மொபைல் எண்ணை மாற்றாமல் வேறொரு டெலிகாம் சேவை நிறுவனத்துக்கு மாறுவதில் புதிய விதிகள்?

0
75

MNP(Mobile network portability) என்று அழைக்கப்படும் மொபைல் எண்ணை மாற்றாமல்  மொபைல் எண்ணுடன் வேறொரு டெலிகாம் சேவை நிறுவனத்துக்கு வாடிக்கையாளரால் மாற்றக்கூடிய இச்சேவை முறை கடந்த காலங்களில் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு மேல் வரையில் கூட எடுக்கும்.

ஆனால், ட்ராய் இன்று அமல்படுத்தியுள்ள சேவை முறையால் இரண்டே நாட்களில் ட்ராய் விதிமுறைப்படி முன்னர் 96 மணி நேர சேவை ஆக இருந்த இந்த எம்என்பி சேவை தற்போது 48 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

MNP விரும்பும் வாடிக்கையாளர்கள் அதற்கான கோரிக்கையை முன்வைத்தால் ஒரு யூபிசி தடம் உருவாக்கப்படும். இதன் மூலம் அடுத்த 48 மணி நேரத்தில் நீங்கள் விரும்பும் டெலிகாம் நிறுவனத்துக்கு மாறிவிடலாம்.

போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகை அத்தனையையும் செலுத்திய பின்னர்தான் மாற முடியும். மற்றபடி வாடிக்கையாளர் ஒருவர் தற்போது இருக்கும் நெட்வொர்க் நிறுவனத்தின் கீழ் 90 நாட்கள் வாடிக்கையாளராக இருந்திருந்தால் மட்டுமே அதே மொபைல் எண்ணுடன் வேறொரு நிறுவன சேவைக்கும் மாற முடியும்.

இச்சேவையைப் பெற உங்களது மொபைல் எண்ணிலிருந்து PORT 99XXXXXXXX (உங்கள் மொபைல் எண்) டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். அடுத்த ஐந்து நிமிடங்களில் யூபிசி தடம் உருவாக்கப்பட்டு உங்களுக்கான ட்ரான்ஸ்பர் பணிகள் தொடங்கப்பட்டுவிடும்.

அதன் பின்னர் நீங்கள் புதிதாக மாற விரும்பும் நிறுவனத்துக்கு அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று அளித்த பின்னர் மாற்றிக் கொள்ளலாம். 

author avatar
CineDesk