Home Blog Page 5746

நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு: கைதாக வாய்ப்பா?

0

நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு: கைதாக வாய்ப்பா?

நடிகை ஸ்ரீரெட்டி மீது துணை நடிகை ஒருவரும், நடன இயக்குனர் ஒருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பல பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடன இயக்குனர் ராகேஷ் மற்றும் துணை நடிகை கராத்தே கல்யாணி ஆகிய இருவரையும் சம்பந்தப்படுத்தி ஆபாசமாக சில கருத்துக்களை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ ஆதாரங்களை சேகரித்து துணை நடிகை கராத்தே கல்யாணி இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்த வீடியோ ஆதாரங்களை பார்த்து ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து விரைவில் ஸ்ரீரெட்டி கைது செய்யப்படுவார் என்று கூறப்படுவதால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்னும் எத்தனை திருமணம் செய்வேனோ தெரியவில்லை! அனுஷ்கா புலம்பல்

0

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் அனுஷ்கா ஷெட்டி. பாகுபலி படத்தின் நாயகனான பிரபாசை காதலித்து வருகிறார் என்றும் அவரை திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் பிரபாஸ் இதனை உறுதியாக மறுத்தார்

இதன் பின்னர் ஒரு டாக்டருடன் அனுஷ்காவுக்கு காதல் என்றும், தொழில் அதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து விட்டதாகவும் வதந்தி பரவியது. தற்போது புதிதாக அவர் ஒரு கிரிக்கெட் வீரரை காதலித்து வருவதாகவும் இவ்வருட இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் ஒரு கிசுகிசு பரவி வருகிறது

இது குறித்து தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை அனுஷ்கா ’இன்னும் எத்தனை முறைதான் எனக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்று தெரியவில்லை. பத்திரிகையாளர்களும் கிசுகிசுக்கள் எழுதுபவர்களும் எனக்கு பல முறை ஏற்கனவே திருமணம் செய்து வைத்து விட்டார்கள். இதை எல்லாம் கட்டுகதை, வதந்தி என்று தெரிந்தும் ரசிகர்கள் அதை படித்து மகிழ்ந்து வருகிறார்கள்

எனக்கு திருமணம் என்றால் அது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையுடன் தான். என்னுடைய வாழ்வில் காதல் திருமணம் என்ற ஒன்று கிடையாது. எனது திருமணம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். திருமணம் செய்யும் போது நானே முறைப்படி அறிவித்து அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்று அனுஷ்கா ஷெட்டி கூறியுள்ளார்

சிம்புவை இயக்குகிறாரா சேரன்: சக்கரைப் பொங்கல்& வடகறி காம்பினேஷன் !

0

சிம்புவை இயக்குகிறாரா சேரன்: சக்கரைப் பொங்கல்& வடகறி காம்பினேஷன் !

சிம்பு நடிகும் அடுத்த படத்தை இயக்குனர் சேரன் இயக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்ச. சிறுபட தயாரிப்பாளராக இருந்த அவருக்குப் பலரும் சிம்பு படம் வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் துணிந்து இறங்கினார் சுரேஷ் காமாட்சி. ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்தார். ஆனாலும் சிம்புவால் காலதாமதம் ஏற்பட்டு படத்தை டிராப் செய்வதாக அறிவித்தார். அதன் பின் சிம்பு மீண்டும் அந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்க ஒருவழியாக படம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் மாநாடு படத்தை முடித்ததும் சிம்பு தனது அடுத்த படத்தை இயக்க முன்னணி இயக்குனர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை பிக்பாஸ் மூலம் மீண்டும் பிரபலமான இயக்குனர் சேரன் தான். அவர் சொன்ன கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கே அடுத்த படத்தின் கால்ஷீட்டை அவர் கொடுத்துள்ளாராம்.

ஒரு காலத்தில் பொற்காலம், பாரதி கண்ணம்மா, ஆட்டோ கிராப் போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களை எடுத்து வெற்றிகரமாக வலம் வந்த சேரன் அதன் பின் கொடுத்த தோல்வி படங்களால் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றார். வெளியே வந்த அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக அறிவித்தார். இதற்கிடையில் இப்போது சிம்புவை வைத்து அவர் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இருவருமே வேறு வேறு ஜானரில் படம் பண்ணக் கூடியவர்கள். இரண்டு பேரும் சேர்ந்தால் அந்த படம் எப்படி இருக்குமென ரசிகர்கள் இப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

பெற்றோரை தலைகுனிய வைக்கும் பள்ளி மாணவர்கள்! தலைநிமிர வேண்டிய வயதில் தாலிகட்டி சீரழியும் புள்ளீங்கோ..!! (வீடியோ)

0

பெற்றோரை தலைகுனிய வைக்கும் பள்ளி மாணவர்கள்! தலைநிமிர வேண்டிய வயதில் தாலிகட்டி சீரழியும் புள்ளீங்கோ..!! (வீடியோ)

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர் தாலிகட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சீருடையில் இருக்கும் பள்ளி மாணவிக்கு பள்ளி சீருடை அல்லாத ஒருவர் தாலிகட்டும்போது அந்த மாணவி வெட்கத்துடன் சிரித்து ஏற்றுக் கொள்வது போல உள்ளது. அருகே சில மாணவர்களும் இருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்திய சட்டப்படி 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மட்டுமே திருமணம் செய்ய உரிமை உண்டு. பதினெட்டு வயதிற்குள் செய்தால் அது சட்டப்படி குற்றமாகும்.

https://twitter.com/dinajith_thala/status/1230453058724933632?s=20

நவீன காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்கு மத்தியில் இதுபோன்று தறிகெட்டு தவறான வழியில் சென்று பெற்றோரை தலைகுனிய வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன். குறைந்தபட்சம் வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத இவர்களுக்கு திருமணம் ஒரு கேடா..? என்று சமூக வலைதளங்களில் கோபத்துடன் பலர் கேள்வியை முன்வைக்கின்றனர்.

மாணவர்களிடம் “கனவு காணுங்கள்” என்று சொன்ன அப்துல்கலாம் பிறந்த மண்ணில் இதுபோன்ற அவலங்கள் நடப்பது அனைவருக்கும் வருத்தத்தை உண்டாக்கியுள்ளது. சமூக வலைதளத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த பெற்றோர் முற்பட வேண்டும் இல்லையேல் இதுபோன்ற அதிர்ச்சியான சம்பவங்கள் அவரவர் வீட்டிலேயே அரங்கேற வாய்ப்புண்டு. டிக்டாக் போன்ற பொழுதுபோக்கு இணையத்தால் தினந்தோறும் பல்வேறு குற்றங்கள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் வென்ற படத்தைக் கேலி செய்த ட்ரம்ப்: பதிலடி கொடுத்த விநியோகஸ்தர் !

0

ஆஸ்கர் வென்ற படத்தைக் கேலி செய்த ட்ரம்ப்: பதிலடி கொடுத்த விநியோகஸ்தர் !

கடந்த வாரம் நடந்து முடிந்த 92 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற பாராசைட் படத்தை அமெரிக்க அதிபர் கேலி செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விழாவில் `பாராசைட்’ என்ற தென் கொரிய திரைப்படம் சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, வெளிநாட்டுத் திரைப்படம் என நான்கு பிரிவுகளில் விருதைப் பெற்று வரலாற்று சாதனை படைத்தது. முதன் முதலாக அமெரிக்காவில் தயாராகாத ஒரு திரைப்படம் நேரடியாக இத்தனை விருதுகளைப் பெறுவது இதுவே முதல் முறை. இதையடுத்து உலகம் முழுவதும் இந்த படத்தின் மீதான கவனம் குவிந்தது.

இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது கேலியாக விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர்,
தென் கொரியாவுடன் நமக்கு வர்த்தக பிரச்சனைகள் உள்ள நிலையில் பாராசைட் படத்துக்கு 4 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த படம் நன்றாக இருக்கிறதா? அதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. கொரியாவிலிருந்து ஒரு சிறந்த திரைப்படம்! சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதை அது பெற்றுள்ளது. இதற்கு முன்பு இவ்வாறு நடந்தது இல்லை என நினைக்கிறேன்’ எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார்.

ட்ரம்ப்பின் இந்த கருத்துக்கு அமெரிக்காவில் பாராசைட் படத்தை விநியோகம் செய்தவரான நியோன் ‘ட்ரம்ப்பால் சப் டைட்டிலைப் பார்க்க முடியாது என்பதை புரிந்து கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

முதல் நாளில் இந்தியா சொதப்பல்: மழையால் சீக்கிரமே முடிந்த போட்டி !

0

முதல் நாளில் இந்தியா சொதப்பல்: மழையால் சீக்கிரமே முடிந்த போட்டி !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாளில் 122 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 16 ரன்கள் சேர்த்திருந்த போது முதல் விக்கெட்டாக பிருத்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார்.அதன் பின் வந்த புஜாராவும் வெகுநேரம் நீடிக்கவில்லை. தன் பங்குக்கு 11 ரன்களை சேர்த்து வெளியேறினார்.

அதற்கடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்க பட்ட விராட் கோலி களமிறங்கினார். அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட 2 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் வந்த ரஹானே தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலோடு சேர்ந்து நிதானமாக விளையாடினார். ஒரு கட்டத்தில் மய்ங்க் அகர்வால் 34 ரன்களுக்கு அவுட் ஆக இந்தியாவின் நிலை மேலும் மோசமானது.

அவரை அடுத்து வந்த ஹனுமா விஹாரியும் உடனே நடையைக் கட்டினார். அவருக்கு பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த பண்ட் வந்து பொறுமையான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் ரன்களை பற்று கவலைப் படாமல் தடுப்பாட்டம் ஆடினர். 55 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழைக் குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம்  முடித்துக் கொள்ளப்பட்டது. ஆட்ட முடிவில் இந்திய அணி 122 ரன்களுக்கு 5விக்கெட்க்ளை இழந்திருந்தது. ரஹானே 38 ரன்களோடும் பண்ட் 10 ரன்களோடும் களத்தில் இருந்தனர்.

பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு

0

பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு

மனிதன் தகவல்களை பரிமாறி கொள்ள மொழி அத்தியாவசியமாகிறது. ஆதி மனிதன் சகைககள் மற்றும் குறியீடுகள் மூலமாக தகவல்களை பரிமாறி கொண்டிருந்த நிலை மாறி மொழியின் மூலமாக தகவல்களை பரிமாற ஆரம்பித்தது முதல் மனித இனத்தின் நாகரிக வளர்ச்சி ஆரம்பமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் மனித வளர்ச்சியில் மொழி என்பது இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த உடனே பேசிய தாய் மொழி மூலமாக தான் அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கிறது. ஒருவர் பல்வேறு மொழிகளில் வல்லுனராக இருந்தாலும் அவருடைய சிந்திக்கும் மொழியானது தாய் மொழியாக தான் இருக்கும்.

இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தாய் மொழியை சிறப்பிக்கும் வகையில் தான் உலக தாய் மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி கடைபிடிக்கபடுகிறது.

தாய்மொழி தினம் உருவான விதம்:

* 1952 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் வங்கமொழியை காக்க டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தினார்கள்.

* போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 மாணவர்கள் மொழிக்காக தங்களுடைய உயிரைத் தியாகம் செய்தனர்.

* இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கடைபிடிக்க யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

* இதனையடுத்து 2000 ஆம் முதல் பிப்ரவரி 21 ஆம் தேதியானது உலகெங்கும் வாழும் மக்களால் தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.  

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதித்த சுதா கொங்கரா: தளபதி 65 குறித்த தகவல்

0

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார் என்பது 99.9% முடிவாகிவிட்டது. சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் விஜய், ஜிவி பிரகாஷ், மற்றும் சுதா கொங்கராஆகிய மூவருக்கும் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது

இந்த நிலையில் சுதா கொங்கரா, சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விஜய்க்கு ஒரு சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாகவும், இந்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் மட்டுமே தான் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளாராம்

விஜய் உள்பட யாரும் தன்னுடைய திரைக்கதையில் தலையிடக்கூடாது என்றும் மாஸ் காட்சிகளை வற்புறுத்தக்கூடாது என்றும், தயாரிப்பு செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் படப்பிடிப்பு தளத்தில் சன் பிக்சர்ஸ் குழுவினர் யாரும் வரக்கூடாது என்றும் நிபந்தனை இருந்ததாக தெரிகிறது

இந்த நிபந்தனைகளை விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டதை அடுத்து, வரும் ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏமாற்றிய விராட் கோலி ! 4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா !

0

ஏமாற்றிய விராட் கோலி ! 4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 88 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 16 ரன்கள் சேர்த்திருந்த போது முதல் விக்கெட்டாக பிருத்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார்.அதன் பின் வந்த புஜாராவும் வெகுநேரம் நீடிக்கவில்லை. தன் பங்குக்கு 11 ரன்களை சேர்த்து வெளியேறினார்.

அதற்கடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்க பட்ட விராட் கோலி களமிறங்கினார். அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட 2 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் வந்த ரஹானே தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலோடு சேர்ந்து நிதானமாக விளையாடினார்.

இதனால் இந்திய அணி ஓரளவு நிலைபெற்ற நிலையில் மயங்க் அகர்வால் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஹனுமா விஹாரியும் ரஹானேவும் தற்போது களத்தில் உள்ளனர்.

பேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷம்: சுயரூபத்தை காட்டிய பெண்! லாடம் கட்டிய காவல் துறை

0

பேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷம்: சுயரூபத்தை காட்டிய பெண்! லாடம் கட்டிய காவல் துறை

சமீபத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இதைப்போல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருகின்றன. அதன்படி இந்த சட்டத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் 5 மாநில சட்டசபைகளில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மேலும் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாட்டில் பல்வேறு இடங்களில் பேரணிகளும், போராட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு நகரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்று நடந்தது.  இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரான ஓவைசி கலந்து கொண்டார்.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா என்ற இளம்பெண் திடீரென்று பாகிஸ்தானிற்கு ஆதரவாக ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பினார். இது பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கோஷமிட்ட அவரை தடுத்து நிறுத்திய ஓவைசி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட அந்த இளம்பெண் மீது 124ஏ பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.  மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.  இதன்பின் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருபவர்களை பாகிஸ்தானிற்கு ஆதரவாக பாஜகவினர் சித்தரித்து வரும் நிலையில் தற்போது இந்த பெண் பாகிஸ்தானிற்கு ஆதரவாக கோஷமிட்டது அவர்களுடைய சுயரூபம் வெளிப்பட்டதாகவே விமர்சிக்கபடுகிறது.