திமுக எம்.பிக்களை தட்டி தூக்க தயாராகும் பாஜக! அதிர்ச்சியில் திமுக
பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் எதிர்ப்பு அரசியலை சமாளிக்க அக்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் 5 பேருக்கு பாஜக குறி வைத்துள்ளதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்க மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக அனைத்து எம்.பி.க்களையும் அழைத்து பேசியுள்ளார்.
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஏற்கனவே இரண்டு முறை திமுக எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய ஸ்டாலின் முயற்சி செய்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த கூட்டம் நடைபெறாமலே போய் விட்டது. இந்த நிலையில் மீண்டும் முயற்சி செய்து நேற்று ஒரு வழியாக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் திமுக எம்.பி.க்கள் அனைவரும் அறிவாலயத்திற்கு வந்து விட்டனர்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முதலில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் எம்.பிக்களுக்கு கூறிய வழக்கமான அறிவுறுத்தல்களுக்கு பிறகு அவருடைய பேச்சு தீவிர அரசியல் பக்கம் சென்றுள்ளது. இதில் அவர் பேசியதாவது,தேசிய அளவில் பாஜக மிகவும் ஆக்ரோசமான அரசியலை முன்னெடுத்து வருகிறது. அதனை எதிர்கொள்ள நாமும் ஆக்ரோசமாக இருந்தோம். ஆனால், பாஜக நம்மை அச்சுறுத்த நினைக்கிறது. நமக்கு ஆதரவான தொழில் அதிபர்களை குறி வைக்கிறது.
எனவே டெல்லியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார். அவருக்கு பிறகு பேசிய திமுக தலைவர் ஸ்டாலினும் இதை குறிப்பிட்டு தான் பேசியதாக சொல்கிறார்கள். தொகுதிக்கு செல்ல வேண்டும், தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாக செலவிட வேண்டும் என்பன போன்ற வழக்கமான அறிவுறுத்தல்களுக்கு பிறகு மிகவும் சீரியசாக அரசியல் விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் போன்றோர் கூட பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ள தயாராகி விட்டனர். அந்த அளவிற்கு பாஜக நாட்டில் தற்போது பலம் பொருந்திய கட்சியாக மாறிவிட்டது. அசுர பலத்துடன் இருப்பதால் பாஜக தற்போது என்ன வேண்டுமானாலும் செய்யும்? அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் காலூன்றிய பாஜக அடுத்ததாக கேரளா, தமிழகத்தை தான் குறி வைத்துள்ளது.
தமிழகத்தில் பாஜக நம்மை தான் பிரதான எதிரியாக கருதுகிறது. அதனால் நாமும் அவர்களை அப்படி கருதுவதை தவிர வேறு வழியில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் பாஜகவின் புரோக்கர்கள் சிலர் நம் எம்பிக்களை சுற்றி வருவது எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் தமிழகத்தில் காலூன்ற எதுவும் செய்வார்கள். நமது எம்பிக்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
இப்படி எவ்வளவு தான் தங்கள் கட்சியை சேர்ந்த எம்.பிக்களுக்கு அறிவுரை கூறினாலும் மத்தியில் அசுர பலத்துடன் ஆட்சியமைத்துள்ள பாஜகவை கண்டு எல்லா கட்சிகளும் அச்சமடைந்துள்ளது போல திமுக தரப்பும் அச்சத்தில் உள்ளதாகவே கூறப்படுகிறது.
இணையத்தில் வெளியான நடிகை நிவேதா பெத்துராஜின் படு சூடான வீடியோ..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!
மதுரையில் பிறந்து துபாயில் படிப்பை முடித்துவிட்டு “ஒரு நாள் கூத்து” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த படத்தையடுத்து உதயநிதி ஸ்டாலினிடன் கதாநாயகியாக ‘பொதுவாக எம் மனசு தங்கம்’ படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் வெங்கட்பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ படத்திலும் இவர் நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் ‘டிக் டிக் டிக்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல், சங்கத்தமிழன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள இவருக்கு அடுத்தாக கையில் வேறு எந்த பட வாய்ப்பும் இல்லை.
இந்நிலையில், சமீபத்தில் விழா ஒன்றில் இவர் நடனம் ஆட ஒத்திகை பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நிவேதா பெத்துராஜின் இடுப்பு டான்ஸ் என்ற பெயரில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோ :
பிரபலமான Cam Scanner செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்! அதிர்ச்சியில் பயன்பாட்டாளர்கள்
கேம் ஸ்கேனர் (Cam Scanner) செயலில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் அதனை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமான செயலி கேம் ஸ்கேனர் (Cam Scanner). பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வரையும் அனைவரது ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அனைவரும் தங்கள் கோப்புகளை புகைப்படங்களாக எடுத்து பிடிஎப் (PDF) கோப்புகளாக மாற்றம் செய்து பகிர்வதில் தற்போது வரையில் முதல் இடத்தில் இருப்பது கேம் ஸ்கேனர். இப்படிப்பட்ட செயலியில் பாதுகாப்பு குறைகள் இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்.
உலகம் முழுவதும் 100 மில்லியன் மேற்பட்டோர் இந்த செயலியை உபயோகித்து வருகின்றனர். நவீன உலகில் ஆன்ட்ராய்டு போன்களின் எழுச்சி மிகப்பெரிய வரப்பிரசாதம், இருந்தாலும் இதன் மூலமாகவும் பல சிக்கல்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் விளைவாக தான் கேம் ஸ்கேனர் (cam scanner) புதுப்பிக்கப்பட்ட செயலியில் தற்போது விளம்பர மால்வேர் வைரஸ் ஒன்று இருப்பதாகவும்இருப்பதாக கேஸ்பெர்ஸ்கீ ஆண்டி வைரஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இந்த மால்வேர், பயனாளர்களுக்கு ஆபாச விளம்பரங்களை காண்பிக்கும் என்றும், பயனாளரின் அனுமதியின்றி சந்தாதாரராக்குகிறது என்றும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கூகுள் நிறுவனம் கேம் ஸ்கேனர் (Cam scanner) செயலியை நீக்கியுள்ளது. இந்த வைரஸ் பிரச்சனை ஆண்ட்ராய்டு வகை மொபைல் போன்களில் மட்டுமே உள்ளதாகவும் மற்ற ஓ.எஸ்-களில் பிரச்சினை இல்லை என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
இதுபோல இன்னும் பல செயலிகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அந்த செயலியை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தலாம்! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி
வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தம் செய்து கொள்ளலாம், தேர்தல் ஆணையம் இதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இணையத்தளம் மற்றும் சிறப்பு செயலி மூலம் செப்டம்பர் 1 ஆம் முதல் 30 ஆம் தேதி வரை ஒரு மாதம் வரையில் தாங்கள் மாற்றம் செய்ய வேண்டிய பெயர், முகவரி, புகைப்படம், பிறந்தநாள் தேதி போன்றவற்றை வாக்காளர்களே திருத்தம் செய்யலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது இந்திய தேர்தல் ஆணையம் EVP எனப்படும் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் வாக்காளர்களே வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை செப்டம்பர் 1 முதல் 30 வரை மாதம் முழுவதும் செய்யலாம், வாக்காளர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
திருத்தங்களை மேற்கொள்ள வாக்காளர் அடையாள எண்ணை NVSP என்ற இணையதளத்தில் அல்லது சிறப்பு செயலியில் செலுத்தி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களான ஆதார் அட்டை, பான் அட்டை, பாஸ் போர்ட் புத்தகம், நிரந்தர வங்கி கணக்கு புத்தகம், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் போன்றவற்றில் எதாவது ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் பிறகு திருத்தங்களை மேற்கொள்ளலாம். பின்னர் சம்மந்தப்பட்ட வாக்குசாவடி அலுவலர்கள் தங்கள் வீடுகளுக்கே வந்து ஆய்வு செய்து திருத்தங்களை ஏற்று கொள்வார்கள்.
கணிணி அல்லாதவர்கள் இ- சேவை மையங்கள் மூலமாகவும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி!
நாடு முழுவதும் புதியதாக 75 மருத்துவ கல்லூரிகளை தொடங்க நேற்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் படி 2021-2022 ஆண்டுக்குள் மருத்துவ கல்லூரி செயல்பாட்டுக்கு வரும். இதன் மூலம் சுமார் 15700 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நினைவில் கொண்டும் பொதுமக்களுக்கு இன்னும் பல மருத்துவர்கள் கிடைப்பதற்கும் இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த கல்லூரியில் 200 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் மாவட்ட மருத்துவமனையுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலக்கரி சுரங்கம் அது சார்ந்த கட்டமைப்பு துறைகளில் 100 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
டிஜிட்டல் மீடியா எனப்படும் மின்னணு செய்தி துறையில் 26 சதவீதம் அன்னிய முதலீட்டிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஒற்றை வணிகக் குறியீடு உள்ள நிறுவனங்களுக்கு ஆன்லைன் சில்லறை வணிகத்தில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டது. சொந்தமாக விற்பனை மையங்கள் அமைக்கபட வேண்டும் என்ற நிபந்தனையும் ரத்து செய்யப்பட்டது.
திமுகவில் குழப்பத்தை உண்டாக்கிய ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார்! அதிருப்தியில் தங்க தமிழ்செல்வன்
அரசியலில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரும் புதிருமாக இருந்த அதிமுக மற்றும் திமுகவினர் முன்னாள் தமிழக முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்கு பிறகு ஓரளவு நெருங்கி பழங்க ஆரம்பித்தனர். அந்த வகையில் தான் சமீபத்தில் தேனி மாவட்டத்திற்கு ஆய்விற்காக சென்ற திமுக பொருளாளர் துரைமுருகன் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமாரை சந்தித்து பேசியுள்ளார். இது எதேச்சையாக நடந்த சந்திப்பாக இருந்தாலும் இதையும் தற்போது அரசியலாக்கி திமுகவில் குழப்பதை உண்டாக்கி விட்டார்கள்.
சமீபத்தில் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமாரை திமுக பொருளாளரான துரைமுருகன் சந்தித்து பேசியதை அமமுகவிலிருந்து திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு பிடிக்காமல் புலம்ப ஆரம்பித்து விட்டாராம். இதற்கு முன் அதிமுக மற்றும் அமமுகவில் இருந்து கொண்டு அரசியலில் கோலோச்சிய தங்க.தமிழ்ச்செல்வன் சமீபத்தில் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அண்மையில் திமுகவில் இணைந்தார்.
இவ்வாறு அதிமுகவிலிருந்து வெளியேறி அமுககவில் கொஞ்சகாலம் செயல்பட்ட இவர் அமமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் தான் மட்டும் இணையாமல் தன்னுடன் தனது ஆதரவாளர்கள் பத்தாயிரம் பேரையும் ஸ்டாலின் முன்னிலையில் இணைத்தார். இந்நிலையில் தான் சட்டசபை பொதுகணக்கு குழுத் தலைவர் என்ற முறையில் தேனி மாவட்டத்திற்கு ஆய்வுக்காக சென்ற திமுக பொருளாளர் துரைமுருகன், அங்கு ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி.யை எதேச்சையாக சந்தித்து பேசினார். இவர்களுடைய இந்தச் சந்திப்பு தான் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
அரசியலில் இவரு எவ்வளவு பெரிய சீனியர்..சின்னப்பையனிடம் போய் அரட்டை அடிக்கிறார்” என தனது ஆதரவாளர்களிடம் தங்க.தமிழ்ச்செல்வன் புலம்பி தள்ளியிருக்கிறார்.
துரைமுருகனுடனான சந்திப்பின் போது தங்க தமிழ்ச்செல்வனை வெறுப்பேற்றும் வகையில் வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் சிரித்து பேசிக்கொண்டிருப்பது போலவே புகைப்படம் எடுக்க வைத்தாராம் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார். இதன் மூலம் தனது செல்வாக்கு என்ன என்பதை உள்ளூர் அரசியல் எதிரியான தங்க.தமிழ்ச்செல்வனுக்கு புரிய வைத்துவிட்டார் அண்ணன் என்கின்றனர் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார் ஆதரவளர்கள்.
இந்த சம்பவத்தால் ஓ.பி.எஸ். மகன் – துரைமுருகன் சந்திப்பை பற்றி தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவதால், அவர்களுக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியாமல் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளாராம் தங்க தமிழ்செல்வன்.
இதனிடையே எங்களுக்கு கூட அந்தச் சந்திப்பில் உடன்பாடில்லை தான் என்றும், தேனி மாவட்டத்தில் திமுகவை அழிக்க அத்தனை வழிகளையும் அப்பாவும், மகனும் கையாண்டு வருகின்றனர். இருந்தாலும் இதைக் கூட அவர் புரிந்து கொள்ளவில்லையே என துரைமுருகனுக்கு எதிராக தேனி மாவட்ட திமுகவினரும் விமர்சித்து வருகின்றனர். எது எப்படியோ நல்லா இருந்த கட்சியில் குழப்பத்தை உண்டாக்கி விட்டார் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார். இதுவும் ஒரு வகையான ராஜதந்திரம் தான்.
சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்
சூழலியல் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி பியூஸ் மனுஷ் அவர்கள் நாட்டில் நிலவும் பொருளாதாரத்தேக்கம் குறித்தும், மிக மோசமானப் பொருளாதாரக் கொள்கை குறித்தும் சேலம் பாஜக அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை நோக்கிக் கேள்வியெழுப்பியதற்காக அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிற பாஜக நிர்வாகிகளின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, கருத்தியலால்தான் ஒருவரை வீழ்த்த வேண்டுமே ஒழிய அதனைச் செய்யாது ஒருமையில் விளிப்பதும், தனிப்பட்ட முறையில் ஆபாசமாகப் பேசுவதும், அவதூறு பரப்புவதும், தாக்குவதும், மிரட்டுவதுமான வன்முறைச்செயல்களில் ஈடுபடுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல! அவைச் சனநாயகத்தைக் கொலைசெய்யும் பாசிச நடவடிக்கைகளாகும்.
தம்பி பியூஸ் மனுஷின் குடும்பத்தினர் குறித்துத் தொடர்ச்சியாகப் பாஜகவினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதற்கு முடிவுகட்டும் விதமாகவும், பாஜகவின் நிர்வாகிகளோடு சித்தாந்த ரீதியாகவும், ஆட்சிமுறை குறித்தும் தர்க்கம் செய்யவே அவர் பாஜகவின் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார். பாஜக அலுவலகத்திற்குள் அவர் அத்துமீறி நுழையவுமில்லை. சண்டை, சச்சரவில் ஈடுபடும் நோக்கத்தோடு செல்லவுமில்லை என்பது அவரது முகநூல் நேரலை காணொளி மூலம் தெளிவாகத் தெரிகிறது. சேலம் பாஜகவின் அலுவலகத்திற்குள் சென்ற பியூஸ் மனுஷ் பாஜக நிர்வாகிகளுடன் தர்க்கரீதியாக வாதம் மட்டுமே செய்கிறார்.
ஒருகட்டத்தில் பாஜக நிர்வாகிகள் மிக மோசமாக ஒருமையில் பேசவும், மிரட்டவும் தொடங்கவே தனது வாதத்தை முடித்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்கிறார். அத்துடன் அவரது முகநூல் நேரலையையும் நிறுத்துகிறார். அதன்பிறகே அவர் மீது பாஜகவின் நிர்வாகிகள் கோரத்தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள். இவை மிகத் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் அரசியல் அநாகரீகமாகும். இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது ஓர் அரசின் தலையாயக் கடமையாகும்.
ஆகவே, சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்டப்பிரிவின்படி வழக்குப் பதிவுசெய்து அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
குடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் நோக்கில் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் குடிமராமத்து திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது, இதனால் தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆழப்படுத்தப்பட்டும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டும் வருகின்றன. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் புணரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ஏரி குளங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தவர்களிடமிருந்து மீட்டும் குடிமராமத்து பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமாக, நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருபவர்கள் முக்கியமானோர் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தான். இவர்களிடமிருந்து ஏரி குளங்களை மீட்டு திட்டப்பணிகளை செய்வது வருவாய் துறையினருக்கு சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு பக்கம் அதிகாரவர்க்கம் இன்னொரு பக்கம் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பு இவை எல்லாவற்றையும் சமாளிப்பது அவ்வளவு சுலபம் அல்ல, இருந்தாலும் நேர்மையான அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் தங்கள் கடமையை செய்து வருகின்றனர்.
தமிழக அமைச்சர்களின் பினாமிகளுக்கும் மற்றும் ஆளுங்கட்சியினருக்கும் தான் குடிமராமத்து பணிகளுக்கான ஒப்பந்த பணிகள் தரப்படுவதாக எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
நீர்நிலைகளை தூர்வாரும் போது வண்டல் மண் போன்ற கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் எதிர்கட்சிகள் வைக்கின்றனர். தமிழகம் முழுவதும் நடைபெறும் குடிமராமத்து பணிகளில் கனிம வளங்கள் வருவாய் துறையினர் உதவியுடன் தான் கொள்ளையடிப்பதாக புகார் எழுந்துள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட சதவீதத்தை லஞ்சமாக கொடுத்து விட்டு கனிம வளங்களை கொள்ளை அடிக்கின்றனர், கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுவான கோரிக்கை எழுந்துள்ளது.
எது எப்படியோ அதிகாரிகள் துணையுடன் ஆளுங்கட்சியினர் கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்டு வருவது அரசுக்கு அவப்பெயரை சேர்ப்பது தெளிவாக தெரிகிறது.
ஏடிஎம்களில் இனி ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்க 6 மணி நேரமாகுமா? திருட்டை தடுக்க வங்கிகளின் புதிய திட்டம்
நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் அதே சூழலில் அதை வைத்து நடைபெரும் குற்றங்களும் அதிகரித்து கொண்டே தான் வருகின்றது. கடந்த ஆட்சியில் செயல்படுத்த பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து மக்கள் வங்கிகளில் பணம் போடுவதும் அதை எடுக்க ஏடிஎம் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவதும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தவறான வழியில் பயன்படுத்தி ஏடிஎம் மற்றும் இணையதளங்கள் மூலமாக மற்றவர்களின் பணத்தை திருடுவது அதிகரித்து கொண்டே வருகிறது. இதை போன்ற இணையதள திருட்டுக்களை குறைக்க காவல் துறையினரும், வங்கிகளும் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தும் அதனால் பெரிதும் பயன் ஏற்படவில்லை.
இதனையடுத்து இனி எடிஎம்களில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதாக இருந்தால் அதற்கு ஒடிபி அவசியம் என்ற புதிய திட்டத்தை கொண்டு வர பெரும்பாலான வங்கிகள் பரிலீசித்து வருகின்றன. ஏற்கனவே இந்த திட்டத்தை கனரா வங்கி செயல்படுத்த தொடங்கிவிட்டது.இதனால் இணையதள திருட்டு பெருமளவு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இனி இதுபோல ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டாயம் உங்கள் மொபைல் போன் தேவைப்படும். இதன் மூலம் உங்கள் செல்போன் எண்ணிற்கு அனுப்பபடும் அந்த ஒடிபி எண் இருந்தால் மட்டுமே ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும் என்ற நிலையும் வர வாய்ப்பு உள்ளது.
அதிகரித்து வரும் ஏடிஎம் கார்டு மோசடிகளை தடுக்க பெரும்பாலான வங்கிகள் இது போன்ற புதிய பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுக்க உள்ளன.
கனரா வங்கியின் பாதுகாப்பு திட்டம்
இது போன்ற ஆன்லைன் திருட்டை தடுக்க ஏற்கனவே கனரா வங்கி ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது ஒடிபி அவசியம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கனரா வங்கி செயல்படுத்திய இந்த பாதுகாப்பு திட்டத்தை மற்ற அனைத்து வங்கிகளும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது பற்றியும் பரிலீசித்து வருகின்றன.
மொபைல் ஆப்களின் எழுச்சி
இனி வரும் காலங்களில் எடிஎம்களின் பயன்பாட்டை குறைத்து மொபைல் ஆப் மூலம் பண பரிவர்த்தனை செய்வதை ஊக்குவிக்கவும் சில வங்கிகள் திட்டமிட்டுள்ளது. இது குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கி சேர்மன் ரஜ்னீஸ் குமார் பேசும் போது, நீண்ட காலமாக நடக்கும் ஏடிஎம்களை அடிப்படையாக கொண்ட பணப் பரிவர்த்தனைகளை முடிவுக்கு கொண்டு வந்து, மொபைல் ஆப் மூலம் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஆலோசித்து வருகிறோம் என்றும் கூறியிருக்கிறார்.
ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு
இந்நிலையில் வங்கி ஏடிஎம்களில் நடக்கும் இது போன்ற மோசடிகளை தடுப்பது குறித்த வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஏடிஎம்களில் நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பணம் எடுப்பதற்கு தடை விதிக்கலாமா என்றும் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது
பணம் எடுக்க இடைவெளி
மேலும் இது மட்டுமில்லாமல் ஒரு முறை பணம் எடுத்தால் அடுத்த முறை பணம் எடுப்பதற்கு குறைந்த பட்சம் 6 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ஒடிபி அவசியம் என்ற திட்டத்தை கொண்டுவருவது குறித்தும் பரிலீசிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் விடுமுறை நாட்களில் பெரும்பாலான எடிஎம்களில் முறையாக பணமே வைத்திருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பரவலாக எழுந்து வருகிறது.இந்நிலையில் வங்கிகள் தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பை மேம்படுத்த முயற்சிக்காமல் 6 மணி முதல் 12 மணி நேரம் வரை பணம் எடுக்க காத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்க முயற்சிப்பது மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும் என்பது தெளிவாகிறது.
ஐ.நா சபையில் பேச மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டாரா? திமுகவின் வெட்கம் கெட்ட விளம்பரம்! வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி
“ஐநா சபையில் பேச மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டாரா? திமுகவின் வெட்கம் கெட்ட விளம்பரம்!”
“உலக தலைவர்கள் வரிசையில் ஐநா சபையில் பேச மு.க. ஸ்டாலினை அந்த ஐநா சபையே அழைத்துள்ளது” – இப்படி ஒரு அப்பட்டமான கட்டுக்கதையை, வெட்கமே இல்லாமல் திமுகவினர் பரப்பி வருகின்றனர்!
“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடக்கிறது. ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அழைக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில்… ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தற்போதைய நிலை, காஷ்மீரில் அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து மு.க.ஸ்டாலின் விவாதிப்பார்” – இப்படி ஒரு மாபெரும் ‘பொய்’ செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியாவின் தமிழ் இணையப்பதிப்பு வெளியிட்டுள்ளது. இதே செய்தி தினத்தந்தியிலும் வெளியாகியுள்ளது.
“உண்மை என்ன?”
மு.க. ஸ்டாலினுக்கு ஐநா மனித உரிமைகள் பேரவை சார்பில் எந்த அழைப்பும் அனுப்பப்படவே இல்லை. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுகவினர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அதன் ஒப்புகை சீட்டை வைத்துக்கொண்டு, “ஐநா சபையே மு.க. ஸ்டாலினை அழைத்தது” என கதை கட்டுகிறார்கள்! ஆனால், இவர்கள் பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டிலேயே, அது அழைப்பு அல்ல. கணினியில் தானாக உருவாக்கப்பட்ட சான்று மட்டுமே என்று கூறியுள்ளார்கள் (This is not an invitation but a confirmation of registration generated automatically). (இது விசா விண்ணப்பத்திற்கு மட்டும் தான் உதவும்).
உண்மையில், ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டங்களில் பார்வையாளராக பங்கேற்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும், பேசவும், துணைக்கூட்டம் நடத்தவும் ஐநா அவையால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகளுக்கு அனுமதி உண்டு. மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அத்தகைய ஒரு அமைப்பு ஆகும் (NGO in Special Consultative with the United Nations ECOSOC). பசுமைத் தாயகம் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டால், யாருக்கு வேண்டுமானாலும், மு.க. ஸ்டாலினுக்கு வந்தது போன்ற கடிதம் வரும். (அதற்கான பதிவு செய்யும் இணைப்பை முதல் பின்னூட்டத்தில் காணலாம்).
MK Stalin-News4 Tamil Online Tamil News Channel
அதே போன்று, பிரான்சில் உள்ள Association Bharathi Centre Culturel Franco-Tamoul எனும் ஒரு NGO சார்பில் மு.க. ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். அதற்கான ஒப்புதல் சீட்டை ஐநாவின் கம்ப்யூட்டர் தானாக அனுப்பியுள்ளது (confirmation of registration generated automatically). அதை வைத்து திமுகவினர் கம்பு சுத்துகிறார்கள்.
மேலும், நடைபெற இருக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆம் கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் குறித்த விவாதம் இடம்பெறவில்லை. ஈழத்தமிழர் விவகாரம் அடுத்த ஆண்டு 2020 மார்ச் மாதம் நடைபெறும் 43 ஆவது கூட்டத்தில் தான் வர இருக்கிறது.
இந்நிலையில், “உலக நாடுகளின் தலைவர்கள் பட்டியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஐநா சபை அழைத்துள்ளது” என்றும், கூட்டத்தின் அஜெண்டாவிலேயே இல்லாத “ஈழத்தமிழர் விவகாரம் குறித்து மு.க. ஸ்டாலின் பேசுவார்” என்றும் கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் டைம்ஸ் ஆப் இந்தியா எழுதுகிறது.
இதில் மிகப்பெரிய வெட்கக்கேடு என்னவென்றால், இந்த தானியங்கி ஒப்புகை கூட – பிரான்ஸ் நகரில் உள்ள Association Bharathi Centre Culturel Franco-Tamoul அமைப்புக்கு தான். திமுகவுக்கு இல்லை! (மாறாக, பசுமைத் தாயகம் சார்பில் கலந்துகொள்கிறவர்கள் எல்லாம் நேரடியாக பசுமைத் தாயகம் சார்பில் கலந்துகொள்கிறார்கள்).
“திமுகவின் வெட்கம்கெட்ட விளம்பரம்: இது முதல்முறை அல்ல!”
பொய்யான கட்டுக்கதைகள் மூலம் அப்பட்டமாக புளுகுவது, திமுகவினருக்கு இது முதல் முறை அல்ல. இப்படித்தான் காலம் காலமாக பொய்யான பிம்பங்களை பொய்ச்செய்திகள் மூலம் உருவாக்கி ஏமாற்றி வருகிறார்கள். ‘திமுக தலைவர் கலைஞருக்கு ஆஸ்திரியா நாடு அஞ்சல் தலை வெளியிட்டது’ என்றும், மு.க. ஸ்டாலினுக்கு அமெரிக்காவின் தலைசிறந்த ‘கென்டக்கி கர்னல்’ விருது வழங்கப்பட்டது என்றும் மாபெரும் பொய்களை வெட்கமே இல்லாமல் அள்ளி விட்டவர்கள் தான் திமுகவினர்!
MK Stalin-News4 Tamil Online Tamil News Channel
ஐநா முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் என்பவர் அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் மு.க .ஸ்டாலினை புகழந்துள்ளதாக திமுகவினர் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பிய போது, அந்த ஜான் எலியாசனே கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரம் விநோதமானது (strange), வெட்கம் கெட்டது (brazen), பொய்ப்பித்தலாட்டம் என்பதாகவெல்லாம் அவர் திமுகவினரை கண்டித்தார்.
“நடக்காத ஐநா கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை: மு.க. ஸ்டாலின் அண்டப்புளுகு!”
மு.க. ஸ்டாலினை ஐநா அழைத்துள்ளதாக திமுகவினர் இப்போது ஓட்டுவது கூட புதிய படம் இல்லை. இது ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் ஓட்டிய பழைய படம் தான்!
2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூடிய ஐநா மனித உரிமைகள் பேரவையின் 35 ஆம் கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. ஆனால், இல்லாத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் – அப்போதே ஒரு மோசடி நாடகத்தை திமுகவினர் நடத்தினர்.
அப்போது திமுக வெளியிட்ட அறிக்கையில் “ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த முக்கியமான 35வது அமர்வில், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்” என்று மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
ஆனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. ஆனாலும், இல்லவே இல்லாத ஒரு கூட்டத்திற்கு தான் ஆழைக்கப்பட்டதாகவும், ஆனால் ‘சட்டமன்ற அலுவல்கள் காரணமாக, தான் கலந்துகொள்ள இயலவில்லை’ என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் ‘காமெடி’ கடிதம் எழுதினார்.
இப்படியாக, பொய்யான கட்டுக்கதைகளை கட்டமைத்து, தமிழர்களை நம்பவைத்து ஏமாற்றுவது திமுகவுக்கு கைவந்த கலை. இப்படித்தான் காலம் காலமாக பொய்யான பிம்பங்களை பொய்ச்செய்திகள் மூலம் உருவாக்கி ஏமாற்றினார்கள். அண்மை தேர்தலில் கூட ‘கடன் தள்ளுபடி’ என்று பொய்யுரைத்து வாக்குகளை வாங்கினார்கள்!