போதை மருந்து தண்டனைக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர் !

0
91

போதை மருந்து தண்டனைக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர் !

காயம் காரணமாக நியுசிலாந்துகு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் துணைக் கேப்டனான ரோஹித் ஷர்மா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில் இப்போது ரோஹித்தின் விலகல் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நடக்க இருக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மாற்று வீரராக யார் அறிவிக்கப்படுவார் என கேள்வி எழுந்தது. இதையடுத்து அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேப்போல டெஸ்ட் போட்டிகளுக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோஹித் ஷர்மாவுக்குப் பதில் இளம் வீரரான பிருத்வி ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியின் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்திய பிருத்வி ஷா அனுமதி மறுக்கப்பட்ட போதை மருந்துகளைப் பயன்படுத்தியதாக ஓராண்டு தடை விதிக்கப்பட்டார். இந்நிலையில் ஓராண்டுக்குப் பின் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி:-

விராட் கோலி, பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷுப்மன் கில், விருத்திமான் சஹா, ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் உமேஷ் யாதவ், மொகமட் ஷமி, நவ்தீப் சைனி.

author avatar
Parthipan K