Home Blog Page 5830

உதயநிதியின் ‘சைக்கோ’ ரிலீஸ் எப்போது?

0

உதயநிதியின் ‘சைக்கோ’ ரிலீஸ் எப்போது?

நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில வாரங்களாக அரசியல் பணியில் பிஸியாக இருக்கும் நிலையில் தான் நடித்து வந்த ’சைக்கோ’ திரை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.

’சைக்கோ’ திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸாகும் என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் ஏற்கனவே டிசம்பர் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் நித்யா மேனன் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு தன்விர்மிர் ஒளிப்பதிவும், அருண்குமார் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை டப்புள்மீனிங் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சைக்கோ படம் குறித்து தயாரிப்பாளர் அருள்மொழி மாணிக்கம் கூறியபோது, ‘இந்த மிக குறுகிய சினிமா பயணத்தில் நான் சில படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்துள்ளேன். ஆனால் “சைக்கோ” திரைப்படம் எனக்கு கிடைத்த பரிசாகவே நினைக்கிறேன். ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை இது ஒரு அற்புதமாகவே நிலைத்திருக்கிறது. இயக்குநர் மிஷ்கினின் திறமையான எழுத்து மற்றும் மேதமையான இயக்கம், வெகு திறமையான நடிகர்களான உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோரின் வித்தியாசமான அவதாரம் என இப்படத்தின் அனைத்து அம்சங்களும் படத்தின்பால் பெரும் எதிர்ப்பார்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது.

ஸ்டாலினைக் கெஞ்சி கூத்தாடியாவது டி ஆர் பாலு விவாதத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்: கலாய்க்கும் பாமக தலைவர் ஜி.கே மணி

0

ஸ்டாலினைக் கெஞ்சி கூத்தாடியாவது டி ஆர் பாலு விவாதத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்: கலாய்க்கும் பாமக தலைவர் ஜி.கே மணி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேற அதிமுகவின் 11 உறுப்பினர்களும், பாமகவின் அன்புமணியும் ஆதரவாக வாக்களித்தது தான் காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தது திமுக தான் என்றும், தன்னுடன் இது தொடர்பாக ஸ்டாலின் விவாதிக்கத் தயாரா என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

இதே போல ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் திமுக செய்த துரோகங்கள் குறித்த நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாசும் சவால் விட்டார். ஆனால் அதற்கு நேரிடையாக எந்த பதிலும் கூறாமல் நிலைமையை சமாளிக்க பதிலளித்த டி.ஆர்.பாலு அன்புமணியை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றுவதற்காகவே மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்றும் சம்பந்தமே இல்லாமல் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளதாவது :

2ஜி ஊழலில் இருந்து தப்பிக்க 1.5 லட்சம் ஈழத்தமிழர்களை கொன்றது திமுக தானே? என்ற தலைப்பில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

ஈழத்தமிழர்களின் நலனுக்காக துரும்பைக்கூட கிள்ளிப் போடாத திமுக, இப்போது உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை இருப்பதைப் போல நாடகமாடுகிறது என்று குற்றஞ்சாட்டியிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், ஈழத்தமிழர்களுக்கு தி.மு.க. செய்த துரோகங்களை ஆண்டுவாரியாக ஆதாரங்களுடன் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மருத்துவர் அய்யா அவர்கள் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் தவறு இருந்தால், அதை ஆதாரங்களுடன் மு.க.ஸ்டாலின் மறுத்திருக்கலாம். ஆனால், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும், அவற்றுக்கு பதிலளிக்க முடியாமலும் பதுங்கிக் கொண்டு, திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு மூலம் பதிலறிக்கை கொடுத்துள்ளார். சரியான தேர்வு தான்.

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் திமுக தலைவர்களான கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சற்றும் சளைக்காதவர் தான் டி.ஆர். பாலு. இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த கொடூரன் ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று அவனது மாளிகைக்கு சென்று சிரித்துப் பேசி விருந்து உண்டு பரிசுப்பெட்டி வாங்கி வந்த எம்.பி.க்கள் கூட்டத்திற்கு தலைமையேற்றதே இந்த டி.ஆர். பாலு தான். அந்த வகையில் தமிழின துரோகத்தில் கலைஞருக்கு முதல் வாரிசே இவர் தான்.

டி.ஆர். பாலு நீட்டி முழக்கி வெளியிட்டுள்ள அறிக்கையை நானும் பலமுறை படித்துப் பார்த்தேன். எந்த இடத்திலும் ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் தொடர்பாக மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பியிருந்த 22 வினாக்களுக்கு விடைகளை காணவில்லை. மாறாக, 2019-ஆம் ஆண்டு பிரச்சினைக்கு 2009-ஆம் ஆண்டுக்கு மருத்துவர் அய்யா சென்று விட்டதாக பாலு கூறியிருக்கிறார். அதிலென்ன அவருக்கு பிரச்சினை?

டி.ஆர். பாலு அவர்களே….

10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காக ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய திமுக துணை போனதே? அந்த பாவம் தொலைந்து விடுமா?

30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காக வேலூரில் சிறப்பு முகாமை உருவாக்கி அதில் அப்பாவி ஈழத் தமிழர்களை அடைத்து வைத்ததும், அதை எதிர்த்துக் கேட்டார்கள் என்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தி இரு இளைஞர்களை படுகொலை செய்ததும், 130 பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததுமான பாவம் இல்லாமல் போய்விடுமா?

10 ஆண்டுகள் ஆகப்போகிறது என்பதற்காக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அகதிகள் மீது காவல்துறையை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றம் மன்னிக்கப்பட்டு விடுமா?

காலம் காயங்களுக்கு வேண்டுமானால் மருந்து போடலாம். திமுக செய்த பாவங்களுக்கு பரிசு அளிக்காது; துரோகங்களுக்கு மன்னிப்பு வழங்காது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த, இனப்படுகொலைக்கு துணை நின்ற தமிழின துரோகிகள் திமுக தலைவர்கள் தான். இந்த வரலாற்றை மாற்றி எழுத முடியாது.

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்டால் அதற்கு பதிலளிக்க வக்கற்ற ஸ்டாலின், இனப்படுகொலை பாவத்தில் தங்களில் ஏஜண்டாக திகழ்ந்த டி.ஆர். பாலுவை விட்டு அறிக்கை தருகிறார். ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஈழத்தமிழர் உரிமையை மருத்துவர் அய்யா அவர்கள் காவு கொடுத்து விட்டதாக பாலு பொய் மாலைகளை சூட்டியிருக்கிறார். ஊழல் அசிங்கங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் திமுகவினரா ஊழல்களைப் பற்றி பேசுவது? ஊழலின் ஊற்றுக்கண்ணே திமுக தான் என்பதை உலகமே அறியுமே?

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை எதிர்க்கத் துணிச்சல் இன்றி அமைதி காத்ததும், 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து நாடகமாடியதும், விடுதலைப்புலிகள் குறித்த சில விவரங்களை அறிந்து கொள்வதற்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினியை சந்திக்க பிரியங்கா காந்தியை சட்டவிரோதமாக அனுமதித்து விட்டு திமுக அரசு கைகட்டி அமர்ந்திருந்தது எல்லாம் 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தானே? இதை திமுகவால் மறுக்க முடியுமா?

‘‘2ஜி ஊழலில் முக்கியக் குற்றவாளியான சாகித் பால்வாவை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தான் ஊழல் பணம் கைமாறியது. இது குறித்த விவரங்களை ஆ.இராசாவின் நண்பர் சாதிக்பாட்சா அறிந்திருந்தார். இந்த உண்மைகளை சி.பி.ஐயில் சொல்லி விடுவார் என்பதற்காகத் தான் அவர் ‘தற்கொலை’ செய்து வைக்கப்பட்டார்’’ என்று திமுக கூட்டணியிலுள்ள ஒரு தலைவர் கூறினாரே… அதை மறுக்க முடியுமா?
மு.க. ஸ்டாலினின் நண்பராக இருந்த அண்ணாநகர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதன் ரகசியத்தை வெளியிட முடியுமா?

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட விதிமீறல் வழக்கு தான் இருக்கிறது. அந்த வழக்கிலும் அவர் மீது தவறு இல்லை என்று உச்சநீதிமன்றம் பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறது. அந்த வழக்கை அவர் நேர்மையாக எதிர்கொண்டு வருகிறார். ஆனால், 2ஜி ஊழல் வழக்கிலிருந்து மகளைக் காப்பாற்றுவதற்காக ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய துணை நின்ற திமுகவை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

டி.ஆர். பாலு தம்மை மெத்தப்படித்த மேதாவியாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற மருத்துவர் அய்யாவின் நிலைப்பாட்டை விமர்சித்திருக்கிறார். அதாவது ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் ஓர் குடியுரிமை இருக்கிறதாம்; இந்தியாவில் குடியுரிமைக் கொடுக்கப்பட்டால் இரட்டைக் குடியுரிமையாகி விடுமாம். இதைவிட அபத்தம் இருக்க முடியாது.

1948-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டத்தின் 21(1) ஆவது பிரிவின்படி இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற்றால் அவரது இலங்கைக் குடியுரிமை தானாகவே பறிக்கப்பட்டு விடும் (21.(1) A person who is a citizen of Sri Lanka by registration shall cease to be a citizen of Sri Lanka if he voluntarily becomes a citizen of any other country. ). இந்தியாவும், இலங்கையும் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டால் தான் ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முடியும். அதற்காகத் தான் பா.ம.க. பாடுபட்டு வருகிறது. ஆனால், இதுகூட தெரியாமல் பாலு உளறுகிறார்.

நான் மீண்டும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன். ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை துணை போனது திமுக தான். ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செயததும் திமுக தான். இந்த விஷயத்தில் ஸ்டாலினுக்காக கம்பு சுழற்றுவதை விடுத்து, இது குறித்து மருத்துவர் அய்யா அல்லது மருத்துவர் அன்புமணி இராமதாசுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலினை கெஞ்சி கூத்தாடியாவது டி.ஆர். பாலு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.

சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை: திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

0

சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை: திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் ஈழத் தமிழர்களை மத்திய அரசு புறக்கணித்து விட்டது என்றும் அதற்கு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து துரோகம் செய்து விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனையடுத்து இதற்கு விளக்கம் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இலங்கை தமிழர்களுக்காக இரட்டை குடியுரிமையை வலியுறுத்தி வருவதாக கூறினார்.

இந்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “ஆட்சியில் இல்லாவிட்டாலும் சிறுபான்மையினருக்காக உழைக்கும் கட்சியாகவும் அவர்களுக்கு அரணாகவும் திமுக உள்ளது. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு அதிமுக கூட்டணியின் 12 எம்பிக்கள் தான் காரணம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த போராட்டம் நடந்து வருகிறது. 23 ஆம் தேதி சென்னையில் திமுக நடத்தும் பேரணிக்குப் பிறகும் குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு இறங்கி வராவிட்டால் போராட்டம் மேலும் வலுப்பெறும். தமிழகம் சந்தித்திராத போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவேன் என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இல்லாத இரட்டைக் குடியுரிமையை முதல்வர் பழனிசாமி எப்படி வலியுறுத்த முடியும்? என்றும் அவர் அப்போது கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர் இந்த சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை என்றும், எதற்கெடுத்தாலும் ஸ்டாலின் பொய் சொல்கிறார், எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யார் பொய் சொல்கிறார்கள்? யார் மக்களுக்காகப் போராடுகிறார்கள் என்பது விரைவில் தெரியப் போகிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அப்போது குறிப்பிட்டார்.

விஜய்க்கு முதல்முறையாக ஆக்சன்-கட் கூறிய பிரபல நடன இயக்குனர்!

0

விஜய்க்கு முதல்முறையாக ஆக்சன்-கட் கூறிய பிரபல நடன இயக்குனர்!

தளபதி விஜய்க்கு முதன் முறையாக ஆக்சன்-கட் கூறிய மகிழ்ச்சியை நடன இயக்குனர் சதீஷ் என்பவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த பாடல் காட்சியில் விஜய் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகிய இருவரும் நடனமாடி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு இளம் நடன இயக்குனர் சதீஷ் நடனம் அமைத்து வருகிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ”சொல்லிட்டேன் விஜய்க்கு ஆக்சன் கட் சொல்லிட்டேன் என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கும் டுவிட் தற்போது பயங்கர வைரலாகி வருகிறது

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

கிரிக்கெட் ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற நடிகர் சூரியின் மகன்

0

கிரிக்கெட் ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற நடிகர் சூரியின் மகன்

பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் சூரியின் மகன் பாராட்டு பெற்றுள்ளதை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரி வெளியிட்டு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். நடிகர் சூரியின் மகன் சஞ்சய் தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் சமீபத்தில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். மதுரையில் நடைபெற்ற இந்த போட்டியை நேரில் காண வந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன், சூரியின் பேட்டிங் மற்றும் பவுலின் திறமையை பார்த்து வியந்தார்.

போட்டி முடிந்தவுடன் அவரை நேரில் அழைத்த அஸ்வின், அவருக்கு சில டிப்ஸ்களை கொடுத்ததோடு அவருடைய விளையாட்டு மேலும் திறம்பட தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அஸ்வின் மற்றும் சூரியின் மகன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நடிகர் சூரி, தனது மகன் வருங்காலத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக வருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்து உள்ளார். சூரியின் நம்பிக்கை நிறைவேற அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B6NOwRoBbPF/

ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு வந்த ரூபாய் 52 லட்சம் பணத்துடன் டிரைவர் ஓட்டம்?

0

ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு வந்த ரூபாய் 52 லட்சம் பணத்துடன் டிரைவர் ஓட்டம்?

சென்னை தி நகர் உள்ள ஒரு தனியார் நிறுவனம் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வருகிறது. நேற்று மாலை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளர் அசோக் நகரைச் சேர்ந்தவர். தலைமையில் ஊழியர்கள் கேகே நகரைச் சேர்ந்த வினோத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஊழியரான பீகாரைச் சேர்ந்த முகமது ஆகியோர் காரில் வந்து பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டு இருந்தனர்.

காரை வேளச்சேரியை சேர்ந்த அம்ப்ரோஸ் என்ற டிரைவர் ஓட்டி வந்தார் தேனாம்பேட்டையில் உள்ள 5 வங்கி ஏடிஎம்களில் மையங்களில் பணத்தை நிரப்பிவிட்டு 87 லட்சத்து உடன் வந்தனர் வேளச்சேரி விஜய நகர் 1-வது பிரதான சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு சென்றனர் பாதுகாப்பாக முகம்மது துப்பாக்கியுடன் atm இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பிற்கு சென்று விட்டார்.

காரில் மீதம் ரூபாய் 52லட்சத்தை வைத்து இருந்தனர் . அப்போது சற்று தள்ளி காரை ஓரமாக நிறுத்துவதாக டிரைவர் காரை எடுத்துச் சென்றார்.
மூன்று பேரும் ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை நிரப்பி விட்டு வந்தனர் ஆனால் சற்று தள்ளி காரை நிறுத்த கூறிய அம்ப்ரோஸ் வாகனம் காணாது அதிர்ச்சி அடைந்த மூவரும் அந்த பகுதி முழுவதும் தேடியும் அவரைக் காணவில்லை.

செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது ரூபாய் 52 லட்சத்துடன் டிரைவர் அம்ப்ரோஸ் தப்பிச் சென்றதை அப்போது அறிந்தனர்.

இதுபற்றி வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் அதன்பேரில் போலீசார் வினோத் உட்பட 3 பேரையும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்துடன் தப்பி சென்ற அம்ப்ரோஸ் வேளச்சேரி முகவரி தந்து உள்ளதால் அந்த முகவரிக்கு சென்ற போது அங்கும் அவர் இல்லை இதனால் அவர் பணத்துடன் எங்கு சென்றார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியின் குடியுரிமை டுவிட் குறித்து அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்!

0

ரஜினியின் குடியுரிமை டுவிட் குறித்து அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்!

ஒரு பிரச்சனை குறித்து ரஜினி என்ன சொல்வார்? அதிலிருந்து என்ன குறைகளை கண்டுபிடித்து அவரை விமர்சனம் செய்யலாம் என்று ஒரு பெரிய கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நேற்று இரவு ரஜினிகாந்த் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது: ’எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது என்றும் தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு வேதனை அளிக்கிறது.

ரஜினியின் இந்த கருத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வந்தாலும் போராட்டத்தை தூண்டி விடும் ஒரு சில அரசியல்வாதிகள் மட்டும் இந்த கருத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதே கருத்தை தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய போது அவரை யாருமே விமர்சனம் செய்யாத நிலையில், ரஜினியை மட்டும் குறிவைத்து அனைத்து அரசியல்வாதிகளும் ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்து வருவது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ரஜினி பதிவு செய்த டுவிட் குறித்து கூறியபோது ’போராட்டமே தேவையில்லை என ரஜினிகாந்த் கூறவில்லை என்றும் வன்முறை தீர்வாகாது என்று தான் அவர் கூறியதாகவும் விளக்கமளித்தார். ஜெயக்குமாரின் இந்த விளக்கத்தை அடுத்து ரஜினியின் கருத்தை அதிமுக ஆதரிப்பதாக கருதப்படுகிறது.

தேசிய கீதம் பாடி போராட்ட காரர்களை கலைத்த காவலர்?

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்ட களத்தில் இறங்கினர். சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மற்றும் நடிகர் சித்தார்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, டெல்லி, பெங்களூரு, சென்னை, லக்னோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி, மாணவர்கள், தொடர்ந்து பல்வேறு முறைகளில் போராடி வருகின்றனர் ரயில் மறியல் போன்ற போராட்டங்களும் நடந்தவண்ணம் உள்ளன.

இதனால பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை கலைக்க, காவலர் ஒருவர் வினோத முயற்சியை கையாண்டுள்ளார்.

போராட்டக்காரர்கள் மத்தியில் சிறிது நேரம் உரையாற்றிவிட்டு, இறுதியில் தேசிய கீதத்தை பாடியுள்ளார் அந்த காவலர். தேசிய கீதம் முடிந்ததும் போராட்டக்காரர்களும் அங்கிருந்து கலைந்துசென்றுள்ளனர்.

ஜல்லி கட்டு போராட்டத்தின் போது திருச்சியில் காவலர் ஒருவர் தடியடி நடத்தாமல் மாணவர்களை நல்ல பேசி அனுப்பியது போல் இந்த நிகழ்வு அனைவரிடமும் பாராட்டத்தக்க விஷயமாக பேசப்பட்டது.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்!சொன்னது யார் தெரியுமா?

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்ட களத்தில் இறங்கினர். சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மற்றும் நடிகர் சித்தார்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

தி. மு. க. வினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே தமிழ்நாடு முழுவதும் வரும் 23ஆம் தேதி எதிர்க் கட்சிகள் சார்பாக போராட்டம் நடத்தப்படுகிறது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகளை கண்டித்து மதுரையில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

“பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்த குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க படவில்லை என்றும்.

இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது எனவும் கூறினார்.
குடியுரிமை சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாட்டுக்காக போராடவில்லை என்றும் ஓட்டுக்காக போராடி வருகிறார்கள் என்று இல. கணேசன் கூறினார்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக வாழுகின்றனர். இந்தியா முழுவதும் லஞ்சத்தை ஒழிக்க பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் முதலில் சிக்கியது ப.சிதம்பரம் தான்.இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்!சொன்னது யார் தெரியுமா?

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவில் உள்ள வரலாற்று பிழைகளை பிரதமர் திருத்தி வருகிறார், வரலாறு தெரியாதவர்கள் வரலாற்றை மறந்தவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.

குடியுரிமை சட்டம் குறித்து மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது என்று கூறினார்

குடியுரிமை இல்லாமல் பாகிஸ்தானில் இருந்து வந்த 31 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இந்தியாவில் இருந்து யாரையும் வெளியேற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல என கூறிய அவர், பொய் பிரசாரத்தை நம்பாமல் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

தனுஷின் பட்டாஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு

0

தனுஷின் பட்டாஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு!

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவரும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக கடந்த வாரம் இந்த படத்தில் இடம் பெற்ற ‘சில்புரோ’ என்ற தனுஷ் பாடிய பாடல் சிங்கிள் பாடலாக வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை நாளை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 11.30க்கு வெளியாகும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவேக்-மெர்வின் இசையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.