கடந்த சில வாரங்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர், மாணவர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நேற்று நள்ளிரவில் மீண்டும் மர்மநபர்கள் 2 பேர் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
டெல்லியில் இதுவரை மொத்தம் மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை உடனடியாக கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. நெல்லையில் நேற்று நள்ளிரவு சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ் கடந்த சில ஆண்டுகளாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தனுஷின் சுருளி படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த நிலையில், அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கர்ணன் என்ற படத்தை பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்
இந்த நிலையில் தனுஷின் 43வது படத்தையும் ஒரு இளம் இயக்குனர் இயக்க உள்ளார். ஆம், அந்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ் சினேகா நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், கார்த்திக் நரேன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஒரே படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பிரசாந்த் கிஷோருடன் திமுக கைகோர்ப்பு; ஸ்டாலின் முதல்வர் கனவை நிஜமாக்க டெக்னிக் அரசியல் ஆரம்பம்!!
இந்திய அளவில் பெரிய அரசியல் மாற்றத்தை உண்டாக்க கூடிய நுட்பமான அரசியல் வித்தகர்தான் இந்த பிரசாந்த கிஷோர். இந்திய அரசியல் நடவடிக்கை குழு என்பதை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளை வெற்றி பெற வைக்க தனது ஆலோசனைகளை கூறி வருகிறார்.
இவருடைய ஆலோசனைகளின் மூலம் பிஜேபி வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். மோடி முதல் நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல தரப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி வெற்றிவாகை சூட வைத்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்தகால அரசியல் நிகழ்வுகளை மிக நுணுக்கமாக கவனித்து, அந்த மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக கூறி பல இடங்களில் வெற்றிக்கனியை பறிக்க பிரசாந்த் கிஷோர் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் கலைஞரின் மறைவுக்கு பிறகு ஸ்டாலின்தான் என்பது உறுதியாகி திமுகவின் செயல்தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக்கும் நோக்கத்தில், பிரசாந்த் கிஷோரின் குழு திமுகவுடன் இணைந்து தேர்தல் வியூகங்களை வகுக்க உள்ளதாக ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவின் அரசியல் நகர்வுகளால், வருங்காலத்தில் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்குமா அல்லது கடந்த காலத்தை போல இலவுகாத்த கிளியாக இருக்க வேண்டுமா என்பதை வருகின்ற தேர்தலில் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இக்குழுவின் வருகை உடன்பிறப்புகளுக்கு தெம்பூட்டும் விதமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
மாட்டு சாணமும்
கோமியமும்தான் கொரோனாவுக்கு மருந்து:சொன்னது யார் தெரியுமா?
உலகம் முழுவதும்
மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸூக்கு மருந்தாக மாட்டு சாணத்தையும் அதன்
சிறுநீரையும் பரிந்துரைத்துள்ளார் இந்து மகா சபா தலைவர் சுவாமி சக்ரபானி மகாராஜ்.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் 259 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர். இந்த
வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளதாக சீன அரசு ஒத்துக்கொண்டுள்ளது.
அதேபோல இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்றும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.
மக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய பயம் உருவாகியுள்ள நிலையில் வைரஸுக்கு
மருந்து என பல வைத்திய முறைகள் சொல்லப்பட்டு வருகின்றன. வழக்கம்போல சித்தாவில் மருந்து
இருக்கிறது, ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறது என சொல்லப்பட்டு வரும் நிலையில் இப்போது
புதிதாக ஒருவர் ஒரு மருந்தை சொல்லி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்து இன்று பேசிய இந்து மகா சபா தலைவர் சுவாமி சக்ரபானி மகாராஜ்
மாட்டின் கோமியம் கொண்டும் மாட்டின் சாணம் கொண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும்
மாட்டின் சாணத்தை உடல்முழுவதும் பூசிக்கொண்டு யாகம் வளர்த்தால் மக்கள் இந்த நோய் தாக்குதலில்
இருந்து காப்பாற்றப் படுவார்கள் என சொல்லியுள்ளார்.
வழக்கம்போல பாஜக் ஆதரவாளர்கள் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்க சமுக வலைதளங்களில் கண்டனங்களையும் கேலியையும் சந்தித்து வருகிறது இந்த கருத்து.
ஹிப்ஹாப்
ஆதியோடு லடாய்:அரண்மணை 3க்கு வேறு இசையமைப்பாளர் தேடும் சுந்தர் சி!
சுந்தர் சி
தான் இயக்க இருக்கும் புதிய படமான அரண்மணை 3க்கு புதிய இசையமைப்பாளர் ஒருவரை தேடி வருவதாக
சொல்லப்படுகிறது.
சுந்தர் சி
சமீபகாலமாக இசைம்யமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியோடு மிகவும் நெருக்கமாக பழகிவந்தார். அவர்
இயக்கிய அரண்மணை 2, கலகலப்பு 2, ஆம்பள மற்றும் ஆக்ஷன் ஆகிய படங்களுக்கு வரிசையாக அவரைப்
பயன்படுத்தி வந்தார். அது மட்டுமில்லாமல் ஆதியை ஹீரோவாக வைத்து மீசைய முறுக்கு, நட்பே
துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்
என்பதால் இந்த நெருக்கம் இருப்பதாக கோலிவுட்டில் சிலாகிக்கப்பட்டது.
இப்போது யார் கண்பட்டதோ இந்த கூட்டணி பிரிய இருக்கிறது. இதற்குக் காரணம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புதான் என சொல்லப்படுகிறது. ஏனன்றால் சுந்தர் சி தயாரிப்பில் ஆதி நடித்து விரைவில் வெளிவர இருக்கும் நான் சிரித்தால் படத்தின் படப்பிடிப்பின் போது ஆதி சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் ஆதி மீது அதிருப்தியான சுந்தர் சி அடுத்து ஆர்யாவை தான் இயக்கும் அரண்மனை 3 படத்தில் இருந்து ஹிப் ஹாப் ஆதியைத் தூக்கிவிட்டு வேறொரு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.
பூம்ரா துல்லிய
தாக்குதல்:நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்த இந்தியா!
இந்தியா மற்றும்
நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது போட்டியையும் வென்ற இந்திய அணி நியுசிலாந்தை
வொயிட்வாஷ் செய்துள்ளது.
நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இன்று 5 ஆவது போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். டாஸ் வென்ற அவர் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.
இதில் இந்திய அணியின் ராகுல் (45) மற்றும் ரோஹித்
ஷர்மா (61) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி 163 ரன்கள் மட்டுமே
சேர்த்தது. கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் காயமடைந்துள்ளதால் அவருக்குப் பதிலாக கே எல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.
இதையடுத்து 164 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நியுசிலாந்து
அணியில் ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் மறுபக்கம் செய்பெர்ட்டும் ராஸ் டெய்லரும்
நிதானமாக அரைசதம் அடித்து அந்த அணிக்கு நம்பிக்கை அளித்தனர். ஆனால் அவர்கள் இருவரும்
அவுட் ஆனதை அடுத்து மளமளவென விக்கெட்கள் விழ ஆரம்பித்தது. இந்திய அணியின் வேகப்பந்து
வீச்சாளர் 4 ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதன் மூலம் நியுசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி
அடைந்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரின் அனைத்துப் போட்டிகளையும் வென்ற இந்திய அணி நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி 5 ஆம் தேதி தொடங்க உள்ளது.
சொதப்பிய
நடுவரிசை பேட்ஸ்மேன்கள்:களத்தில் இருந்து வெளியேறிய ரோஹித்:இந்தியாவுக்குப் பின்னடைவு
!
இந்தியா
மற்றும் நியூசிலாந்து
அணிகளுக்கு இடையிலான
5-வது டி 20
போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள்
சேர்த்துள்ளது.
நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து
இன்று 5 ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு
ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். டாஸ் வென்ற அவர் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.
இந்திய
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும் சஞ்சு சாம்சனும் களமிறங்கினர். சாம்சன் 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேற
அதன் பின் வந்த ரோஹித் ஷர்மாவும் ராகுலும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்தினர். இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தனர். ராகுல்
45 ரன்களில் எதிர்பாராத விதமாக அவுட் ஆக, அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயர் வந்தார். ஒரு பக்கம்
ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தாலும் ஸ்ரேயாஸ் ஆமை வேகத்தில்
விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ரோஹித் ஷர்மா அடிபட்டு களத்தை விட்டு 61
ரன்களில் வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த ஷிவம் துபேவும் ஏற்கனவே களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயரும் ரன்களை சேர்க்க முடியாமல் தடவிக் கொண்டிருந்தனர். இதனால் ரன்ரேட் குறைந்தது. ஒரு கட்டத்தில் ஷிவம் துபேவுக்குப் பின் வந்த மனிஷ் பாண்டே கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 3 பந்துகளில் 11 ரன்கள் சேர்க்க இந்திய அணி 163 ரன்கள் சேர்த்தது. பொறுப்புக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் காயமடைந்துள்ளதால் அவருக்குப் பதிலாக கே எல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
நாட்டையே
உலுக்கிய பிரியங்கா கொலை வழக்கு:உருவாகும் திரைப்படம்! முன்னணி இயக்குனர் அறிவிப்பு!
பிரபல இயக்குனர்
ராம் கோபால் வர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்
பிரியங்கா சம்பவத்தைத் திரைப்படமாக எடுக்க இருக்கிறார்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் கடந்த
நவம்பர் மாதம் 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு
பின்னர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த
கொலை சம்மந்தமாக நால்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என பெண் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் கொலை வழக்கில் கைதான நால்வரும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டிய சொல்லப்பட்டது.
அப்போது நால்வரும் தப்பி செல்ல முயன்றதாக சொல்லி காவல்துறையினர் நால்வரையும் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
இந்த என்கவுண்ட்டருக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர வந்தது. நிர்பயா
சம்பவத்துக்குப் பிறகு நாட்டையே உலுக்கிய பாலியல் கொலை சம்பவமாக பிரியங்கா வழக்கு அமைந்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா திஷா என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப் போவதாக அறிவித்தார்.இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ’ திஷா படத்தில் பாலியல் கொலைகளின் போது வெளிவராத உண்மையை பேசப்போவதாக அவர் சொல்லியுள்ளார். ராம்கோபால் வர்மா இந்த திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளதால் திஷா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளார்.
ஸ்மார்ட்போன்களைத்
தாக்கும் கொரோனா ’வைரஸ்’!ஹேக்கர்கள் கைவரிசை!
கொரோனா வைரஸ்
சம்மந்தமாக பரப்பப்படும் பார்வேர்ட் மெஸேஜ்களில் ஹேக்கர்கள் வைரஸ்களை அனுப்புவதாக திடுக்கிடும்
தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று
உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக
சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் 259 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்
பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர். மக்கள்
ஒன்றுகூடலை தவிர்க்க திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை கூட ரத்து செய்ய சொல்லி சீன அரசு
உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய பயம் உருவாகியுள்ள
நிலையில் வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வது எப்படி என்பது போன்ற
வீடியோக்கள், மற்றும் டெக்ஸ்ட் ஃபைல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிக அளவில் பரப்பப்
படுகின்றன. இப்போது அந்த மெஸேஜ்கள் மூலம் வைரஸ்களை ஹேக்கர்கள் அனுப்பி ஸ்மார்ட்போன்களை
ஹேக் செய்ய முயலுவதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன.
இந்த வைரஸ்களோடு வரும் ஃபைல்கள் நம்முடைய சாதனங்களில் உள்ள டேட்டாக்களை அழிக்கும், அல்லது பிரதி (xerox) எடுக்கும் திறன் கொண்டவை. இது மாதிரியான வைரஸ் சம்மந்தமான பைல்களைக் கண்டுபிடிக்க அவற்றின் எக்ஸ்டென்ஷன் வீடியோ பைல்கள் .exe அல்லது டெக்ஸ்ட் பைல்கள் .lnk போன்ற எக்ஸ்டென்ஷன்களோடு இருந்தால் அவற்றை டவுன்லோட் செய்வதைத் தவிருங்கள் என வல்லுனர்கள் சொல்லியுள்ளனர்.
கோலிக்குப்
பதில் ரோஹித் ஷர்மா:மீண்டும் அணியில் பண்ட்!மாற்றங்களோடு களமிறங்கும் இந்தியா !
நியுசிலாந்துக்கு
எதிரான கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களோடு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியுசிலாந்து
சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்
விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று
4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனால் இன்று நடக்கும்
5 ஆவது போட்டியில் இந்திய அணி மாற்றங்களோடு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில்
இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோஹித் கேப்டனாக
நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல சென்ற போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட
முகமது ஷமி அணிக்குள் வந்து அவருக்குப் பதிலாக பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்படும் எனத்
தெரிகிறது.
அதே போல ஆஸ்திரேலியாவுக்கு
எதிரானத் தொடரில் தலையில் அடிபட்டு கன்கஷன் ஏற்பட்ட இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப்
பண்ட் அணியில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட்டுக்கும் இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படும்
எனத் தெரிகிறது. ஒருவேளை அவர் அணிக்குள் வந்தால் கே எல் ராகுல் அமரவைக்கப்படுவார் எனத்
தெரிகிறது.
இதே போல நியுசிலாந்து அணியிலும் கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் கேன் வில்லியம்ஸன் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியாவது இந்த போட்டியில் வெற்றி பெற்று வொயிட்வாஷ் ஆவதில் இருந்து தப்பிக்க நியுசிலாந்து அணி கடுமையாக முயற்சி செய்யும் எனத் தெரிகிறது.