Home Blog Page 5831

அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான்: தமிழக முதல்வருக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த ஆலோசனை

0

அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான்: தமிழக முதல்வருக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த ஆலோசனை

தனது மக்களுக்கு மிகத்தூய்மையான காற்றை அளிக்கும் மேற்கு ஐரோப்பிய நாட்டு நகரங்களை போல சென்னை பெருநகரையும் மாற்ற முடியும். அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான் என சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை உருவாக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை கூறும் வகையில் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்! என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக “சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை” (Clean Air Action Plan) உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தின் விவரமானது:

அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு,

மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று உயிர்வாழ தூய்மையானக் காற்றை சுவாசிப்பது ஆகும். ஆனால், காலநிலை மாற்றம் காற்று மாசு காரணமாக அந்த உரிமை கூட மக்களுக்கு கிடைக்காத நிலையில், தமிழக மக்களுக்கு தூய காற்று கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது குறித்து தங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்.

காற்று அனைவருக்கும் பொதுவானது. ஏழை, பணக்காரர், மதம், மொழி என மக்களின் அடையாளங்கள் வேறுபட்டாலும் நாம் எல்லோரும் ஒரே காற்றை தான் சுவாசிக்கின்றோம். தூய காற்று ஒரு அடிப்படை மனித உரிமையும் கூட. ஆனால், இன்று நகர்ப்புறங்களில் தூய காற்று காணக்கிடைக்காத அதிசயம் ஆகிவிட்டது. பெருநகரங்களில் வானம் அதன் நீல நிறத்தை இழந்துவிட்டது! உயரைக் காக்கும் சுவாசக் காற்றே, இன்று மக்களின் உயிரை எடுக்கும் நஞ்சாகவும் மாறிவிட்டது. இதற்கு மனித தவறுகளே காரணமாகும்.

அதே நேரத்தில், நம்பிக்கை அளிக்கும் விதமாக காற்று மாசு சிக்கலுக்கு அறிவியல் பூர்வமான தீர்வுகளும் இருக்கின்றன. தனது மக்களுக்கு மிகத்தூய்மையான காற்றை அளிக்கும் மேற்கு ஐரோப்பிய நாட்டு நகரங்களை போல சென்னை பெருநகரையும் மாற்ற முடியும். அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான்.

காற்று மாசுபாட்டினால் உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் இறந்து போகின்றனர். உலகிலேயே மிகவும் மாசுபட்ட நாடு இந்தியா! இந்தியாவில் 12 லட்சம் பேர் காற்று மாசுபாட்டினால் சாகிறார்கள். இந்தியர்களின் மரணத்துக்கு மூன்றாவது பெரிய காரணம் காற்று மாசுபாடுதான். இந்தியாவில் 8 இறப்புகளில் ஒன்றிற்கு காற்று மாசுபாடு காரணமாக உள்ளது. சென்னை மாநகரம் இந்திய அளவில் மிகவும் மாசுபட்ட இரண்டாவது நகரமாக உள்ளது.

ஒரு கன மீட்டர் காற்றில் PM 2.5 நுண் துகள் மாசு 10 மைக்ரோகிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். எனினும் இந்தியாவில் இதனை முதல் கட்டமாக 35 எனும் அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்திய அரசு 40 மைக்ரோகிராம் என்பதை உச்ச அளவாக அறிவித்துள்ளது. ஆனால், அண்மையில் சென்னை நகரில் PM 2.5 நுண் துகள் மாசு 300 அளவை கடந்து 450 எனும் அளவை எட்டியது. கொடுங்கையூரில் உச்சமாக 935 எனும் அளவினை எட்டியது.

சென்னையில் ஆண்டுக்கு 100 நாட்கள் நச்சுக்காற்றை சுவாசிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர். சென்னை நகரின் காற்று மாசு அளவு, மணலி காற்று மாசு கண்காணிப்பு கருவி பதிவுகள் படி, நவம்பர் 5 வரையிலான 365 நாட்களில் 119 நாட்கள் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக இருந்துள்ளது. பொது அமைப்புகள் சென்னையின் 15 இடங்களில் மேற்கொண்ட ஆய்வில் அனைத்து இடங்களிலுமே 70 மைக்ரோ கிராம் அளவுக்கு மேல் 187 மைக்ரோ கிராம் வரை இருந்தது கண்டறியப்பட்டது. மொத்ததில் சென்னை நகரில் மக்கள் சுவாசிக்கும் காற்று பல நாட்களில் அபாய நிலையில் இருப்பது தெளிவான உண்மை ஆகும்.

சென்னை நகரில் தனியார் வாகங்களின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்து வருவதும், பொதுப்போக்குவரத்து வசதிகள் கவனிக்கப்படாமல் இருப்பதும் தான், காற்று மாசுபாட்டுக்கான முதன்மை காரணம் ஆகும். சென்னையில் ஓடும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை 2007 ஆண்டில் 30 லட்சமாக இருந்தது. தற்போது பல மடங்கு அதிகரித்து 66 லட்சத்தை கடந்துவிட்டது. ஆனால், MTC பேருந்துகளின் எண்ணிக்கை 1998 ஆண்டில் 2800 ஆக இருந்தது. இருபது ஆண்டுகள் கடந்து வெறும் 700 பேருந்துகள் மட்டுமே அதிகரித்து தற்போது 3500 அளவிலேயே இருக்கிறது. (அதிலும் சுமார் 70% பேருந்துகள் காலம் கடந்தவை)

சென்னை மாநகராட்சி 2014 ஆம் ஆண்டில் வெளியிட்ட வாகனமில்லா போக்குவரத்து கோள்கையில் (Chennai Non-Motorised Transport Policy) 2018 ஆம் ஆண்டுக்குள் 80% சாலைகளில் தரமான நடைபாதையை அமைப்போம் என கூறப்பட்டது. ஆனால், இன்னமும் பெரும்பாலான சாலைகளில் முறையான நடைபாதைகள் அமைக்கப்படவில்லை. சென்னை நகரின் போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (Chennai Unified Metropolitan Transport Authority – CUMTA) 2010 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கான விதிகளை உருவாக்கி அரசாணை 2019 ஜனவரி மாதம் தான் வெளியிடப்பட்டது. அதன் முதல் கூட்டம் இன்னமும் கூட நடக்கவில்லை!

ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல நோய்களை காற்று மாசுபாடு உருவாக்குகிறது. 43% நுரையீரல் நோய்களுக்கும், 27% நுரையீரல் 24% பக்கவாத பாதிப்புக்கும், 25% இருதய நோய் பாதிப்புக்கும் காற்று மாசுபாடு காரணம். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வாழும் குழந்தைகளின் வாழ்நாளில் இரண்டரை ஆண்டுகள் காற்று மாசுபாட்டால் குறைகிறது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில் வாழும் எல்லா மக்களையும் காற்று மாசுபாடு பாதித்துள்ளது. குறிப்பாக, காற்று மாசுபாட்டினால் குழந்தைகள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். 5 ஆண்டுகளில் சென்னை நகரில் குழந்தைகள் ஆஸ்துமா இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல் சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும். இந்திய அரசு 10.01.2019 ஆம் நாள் தேசிய தூய காற்று திட்டத்தை (National Clean Air Program – NCAP) வெளியிட்டது. இந்தியாவின் 102 நகரங்களின் காற்று மாசுபாட்டை 2017 ஆம் ஆண்டு மாசு அளவுக்கு கீழாக 2024 ஆம் ஆண்டுக்குள் 20% – 30% அளவு குறைப்பதற்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த திட்டத்தில் தூத்துக்குடி தவிர தமிழக நகரங்கள் எதுவும் இல்லை. அதிக அளவு காற்று மாசுபட்டுள்ள சென்னை மாநகரம் அத்திட்டத்தில் இல்லை. இந்நிலையை மாற்றி தேசிய தூய காற்று திட்டத்தில் சென்னை மாநகரை சேர்க்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

அதே நேரத்தில், மத்திய அரசின் உதவிக்காக காத்திருக்காமல் – தமிழ்நாடு அரசே சென்னை மாநகருக்கான காற்று மாசு தடுப்பு திட்டத்தை உடனடியாக உருவாக்கி, அதனை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி சென்னை மாநகர மக்களின் தூயக்காற்றுகான அடிப்படை மனித உரிமையை காப்பாற்ற வேண்டும்.

சென்னை மக்களுக்கு தூய சுவாசக்காற்றை அளிப்பதன் மூலம் சுமார் ஒரு கோடி மக்களின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும். மேலும், புவிவெப்படைவதற்கு காரணமான பசுங்குடில் வாயுக்களை குறைக்கவும் முடியும்.

இவ்வாறான ஒரு சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை உருவாக்கும் போது அதில் பின்வரும் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.

தூய காற்று செயல்திட்டம்

1. தூய காற்று செயல்திட்டம் (Clean Air Action Plan): உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள காற்றுத்தர அளவுகளை அடையும் நோக்கில், சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை வகுத்து, அதனை குறுகிய கால, இடைக்கால, நீண்டகால இலக்குகளுடன் அடையும் வகையில் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். மேலும், இந்திய அரசின் தூய காற்று செயல்திட்டத்தில் (National Clean Air Program – NCAP) சென்னை பெருநகரை இணைக்க வேண்டும்.

“புழுதி தடுப்பு”

2. புழுதி நீக்குதல் (Dust removal): சாலைகளில் குவியும் புழுதியை அகற்றி தூய்மையாக பராமரிக்க வேண்டும். புழுதி அகற்றும் தானியங்கி வாகனங்களை (Mechanical dust removal, Vacuum cleaning of roads) பயன்படுத்தி சாலைப்புழுதியை நீக்க வேண்டும்.

3. முழுமையான சாலை: சாலைகளில் புழுதி படிவதை தடுக்கும் நோக்கில் சென்னை நகரின் சாலைகளை ‘சுவர் முதல் சுவர் வரை’ (wall to wall paving) தரமாக அமைக்க வேண்டும். அவற்றில் உரிய மழைநீர் சேகரிப்பு, மழைநீர் வடிகால் வசதிகளுடன் ‘பஞ்சு நகரம்’ (Sponge City) எனும் நுட்பத்துடன் அமைக்க வேண்டும்.

4. பசுமைப் பகுதி: சாலை ஓரங்களிலும், நடுவிலும் பசுமைப் பகுதிகளை அமைக்க வேண்டும். திறந்த பொது இடங்களை பசுமைப் பகுதிகளாக மாற்ற வேண்டும். சாலையோரங்களில் மரங்களை வளர்க்க வேண்டும். சென்னை பெருநகரின் பசுமை மேம்பாட்டுக்காக ‘மரங்கள் ஆணையத்தை’ (Trees Authority) உருவாக்க வேண்டும்.

5. கட்டுமான புழுதி: இந்திய அரசின் கட்டுமானம் மற்றும் கட்டிட கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Construction & Demolition Waste Management Rules 2016) என்ற விதி முறைகளை சென்னை பெருநகரில் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

“வாகனப் புகை தடுப்பு”

6. வாகனப் புகை சோதனை (Inspection & Maintenance): வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை கட்டுக்குள் வைக்கும் விதிகளை முழுமையாக செயலாக்குவதற்காக உரிய முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கோண்டு, அதன் தொடர்ச்சியாக வாகனப்புகை தடுப்பு சட்டவிதிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். மாசுபடுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு உரிய விதிகளின் கீழ் தண்டம் விதிக்க வேண்டும்.

7. பரிசோதனை மையம்: வாகனப்புகையை பரிசோதனை செய்யும் மையங்களை நவீனமாகவும் உரிய எண்ணிக்கையிலும் அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் உடனடியாக அமைக்க வேண்டும்.

8. வாகனப்புகை சான்று: Pollution Under Control (PUC) Certificate எனப்படும் வாகனப்புகை சான்றிதழ்களை இந்திய அரசின் வாஹன் இணையத்தில் (Vahan 4.0 portal) மேலும் காலதமதமில்லாமல் இணைக்க வேண்டும்.

9. ரிமோட் சென்சார் சோதனை: புகை கட்டுப்பாட்டு விதிகளை மீறும் வாகனங்களை கண்டறிவதற்காக தொலைதூர திறனுணர்வு (ரிமோட் சென்சார்) கருவிகள் மூலம் மாசுக்காட்டுப்பாட்டு விதிகளை மீறும் வாகங்களை கண்டறியும் முறையை சென்னையில் அறிமுகப்படுத்த வேண்டும். சென்னைக்குள் நுழையும் வழிகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் இக்கருவிகளை அமைக்க வேண்டும்.

10. புகைக்கரி இல்லா பேருந்துகள்: சென்னையில் இயங்கும் MTC பேருந்துகளை புகைக்கரி இல்லாத பேருந்துகளாக (Soot free buses) மாற்ற வேண்டும்.

11. எரிவாயு தானிகள்: சென்னையில் இயங்கும் டீசல், பெட்ரோல் ஆட்டோக்களை போதுமான அளவு மானியம் கொடுத்து எரிவாயு (LPG) ஆட்டோக்களாக அல்லது மின்சார ஆட்டோக்களாக மாற்ற வேண்டும். போதுமான எண்ணிக்கையில் எரிவாயு நிரப்பும் மையங்களை அமைக்க வேண்டும்.

12. கனரக வாகனகள்: சென்னை துறைமுகத்திற்கு வரும் கனரக வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டும்.

13. நகருக்குள் மாசில்லா பகுதி: சென்னை மாநகரின் முக்கியமான பகுதிகளை, தனியார் கார்கள் நுழைய தடைவிதிக்கப்பட்ட குறைந்த மாசு பகுதிகளாக (Low Emission Zone) சோதனை முறையில் அறிவிக்க வேண்டும்.

“குப்பை எரிப்பு”

14. குப்பை எரிப்பு: கொடுங்கையூர் உள்ளிட்ட, சென்னை பெருகரின் அனைத்து இடங்களிலும் புறநகரிலும் குப்பை எரிக்கப்படுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்..

15. அரசே குப்பை எரித்தல்: குப்பையிலிருந்து மின்சாரம் எடுப்பதாகக் கூறி, ஆபத்தான குப்பை எரிப்பு (Waste-to-energy) திட்டங்களை சென்னை பெருநகரில் நிறுவக்கூடாது. அத்தகைய திட்டங்களை கைவிட வேண்டும்.

16. பிளாஸ்டிக் தடை: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

“போக்குவரத்து”

17. பேருந்துகள்: MTC பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 மாசில்லாத தூய பேருந்துகளாக அதிகரிக்க வேண்டும்.

18. நடைபாதை: 2014 மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து கொள்கையில் (Chennai Non-Motorised Transport Policy 2014) அறிவித்தபடி சென்னை பெருநகரில் முழுமையான அளவில் நடைபாதைகளையும் மிதிவண்டி வழிகளையும் மக்கள் கூடும் இடங்களையும் அமைக்க வேண்டும்.

19. வாகன நிறுத்தம்: வாகன நிறுத்தங்களை முறைப்படுத்த வேண்டும். பொது இடங்களில் அரசாங்கமே அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் (Multi-level car parking) கட்டும் திட்டங்களை கைவிட வேண்டும்.

20. மின்சார போக்குவரத்து: மின்சார வாகனங்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான மின்னேற்ற கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

21. நவீன ஸ்மார்ட் சிக்னல் முறை: சென்னை பெருநகரின் போக்குவரத்து சிக்னல்களை நவீன ஸ்மார்ட் சிக்னல் எனப்படும் intelligent traffic control system முறைக்கு மாற்ற வேண்டும்.

22. இலவச பேருந்துகள்: சென்னை MTC பேருந்துகளில் பெண்கள், குழந்தைகள், முதியோரின் பயணத்தை இலவசம் ஆக்க வேண்டும்.

23. சென்னை போக்குவரத்து ஆணையம்: சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தை (Chennai Unified Metropolitan Transport Authority – CUMTA) முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதன் மூலம் வளர்ச்சிக்கான போக்குவரத்து முறையை (Transit Oriented Development – TOD) செயல்படுத்த வேண்டும்.

“புகை கண்காணிப்பு & விழிப்புணர்வு”

24. காற்று மாசு கண்காணிப்பு: சென்னை பெருநகரின் காற்று மாசுப்பாட்டை உடனுக்குடன் கண்காணிக்கும் கருவிகளின் (continuous ambient air quality monitoring systems) எண்ணிக்கையை தற்போதைய 3 என்பதில் இருந்து 40 ஆக அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியின் காற்றின் தரத்தை கணித்து அதனை உடனுக்குடன் பொது இடங்களில் காட்சிப்படுத்த வேண்டும்.

“தொழிற்சாலை மாசு”

25. அனல்மின் நிலையம்: அனல்மின் நிலையங்களின் காற்று மாசுபாட்டினை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும். அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் சென்னை மற்றும் புறநகரில் உள்ள நிலக்கரி அனல்மின் நிலையங்களை நிரந்தரமாக மூட வேண்டும். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட தொழிற்சாலை மாசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகள் அடங்கிய சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை (Clean Air Action Plan) வகுத்து செயல்படுத்துவதன் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு தூய காற்று கிடைப்பதை உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் விஜய் படங்களுக்கு இணையான மாஸ் பாடல் காட்சி:

0

சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள்சரவணன் அவர்கள் நடிப்பில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது

அஜித் விஜய் படங்களுக்கு இணையான மாஸ் பாடல் காட்சி:

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த பாடலுக்காக ரூபாய் 10 கோடி செலவு செய்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது

பிரம்மாண்டமான கண்ணை கவரும் அரங்குகளில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் அஜித் விஜய் படங்களில் படமாக்கப்படும் மாஸ் படத்திற்கு இணையாக இந்த பாடல் காட்சியை உருவாக்கப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

அஜித் விஜய் படங்களுக்கு இணையான மாஸ் பாடல் காட்சி:

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 100 கோடி என்றும் இந்த படத்தில் இடம் பெற்ற நான்கு பாடல்களுக்கு மட்டுமே ரூபாய் 40 கோடி செலவு செய்யப்படுள்ளதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன. வரும் மார்ச் மாதத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது

கல்கி சாமியாருக்கு இவ்வளவு சொத்தா!

0

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரத பாளையத்தில் கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது இந்த ஆசிரமத்தை கல்கி சாமியார் என்று கூறப்படும் விஜயகுமார் என்பவர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார் விஜயகுமார் விஷ்ணுவின் அவதாரம் என்றும் கூறி கொண்டு அவரை தேடி வரும் ஏராளமானோர்களுக்கு ஆசி வந்தார் இதில் அவருக்கு பணம் அதிகளவில் கிடைத்ததாகவும் அதை வைத்துதான் சித்தூரில் கல்கி ஆசிரமம் கட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கல்கி ஆசிரமம் பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் கட்டுமான தொழில் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளமான முதலீடுகளை செய்யப்பட்டிருப்பதாகவும் வருமான வரித் துறைக்கு புகார்கள் வந்தன.

இதனடிப்படையில் வருமானவரித் துறையினர் கடந்த அக்டோபர் மாதம் கல்கி ஆசிரமம் சம்பந்தப்பட்ட 40 இடங்களில் சோதனை நடத்தியதில் 800 கோடி வருவாய் கணக்கில் காட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அம்பலமானது ஒன்னெஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இருக்கும் இவர்கள் இங்கு சேவை செய்கின்றனர் இவர்களுக்கு சம்பளம் ஏதும் வழங்கப்படுவதில்லை உணவு மற்றும் தங்குமிடம் மட்டுமே வழங்கப்படும்.

இவர்கள் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள் என்ற காரணத்தால் இவர்கள் பெயரில் கல்கி சாமியார் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்தது. எந்தெந்த இடங்களில் பினாமி சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என கண்டறியப்பட்டு அவற்றை முடக்கம் செய்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

ரஜினிகாந்தை சீண்டிய உதயநிதி?

0

நடிகர் ரஜினிகாந்த் நேற்று ட்விட்டரில் குடியுரிமை சட்ட மசோதா சம்மந்தமாக ட்வீட் ஒன்றை செய்து உள்ளார். அதில் எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது என்றும், தேச பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலனுக்காக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது நடந்து கொண்டு இருக்கும் வன்முறை எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என அந்த ட்வீட் இல் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டுவிட்டரில் தனது எதிர் கருத்தை தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்?
குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!

அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது! என சீமான் தனது ட்வீட்டில் தெரிவித்து உள்ளார்.

ரஜினிகாந்தை சீண்டிய உதயநிதி?

இதனிடையே திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் @ mkstalin அவர்கள் தலைமையில் 23 நடக்கும் CAA 2019 எதிர்ப்புப் பேரணி அங்கு அனைவரும் பங்கெடுப்போம் என்றும். உரிமைக்கான போராட்டத்தை வன்முறை என்று அஞ்சும் வயதான வசதியான முதியோர்களை வீட்டிலேயே பாதுகாப்புடன் விட்டு வரவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தை சீண்டி உள்ளார்.

முன்னாள் அதிபரை பொதுமக்கள் முன்னிலையில் தொங்கவிட வேண்டும்: அதிர்ச்சி தீர்ப்பு

0

முன்னாள் அதிபரை பொதுமக்கள் முன்னிலையில் தொங்கவிட வேண்டும்: அதிர்ச்சி தீர்ப்பு!

முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் அவர்களுக்கு சமீபத்தில் நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்த நிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்பு முஷாரப் இறந்து விட்டால் அவரது உடலை எடுத்து வந்து மூன்று நாட்கள் பொதுமக்கள் பொதுமக்கள் முன்னிலையில் தொங்கவிட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2001 ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியை நடத்தி நாட்டை கைப்பற்றிய முஷரப், 2007ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை அறிவித்தார். அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார். இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்றவர் இதுவரை நாடு திரும்பவில்லை.

முன்னாள் அதிபரை பொதுமக்கள் முன்னிலையில் தொங்கவிட வேண்டும்: அதிர்ச்சி தீர்ப்பு

இந்த நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு, குறிப்பாக தேசத்துரோக வழக்கு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பில் முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது தீர்ப்பின் முழு விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்த தீர்ப்பில் முஷரப் குற்றவாளி என தெளிவாக நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு கழுத்தில் தூக்கிட்டு இறக்கும் வரை தொங்க விடவேண்டும் என்றும், ஒருவேளை வெளிநாட்டிலுள்ள முஷரப் அங்கேயே மரணமடைந்து விட்டால் அவரது உடலை பாகிஸ்தானுக்கு எடுத்து வந்து பொதுமக்கள் மத்தியில் மூன்று நாட்கள் தூக்கில் தொங்க விடப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தானை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தியாவின் “டாப் 100 பிரபலங்கள்” – போர்ப்ஸ் அறிவிப்பு.

0

அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை 2019ம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்திய கேப்டன் “கிங்” கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார்.  2019ம் ஆண்டு இவரின் வருமானம் 253 கோடி ருபாய். இரண்டாம் இடத்தில் பாலிவுட் நடிகரும், ரஜினியுடன் 2.O படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்ஷய் குமார் இடம் பிடித்துள்ளார். கடந்த 2016’ம் ஆண்டு முதல் இந்த பட்டியலில் முதல் இடம் வகித்துவந்த சல்மான் கான் இந்த ஆண்டு மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அமிதாப் பச்சன், டோனி , சச்சின் டெண்டுல்கர் முறையே நான்காவது, ஐந்தாவது, ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளனர்.

“பேட்ட” வெற்றிப்படத்துடன் இந்த வருடத்தை துவக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் 100 கோடி. கடந்த ஆண்டு 11வது இடத்திலிருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வருடம் 16வது இடத்தை பிடுத்துள்ளார். இவரது வருமானம் 95 கோடி.

நடிகர்கள் விஜய், அஜித், கமல்ஹாசன் முறையே 47, 52, 56 இடத்தை பிடித்துள்ளனர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் 53 வது இடத்தை பிடித்துள்ளார்.

ரஜினிகாந்த்க்கு சீமான் பதிலடி?

0

ரஜினிகாந்த்க்கு சீமான் பதிலடி?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் போராட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர்ரில் குடியுரிமை சட்ட மசோதா சம்மந்தமாக ட்வீட் ஒன்றை செய்து உள்ளார் அதில் எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது என்றும். தேச பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலனுக்காக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டு இருக்கும் வன்முறை எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என அந்த ட்வீட் இல் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டுவிட்டரில் தனது எதிர் கருத்தை தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்?குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!

அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது! என சீமான் தனது ட்வீட்டில் தெரிவித்து உள்ளார்.

ரேஷன் கடைகளில் மீன், முட்டை, ஆட்டிறைச்சி – “நிடி ஆயோக் ” பரிந்துரை.

0

நாடு முழுவதும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கும் வகையில்,”ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ” திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் முதல் கட்டமாக ஆறு மாநிலங்களில் மட்டும் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பின் இந்த வடிவம் உருவாக்கபட்டுள்ளது, ரேஷன் கார்டுகளில், குடும்ப தலைவர் , உறுப்பினர்களின் பெயர், முகவரி உட்பட அனைத்து விபரங்களும் சம்மந்தப்பட்ட மாநில மொழி மற்றும் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றி புதிய ரேஷன் கார்டுகள் வழங்குமாறு மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ரேஷன் கடைகளில் மீன், முட்டை, ஆட்டிறைச்சி ஆகியவற்றையும் வழங்க “நிடி ஆயோக் ” பரிந்துரைத்துள்ளது. சமீபத்தில் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்திய மக்களிடம் சத்துணவு குறைபாடு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது , இதனால் புரதசத்து மிக்க இறைச்சி பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

0

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள் 

மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான திமுக நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவரும் அதிமுக மற்றும் பாமக என இரண்டு கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அதாவது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மத்தியில் இந்த சட்டத்தை நிறைவேற்றிய பாஜகவை எதிர்ப்பதை விட தமிழக கட்சிகளான அதிமுக மற்றும் பாமகவை கடுமையான முறையில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதை வைத்து பார்க்கும் போது ஈழத் தமிழர்கள் பிரச்சினையை வைத்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் திமுக செய்த துரோகங்கள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளார். அவற்றில் சில கேள்விகள் உங்களுக்காக..

1.திமுக ஆட்சி செய்த காலத்தில், ஈழத்தமிழர்களுக்காக ஒரு துரும்பையும் அசைக்காதது ஏன்?

ஈழத்தமிழர்களின் கோரிக்கை இரட்டைக் குடியுரிமை தான். ஒருவேளை மு.க.ஸ்டாலின் மூச்சு முட்ட பேசுவதைப் போல ஈழத்தமிழர்களின் தேவை இந்தியக் குடியுரிமை என்றாலும் கூட, அதற்காக இலங்கைப் பிரச்சினை தீவிரமடைந்த 1983-ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக தமிழகத்தை ஆட்சி செய்த 12 ஆண்டுகளிலும், மத்திய அரசில் அங்கம் வகித்த 18 ஆண்டுகளிலும் சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது தான் உண்மை. இதை திமுகவால் மறுக்க முடியுமா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

2. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை கொண்டு வராதது ஏன்?

2009-ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, அதன்பின்னர் 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிலும் அதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரு தருணங்களிலும், மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. இப்போது குடியுரிமைச் சட்டத்தில் எத்தகைய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று திமுக கூறுகிறதோ, அத்தகைய திருத்தங்களை அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றச் செய்திருக்கலாம். அதை செய்யாதது ஏன் என்பதை ஸ்டாலின் விளக்குவாரா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

3. மு.க. ஸ்டாலினுக்கு ஈழத்தமிழர்கள் மீது ஏன் இந்த திடீர் பாசம்?

இலங்கையில் தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களை இணைத்து தனித்தமிழீழம் அமைக்க வேண்டும்; அதில் கவுரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என்பது தான் ஈழத்தமிழர்களின் எண்ணம். அதனால் தான் கனடா போன்ற நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில் பலர் இன்னும் குடியுரிமை பெறாமல் உள்ளனர். இதை உணராமல் மாங்காய் புளித்ததோ, வாய் புளித்ததோ(?!?!) என்று ஸ்டாலின் உளறுகிறார். அப்படியானால் ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் கிடைக்கக்கூடாது என்று ஸ்டாலின் துடிக்கிறாரா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

4. திமுக ஆட்சியில் ஈழத்தமிழ் அகதிகளை கண்ணியமாக நடத்தாது ஏன்?

ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று இப்போது முழங்கும் திமுக, தங்கள் ஆட்சியின் போது தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை மரியாதையுடனாவது நடத்தியதா? திமுக ஆட்சியில் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடத்தப்பட்டதையும், முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டதையும் ஸ்டாலினால் மறுக்க முடியுமா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

5. ஈழத்தமிழ் அகதிகளுக்கு சிறப்பு முகாம் சிறையை உருவாக்கிய கட்சி திமுக தானே?”

ஈழத்தமிழர்களை கொடுமைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் முதன்முதலில் 1990-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் உள்ள திப்பு மகாலில் கலைஞர் ஆட்சியில் தானே தொடங்கப்பட்டது?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

6. சிறப்பு முகாம் சிறைக்கு எதிராக போராடிய ஈழத்தமிழ் அகதிகளை சுட்டுக்கொன்றது திமுக ஆட்சி தானே?

விடுதலைப்புலிகளை அடைத்து வைக்க இந்த முகாம் அமைக்கப்பட்டதாக அறிவித்த திமுக அரசு, அப்பாவி ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அழைத்து வந்து வேலூர் முகாமில் அடைத்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்திய ஈழத்தமிழ் இளைஞர்கள் மீது தேவாரம் தலைமையிலான தனிப்படையை அனுப்பி துப்பாக்கிச்சூடு நடத்தி இரு இளைஞர்களை சுட்டுக் கொன்றது திமுக அரசு தானே?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

7. சிறப்பு முகாம் சிறைக்கு எதிராக போராடிய ஈழத்தமிழ் அகதிகளை சிறயில் அடைத்தது திமுக ஆட்சி தானே

சிறப்பு முகாம் சிறைக்கு எதிராக போராடிய 130 இளைஞர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்ததும் திமுக அரசு தானே. இதை ஸ்டாலினால் மறுக்க முடியுமா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

8. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது திமுக ஆட்சி தானே?

2010-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி செங்கல்பட்டு சிறப்பு முகாம்களுக்குள் 150 காவலர்களை அனுப்பிய திமுக அரசு, அங்கு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஈழத்தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியது கலைஞரின் அரசு தானே?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

9. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதிகளை பொய்வழக்கில் கொடுமை படுத்தியது திமுக ஆட்சி தானே?

இந்தத் தாக்குதலில் காயமடைந்த 15 பேர் மீது காவலரை கடத்தி சிறைவைத்ததாக பொய்வழக்கு பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்த கொடுமையை செய்தது திமுக அரசு தானே?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

10. ஈழத்தமிழ் அகதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது திமுக ஆட்சி தானே?

உலகிலேயே அனைத்தையும் இழந்த அகதிகள் மீது துப்பாக்கிச் சூடும், கொலைவெறித் தாக்குதலில் நடத்திய பெருமை திமுக அரசுக்கு தான் உண்டு. இவர்கள் தான் ஈழத்தமிழர்களுக்காக இரக்கப்படுகிறார்களாம். இதை விட இரட்டை வேடம் உண்டா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

11. ஈழத்தமிழர் இனப்படுகொலையை மறைக்க 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியது திமுக கட்சி தானே?

ஈழத்தமிழர்களுக்காக இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக, ஈழத்தில் போர் நடந்த போது நடத்திய நாடகங்களும், அடித்த பல்டிகளும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை. இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்ட போது கலைஞர் நடத்திய 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை மறக்க முடியுமா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

12. ஈழத்தில் போர் நிறுத்தம் என அறிவித்து, வெளியில்வந்த மக்களை சுட்டுக்கொல்ல வழிசெய்த கட்சி திமுக தானே?

சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்த கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டதாகவும் அறிவித்தார். கலைஞரின் அறிவிப்பை நம்பி பதுங்கு குழிகளில் இருந்து வெளியில் வந்த அப்பாவி ஈழத்தமிழர்களை சிங்கள ராணுவம் கொத்து குண்டுகளை வீசி கொன்றது. இவ்வாறாக சிங்களப் படைகளில் தமிழின ஒழிப்புக்கு திமுக துணை போனதை மறுக்க முடியுமா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

13. ஒன்றரை லட்சம் தமிழர் படுகொலையை ‘மழை விட்டு விட்டது…. தூவானம் விடவில்லை’’ என்று நக்கல் செய்த கட்சி திமுக தானே?

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட்டேன் என்று கூறிய அப்போதைய முதலமைச்சர் கலைஞரிடம், ‘‘இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்களே?’’ எனக் கேட்ட போது, ‘‘மழை விட்டு விட்டது…. தூவானம் விடவில்லை’’ என்று நக்கல் செய்ததை மன்னிக்க முடியுமா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

14. தியாகி முத்துக்குமாருக்கு மக்கள் அஞ்சலி செலுத்த விடாமல் தடுத்த கட்சி திமுக தானே?

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்பதற்காக முத்துக்குமார் என்ற இளைஞர் சென்னையில் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார். தனது உடலையே ஆயுதமாக்கி, ஈழப்போருக்கு எதிராக போராட வேண்டும் என்று அவர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி போராட தமிழக இளைஞர்கள் ஆயத்தமான போது, முத்துக்குமாருக்கு தமிழக மக்கள் அஞ்சலி செலுத்த விடாமல் திமுக அரசு தடுத்ததையும், இறுதி ஊர்வலத்தில் கூட தடியடி நடத்தியதையும் மறக்க முடியுமா… மன்னிக்க முடியுமா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

15. இலங்கைப் போரை தடுத்து நிறுத்தக் கோரி தமிழகத்தில் 18 பேர் உயிர்த்தியாகம் செய்ததை திமுக அரசு கொச்சைப்படுத்தியதை மறக்க முடியுமா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

16. இராஜபக்சேவின் விருந்தினர்களாக அவரது மாளிகைக்கு சென்றது திமுக தானே?

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் துயரம் கூட மறையாத நிலையில், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழியும், டி.ஆர். பாலுவும் இராஜபக்சேவின் விருந்தினர்களாக அவரது மாளிகைக்கு சென்று விருந்து உண்டதுடன், கொலைகாரனின் கைகளில் இருந்து பரிசுப்பெட்டிகளையும் வாங்கி வந்தார்களே…. அதை தமிழர்கள் மன்னிப்பார்களா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

17. சிகிச்சைக்காக வந்த மாவீரன் பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிய கட்சி திமுக தானே?

இலங்கை அரசால் பல ஆண்டுகள் சிறைக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, அதனால் பக்கவாதம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி இரவு சென்னைக்கு வந்த போது, 80 வயது மூதாட்டி என்றும் பாராமல் விமானத்தை விட்டு, இறங்குவதற்கு கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி, அவரது மறைவுக்கு வழிவகுத்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு தானே? இதைவிட மாபாதகச் செயல் வேறு ஏதேனும் இருக்க முடியுமா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

18. தமிழீழம் என்கிற பெயரையே பயன்படுத்தாமல், பயந்து நடுங்கிய கட்சி திமுக தானே?

சென்னையில் 2012 ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை இராயப்பேட்டையில் நடைபெறவிருந்த தமிழீழ ஆதரவு மாநாட்டின் தலைப்பையே, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மிரட்டலுக்கு அஞ்சி ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்று மாற்றினார். அதுமட்டுமின்றி மாநாட்டில் தமிழீழம் என்ற வார்த்தையே உச்சரிக்கப்படவில்லை. இதை விட மோசமானதொரு கொத்தடிமைத்தனம் இருக்க முடியுமா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

19. ஈழத்தமிழர் நலனுக்காக நடத்தப்பட்ட திமுக மாநாட்டில், மத்திய அரசுக்கு அஞ்சி தமிழீழத்தை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதைவிட பெரிய துரோகத்தை ஈழத்தமிழருக்கு செய்ய முடியுமா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

20. இப்போதும் கூட, விடுதலைப் புலிகளால் சோனியாவுக்கு ஆபத்து என பேசும் கட்சி திமுக தானே?

விடுதலைப் புலிகள் இயக்கமே இல்லாமல் போய்விட்ட நிலையில், அந்த இயக்கத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்ற மக்களவையில் திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு பேசினாரே? ஈழத்தமிழர் விடுதலைக்காக போராடிய அமைப்பை இதைவிட மோசமாக கொச்சைப்படுத்த முடியுமா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

21. ஈழத்தமிழ் அகதிகளை வலுக்கட்டாயமாக அனுப்புவதை வேடிக்கை பார்த்த கட்சி திமுக தானே?

1992-ஆம் ஆண்டில் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களை கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்ப முயற்சிகள் நடந்ததன. அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தியது மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களும், தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களும் தான். அதை திமுகவும், அதன் தலைமையும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தன. இதை திமுக மறுக்க முடியுமா?

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

22. ஈழத்தமிழர்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள் குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு மு.க.ஸ்டாலின் தயாரா?

ஈழத்தமிழர் நலன்களுக்காக கடந்த 36 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த போதெல்லாம் துரும்பைக் கூட அசைக்காதது தான் திமுக. பல நேரங்களில் தமிழீழம் என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட அஞ்சிய இயக்கம் தான் அது. இப்படியாக ஈழத்தமிழர் நலனில் ராஜபக்சேக்களாகவும், ஜெயவர்தனேவாகவும் இருந்த இப்போது பிரபாரகரன் வேடம் போட்டு மக்களை ஏமாற்றத் துடிக்கிறது. 

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

ஈழத்தமிழர்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள் குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு மருத்துவர் அய்யா அவர்கள் தயார்…. மு.க.ஸ்டாலின் தயாரா?

திமுக சார்பாக குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி-கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு

0

திமுக சார்பாக குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி-கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இது குறித்து அடுத்தகட்ட செயல்பாட்டிற்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சந்தித்து பேசும் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்த சட்டத்தை எதிர்த்தும் இதற்கு காரணமாக இருந்த பாஜக மற்றும் அதிமுக கட்சிகளை எதிர்த்தும் அனைத்து கட்சிகள் மற்றும் சங்கங்கள் இணைந்து பேரணி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து மற்ற கட்சிகள் மற்றும் சங்கங்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது.

இந்திய அரசும், மக்களும் இதுவரை காப்பாற்றி வந்த சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை, ஒற்றுமை ஆகிய தத்துவங்களுக்கு முரணான வகையில் மத்திய பா.ஜ.க. அரசு இந்த குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அனைத்து மதத்தவரும் வரலாம் என்றால் ஏன் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அண்டை நாட்டவர் வரலாம் என்றால் அதில் ஈழத்தமிழர் புறக்கணிக்கப்பட்டது எதனால்? என்ற கேள்வியை எழுப்பி வருகிறோம்.

திமுக சார்பாக குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி-கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு
திமுக சார்பாக குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி-கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு

மக்களை மதரீதியாக, இனப்பாகுபாட்டுடன் பார்க்கும் சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 23-ந்தேதி சென்னையில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடர வேண்டும். கட்சி எல்லைகளை கடந்து, மதம், ஜாதி, மாநில பாகுபாடுகள் கடந்து இப்போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே இச்சட்டத்தை திரும்பப் பெற வைக்க முடியும். ஜனநாயக குரலை எழுப்புமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.