Home Blog Page 5729

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!

0

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!

இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உத்திர பிரதேச மாநிலம் ரிகாந்த் பகுதியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு தேசிய அனல்மின் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. இதேபோல, வேறொரு காலிய சரக்கு ரயிலும் இதற்கு எதிராக வந்து கொண்டிருந்தது. மத்திய பிரதேச சிங்ரவுலி பகுதி அருகே இந்த இரண்டு சரக்கு தொடர் வண்டிகளும் ஒன்றுக்கொன்று பலத்த சத்தத்துடன் நேராக மோதிக்கொண்டன. நிலக்கரி சரக்கை ஏற்றிவந்த தொடர்வண்டி வேகத்தின் காரணமாக தடம் புரண்டது.

இந்த எதிர்பாராத விபத்தில் இரண்டு ரயில்களின் ஓட்டுனர் மற்றும் உதவி ஓட்டுனர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு ரயிலுக்கு சிக்னல் அனுமதி கொடுத்த பாதையில் இன்னொரு ரயிலுக்கும் அனுமதி கொடுத்த காரணத்தால் இந்த விபத்து உண்டாகியுள்ளது. இந்த விபத்தை அறிந்த காவல்துறையினரும், தேசிய அனல்மில் கழகத்தின் நிர்வாகிகளும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கி இருக்கும் ஒருவரை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கடைய மூடிட்டோம் இனி வந்தாலும் சேர்க்க முடியாது! சசிகலாவை வெளியே தள்ளிவிட்ட அதிமுக!

0

கடைய மூடிட்டோம் இனி வந்தாலும் சேர்க்க முடியாது! சசிகலாவை வெளியே தள்ளிவிட்ட அதிமுக!

சசிகலாவிற்கு இனி அதிமுகவில் இடம் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

கடந்த 10 ஆண்டுகாலத்தில் அதிமுக அரசு அதிமுக அரசு 82 கல்லூரிகளை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் நடத்தி வைக்கின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மத்திய அரசு மக்களிடையே சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் போனதால் பல்வேறு பிரச்சினை, வனமுறைகள் அரங்கேறியது. மக்களின் உணர்வு மற்றும் அதன்படி கொள்கை அமைத்து வென்றால் மட்டுமே மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் சிந்தனை வரும். திமுக தலைவர் ஸ்டாலின், வியாபாரத்தை நோக்கமாக கொண்ட கம்பெனிகளை அழைத்தால் மக்களிடம் ஈர்ப்பு இருக்காது.

தன் கட்சியின் பலத்தின் மூலம் அதிமுகவை வெல்ல முடியாத ஸ்டாலின் விரக்தியின் விளிம்பிற்கே போய்விட்டார். இதனால் அவர்கட்சி மீதே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. பிராமணர் பிரசாந்த் கிஷோர் மூலம் அதிமுக அரசை ஒதுக்கி நாம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று ஸ்டாலின் கணக்கு போடுகிறார். சிறையில் இருக்கும் சசிகலா வெளியில் வர வாய்ப்பு குறைவுதான், அப்படியே வெளியில் வந்தாலும் அதிமுகவில் அவருக்கு இடமில்லை என்றும், கடை முழுவதும் சாத்தப்பட்டுவிட்டது என்றும் கூறினார்.

சசிகலா வெளியில் வருவாரா… அதிமுகவில் அதிகாரம் செய்வாரா என்பதை வரும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ரஜினி பாதுகாப்பு வேண்டாம் என சொன்னது ஏன்? உள்குத்து அரசியல் !

0

ரஜினி பாதுகாப்பு வேண்டாம் என சொன்னது ஏன்? உள்குத்து அரசியல் !

ரஜினிகாந்த் தனது வீட்டுக்குப் பாதுகாப்பு வேண்டாம் என சொன்னதின் பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்தாலே ஏதாவது ஒரு சர்ச்சை உருவாகி விடுகிறது. இது போல கடந்த மாதம் துக்ளக் பொன்விழாவில் பேசிய அவர், பெரியார் பற்றி கூறிய சில செய்திகள் சர்ச்சையானது. இதையடுத்து பெரியாரிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் அவரது பாதுகாப்புக்காக போலிஸார் அவர் வீட்டு முன் நிறுத்தப்பட்டனர்.

இதைஉயடுத்து இப்போது அந்த பாதுகாப்பு வேண்டாம் என உதவி காவல் ஆணையர் திருநாவுக்கரசிடம் அவர் சொல்லியுள்ளதாக செய்திகள் வெளியானது. தன் வீட்டின் முன் நிற்கும் போலிஸாரால் அக்கம்பக்கத்தினருக்கு அசௌகர்யம் ஏற்படுவதாக அவர் கருதுவதால் இப்படி சொன்னதாக சொல்லப்பட்டது. ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல அது என்று ஒரு செய்தி உலாவர ஆரம்பித்துள்ளது.

ரஜினி பாதுகாப்பு வேண்டாம் என சொன்னது ஏன்? உள்குத்து அரசியல் !

ரஜினி எப்படியும் இன்னும் சில மாதங்களில் கட்சி ஆரம்பிக்க போகிறார். அதனால் அவரை பார்த்து ஆதரவுக் கொடுக்க பலரும் அவரது வீட்டுக்கு வந்து செல்கின்றனர். இதில் வேறு கட்சிகளில் இருப்பவர்களும் அடக்கம். இந்நிலையில் வீட்டின் முன் போலீஸார் நின்றால் வருபவர்களைப் பற்றிய தகவல் ஆளும் கட்சிக்கு சென்றுவிடும் என ரஜினி சந்தேகிக்கிறாராம். அதனால்தான் இந்த பாதுகாப்பு ஏற்பாட்டை கேன்சல் செய்ய சொல்லி வேண்டுகோள் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த எம்.எல்.ஏ ! 67 கிலோவில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் !

0

ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த எம்.எல்.ஏ ! 67 கிலோவில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் !

திமுக தலைவர் ஸ்டாலினின் 67 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து 67 கிலோவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அரவக்குறிச்சி எம் எல் ஏ செந்தில் பாலாஜி.

திமுக தலைவர் ஸ்டாலினின் 67 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக இரு எம்.எல்.ஏக்களின் மறைவு மற்றும் கழக பொதுச் செயலாளர் க அன்பழகனின் உடல்நிலை ஆகியவற்றால் சோகத்தில் இருக்கும் அவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்துள்ளார்.

ஆனாலும் இணைய உடன்பிறப்புகள் சமூகவலைதளங்களில் ஸ்டாலினின் பிறந்தநாளை ஆசையாக கொண்டாட திமுக எதிர்ப்பாளர்கள் #ஹேப்பிபர்த்டேஇலவுகாத்தகிளி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை ட்ரண்ட் செய்து அவரைக் கேலி செய்து வருகின்றனர். ஆனால் திமுகவினர் சளைக்காமல் பிறந்த்நாள் கொண்டாட்டங்களை செய்து வருகின்றனர்.

ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த எம்.எல்.ஏ ! 67 கிலோவில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் !

இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் நின்று வெற்றி பெற்ற எம். எல்.ஏ செந்தில் பாலாஜி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 67 கிலோ கேக் வாங்கி வெட்டியுள்ளார். மேலும் கரூர் பகுதியில் பல நலத்திட்ட உதவிகளையும் அவர் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது. ஸ்டாலினிடம் நல்ல பெயர் வாங்கவேண்டுமென்று அவர் செய்யும் இந்த விஷயம் ஆண்டாண்டு காலமாக திமுகவில் இருப்பவர்களுக்கே பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பவுலர்களின் போராட்டம் வீணாகுமா? தோல்வியின் விளிம்பில் இந்தியா !

0

இந்திய பவுலர்களின் போராட்டம் வீணாகுமா? தோல்வியின் விளிம்பில் இந்தியா !

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து போராடி வருகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இந்திய அணியின் பிருத்வி ஷா (54), புஜாரா(55) மற்றும் ஹனுமா விஹாரி (51) ஆகியோர் அரைசதத்தால் இந்தியா 242 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் லாதம் 52 ரன்களும் ஜேமிசன் 49 ரன்களும் சேர்த்தனர். சிறப்பாக பந்து வீசிய ஷமி 4 விக்கெட்களும், பூம்ரா 3 விக்கெட்களும், ஜடேஜா 2 விக்கெட்களும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய மிகவும் பரிதாப கரமாக விளையாடி வருகிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த 90 ரன்களுக்கு 6  விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது பண்ட் 1 ரன்னுடனும் விஹாரி 5 ரன்களுடனும் களத்தில் ஆடி வருகின்றனர். இதனால் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது. எதேனும் அதிசயம் நடந்தாலொழிய இந்திய அணி மீள்வது சாத்தியமில்லை.

தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!!

0

தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள 110 அரசு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் இயங்கும் பல்வேறு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்த பட்டியல் தயார் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இந்த பட்டியலை முதற்கட்டமாக, அனைத்து மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியதன் மூலம் அங்கிருக்கும் இடவசதி, கூடுதல் அடிப்படை தேவை மற்றும் சில முக்கிய காரணங்கள் குறித்து விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னரே, கூடுதல் வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் சில முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட குழந்தையை கச்சிதமாக மீட்ட போலீசார்; பொதுமக்களிடம் குவியும் பாராட்டு! சபாஷ் காவல்துறை..!!

0

கடத்தப்பட்ட குழந்தையை கச்சிதமாக மீட்ட போலீசார்; பொதுமக்களிடம் குவியும் பாராட்டு! சபாஷ் காவல்துறை..!!

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று முன்தினம் தாயுடன் உறங்கியிருந்த குழந்தை மர்ம நபர்களால் கடத்தப்பட்ட செய்தி பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நான்கு குழுக்களாக பிரிந்து குழந்தை கடத்தியது பற்றி தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்நிலையில், சமூகத்தின் நான்காவது கண்ணாக விளங்கும் சிசிடிவி காட்சியில் ஒரு மர்ம பெண் குழந்தையை கடத்திச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

இதனையடுத்து பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குழந்தையை கடத்திச் சென்ற பகுதியை சில மணி நேரங்களில் கண்டுபிடித்தனர். குழந்தை நெசப்பாக்கம் பகுதியில் கடத்திச் சென்று ஒரு வீட்டில் வைத்திருப்பது உறுதியானவுடன், போலீசார் அதிரடியாக வீட்டில் நுழைந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். பிறகு கடத்தப்பட்ட குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குழந்தையின் பெற்றோரை அழைத்து மகிழ்ச்சியான செல்பியுடன் போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும், குழந்தை விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது. கடத்திய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். குழந்தை கடத்தி 24 மணி நேரத்தில் காப்பாற்றிய போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகளும், பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்.

பெண் நடத்துனரின் சட்டையை கிழித்து அராஜகம்! பேருந்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்..!!

0

பெண் நடத்துனரின் சட்டையை கிழித்து அராஜகம்! பேருந்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்..!!

பேருந்தில் பயணம் செய்த பயணியிடம் பெண் நடத்துனர் டிக்கெட் எடுக்க கூறியும் டிக்கெட் எடுக்காமல் சண்டை போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே மதனப்பள்ளியில் பேருந்தில் கடந்த செவ்வாய் தினத்தன்று சிவாரெட்டி என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்தின் பெண் நடத்துனர் எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு சிவாரெட்டியிடம் டிக்கெட் வாங்கச் சொல்லி கூறியுள்ளார். இதற்கு சிவா பயணச்சீட்டை வாங்காமல் அமைதியாக இருந்துள்ளார். ( அல்லது சிவா நடத்துனரை கவனிக்கவில்லையா என்று தெரியவில்லை)

எல்லோரும் டிக்கெட் வாங்கும் போது நீங்கள் ஏன் வாங்கவில்லை என்று பெண் நடத்துனர் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சிவாரெட்டி பெண் நடத்துனரை திட்டியதோடு மட்டுமல்லாமல் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டு கீழே இறங்கி கைகலப்பு அதிகமானது. இதில் பெண் நடத்துனரில் சட்டையை பிடித்து சிவாரெட்டி இழுத்துள்ளதை படங்களின் மூலம் காணமுடிகிறது.

இதனையடுத்து பொறுமையிழந்த சக பயணிகள் சிவாரெட்டியை சூழ்ந்து தர்ம அடி கொடுத்து அப்பகுதி வால்மீகிபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைகலப்பில் பெண் நடத்துனருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டார். இச்சம்பவத்தை அறிந்த ஆர்.டி.சி தொழிலாளர் சங்கம் பெண் நடத்துனர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து, குற்றவாளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பெண் நடத்துனரை தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகில் எல்லா துறைகளிலும் பெண்கள் சாதித்து வந்தாலும் அவர்களின் வேலைகளுக்கு சில தடைகளும் பிரச்சினைகளும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்லி! வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி ..!!

0

இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்லி! வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி ..!!

சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட வன்முறையின் காரணமாக வடகிழக்கு டெல்லியில் வாகனங்களுக்கு தீவைப்பு, பொதுமக்கள் இறப்பு, போலீசார் இறப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடந்து முடிந்த நிலையில் தற்போது, டெல்லி இயல்பான நிலைக்கு மாறி வருகிறது. நேற்றே பல்வேறு கடைகள் திறக்கப்பட்ட வழக்கம்போல இயங்க ஆரம்பித்தன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லியில் நடந்த வன்முறை மிக மோசமான சம்பவம், நேற்றைய சனிக்கிழமை எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்பதை கூறினார். இயல்பான அமைதியினை மீட்டெடுப்பதே எங்களின் முதல் வேலை என்றும் தெரிவித்தார். மேலும், வன்முறை நடந்த போது 4 துணைப்பிரிவுகள் பாதிக்கப்பட்டது சம்பவத்தை கட்டுப்படுத்த 18 எஸ்டிஎம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எஸ்டிஎம் குழுக்களின் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், கடை மற்றும் வீடுகள் சேதமடைந்தது பற்றியும் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான இழப்பீடு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்த நிலையில், பெறப்பட்ட 69 படிவங்களுக்கான ரொக்கப்பணம் தலா ரூபாய் 25000 நாளை (இன்று) வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யதுள்ள நிலையில், டெல்லி பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களை மீ்ண்டும் அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த அசாதாரண சூழல்களின் காரணமாக அங்கிருக்கும் அரசு பள்ளிகளுக்கு மார்ச் 7 ஆம் தேதி வரை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

தவறான செய்திகளை பரப்பிய ஊடகங்களின் புது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வன்முறையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் அளிப்பதாக அறிவித்திருந்தார். கலவரத்தில் எரிக்கப்பட்ட ரிக்‌ஷாக்களுக்கு ரூ.25000 இழப்பீடும் மற்றும் எரிக்கப்பட்ட வீடு, கடைகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும் அறிவித்துள்ளார். மேலும் சிறிய, பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 3 லட்சம், 2 லட்சம் அளவிற்கு இழப்பீடு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த வன்முறை இந்திய அளவில் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி ஒற்றுமை மேம்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது. இனி எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க டெல்லி ஷாஹீன் பாக்கில் 144 தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

பார்முக்கு வந்த ஷமி & பூம்ரா! இந்தியா 7 ரன்கள் முன்னிலை !

0

பார்முக்கு வந்த ஷமி & பூம்ரா! இந்தியா 7 ரன்கள் முன்னிலை !

நியுசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இந்திய அணியின் இளம் தொடக்க ஜோடியான பிருத் வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும்  இறங்கினர். மயங்க் அகர்வால், கோலி, ரஹானே ஆகியோர் மோசமான ஷாட்கள் விளையாடி அவ்ட் ஆகி ஏமாற்றம் அளிக்க பிருத்வி ஷா (54), புஜாரா(55) மற்றும் ஹனுமா விஹாரி (51) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இதன் பின்னர் நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடியது. கிட்டத்தட்ட 23 ஓவர்கள் ஆடிய நிலையில் இந்திய அணியினரால் ஒரு விக்கெட் கூட வீழத்த முடியவில்லை. ஆட்ட முடிவில் நியுசிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்தது. டாம் லாதம் 27 ரன்களுடனும் பிளண்டல் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வலுவான நிலையில் இருந்த நியுசிலாந்தை இந்திய பவுலர்கள் தங்கள் அபாரமான பவுலிங்கால் கட்டுப்படுத்தினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லாதம்மை தவிர மற்றவர்கள் அனைவரையும் நீண்ட நேரம் நிலைக்கவிடவில்லை. இதனால் நியுசிலாந்து அணி 177 ரன்களுக்கே 8 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜேமிசன் நிலைத்து நின்று ஆடி அந்த அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட வைத்தார். இதனால் நியுசிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவ்ட் ஆனது. இந்திய அணி சார்பில் ஷமி 4 விக்கெட்களும், பூம்ரா 3 விக்கெட்களும், ஜடேஜா 2 விக்கெட்களும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது.