Home Blog Page 5808

Manaiyadi Sasthiram 2025 : வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய மனையடி வாஸ்து சாஸ்திர அளவுகள் 2024

0

Manaiyadi Sasthiram 2025 : வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய மனையடி வாஸ்து சாஸ்திர அளவுகள் 2024

Manaiyadi Sasthiram in Tamil 2025: மனையடி சாஸ்திரம் 2025

2025 ஆம் ஆண்டிற்கான மனையடி சாஸ்திரம் குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம். வீட்டிற்கு மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி?, வீட்டிற்கு உகந்த மனையடி நீளம் அகலம், மனையடி சாஸ்திரம் வீட்டின் உள் அளவு, மனையடி சாஸ்திரம் வீட்டின் வெளி அளவு, மனையடி அடி கணக்கு உள்ளிட்டவைகளை இங்கு பார்ப்போம்.

நாம் வீடு கட்ட பயன்படுத்தி வரும் மனையடி சாஸ்திரத்தில் சொல்லப்படும் அறையின் நீள, அகலங்கள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றது. நாம் கட்டும் வீட்டின் அறையின் நீளம் மற்றும் அகலத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று சிலரும், அறையின் நீளம் மற்றும் அகலத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று சிலரும் இது குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கமானது: 10 X 10 என்ற சதுர அமைப்பில் உள்ள அறையில் இருக்கக் கூடிய ஐம்பூதங்களில் (five eliments) விகிதாச்சாரம் (%) 17X10 என்ற அளவில் உள்ள நீண்ட சதுர அமைப்பிலான அறையிலும் அவ்வாறே இருக்கும்.

ஆனால் 10 X 10 என்ற அளவுடைய அறையில் இருக்கும் ஐம்பூதங்களின் (கொள்ளளவு ) அளவும் 17 X 17 என்ற நீண்ட தூர சதுர அமைப்பிலான அறையில் இருக்கும் கொள்ளளவும் நிச்சயம் வேறுபட்டு தான் இருக்கும். எனவே இந்த மனை அடி கணக்குகள் ( நம் முன்னோர்கள் தங்களது வாழ்வில் அனுபவ பூர்வமாக கண்டு எழுதி வைத்தது ) நாம் உபயோகித்துக் கொள்வது தவறு அல்ல என்று பலரால் அறிவுறுத்தபடுகிறது.

 

ஆனால் நீங்கள் கட்டும் வீட்டிற்கான நீளம் மற்றும் அகல அடிக்கணக்கு எவ்விதம் எடுக்க வேண்டும் மற்றும் அதன் பலன்கள் என்னவென்று என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மனையடி சாஸ்திரம் 2024:

Manaiyadi Sasthiram in Tamil
Manaiyadi Sasthiram in Tamil

 

வீட்டிற்கு வாஸ்து அல்லது மனையடி சாஸ்திரம் (Manaiyadi Sasthiram) பார்ப்பது எப்படி?

அடி அளவு பலன்கள் நன்மை:

7 தரித்திரம்.
8 மிகுந்த பாக்கியம் உண்டாகும்.
9 பீடை.
10 ஆடு, மாடுகள் முதல் அனைத்து செல்வமும் உண்டு.
11 புத்திர சம்பத்து நிச்சயம் உண்டு.
12 செல்வம் அழியும்.

13 பகைமை கூடும், பொருள் இழப்பு ஏற்படும்.
14 நஷ்டம்,விரயம் சபலம்.
15 மனக்கிலேசம்.
16 மிகுந்த செல்வம் உண்டு.
17 அரசன் போல் வாழ்வு.
18 அனைத்தையும் இழப்பர்.
19 உயிர் நஷ்டம்.
20 இராஜ யோகம் ,இன்பம்.
21 வளர்ச்சி, பால் பாக்கியம், பசுவிருநத்தி.
22 எதிரி அஞ்சுவான்.
23 நோய், கலக்கம்.
24 பரவாயில்லை ,நன்மை, தீமை எதுவும் இல்லை.
25 தெய்வம் உதவாது.
26 செல்வம் உண்டு,அமைதி இருக்காது.
27 மிகுந்த செல்வம் உண்டு.
28 தெய்வ அருள் நிச்சயம் உண்டு.
29 பால் பாக்கியம் ,செல்வம்.
30 இலட்சுமி கடாட்சம்.
31 நன்மை நிச்சயம் உண்டு.

Manaiyadi-Sasthiram-in-Tamil
Manaiyadi-Sasthiram-in-Tamil

49 மூதேவி வாசம்.
50 பால் பாக்கியம்.
51 வியாஜ்யம்.
52 தான்யம் பெருகும்.
53 விரயம், செலவு.
54 லாபம்.
55 உறவினர் விரோதம்.
56 புத்திரகளால் பலன்.
57 மகப் பேறு இல்லை.
58 விரோதம்.
59 மத்திம பலன்கள்.
60 பொருள் விருத்தி.
61 பகை.
62 வறுமை.
63 குடி பெயரும்.
64 சகல சம்பத்தும் உண்டு.
65 பெண்கள் நாசம்.
66 பத்திர பாக்கியம்.
67 பயம்.

68 பொருள் லாபம்.
69 நெருப்பினால் நாசம்.
70 பிறருக்குப் பலன்.
71 யோகம்.
72 பாக்கியம்.
73 குதிரை கட்டி வாழ்வான்.
74 அபிவிருத்தி.
75 சுகம்.
76 புத்திரர் குறைவு.
77 யானை கட்டி வாழ்வான்.
78 பித்திரர் குறைவு.
79 கன்று காளை விருத்தி.
80 இலட்சுமி வாசம் செய்வாள்.
81 இடி விழும்.
82 தோஷம்.
83 மரண பயம்.
84 செளக்கியம்.
85 சீமானாக வாழ்வர்.
86 இம்சை உண்டு.

87 தண்டிகை உண்டு.
88 செளக்கியம்.
89 பலவீடு கட்டுவான்.
90 யோகம் உண்டு.
91 விஸ்வாசம் உண்டு.
92 ஐஸ்வரியம் சேரும்.
93 பல தேசங்கள் சென்று வாழ்வான்.
94 அந்நிய தேசத்தில் இருப்பான்.
95 தனவந்தன்.
96 பரதேசி.
97 கப்பல் வியாபாரம் செய்வான்.
98 பிரதேசங்கள் செல்லும் வாய்ப்பு.
99 இராஜ்யம் ஆள்வான்.
100 சேமத்துடன் வாழ்வான்.

மேற்குறிப்பிட்டுள்ள மனையடி சாஸ்திரம் 2025 மற்றும் வாஸ்து பலன்கள் 2025 என எழுதிய இந்த பதிவு நம் முன்னோர்கள் எழுதிய பழமையான பாடல்களின் மூலம் எழுதப்பட்ட மனையடி சாஸ்திரத்தில் இருந்து தொகுக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதை நீங்கள் பயன்படுத்த நினைத்தால் அருகிலுள்ள சம்பந்தப்பட்ட வல்லுனர்களுடன் முறையாக கலந்தாலோசித்து விட்டு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மனையடி சாஸ்திரம் 2019,மனையடி சாஸ்திரம் உள் அளவு,மனையடி சாஸ்திரம் 2019,மனையடி சாஸ்திரம் pdf,மனையடி சாஸ்திரம் அம்சங்கள்,கருட மனை அளவு,குழி கணக்கு சாஸ்திரம்,மனையடி சாஸ்திரம் 2018,மனையடி சாஸ்திரம் pdf free download,வீடு கட்ட நீள அகல அளவு மனையடி வாஸ்து சாஸ்திரம்,வீடு கட்ட வாஸ்து பார்ப்பது எப்படி?,வீடு கட்ட மனையடி வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது எப்படி?,எளிய முறையில் வாஸ்து சாஸ்திர பலன்களை அறிவது எப்படி?,வாஸ்து சாஸ்திரம் ஆன்லைன்,மனையடி சாஸ்திரம் ஆன்லைன்,வாஸ்து சாஸ்திர முறைப்படி வீடு கட்டுவது எப்படி?,வீட்டிற்கான மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி?, கட்டிய வீட்டிற்கு மனையடி வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது எப்படி?,மனையடி சாஸ்திரம் வீட்டின் வெளி அளவு,கடை வாஸ்து அளவுகள்,மனையடி சாஸ்திரம் அடி கணக்கு,மனையடி சாஸ்திரம் 2020,மனையடி சாஸ்திரம் என்றால் என்ன,மனையடி சாஸ்திரம் book,மனையடி சாஸ்திரம் புத்தகம் pdf,மனையடி சாஸ்திரம் pdf,மனையடி சாஸ்திரம் நூல்,மனையடி சாஸ்திரம் வீட்டின் வெளி அளவு,மனையடி சாஸ்திரம் அடி கணக்கு,மனையடி சாஸ்திரம் pdf,மனையடி சாஸ்திரம் pdf free download,மனையடி சாஸ்திரம் 2021,மனையடி சாஸ்திரம் குழி கணக்கு,மனையடி சாஸ்திரம் புத்தகம் pdf,மனையடி சாஸ்திரம் அம்சங்கள்,வாஸ்து சாஸ்திரம் புத்தகம்,வாஸ்து சாஸ்திரம் வீடு pdf,மனையடி சாஸ்திரம் அளவு pdf,வாஸ்து சாஸ்திரம் pdf,மனையடி சாஸ்திரம் 2020,மனையடி சாஸ்திரம் book,மனையடி சாஸ்திரம் வீட்டின் வெளி அளவு,குழி கணக்கு பலன்கள்,வாஸ்து சாஸ்திரம் தமிழில்,வாஸ்து சாஸ்திரம் புத்தகம் pdf,வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்,தெற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து சாஸ்திரம் வீடு கட்ட,வாஸ்து புத்தகங்கள்,வாஸ்து சாஸ்திரம் வீடு கட்ட அளவுகள்,வாஸ்து சாஸ்திரம் படுக்கையறை,வாஸ்து சாஸ்திரம் வீடு pdf,மேற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்,கிழக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்,வடக்கு வாசல் வடக்கு பார்த்த வீடு வரைபடங்கள்,வடக்கு பார்த்த வீட்டின் பூஜை அறை,பூஜை அறை சாமி படங்கள் வைக்கும் திசை,மேற்கு பார்த்த வீடு வாஸ்து பிளான்,வீடு வாஸ்து பார்ப்பது எப்படி,மனையடி சாஸ்திரம் 2021,மனையடி சாஸ்திரம் 2022,மனையடி சாஸ்திரம் 2023,மனையடி சாஸ்திரம் 2024

Bonza Spins a Safe Online Casino

Bonza Spins is a safe online casino that offers an extensive range of games and bonuses. With its easy-to-use interface, secure payment methods, and helpful customer service team, Bonza Spins bonza.casinologin.mobi makes it simple to enjoy the best gaming experience possible. And with its wide selection of slots, table games, live dealer tables, video poker variations and more – you’ll never be bored! Whether you are just starting out or have been playing for years – Bonza Spins has something for everyone. So if you’re looking for an exciting way to win big without risking your hard earned cash – then look no further than Bonza Spins! Sign up today and let the fun begin!

அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

0

அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தமிழகத்தில் தற்போது நிலவும் வானிலையின் அடிப்படையில் அடுத்த 24 மணி நேரத்தில் பின்வரும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பரங்கிபேட்டையில் 3 செ.மீ, அருகிலுள்ள திருத்தணியில் 2 செ.மீ மற்றும் விருத்தாச்சாலத்தில் 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேகத்தில் உள்ள மாறுபாடு காரணமாக அடுத்த வரும் 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, திருவள்ளூர், செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 8 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும், இதற்கு பின்னர் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் வெப்பநிலையானது அதிகபட்சமாக 87.8 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவிலும், குறைந்த பட்சமாக 77 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவிலும் இருக்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கிரிக்கெட் வாழ்க்கை வீணாக இவர் தான் காரணமா? பல வருட கேள்விக்கு பதிலளித்த இர்பான் பதான்

0

தனது கிரிக்கெட் வாழ்க்கை வீணாக இவர் தான் காரணமா? பல வருட கேள்விக்கு பதிலளித்த இர்பான் பதான்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்த பிறகு அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை வீணாவதற்கு காரணமான நபர் குறித்த பல வருட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி–20 உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு பங்காற்றியவர்களில் முக்கியமானவர் ஒருவர் தான் இர்பான் பதான். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு மற்றும் ஆல் ரவுண்டரான இர்பான் பதான் இந்திய அணிக்காக விளையாடிய மூன்று வித போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 301 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கை வீணாக இவர் தான் காரணமா? பல வருட கேள்விக்கு பதிலளித்த இர்பான் பதான்

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் டில்லி போன்ற அணிகளுக்காக விளையாடிய இர்பான் பதான் சமீபத்தில் தான் சர்வதேச கிரிக்கெட்ட போட்டிகளில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் கடந்த காலங்களில் இந்திய அணிக்காக விளையாடிய போது, இவருக்கும் அப்போதைய பயிற்சியாளராக இருந்த கிரேக் சாப்பலுக்கும் இடையே சர்ச்சை நிலவி வந்தது என்று பரவலாக பேசப்பட்டது.

அதாவது இவரை பேட்டிங் செய்ய வற்புறுத்திய காரணத்தினால் இவரது பந்துவீச்சின் வேகம், ஸ்விங் மற்றும் துல்லியம் ஆகியவை குறைந்துவிட்டதாக அப்போது விமர்சங்கள் எழுந்தன .

இதுபோன்ற விமர்சனம் குறித்து இதில் சம்பந்தப்பட்டவரான இர்பான் பதான் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது,

கடைசியாக நான் 2012 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச போட்டியில் விளையாடினேன். இதற்கு பிறகு என்னுடைய பந்தை ஸ்விங் செய்யும் திறன் குறைந்து விட்டதாக விமர்சனம் எழுப்பப்பட்டது. மேலும் நான் கவனத்துடன் செயல்படுவது இல்லை என்றும் சிலர் புகார் தெரிவித்தனர். போட்டியின் 10 ஓவரிலும் ஒரே மாதிரியாக ஸ்விங் செய்ய முடியாது. இதை விமர்சனம் செய்யும் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய அந்த காலகட்டத்திலும் வழக்கம் போல சிறப்பாகவே பவுலிங் செய்தேன். தவிர என்னுடைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தான் எனது வீழ்ச்சிக்கு காரணம் என்றும் அப்போது எனக்கு எதிராக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சையில் எவ்வித உண்மையும் இல்லை. 2008 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி தேடித் தந்த போதும் இந்தியஅணியிலிருந்து புறக்கணிப்பட்டேன். அப்போது எந்த வித காரணமும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டது எனக்கு வருத்தமாக இருந்தது. 

தனது கிரிக்கெட் வாழ்க்கை வீணாக இவர் தான் காரணமா? பல வருட கேள்விக்கு பதிலளித்த இர்பான் பதான்

2010 ஆம் ஆண்டில் எனக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இதற்காக சிகிச்சை எடுத்தேன். ஆனால், அந்த வலிக்கான காரணத்தை துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் அந்த காலகட்டத்தில் நடந்த ரஞ்சி கோப்பையில் விளையாடினேன். இதனால் தான் எனது பந்து வீச்சின் வேகம் குறைந்தது. டெஸ்ட் போட்டிக்கும் திரும்ப முடியாமல் போனது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அருந்ததி பெரியவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பட்டியலினத்தவர்! ஆதித்தமிழர் பேரவை கண்டனம்

0

அருந்ததி பெரியவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பட்டியலினத்தவர்! ஆதித்தமிழர் பேரவை கண்டனம்

ஆதிக்க ஜாதி வெறியோடு உயர் ஜாதி சிந்தனை கொண்ட தலித் சமூதாயத்தை சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் அருந்ததிய சமுதாயத்தை சேரந்த முதியவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளார் என ஆதித்தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

அருந்ததி பெரியவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பட்டியலினத்தவர்! ஆதித்தமிழர் பேரவை கண்டனம்

விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தில் நேற்று (05.01.2020) அருந்ததிய முதியவர் வெற்று நிலத்தில் மாடு மேய்த்து கொண்டு இருந்தார், அங்கு வந்த வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் அருந்ததி சமுதாய பெயரை இழிவாக பேசி இங்கு என்னடா மாடு மேய்கின்றாய் என்று ஆபாசமாக பேசியுள்ளார்,.

உடனே, முதியவர் என்ன அய்யா பொது இடத்தில் அதுவும் அருந்ததிய மக்களின் எங்கள் நிலத்தில் தானே மேய்க்கின்றேன் என்று கூறி உள்ளார்,. அருந்ததி சமுதாய பெயரை இழிவாக கொண்டு வேசி மகனே என்னிடம் சட்டம் பேசுகிறாயா? என்று கன்னத்தில் அறைந்து உள்ளார், அய்யா என்னால் தாங்க முடியல சாமி அடிக்காதிங்க என்று காலில் விழுந்து கெஞ்சி கேட்டுள்ளார்,

ஆணவ ஜாதிவெறி கொண்ட வழக்கறிஞர் விஜயகுமார் செங்கல் கொண்டு முதுகிலும் மார்பிலும் முகத்திலும் கொலைவெறியோடு தாக்கி உள்ளார்,. தொண்டை மீது காலால் மிதித்து அருந்ததி பெயரை கொண்ட இழிவாக, பசங்களா ஊருக்கு உள்ள வாழவே முடியாது என்று கூறி தாக்கி உள்ளார்,.

பக்கத்தில் இருந்த உறவினர்கள் காப்பாற்றி 108 ஆம்புலன்சில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்,.

திருவெண்ணைநல்லுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என ஆதித்தமிழர் பேரவை பிரமுகர் வெங்கடேசன் அதியன் என்பவர் குற்றம் சாட்டி உள்ளார்.

ஆளுநர் உரையில் இரட்டைக் குடியுரிமை மற்றும் சமூகநீதி வாக்குறுதிகள்: மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

0

ஆளுநர் உரையில் இரட்டைக் குடியுரிமை மற்றும் சமூகநீதி வாக்குறுதிகள்: மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

ஆளுனர் உரையில் இடம்பெற்ற தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்ற சமூகநீதி வாக்குறுதிகள் வரவேற்கத்தக்கவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

தமிழக சட்டப்பேரவையின் 2020-ஆண்டுக்கான முதல் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய ஆளுனர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்; தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவாதங்களையும், உறுதி மொழிகளையும் அளித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதாகும்.

‘‘இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும். தமிழக மக்கள் எந்த மதத்தையோ, சமயத்தையோ பின்பற்றினாலும் அவர்கள் அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும்’’ என ஆளுனர் உரையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தம் காரணமாக ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரங்கள் செய்யப்படும் நிலையில், அவற்றை முறியடித்து உண்மை நிலையை உலகிற்கு விளக்கும் வகையில் ஆளுனர் உரை அமைந்திருக்கிறது. ஈழத்தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், அது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

அதேபோல், சமூக நீதியை போற்றும் நோக்குடன் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்றும், அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புயர்வு பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்ட பிறகும் அங்கு மாநில அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும். தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்து விட்ட நிலையில், பிளாஸ்டிக் ஒழிப்புக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆளுனர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

ஆளுநர் உரையில் இரட்டைக் குடியுரிமை மற்றும் சமூகநீதி வாக்குறுதிகள்: மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

மத்திய அரசின் ஒரே நாடு…. ஒரே ரேஷன் அட்டை திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் அதே நேரத்தில், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்கும் நியாயவிலைப் பொருட்கள் முறைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, நியாயவிலைக்கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களுக்கு மாற்றாக, அவற்றுக்கான மானியத்தை நேரடியாக மக்களுக்கு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு திணித்தால் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என்று அறிவிக்க வேண்டும். இதை இத்திட்டம் குறித்த ஒப்பந்தத்தில் தமிழக அரசு சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது 29.80 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டில் மேலும் 5 லட்சம் பேருக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். 2011-ஆம் ஆண்டு முதல் ஆளுனர் உரைகளில் அறிவிக்கப்பட்ட 105 அறிவிப்புகளில் 73 அறிவிப்புகளும், கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு 110-ஆவது விதியின்படி வெளியிடப்பட்ட 453 அறிவிப்புகளில் 114 அறிவிப்புகளும் முழுமையாக செயல்படுத்தப்பட்டிருப்பதாக ஆளுனர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள அறிவிப்புகளையும் விரைந்து முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

சென்னை விமான நிலையம் முதல் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ள கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் தமிழக ஆளுனர் உரையில் இடம் பெற்றிருந்தாலும், அவை அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தருணங்களில் அறிவிக்கப் பட்டவை தான். இவற்றைத் தவிர புதிய அறிவிப்புகளோ, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களோ புதிதாக அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையிலாவது இதற்கான திட்டங்கள் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுக இடையே கும்மாங்குத்து!!

0

கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுக இடையே கும்மாங்குத்து!!

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுகவினர் இடையே பதவிக்கான மோதல் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சியில் சுயேட்சையாக வெற்றிபெற்ற கவுன்சிலர்களை திமுகவினர் திட்டமிட்டு கடத்திச் சென்றதாக அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

அங்குள்ள ஒட்டுமொத்த 19 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடத்தில் 9 இடங்களை திமுக கூட்டணியும், 6 இடங்களை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளது. ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க 10 கவுன்சிலர் தேவை என்கிற பட்சத்தில், இரு கட்சியினரும் மீதமுள்ள 4 சுயேட்சை உறுப்பினர்களிடமும் தனக்கு சாதகமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த சுயேட்சை கவுன்சிலர்களை நிகழ்ச்சி முடிந்ததும் திமுகவினர் தனி வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயற்சி செய்தனர். இதைப் பார்த்த அதிமுகவினர் வாகனத்தை தடுத்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் தடையை மீறி வாகனம் சென்றுவிட்ட காரணத்தால் சுயேட்சை வேட்பாளர்கள் கடத்தப்பட்டதாக கூறி அதிமுகவினர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோன்று கரூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி பகுதியிலும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு மோதல்கள் நடந்துள்ளது.

கல்யாண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்?

0

கல்யாண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்?

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் ராம்குமார் (34). இவன் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தான்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த ராம்குமாரை கைது செய்து அவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர் கைதான ராம்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த விவகாரம் நடந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் மேலும் ஒரு சம்பவம் கொங்கு மண்டலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி இவர் நேற்று காலை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.பதறி போன பெற்றோர் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிறுமி வயிற்றை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கதிரேசன் (வயது 23) என்பவன் தன்னை கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பின்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறினார். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

சாமானியர்களை கலங்கடிக்கும் தங்கம் விலை?

0

அமெரிக்கா, ஈரான் பரபரப்பு அதிகரித்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கச்சா எண்ணையில் முதலீட்டை குறைத்து தங்கத்தின் மீது தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளனர் இதனால் இன்றைய தங்கத்தின் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது இதனால் சாமானிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிஉள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு:

ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 64 ரூபாய் அதிகரித்து 3896 ரூபாய் ஆகவும், ஒரு பவுன் தங்கம் நேற்றைய விலையை விட 512 ரூபாய் அதிகரித்து பவுன் ஒன்றுக்கு 31168ரூபாயாகவும் உள்ளது.

அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை1கிராம் 4088 ரூபாய் ஆகவும் 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 40880 ஆகவும் உள்ளது.வெள்ளியின் விலையைபொறுத்தவரை கிராம்க்கு அதிகரித்து ரூபாய் 52.20ஆகவும், 1கிலோ ரூபாய் 52200க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

மனைவியுடன் பேச்சு! மரியாதை போச்சு! சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்த கணவன்?

0

மனைவியுடன் பேச்சு! மரியாதை போச்சு! சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்த கணவன்?

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் தனது மனைவியுடன் சப்-இன்ஸ்பெக்டர் அடிக்கடி பேசி வருவதாகவும் எதிர்த்து கேள்விகேட்டதால் தன்னை தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார்.

வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த ஜனார்த்தனன் ராயலா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் “ராயலா நகர் காவல் நிலையத்தில்
சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் என்பவர் தனது மனைவியுடன் அடிக்கடி பேசி வருகிறார். நேற்று சாலையில் சென்ற போது தனது மனைவியும் சப்-இன்ஸ்பெக்டரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.

இந்நிலையில், ராஜேஷ் வீட்டிற்கு சென்று தனது மனைவியுடன் இருந்த புகைப்படத்துடன் அவரது குடும்பத்தினரிடம் முறையிட்டபோது ராஜேஷ் என்னை கடுமையாக தாக்கினார் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தரப்பில் இது உண்மையல்ல என்றும் தன் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதாக புகார் அளிக்கப்பட்டது. இருவரின் புகாரையும் பெற்றுக்கொண்ட ராயலா நகர் இன்ஸ்பெக்டர் தாம்சம் சேவியர் இருதரப்பிலும் விசாரணை நடத்தி வருகிறார்.

தர்பார் பட விவகாரம்!மனு கொடுத்த நபர்?

0

பேட்டை திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் படத்தில் நடித்து முடித்து விட்டார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது அனிருத் இசையமைத்துள்ளார் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தர்பார் பட விவகாரம்!மனு கொடுத்த நபர்?

இந்நிலையில் வருகிற 9ம் தேதி வெளியிடப்படுகிறது வெளியே வெளியீடு பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகிறது
சூப்பர் ஸ்டாரின் ரஜினி படம் என்றாலே அவர்களின் ரசிகர்கள் பலவிதங்களில் கொண்டாடுகின்றனர்.

அவர் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, கட்டவுட்டுக்கு மாலை அணிவிப்பது போன்ற பல கொண்டாட்டங்கள் செய்து அவரின் படத்தின் வெளியீடு திருவிழா போல் கொண்டாடுவர்கள்.

இதன் உச்சகட்டமாக சேலம் ஏ ஆர் ஆர் எஸ் திரையரங்கு முன்பு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதி அளிக்குமாறு சேலம் வட்டாட்சியரிடம் கனகராஜ் என்பவர் அனுமதி கேட்டிருக்கிறார். இது அனைவரிடமும் பெரும் பர பரப்பாக பேச பட்டு வருகிறது.