நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்:முக்கிய வீரர் விலகல்!ஏன் தெரியுமா?

0
62

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்:முக்கிய வீரர் விலகல்!ஏன் தெரியுமா?

காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்ட இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் துணைக் கேப்டனான ரோஹித் ஷர்மா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில் இப்போது ரோஹித்தின் விலகல் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி நடந்த ஐந்தாவது டி 20 போட்டியின் போது ரன் எடுக்க ஓடிய போது ரோஹித் ஷர்மாவுக்கு காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின் பந்துவீச்சின் போதும் அவர் களத்துக்கு வரவில்லை. இப்போது வரை அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடையாததால் அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.  அவருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக யார் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

author avatar
Parthipan K