவந்தது. இதன்பிறகு, ஒவ்வொரு மாவட்ட காவல்நிலையத்திற்கும் இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவர்கள் நால்வரும் விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே தங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் காவல்துறையினர் மாணவர்களை மீட்க விரைந்துள்ளனர்.

ஜோதிகா படத்தில் அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை: புதிய தகவல்

0

சூர்யாவை திருமணம் செய்த பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் நடிகை ஜோதிகா ரீ என்ட்ரி ஆனார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஜோதிகா தொடர்ந்து ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்

அந்த வகையில் ஜோதிகா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’. இந்த படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’வா செல்வமே’ என்ற பாடல் இன்று சிங்கிள் பாடலாக மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை சூர்யாவின் தங்கை பிருந்தா சிவக்குமார் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகாவின் படத்தில் பிருந்தா சிவக்குமார் பாடகியாக அறிமுகமாகிறார் என்பதும் இந்த பாடல் தான் அவர் பாடிய முதல் திரைப்பட பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியவர்களை அடுத்து தற்போது சூர்யா குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு பிருந்தா சிவக்குமார் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பெத்த மகனின் கொடுமை தாங்க முடியவில்லை! எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்; கண்ணீருடன் புகார்!!

0

பெத்த மகனின் கொடுமை தாங்க முடியவில்லை! எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்; கண்ணீருடன் புகார்!!

மகனின் கொடுமையை தாங்க முடியாமல், எங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என்று வயதான பெற்றோர் கலெக்டரிடம் மனுகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ராயர்பாளையத்தைச் சேர்ந்த சென்னியப்பன் மற்றும் அவரது மனைவி கருணையம்மாள் என்ற வயதான தம்பதியருக்கு, பழனிச்சாமி என்கிற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்படுவதாவது; எங்களுடைய மகன் பழனிச்சாமி சொத்துக்களை அபகரித்துக் கொண்டு கடந்த 10 வருடங்களாக தங்களை கொடுமை செய்து வருகின்றனர். ஏற்கனவே மகனும்,மருமகளும் எங்களை அடித்து துன்புறுத்தியதால் பல்லடம் காவல் நிலையத்தில் கொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுத்தும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

எங்களுக்கு வரவேண்டிய மின்சார இணைப்பை துண்டித்துள்ளார், குடிநீரை பிடிக்க விடாமல் பிரச்சினை செய்கிறார். தினமும் நிம்மதி இல்லாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கான நீதியை வாங்கிக் கொடுங்கள் இல்லையேல் எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. பெற்ற மகன் இவ்வளவு கல் நெஞ்சமாக இருப்பது பலரிடையே பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.