ஊரக உள்ளாட்சித் தேர்தல் 12 மணி நிலவரம்?

0
102

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27மற்றும் 30 இரண்டு கட்டங்களாக நடந்தது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு பதிவு தொடங்கியதில் இருந்து தி. மு. க முன்னிலையில் உள்ளது

ஆளும் அ.தி. மு. க. இடையே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு  கவுன்சிலர் பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கபட்டு கொண்டு இருக்கிறது. ஆனால், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி விடிய விடிய நடைபெற்றது.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. இதுவரை , 5004 ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில், திமுக கூட்டணி 2304 இடங்களிலும், அதிமுக  கூட்டணி 2142 இடங்களிலும் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 468 பதவிகளை கைப்பற்றின.

இதேபோல் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 507 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அதிமுக கூட்டணி 239 இடங்களிலும், திமுக கூட்டணி 268 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

author avatar
CineDesk