யார் இந்த ஐ. பி.எஸ் அதிகாரி வி.சி.சஜ்ஜனார்?

0
77

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார்.

இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது கல்லெறிந்து தப்பிக்க முயன்றதாக தெரிகிறது இதனால் காவலர்கள் அவர்களை என்கவுண்டர் செய்தனர்.

இந்தச் சம்பவம் நடந்த இடம், சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி. சஜ்ஜனார் ஐ.பி.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இவரைத் தெலங்கானா மக்கள் நிஜ ஹீரோ என்று சொல்கின்றனர். தற்போது வி.சி.சஜ்ஜனார் குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகின்றன.


1996-ம் ஆண்டு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான வி.சி.சஜ்ஜனார், ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். வாரங்கல் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு இன்ஜினீயரிங் மாணவியை ஒரு தலையாகக் காதலித்த நபர் சக கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர் மீது ஆசிட் வீசினார். அப்போது வி.சி.சஜ்ஜனார் அந்த மாவட்டத்தின் எஸ்.பி-யாகப் பணியாற்றி வந்தார்.

இந்த வழக்கில் ஸ்ரீனிவாசராவ், ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது, சஜ்ஜனார் கட்டுப்பாட்டிலிருந்த போலீஸ் டீம், மூன்று பேரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தது. அந்தச் சமயத்தில் போலீஸாரின் பிடியிலிருந்து மூன்று பேரும் தப்பி ஓட முயன்றதால் அவர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் வி.சி.சஜ்ஜனாரை ஒரு தரப்பினர் பாராட்டினர். ஆனால், இன்னொரு தரப்பினர் இது போலி என்கவுன்டர் எனக் குற்றம் சாட்டினர். ஆனால், அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை.

இன்று நால்வரின் என்கவுண்டரும் அவர் தலைமையின் கீழ் நடைபெற்றதால் அவரை சமூக தல வாசிகள் புகழ்ந்து வருகின்றனர் ஒரு தரப்பினர் அவரை குறையும் கூறி வருகின்றனர்.

author avatar
CineDesk