Home Blog Page 5771

தஞ்சை கோயில் சுற்றுச்சுவரில் தமிழர்களின் பாரம்பரிய ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தல்..!!

0

தஞ்சை கோயில் சுற்றுச்சுவரில் தமிழர்களின் பாரம்பரிய ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தல்..!!

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்கும் விதமாக கோயிலின் சுற்றுச் சுவரில் பாரம்பரியமான வண்ண வண்ண ஓவியங்களை அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் வரைந்து அசத்தியுள்ளனர். அரசுக்கு சொந்தமான சுவர்களிலும் மாணவர்களின் கைவண்ணம் ஓவியங்களாக ஜொலிக்கிறது.

தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு வருகிற நாளை சிறப்பாக நடைபெற உள்ளதால் கோயில் அலங்கரிப்பு, தமிழ் வேதங்கள் ஓதப்பட்டு வருகின்றன. தஞ்சை கோயிலின் குடமுழுக்கு நீண்ட காலமாக சமஸ்கிருத்மொழியில் நடத்தப்பட்டு வந்தது. தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழில்தான் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மற்றும் பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டிலும் நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, குடமுழுக்கு சம்பந்தமான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக செயல்படுத்தி ஆரவாரமான தொடக்கத்துடன் கொண்டாடப் பட்டு வருகிறது. தமிழ் மாமன்னர் ராஜ ராஜ சோழனின் கம்பீரமான தோற்றங்களும், தமிழினத்தின் பாரம்பரிய விளையாட்டுகளும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையும் மிக தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. ஓவியங்கள் இரவு பகலாக ஆர்வத்துடன் வரைந்து வருகின்றனர். இந்த வண்ண ஓவியங்களால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஓவியங்களை யாரும் அழித்துவிடாமல் இருக்கவும், சேதப்படுத்தாமலும், விளம்பர சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என்றும் மாநகராட்சி இவற்றை பாதுகாக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓவியங்கள் ஒருமாதமாக வரையப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூட்டம் கூட்டமாக வருகின்றன:பயிர்களை நாசம் செய்து செல்கின்றன!வெட்டுக்கிளி தாக்குதால் பாகிஸ்தானில் அவசரநிலை!

0

கூட்டம் கூட்டமாக வருகின்றன:பயிர்களை நாசம் செய்து செல்கின்றன!வெட்டுக்கிளி தாக்குதால் பாகிஸ்தானில் அவசரநிலை!

வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து கோதுமை பயிர்களைத் தாக்குவதால் பாகிஸ்தானில் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் தெற்கே அமைந்துள்ள சிந்து மாகாணம்  முதல் வடகிழக்குப் பகுதியான கைபர் பக்துவா உள்ள விவசாயிகள் கோதுமைப் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் அறுவடைக்காலம் நெருங்கியுள்ள நிலையில் கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால் பல லட்சம் ஹெக்டேர்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நாசமாகி விவசாயிகளுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கூட்டம் கூட்டமாக வருகின்றன:பயிர்களை நாசம் செய்து செல்கின்றன!வெட்டுக்கிளி தாக்குதால் பாகிஸ்தானில் அவசரநிலை!

விவசாயிகளும் எவ்வளவோ முயற்சி செய்தும் வெட்டுக்கிளிகள் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறிய ரக விமானங்கள் மூலமாக பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்ல. இதையடுத்து பாகிஸ்தானின் தகவல் துறை மந்திரி ஃப்ர்டோஸ் அஸ்க்யூ அவான் அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் வெளியான காப்பான் படத்தில் இதுபோல வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் பாதிக்கப்படும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. இப்போது அது பாகிஸ்தானில் உண்மையிலேயே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போதை மருந்து தண்டனைக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர் !

0

போதை மருந்து தண்டனைக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர் !

காயம் காரணமாக நியுசிலாந்துகு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

போதை மருந்து தண்டனைக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர் !

இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் துணைக் கேப்டனான ரோஹித் ஷர்மா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில் இப்போது ரோஹித்தின் விலகல் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நடக்க இருக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மாற்று வீரராக யார் அறிவிக்கப்படுவார் என கேள்வி எழுந்தது. இதையடுத்து அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேப்போல டெஸ்ட் போட்டிகளுக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோஹித் ஷர்மாவுக்குப் பதில் இளம் வீரரான பிருத்வி ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியின் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்திய பிருத்வி ஷா அனுமதி மறுக்கப்பட்ட போதை மருந்துகளைப் பயன்படுத்தியதாக ஓராண்டு தடை விதிக்கப்பட்டார். இந்நிலையில் ஓராண்டுக்குப் பின் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி:-

விராட் கோலி, பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷுப்மன் கில், விருத்திமான் சஹா, ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் உமேஷ் யாதவ், மொகமட் ஷமி, நவ்தீப் சைனி.

“அப்பா இந்தாப்பா” தந்தைக்கு தலைக்கவசத்தை கொண்டு வரும் மழலையின் வைரல் வீடியோ..!!

0

“அப்பா இந்தாப்பா” தந்தைக்கு தலைக்கவசத்தை கொண்டு வரும் மழலையின் வைரல் வீடியோ..!!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி குமரேசன் என்பவர் தனது பணிக்காக வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது, அவரது குழந்தை வீட்டில் இருந்து தலைக்கவசத்தை ‘அப்பா இந்தாப்பா’ என்று கூறிக்கொண்டு வெளியே கொண்டு வரும் காணொளி அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. அப்பாவும் மகளுக்காக சல்யூட் அடித்து மரியாதை செலுத்தும் காட்சி பார்ப்பவர்களை பரவசமூட்டுகிறது.

தலைக்கவசத்தை அணியாமல் வண்டி ஓட்டுவதை கெத்தாக நினைக்கிறார்கள் நம் இளைஞர்கள், தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்கவே இதே மனநிலைதான். இதன் பின் இருக்கும் மோசமான விளைவுகளை அறிந்தும் ஹெல்மெட்டை பலர் அணிவதில்லை. செத்தால் நான்தானே சாகப் போகிறேன் போலீசுக்கு என்ன கவலை, என்பதுபோல் சிலர் பேசுகிறார்கள். நாம் வாழ்வதற்கான முழு உரிமை நமக்கு இருந்தாலும், இறப்பைத் தேடிக்கொள்ள நமக்குத் துளி கூட உரிமை இல்லை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

ஹெல்மெட் அணியாமல் செல்வதற்கு பொதுவாக கூறும் காரணங்கள்: தலைமுடி கொட்டிவிடும், வியர்வை கொட்டும், காது வலி ஏற்படும் மற்றும் பக்கவாட்டில் வரும் வண்டி தெரியாமல் போய்விடும் என்கிற சப்பைகட்டு  கட்டுகிறார்கள். வியர்வையால் தலை முடி கொட்டுகிறது என்பவர்கள்  ஏர் வென்டிலேட்டர் உள்ள தலைக்கவசங்களை வாங்கலாம்.

தலைக்கவசம் 1914-ம் ஆண்டு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பைக் ரேஸ் நடைபெறும்போது தலையில் அடிபட்டு ஏகப்பட்ட வீரர்கள்  மரணிக்க நேர்ந்தது, இன்னும் சிலர் தலையில் அடிபட்டு  கோமாவுக்குச் சென்றனர். இதைத் தவிர்க்க வேண்டுமென நினைத்த டாக்டர் எரிக் கார்ட்னர் என்பவர் மோஸ் என்ற டிசைனரின் உதவியோடு தலைக்கவசங்களை உருவாக்கினார். முதலில் இதை அணிய மறுத்த வீரர்கள் பின்னர் இதன் மகத்துவம் உணர்ந்து அணியத் தொடங்கினர்.

காவல்துறையை குற்றம் சொல்லாமல் நம் உயிரையும், நம் குடும்பத்தின் எதிர்காலம் குறித்தும் மனதில் வைத்து ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான பயணத்தை தொடர்வோம். தலைக்கவசம் நம் உயிர்கவசம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்

ரஜினி என்னதான் நண்பராக இருந்தாலும் அவருக்கு அந்த தகுதி இல்லை:கொதிக்கும் பாரதிராஜா!

0

ரஜினி என்னதான் நண்பராக இருந்தாலும் அவருக்கு அந்த தகுதி இல்லை:கொதிக்கும் பாரதிராஜா!

ரஜினிகாந்த் தன்னுடைய நண்பராக இருந்தாலும் அவர் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டை ஆளவேண்டும் என நினைப்பதை ஏற்கமுடியவில்லை என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி திரையுலகில் நல்ல நடிகர் எனத் தனது 16 வயதினிலே படத்தின் மூலம் பெயர் வாங்கிக் கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. அதன் பின்னர் அவர்கள் இருவரும் கொடி பறக்குது என்ற படத்தில் மட்டுமே இணைந்து பணியாற்றினாலும் 40 வருடங்களுக்கும் மேலாக நட்பாகப் பழகி வருகிறார்கள். பாரதிராஜா பல மேடைகளி ரஜினியின் நடிப்புத் திறனைப் பற்றியும் தனிப்பட்ட வாழ்வு பற்றியும் பாராட்டி இருக்கிறார். ஆனாலும் ரஜினியோடு பாரதிராஜா முரண்படும் இடம் ஒன்று இருக்கிறது. ஆம் அதுதான் அரசியல்.

பாரதிராஜா தமிழ் தேசிய அரசியலின் மீது மரியாதை கொண்டு ஒரு தமிழர்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் எனப் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார். ஆனால் ரஜினியோ கட்சி ஆரம்பித்து ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக சொல்லி வருகிறார். ரஜினியின் அரசியலை அதிமுக, பாஜக போன்ற கட்சிகளைப் பெரும்பாலானவை வெளிப்படையாக எதிர்த்து வருகின்றன. அதேபோல பாரதிராஜாவும் தங்கள் நட்பை மீறியும் ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில்  இன்று பாரதிராஜா அளித்த ஒரு நேர்காணலில் அவரிடம் ‘நீங்கள் ரஜினியைப் பிறந்தநாளுக்கு எல்லாம் சென்று அவரைப் பாராட்டுகிறீர்கள், ஆனால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள்?’ என்ற கேள்வியைப் பத்திரிக்கையாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த பாரதிராஜா ‘ரஜினி எளிமையான மனிதர். எனது நண்பர்தான். ஆனால் அவர் தமிழ்நாட்டை ஒருபோதும் ஆளவேண்டும் என நினைக்கக் கூடாது. மற்ற மாநிலங்களில் எல்லாம் அந்த மண்ணின் மைந்தர்கள்தான் ஆட்சி செய்கிறார்கள். அதுபோல எங்கள் மண்ணில் எங்கள் மைந்தன்தான் ஆளவேண்டும் என நினைப்பது தவறா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்:முக்கிய வீரர் விலகல்!ஏன் தெரியுமா?

0

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்:முக்கிய வீரர் விலகல்!ஏன் தெரியுமா?

காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்ட இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் துணைக் கேப்டனான ரோஹித் ஷர்மா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில் இப்போது ரோஹித்தின் விலகல் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி நடந்த ஐந்தாவது டி 20 போட்டியின் போது ரன் எடுக்க ஓடிய போது ரோஹித் ஷர்மாவுக்கு காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின் பந்துவீச்சின் போதும் அவர் களத்துக்கு வரவில்லை. இப்போது வரை அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடையாததால் அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.  அவருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக யார் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலம்: ஆற்றுப்பகுதி திடீரென தீ பிடித்ததால் பொதுமக்கள் அச்சம்!

0

அஸ்ஸாம் மாநிலம்: ஆற்றுப்பகுதி திடீரென தீ பிடித்ததால் பொதுமக்கள் அச்சம்!

அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகார் மாவட்டம் சசோனி என்ற கிராமத்தின் அருகேயுள்ள ஆற்றுப் பகுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரேன தீப்பிடித்து இரண்டு நாட்களாக எரிந்து வருகிறது. இதை கண்ட கிராம மக்கள் பலர் அச்சத்துடன் பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்தனர். ஆற்றங்கரையை ஒட்டியவாறு அமைக்கப்பட்ட திரவ எண்ணெய் குழாயின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆயில் மற்றும் வாயுக்களை வேகமாக கொண்டு செல்வதற்காக பூமியில் ராட்சத பைப்புகளை புதைக்கின்றனர். இதன்மூலம் பல்வேறு ஆயில் நிறுவனங்களுக்கு தேவையான திரவ பொருட்கள் ராட்சத பைப்புகளின் மூலம் விரைவாக எடுத்துச் செல்லப்படுகிறது. சில நேரங்களில் பூமியின் வெப்பம் அதிகரிப்பதாலும் அல்லது குழாயில் அதிக அழுத்தம் ஏற்பட்டாலும் குழாய் வெடித்து அதிலுள்ள திரவம் வெளியேறிவிடும்.

அஸ்ஸாமில் ஆற்றின் கரைப்பகுதி பூமிக்கு அடியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் புதைக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் கசிவு ஏற்பட்டு ஆற்று நீருடன் ஆயில் கலந்து தீ பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உரிய நபர்களிடம் தகவல் தெரிவித்தும் இரண்டு நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். மேலும், இந்த சம்பவத்தால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்பது ஆறுதலான விஷயமாகும்.

திமுகவின் அரசியல் வியூகத்தையே பந்தாடிய பாமக மற்றும் பாஜகவினர் #ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின்

0

திமுகவின் அரசியல் வியூகத்தையே பந்தாடிய பாமக மற்றும் பாஜகவினர் #ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின்

தற்போதைய அரசியலில் அரசியல்வாதிகள் பேசுவதை பெரும்பாலான மக்கள் நம்புவதில்லை அதே நேரத்தில் நடுநிலை என்ற பெயரில் ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை ஓரளவு மக்கள் நம்பி வருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலான பிரபல ஊடகங்களின் உதவியுடன் அரசியல்வாதிகள் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இது போல முயற்சி செய்யும் அரசியல்வாதிகளையும், பிரபல ஊடகங்களையும் இணைக்கும் பணியை தான் சமீப காலங்களில் அரசியல் ஆலோசனை என்ற பெயரில் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் என்ற நிறுவனம் செய்து வருகிறது. இதற்கு முன்பாக பிரதமர் மோடி, நிதிஷ் குமார் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு இவர் வெற்றி வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.

இதனால் தமிழக அரசியல் கட்சிகளும் அவரின் உதவியை நாடி சென்றன. அந்த வகையில் குறிப்பாக நடிகர் கமலஹாசன் மற்றும் அதிமுக தரப்பு இவரை பயன்படுத்தி கொள்ள முயற்சித்து வந்தன. இந்த போட்டியில் சமீபத்தில் திமுகவும் இணைந்தது. இந்நிலையில் மற்ற கட்சிகள் அனைத்தும் பின் வாங்கியது.

திமுகவின் அரசியல் வியூகத்தையே பந்தாடிய பாமக மற்றும் பாஜகவினர் #ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின்

இதையடுத்து திமுகவிற்காக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் செயல்படுமா? என்பது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் திமுக இணைந்து பணியாற்றும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதில் அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் பாஜகவினர் இணைந்து திமுகவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இவர்களுடன் ரஜினி ரசிகர்களும் இணைந்து கொண்டு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் #ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின் என்ற கேஷ் டேக்கில் டிவிட்டரில் பதிவிட்ட விமர்சனங்கள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

வருகின்ற 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற திமுக தலைவரின் முதல்வர் கனவை நிறைவேற்ற அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளும் அவருக்கே எதிராக அமைந்து விடுகிறது. அந்த வகையில் தற்போதைய இந்த முயற்சியையும் அவருக்கு எதிராக அதிமுக, பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் திருப்பி விட்டிருக்கின்றனர்.

தமிழ் கடவுளை அவமதிக்கும் விதமாக காக்டெய்ல் திரைப்பட போஸ்டர் வெளியீடு!

0

தமிழ் கடவுளை அவமதிக்கும் விதமாக காக்டெய்ல் திரைப்பட போஸ்டர் வெளியீடு!

சமீபத்தில் வெளியான காக்டெய்ல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சரச்சையை தூண்டும் விதமாக உள்ளது. அதில் தமிழ் கடவுள் முருகன் வேடத்தில் நடிகர் யோகி பாபு முருகனை போல் காட்சி தருவதாக போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களிடையே காக்டெய்ல் பட போஸ்டர் ஆரம்பத்திலேயே சர்ச்சை உண்டாக்கியது.

தமிழ் கடவுளை அவமதிக்கும் விதமாக காக்டெய்ல் திரைப்பட போஸ்டர் வெளியீடு!

விமர்சனங்களின் அடிப்படையில் இந்த போஸ்டர் குறித்து காக்டெய்ல் திரைப்படத்தின் இயக்குனர் முருகன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கடவுளை அவமதிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை, அந்த நோக்கத்தில் நாங்கள் போஸ்டரை வடிவமைக்கவில்லை என்றும், இந்த போஸ்டர் யாரையும் புண்படுத்தவோ அல்லது எந்த உள் நோக்கத்துடனும் உருவாக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

இப்படத்தில் தமிழ் கடவுள் முருகரின் வேடம் முக்கிய இடம் பெறுவதால் கதைக்காக வெளியிட்டோம் என்று தெரிவித்தார். பல்வேறு திருவிழா நிகழ்வுகளில் சிவன் மற்றும் முருகன் வேடம் அணிந்து பண்பாட்டு நிகழ்வை நடத்துகிறோம். இதையே திரைப்படத்தில் காட்டினால் தவறாகுமா..? என்று கேள்வியுடன் விளக்கம் கூறினார். தமிழ் கடவுள்களை வழிபட்டு கொண்டாடும் எங்களைப் போன்ற ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமையாக பார்க்கிறோம். இதை எப்படி எங்களால் தவறாக சித்தரிக்க முடியும் என்று தனது பக்க நியாயத்தை வெளிப்படுத்தினார்

இதனையடுத்து, படத்தின் தலைப்பான காக்டெய்ல் என்கிற பெயர் ஆஸ்திரேலிய நாட்டில் வாழும் ஒரு கிளியை மையப்படுத்தி வைக்கப்பட்டதுள்ளது என்றும், இந்த போஸ்டரில் முருகன் மயிலை பயன்படுத்துவதற்கு மாறாக கிளியை பயன்படுத்தி இருப்பதாகவும் கூறினார். தனது விளக்கத்தின் மூலம் படத்திற்கான ஆரம்பகட்ட சர்ச்சைக்கு படத்தின் இயக்குனர் முருகன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திமுகவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; ஒரிஜினல் சங்கி ஸ்டாலின் என்று டுவிட்டரில் டிரெண்டிங் ஹேஷ்டேக்!!

0

திமுகவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; ஒரிஜினல் சங்கி ஸ்டாலின் என்று டுவிட்டரில் டிரெண்டிங் ஹேஷ்டேக்!!

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று, இந்தியன் ஐபேக் என்னும் இந்திய அரசியல் ஆலோசனை குழுவுடன் கைகோர்த்துள்ளது. இதை டுவிட்டரில் ஸ்டாலின் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுகவினால் தனித்து தமிழக அரசியலில் வெற்றிபெற முடியாதா என்று கேளிக்கையாக ஸ்டாலினை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அரசியலில் மாநில மற்றும் மத்திய அளவில் பெரிய அரசியல் மாற்றத்தை உண்டாக்க கூடிய நுட்பமான அரசியல் கணிப்பாளர்தான் இந்த பிரசாந்த்கிஷோர். இந்திய அரசியல் நடவடிக்கை குழு என்பதை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளை வெற்றி பெற வைக்க தனது ஆலோசனைகளை கூறி வருகிறார்.

கடந்த காலத்தில் ஐம்பது ஆண்டுகளாக பல்வேறு அரசியல் தலைவர்கள் திமுகவில் ஆளுமை செலுத்தினர். ஆனால், இன்று யாரோ ஒருவர் திமுகவிற்கு ஆலோசனை கொடுக்கும் அளவிற்கு மாறியுள்ளது. கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு திமுகவில் ஒருவர் கூட இல்லையா..? என்று சமூக வலைதளத்தில் திமுகவை பலர் வறுத்தெடுக்கின்றனர். மேலும், ஒரிஜினல் சங்கி ஸ்டாலின் என்கிற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

சமூக வலைதளத்தின் தாக்கத்தால் திமுக ஐடி விங் குழுக்கள் சற்று கவலையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பார்ப்பண எதிர்ப்பை பேசும் திமுக பார்ப்பணரான பிரசாந்த் கிஷோரிடம் ஆலோசனை கேட்பதா? என்று சிலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகின்றனர். சட்டமன்ற தேர்தல் வரும் முன்பே திமுகவுக்கான சமூக வலைதள எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது.