Home Blog Page 5779

காதலியை காட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன்! நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த கற்பழிப்பு பிளான்..!!

0

காதலியை காட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன்! நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த கற்பழிப்பு பிளான்..!!

வேலூர் மாவட்டம் அமிர்தி காட்டுப் பகுதியில் தனது காதலியை காட்டிற்குள் அழைத்துச் சென்று மூன்று நண்பர்களுடன் ஓட ஓட விரட்டி கற்பழிக்க முயன்ற கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமிர்தி பகுதியில் உள்ள வன உயிரியல் பூங்காவிற்கு தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதையடுத்து கல்லூரி மாணவியும் அவருடைய காதலனும் பூங்காவை சுற்றிப் பார்த்த பிறகு, சில கிலோ மீட்டர்களை தாண்டி தனது காதலியை அடர்ந்த காட்டுப் பகுதிக்கு காதலன் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், காட்டில் ஏற்கனவே மூன்று இளைஞர்கள் கற்பழிப்பு திட்டத்துடன் இருந்துள்ளனர். காதலுடன் சேர்ந்து நால்வரும் அப்பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்தனர். அவர்களிடமிருந்து கிழிந்த ஆடைகளுடன் தப்பித்து காப்பாற்றுங்கள் என்று கத்திக்கொண்டே ஓடினார். காட்டிற்குள் விறகு வெட்டிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து ஓடிவந்த பெண்ணிற்கு பாதுகாப்பாக நின்றார்.

அப்பெண்ணை துரத்தி வந்தவர்களிடம் கத்தியை காட்டி அந்த நான்கு பேரையும் எச்சரித்து, வேகமாக விசிலடிக்க ஆரம்பித்தார். விசில் சத்தம் கேட்டு அருகே இருந்த சிலர் சம்பவ இடத்திற்கு வந்ததால் அந்த நான்கு இளைஞர்களும் தப்பி ஓடினர். ஓடியவர்களை துரத்திச் சென்றதில் அப்பெண்ணை காதலித்தவன் மட்டும் பிடிபட்டான். பின்னர் அவனுக்கு அங்கேயே சராமாரியாக அடி கொடுத்து ஊருக்குள் அழைத்து வரப்பட்டு அங்கேயும் மக்களிடம் தர்ம அடி வாங்கினான்.

இதையடுத்து மாணவியின் பெற்றோருக்கு கிராம மக்கள் செல்போன் மூலம் தகவல் கொடுத்த பிறகு, அப்பெண்ணின் பெற்றோர் சம்பவம் நடந்த அன்று இரவு 8 மணிக்கு வந்தனர். கிராம மக்கள் அப்பெண்ணிற்கும் அவருடைய பெற்றோருக்கும் புத்திமதி சொல்லி அன்றிரவு 10 மணிக்கு மேல் திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும், பிடிபட்ட காதலன் வேலூர் வேலப்பாடியைச் சேர்ந்தவன் என்றும் அவன்தான் திட்டமிட்டு தனது நண்பர்களையும் காட்டிற்கு வரவழைத்துள்ளான் என்றும் தெரிய வந்தது.

காதல் என்கிற பெயரில் ஆண்களை நம்பி எந்த பெண்களும் பூங்கா மற்றும் காட்டிற்குள் வர வேண்டாம் என்று அந்த முதியவர் கேட்டுக் கொண்டார். இதே போன்று வேலூர் கோட்டையில் காதலனை தாக்கிவிட்டு காதலியை தூக்கிச் சென்று கற்பழித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை

0

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பு சீனாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் மிகவும் கடுமையாக உள்ளதால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .

சீனாவில் இந்த வைரஸ் தாக்குதல் மிகவும் கடுமையாக உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இந்த வைரஸ் தாக்கிய நோயாளிகளின் எண்ணிக்கை 4,516. இதில் 560 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் . 130 பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வைரஸ் வேகமா பரவுவதை தடுக்க சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல் 2009 ஆம் ஆண்டு சீனாவில் பன்றி காய்ச்சல் பரவிய போதும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்தது.

இந்த வைரஸ் தாக்குதலை சர்வதேச எமர்ஜென்சி என்று அறிவிக்கிறோம் . உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டாரின் சாகசங்கள் கண்களுக்கு விருந்து: மேன் வெர்சஸ் வைல்ட் குறித்து டிஸ்கவரி

0

பியர் கிரில்ஸ் மற்றும்‌ சூப்பர்ஸ்டார்‌ இணைந்து செய்யும்‌ சாகசங்கள்‌ கண்களுக்கு விருந்தாக அமையும்‌ என்று டிஸ்கவரி சேனல் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி குறித்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பியர் கேரில்ஸ் இயக்கத்தில் டிஸ்கவரி சேனல் தயாரித்த ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ ஆவணப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்ற நிலையில் இந்த நடிகர்களில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே நடிகர் என்ற புகழை ரஜினிகாந்த் பெற்றுள்ளார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்னர் யார் யார்? கலந்து கொண்டார்கள், இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? என்பது குறித்து டிஸ்கவரி சேனல் நீண்ட விளக்கத்துடன் கூறிய அறிக்கை ஒன்றை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிட்டுள்ளது. அதன் தமிழ்ப்பதிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அகில உலக அளவில்‌ புகழ்‌ பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம்‌, சூப்பர்ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ உடன்‌ தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில்‌ ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்கிற நிகழ்ச்சி மிகவும்‌ பிரபலமான ஒன்று. இதில்‌ பியர் கிரில்ஸ் என்னும்‌ சாகச வீரர்‌, மயிர்‌ கூச்செறியும்‌ அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும்‌, விலங்குகளுக்கு மத்தியிலும்‌ செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம்‌ பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடத்துவார்‌. இதுவரை இந்த நிகழ்ச்சியில்‌ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட்‌ நடிகைகள்‌ ஜூலியா ராபர்ட்ஸ்‌, கேட்‌ வின்ஸ்லெட்‌ ,டென்னிஸ்‌ வீரர்‌ ராஜர்‌ பெடரர்‌ , மற்றும்‌ சென்ற வருடம்‌ நமது பாரத பிரதமர்‌ நரேந்திர மோடி ஆகியோர்‌ பங்கேற்றுள்ளனர்‌ .

பிரதமர்‌ மோடியுடன்‌ நடந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில்‌ பெரும்‌ வரவேற்பை பெற்றது. உத்தரகாண்டில்‌ உள்ள ஜிம்‌ கார்பெட்‌ தேசிய சரணாலயத்தில்‌ இந்நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. இந்த சாகச பயணம்‌ உலகெங்கிலும்‌ பேசப்பட்டது.

இப்போது இந்த நிகழ்ச்சி புதிய வடிவில்‌ Into the Wild with Bear Grylls என்ற தலைப்பில்‌ சூப்பர்ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ உடன்‌ கர்நாடகாவில்‌ உள்ள பாந்திப்பூர்‌ காடுகளில்‌ படமாக்கப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ பங்கு பெரும்‌ முதல்‌ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்‌. அவரை திரையில்‌ அறிமுகப்படுத்திய இயக்குனர்‌ சிகரம்‌ கே பாலச்சந்தரின்‌ கவிதாலயா நிறுவனம்‌ சின்ன திரைக்கு அவரை முதன்‌ முதலாக டிஸ்கவரி தொலைக்காட்சி சார்பாக அழைத்து வருவதில்‌ பெருமை கொள்கிறது .

ஆபத்துகள்‌ நிறைந்த வனப்பகுதிகளில்‌ இயற்கையோடு ஒட்டி உயிர்‌ வாழும்‌ முறைகளை உணர்த்தும்‌ வகையில்‌ நம்‌ சூப்பர்ஸ்டார்‌ இந்த நிகழ்ச்சியில்‌ பங்கு பெற்றுள்ளார்‌ . நீர்‌ வளத்தின்‌ பாதுகாப்பை பற்றி புரிய வைக்கிறார்‌. டிஸ்கவரி குழுமத்தின்‌ நிர்வாக இயக்குனர்‌ மேகா டாடா கூறுகையில்‌ பியர் கிரில்ஸ் மற்றும்‌ சூப்பர்ஸ்டார்‌ இணைந்து செய்யும்‌ சாகசங்கள்‌ கண்களுக்கு விருந்தாக அமையும்‌ என்று உறுதி கூறுகிறார்‌ .

Bear Grylls கூறுகையில்‌ “ரஜினி அவர்களை தலைவா என்று அன்புடன்‌ இந்திய துணைக்கண்டம்‌ அழைக்கிறது. அவருடைய எளிமை, பொறுமை, பெருந்தன்மை பார்த்து வியக்கிறேன்‌. அவரை ஒரு உன்னத மனிதராகவும்‌ நான்‌ பார்க்கிறேன்‌’ இவ்வாறு டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

பிக்பாஸ் ப்ளேபாய்க்கு நாளை திருமணம்!சமூகவலைதளத்தில் ரொமான்ஸ் பதிவு!

0

பிக்பாஸ் ப்ளேபாய்க்கு நாளை திருமணம்!சமூகவலைதளத்தில் ரொமான்ஸ் பதிவு!

பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமான நடிகர் மஹத்துக்கு நாளை திருமணம் நடக்க இருப்பதை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமாண்டிக்கான பதிவைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் மஹத் ராகவேந்திரா சிம்புவின் பள்ளித் தோழன். தொழிலதிபரின் மகனான இவர் வல்லவன் படத்தில் சிறுவேடத்தில் நடித்திருந்தாலும் மங்காத்தா, ஜில்லா, சென்னை 28 பார்ட் 2 ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார். பின்னர் பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்துகொண்டதன் மூலம் சர்ச்சைகளின் நாயகனாக மாறினார்.

பிக்பாஸ் ப்ளேபாய்க்கு நாளை திருமணம்!சமூகவலைதளத்தில் ரொமான்ஸ் பதிவு!

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோருடன் நட்பாகப் பழகிய அவர் விதிமுறைகளை மீறியதால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் அவருக்கும் யாஷிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது. இத்தனைக்கும் மஹத்துக்கு பிராச்சி மிஸ்ரா என்ற காதலி இருந்தார். இந்த பிக்பாஸ் காதலால் மஹத்தின் காதலி அவரை பிரிந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் வெளியே வந்ததும் தனது காதலைப் புதுப்பித்துக் கொண்டார் மஹத். இதையடுத்து சமீபத்தில் அவருக்கு தனது காதலி பிராச்சி மிஸ்ராவுடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அவருக்கு நாளைத் திருமணம் நடக்கவுள்ள வேளையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நம் திருமணத்திற்கும் இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது என்பதை நினைத்து பார்க்கும் போது  நான் பாக்கியசாலியாக உணர்கிறேன். நீ என் வாழ்க்கையில் வந்து எல்லாவற்றையும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கிறாய். மோசமான நாட்களில் இருந்து நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டோம், நல்லவற்றைக் கொண்டாடினோம். மற்றும் மிக முக்கியமாக, ஒவ்வொரு சண்டையிலும்  ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துகொண்டோம். Thank you. I love you. Thank you FOR BEING YOU’ எனத் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு கூட்டத்தில் விசிகவினர் ரவுடிசம்!! மதுரையில் பரபரப்பு..!!

0

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு கூட்டத்தில் விசிகவினர் ரவுடிசம்!! மதுரையில் பரபரப்பு..!!

மதுரை அலங்காநல்லூர் அருகே, பாஜகவினர் நடத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பிரச்சராம் செய்யப்பட்டது. பாஜகவின் புறநகர் மாவட்ட தலைவரான சுசீந்திரன் தலைமையில் இக்கூட்டம் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த மதிமுகவின் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை கண்டித்து கோசம் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், பிரச்சார கூட்டத்திற்குள் திடீரென உருட்டுக் கட்டைகளுடன் புகுந்த விசிக கட்சியினர் ரவுடிகளைப் போல் பாஜக தொண்டரை தாக்கினர். இதையடுத்து இரு தரப்பிற்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தை கேள்விப்பட்ட காவல் துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி சண்டையை தடுத்தனர்.

இதைத் தொடர்ந்து பிரச்சார கூட்டத்தில் கொலை வெறித் தாக்குதலை நடத்திய விசிக கட்சியினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அலங்காநல்லூர் சாலையில் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினரின் பேச்சை மதித்து கலைந்து சென்ற பாஜகவினர் மீண்டும் அலங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலை வெறி தாக்குதல் நடத்திய விசிக ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறிய பின்னர், புகார் செய்துவிட்டு பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சம்பவத்தால் அலங்கநல்லூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முக ஸ்டாலினுக்கு சவால் விட்ட பாஜக பிரமுகர்

0

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் திமுக இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது

இந்த நிலையில் இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு தனிநபருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதாக நிரூபித்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு தர தயார் என பாஜக பிரமுகர் ஒருவர் போஸ்டர் அடித்து சவால் விட்டுள்ளார்

நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஒருவர் இந்த அதிரடி சவாலை வெளியிட்டுள்ள நிலையில் இந்த சவாலை ஏற்று இந்திய குடியுரிமை சட்டத்தால் பாதிக்கப்படும் நபர் என ஒருவரை ஆதாரமாகக் காட்டி, ரூபாய் ஒரு கோடியை பெற முக ஸ்டாலின் தயாரா? என்றும் பாஜகவினர் சமூக வலைத்தளங்கள் மூலம் சவால் விட்டு வருகின்றனர் இந்த சவாலை திமுக தலைவர் முக ஸ்டாலின் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முக ஸ்டாலினுக்கு சவால் விட்ட பாஜக பிரமுகர்

இந்தியா வரும் டிரம்ப்: என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்து?

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வரும் 24ஆம் தேதி வருகைதர இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிரம்பின் இந்திய வருகையின்போது அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை பட்டியலில் மீண்டும் இடம்பெறுவது குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்த உள்ளது

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இந்த பயணத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்

குறிப்பாக இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்ததால் சமீபத்தில் அமெரிக்கா தமது வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை திரும்பப் பெறுவது குறித்து டிரம்ப் பயணத்தின்போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன் இந்தியாவுடனான வர்த்தக உடன்படிக்கைகளை உறுதிசெய்வதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது

அர்னாப் கோஸ்வாமியை வைத்து செய்த நடிகர்:விமானத்தில் செல்லத் தடை!

0

விமானத்தில் அர்னாப் கோஸ்வாமியை வைத்து செய்த நடிகர்:விமானத்தில் செல்லத் தடை!

ரீபப்ளிக் தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியை விமானப்பயணத்தின் போது கேள்விகள் கேட்ட நடிகர் குனால் கம்ரா விமானப்பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நகைச்சுவை நடிகர் குனால் கம்ரா. இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோவைப் பதிவேற்றினார். அதில் விமானப் பயணத்தின் போது தனது அருகே அமர்ந்திருந்த தொலைக்காட்சி செய்தியாளர் அர்னாப் கோசாமியை வீடியோ எடுத்துக்கொண்டே பல கேள்விகளை எழுப்பினார்.

தொலைக்காட்சி விவாதங்களில் விடாமல் கத்தும் அர்னாப் அவர் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் அமைதியாக தனது லேப் டாப்பை நோண்டிக் கொண்டிருந்தார். அப்போது குனால் ’ரோஹித் வெமுலா 10 பக்க கவிதையை படியுங்கள்.உங்களுக்கு இதயம் இருந்தால் எனவும் நீங்கள் தேசியவாதியா அல்லது கோழையா? சொல்லுங்கள் பார்வையாளர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் (Viewers wants to know) ‘எனக் கேட்டு அவரைத் துளைத்தெடுத்தார்.

இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அர்னாப்பைப் பலரும் கேலி செய்ய ஆரம்பித்தனர். ஆனால் ஒரு சிலரோ இது நாகரீகமான செயல் அல்ல என்று விமர்சிக்கவும் செய்தனர். இந்நிலையில் சம்மந்தபப்ட்ட விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனம் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக குனால் கம்ராவுக்கு தங்கள் விமானத்தில் செல்ல 6 மாதம் தடை விதித்துள்ளது.

ஆனால் குனால் மீது அர்னாப் புகார் கொடுத்தாரா என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை. இது குறித்து பலரும் எந்த அடிப்படையில் குனால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்:சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!ரோஹித் ஷர்மா அதகளம் !

0

கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்:சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!ரோஹித் ஷர்மா அதகளம் !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து ஹேமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா ஆரம்பம் முதலே வானவேடிக்கைக் காட்டினார். 6 ஆவது ஓவரில் 27 ரன்கள் சேர்த்த அவர் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்:சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!ரோஹித் ஷர்மா அதகளம் !

அதன் பின் விக்கெட்கள் விழுந்தாலும் கோலி, மனிஷ் பாண்டே, ஜடேஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. அதன் பின் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியுசிலாந்து களமிறங்க மார்ட்டின் குப்தில் 31 ரன்களும் கேன் வில்லியம்சன் அதிரடியாக 95 ரன்களும் சேர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் போட்டி அவர்கள் கையில் இருந்தது. ஆனால் கடைசி ஓவரில் ஷமி இரண்டு விக்கெட்களை எடுத்தது திருப்புமுனையாக அமைந்தது. கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்க வேண்டிய சூழலில் டெய்லர் அவுட் ஆக போட்டி டை ஆனது.

அதன் பின் சூப்பர் ஓவரில் இந்தியா முதலில் பந்துவீச கேன் வில்லியம்சனும் டெய்லரும் சேர்ந்து 17 ரன்களை பூம்ரா ஓவரில் எடுத்தனர். அதன் பின் இந்தியா சார்பில் ராகுல் மற்றும் ரோஹித் இறங்கினர். முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதற்கடுத்த இரு பந்துகளிலும் சிக்ஸ் அடித்து போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார் ரோஹித் ஷர்மா. இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

ஒரே ஒரு தவறால் குறைந்த ஸ்கோர்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 179 ரன்கள் சேர்ப்பு !

0

ஒரே ஒரு தவறால் குறைந்த ஸ்கோர்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 179 ரன்கள் சேர்ப்பு !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை சேர்த்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து ஹேமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா ஆரம்பம் முதலே வானவேடிக்கைக் காட்டினார். 6 ஆவது ஓவரில் 27 ரன்கள் சேர்த்த அவர் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இதனால் ரன்ரேட் 10 க்கும் மேல் செல்ல இந்தியா 200 ரன்களைக் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராகுல் அவுட் ஆக வழக்கமாக வரும் கோலிக்குப் பதிலாக ஷிவம் துபே மூன்றாவது வீரராக களமிறங்கினார். அதுதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அவர் ரன்கள் சேர்க்க முடியாமல் பந்துகளை சாப்பிட மறுமுனையில் அதிரடியாக விளையாட முயன்ற ரோஹித் ஷர்மா எதிர்பாராத விதமாக அவுட் ஆனார். அதன் பின் அதே ஓவரில் துபேவும் அவுட் ஆக இந்திய அணிக்கு சரிவு ஏற்பட்டது.

அதன் பின் இந்திய அணி நிலை பெற சில ஓவர்கள் ஆனது. அதன் பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கோலி 38 ரன்களில் அவுட் ஆக கடைசி நேர அதிரடியால் இந்தியா 179 ரன்களை மட்டுமே சேர்த்தது. பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோரே 190 என்றிருக்க 179 ரன்களை இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.