Home Blog Page 5930

அம்பேத்கர் சிலை உடைப்பு போராட்டத்தில் கலவரத்தை தடுக்க விடுதலை சிறுத்தைகள் மீது வழக்கு!

0

அம்பேத்கர் சிலை உடைப்பு போராட்டத்தில் கலவரத்தை தடுக்க விடுதலை சிறுத்தைகள் மீது வழக்கு!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு சிதைக்கப்பட்ட நிலையில் மறுநாளே அந்த இடத்தில் புதிய அம்பேத்கர் சிலையை நிறுவியுள்ளது தமிழக அரசு. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுகளைப் பெற்ற நிலையில் அம்பேத்கர் சிலைத் தகர்ப்பை ஒட்டி தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களை தமிழக அரசு கையாண்டுள்ள விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் லண்டனில் இருக்கும் நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை இடித்துத் தகர்க்கப்பட்ட இடத்தில் இரவோடு இரவாக புதிய சிலை ஒன்றைத் தமிழக அரசு நிறுவியிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கைக்கு ஏற்ப சிலையை நிறுவிய தமிழக அரசுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகப் பதற்றத்தைத் தணிக்கும் விதமாக தமிழக அரசு விரைந்து எடுத்துள்ள இந்த நடவடிக்கையைப் பாராட்டுகிறோம், நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோலவே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சாதி பயங்கரவாதிகளை ஒடுக்குவதிலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இதுவே ஒரு மோசமான முன்னுதாரணமாக ஆகிவிடும். எனவே, இதில் எவ்வித சமரசமும் கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், அவரது உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 26ஆம் தேதி அம்பேத்கர் சிலையைத் தீர்ப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் சிறுத்தைகள் கட்சியினர் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 20 இடங்கள் முதல் அதிகபட்சம் 40 இடங்கள் வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். அக்கட்சியின் வலிமைக்கேற்ப 30 பேர் முதல் 100-க்கும் மேற்பட்டோர் வரை சாலை மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

மறியல் செய்தவர்கள் மீது வழக்கமான நடவடிக்கை எடுத்து முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவர் மீதும் முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு காவல் துறை மேலிடம் நேற்று மாலை உத்தரவிட்டது.

பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், கூட்டமாகக் கூடி சதித் திட்டம் தீட்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அத்தனை பேர் மீதும் சில நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை பதிவு செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் இந்த நடைமுறை வித்தியாசமானதாகவும் விபரீதமானதாகவும் விடுதலைச் சிறுத்தைகளால் பார்க்கப்படுகிறது.

“தகர்க்கப்பட்ட சிலைக்குப் பதில் புதிய அம்பேத்கர் சிலையை தமிழக அரசு நிறுவியது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் கடுமையான எதிர்ப்பை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதை சமாளிக்க விடுதலைச் சிறுத்தைகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்ட சிறுத்தைத் தொண்டர்கள் ஒவ்வொருவர் மீதும் குற்றப்பத்திரிகை பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி அலைக்கழிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. ஜனநாயக ரீதியான போராட்டங்களை இப்படி அணுக ஆரம்பித்தால் அது அபாயத்தில்தான் போய் முடியும். இதுபற்றி, திருமாவளவனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்.

வழக்கம் போல் இல்லாமல் சிலை உடைந்த சில மணி நேரத்திற்குள் வேறு சிலையை வைத்து இதனால் பெரும் சாதி காலவரத்தை நடக்காமல் தடுத்துள்ளது தமிழக அரசு. மக்கள் நலனுக்கு அரசியல் செய்வதாக இருந்தால் இது போன்ற சம்பவங்களில் அமைதி காத்து சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். அதை விட்டு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய கூடாது என்பதை உணர்த்துவது போல போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களின் மீது தமிழக காவல் துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மேயரா? திமுகவின் அடுத்த அதிரடி திட்டம்

0

உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மேயரா? திமுகவின் அடுத்த அதிரடி திட்டம்

காலங்காலமாக திமுகவை கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களே ஆக்கிரமித்து இருப்பதால் அதனை தொடர்ந்து ‘வாரிசு கட்சி’ என்று விமர்சித்து வரும் சூழ்நிலையில் மீண்டும் அதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் வாரிசான உதயநிதி ஸ்டாலிக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் பதவியை வழங்கியுள்ளார். இதை கண்டு கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்களுக்குள் புலம்பி கொண்டாலும் வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் பெரும்பாலான திமுக நிர்வாகிகள் இனி ஸ்டாலினுக்கு அடுத்து அவரது வாரிசு உதயநிதி ஸ்டாலின் தான் என உறுதி செய்து கொண்டு அவர்களுடைய தற்போதைய பதவியை காப்பாற்றி கொள்ளவும்,முடிந்தால் உதயநிதி ஸ்டாலினை ஆதரிப்பதன் மூலம் மேலும் எதாவது உயர் பதவிகளை பெறவும் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவின் மீது வாரிசு கட்சி என்று விமர்சனம் செய்தாலும் கூட, அக்கட்சியில் ஸ்டாலினின் வளர்ச்சியானது படிப்படியாக வளர்வது போல மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக என்று நகர்ந்து மக்களை நம்ப வைத்து இன்று அக்கட்சியின் தலைவராகியிருக்கிறார். அடுத்து திமுக சார்பில் தமிழக முதல்வராகும் முயற்சியிலும் இருக்கிறார். இவ்வாறு தன்னைப் போலவே தனது வாரிசு உதயநிதி ஸ்டாலினையும் தான் ஆரம்பத்தில் அரசியல் வாழ்க்கையை தொடங்கியது போல  சென்னையின் மேயராக்கிட வேண்டும் எனும் ஆசை ஸ்டாலினுக்கு வந்திருக்கிறது என்கிறார்கள் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

இதற்காக தான் சமீபத்தில் அவர் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பதவியில் அமர வைக்கபட்டார். இந்த நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி என இரு தொகுதி இடைத்தேர்தல்களில் ஏதோ ஒரு தொகுதியில் அவரை போட்டியிட வைக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் அவருக்கு ஆதரவாக பேசி பார்த்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்டாலின் தன்னைப் போலவே தன் மகனையும் மேயர் பதவியில் அமர வைப்பதே அவரது விருப்பமாக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

இந்நிலையில் தான் விரைவில் அறிவிக்கப்படவுள்ள உள்ளாட்சி தேர்தலில் இதை செயல்படுத்த முயற்சிக்கிறார் என்றும் கூறபடுகிறது. அதில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு தன்னுடைய வாரிசு உதயநிதி ஸ்டாலினை போட்டியிட வைக்கும் முயற்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறாராம். இதைப்பற்றி உதயநிதி ஸ்டாலினிடமும் சொல்லப்பட்டு அவரும் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டார் என்கிறார்கள். ஒரு காலத்தில் அரசியலும் வேண்டாம் பதவியும் வேண்டாம் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அப்படி வேட்பாளராகும் பட்சத்தில், தி.மு.க. இளைஞரணியின் ஒட்டு மொத்த நிர்வாகிகளும் சென்னையில் அவருக்காக பணியாற்ற தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

அதிமுகவுடனான பாமக கூட்டணி தொடருமா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

0

அதிமுகவுடனான பாமக கூட்டணி தொடருமா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தற்போதுள்ள அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற இருப்பதாக பிரபல நாளிதழில் வெளியான செய்தியை, ‘இது உண்மை கலப்பற்ற பொய்ச் செய்தி’ என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக சேர்ந்து திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதிமுக கூட்டணியில் இணைந்த பாமகவிற்கு 7 மக்களவைத் தொகுதிகளையும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் அதிமுக வழங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாமல் படுதோல்வியைச் அடைந்த போதும், தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக தலைமையிலான ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தொடர்ந்து நீடிக்க உதவிய இந்த சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வட மாவட்டங்களில் அதிமுக வெல்வதற்கு பாமகவின் வாக்குகளும் பெரிதும் உதவியது.

நாடாளுமன்ற தேர்தலையடுத்து அதிமுகவில் அந்த 3 மாநிலங்களவை உறுப்பினருக்கான இடங்களைப் பிடிக்க அக்கட்சிக்குள்ளேயே போட்டிகள் இருந்ததை அனைவரும் அறிவர்.இந்நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் படி பாமகவிற்கு வழங்கிய அந்த 1 இடத்தை உறுதி செய்தது அதிமுக தலைமை. அந்த வகையில் அன்புமணி ராமதாசுக்கு மாநிலங்களவையில் ஓரிடத்தை அதிமுக வழங்கியது. இதனால், மகிழ்ச்சியடைந்த பாமக, எதிர்வரும் தேர்தல்களிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தொடர்ந்து கூறி வந்தது.

இந்நிலையில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வட தமிழகத்தில் 40 சதவீத இடங்களை பாமக கேட்க முடிவு செய்திருப்பதாகவும், அதில் ஒரு சதவீதம் குறைந்தாலும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாமக தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.

நாளிதழில் இந்தச் செய்தி வெளியான உடனேயே தவறான அந்தச் செய்தியை பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “ஊடகங்களுக்கு அறம் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், ஊடக அறம் என்பதன் அடிப்படைகூட அந்த நாளிதழுக்கு இல்லை என்பதையே இந்த செய்தி காட்டுகிறது. உள்ளாட்சி தேர்தலில் உடையுது கூட்டணி, தனித்து போட்டியிட தயாராகிறது பா.ம.க. என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தி அந்த நாளிதழின் தரத்தைக் காட்டுகிறது.  ஒரு செய்தி வெளியிடும்போது அதில் ஒரு விழுக்காடாவது உண்மை இருக்க வேண்டும். இது உண்மை கலப்பற்ற பொய் செய்தி!” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியை விட்டு பாமக செல்ல இருப்பதாக வெளியான இந்த செய்திக்கு மருத்துவர் ராமதாஸ் உடனடியாக மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்ததன் மூலமாக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடனான பாமகவின் இந்த கூட்டணி தொடரும் என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

அமைச்சர் செங்கோட்டையன் ஏன் இப்படிச் செய்தார்? மாணவர்களே தெரிந்து கொள்ளுங்கள்!

0

அமைச்சர் செங்கோட்டையன் ஏன் இப்படிச் செய்தார்? மாணவர்களே தெரிந்து கொள்ளுங்கள்!

பள்ளிக் குழந்தைகளே! தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே படியுங்கள்!

ஆம், இனி நமது பள்ளி மாணவர்கள் தொலைக்காட்சியைப் பார்த்து பாடம் கற்கலாம். தமிழக அரசானது கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளைச் சீறிய முறையில் செய்து வருகிறது. அதன் ஒருபடியாக ஆரம்பிக்கப்பட்டது தான் பள்ளி மாணவர்களுக்கான “கல்வித் தொலைக்காட்சி”.

அமைச்சர் செங்கோட்டையன் ஏன் இப்படிச் செய்தார்? மாணவர்களே தெரிந்து கொள்ளுங்கள்!

மாணவர்கள் வகுப்பறைக்கற்றல் முறை மற்றும் புத்தகங்களைப் பார்த்து படிக்கும் முறைகளைத் தாண்டி காணொளிக் காட்சிகள் மூலம் படிக்கும் போது அவர்களின் கற்றல்திறன் மேம்படும் என்ற ஆராய்ச்சிப்பூர்வமான தரவுகளின் அடிப்படையில் தொடங்கப்பட்டதே இந்தக் கல்வித் தொலைக்காட்சி ஆகும்.

இந்த மாதிரியான கற்றல் முறைகள் ஏற்கனவே பல்வேறு வளர்ந்த நாட்களில் நடைமுறையில் கொண்டுவரப்பட்டு வெற்றியும் அடைந்துள்ளது குறிப்பித்தக்கது ஆகும்.

அமைச்சர் செங்கோட்டையன் ஏன் இப்படிச் செய்தார்? மாணவர்களே தெரிந்து கொள்ளுங்கள்!

ஆக, ஏற்கனவே சோதனை முறையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கல்வித்தொலைக்காட்சி இன்றுமுதல் அதிகாரப்பூர்வமாக அரசு கேபிள் நிறுவனத்தால் ஒளிபரப்பப்படும். இந்த தொலைக்காட்சி சேனலை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில் துவங்கிவைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்ற அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

கனிமொழியின் மாமியாருக்கு இரங்கலா! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்.

0

கனிமொழியின் மாமியாருக்கு இரங்கலா! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்.

திமுகவின் இளைஞரணி கூட்டம் கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.இதில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக இளைஞரணி மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌ ‌‌‌

‌ ‌அதில் முக்கியமாக மறைந்த திமுக முன்னோடிகளான புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன்‌, அண்மையில் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி போன்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களின் மாமியார் சுசிலா கோவிந்தசாமிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது தான், முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சிக்காக ஆரம்ப காலம் முதல் பல தியாகங்களை செய்து கட்சியை வளர்த்து சுயநலம் பார்க்காமல் தனது வாழ்நாளை கழித்து உயிரிழந்த பல தொண்டர்கள் மற்றும் அடிமட்ட நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்காமல் தனது அத்தையின் மாமியார் என்ற காரணத்தால் இரங்கல் தெரிவித்துள்ளது திமுக உடன்பிறப்புகளுக்கு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ‌ ‌

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த திமுக நிர்வாகிகள் தற்போது உதயநிதி ஸ்டாலின் இந்த செயலில் ‌ஈடுபட்டது பல நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. திமுக ஒரு குடும்ப கட்சி என்று மக்களால் பெரிதும் பேசப்படுகிறது, கலைஞர், ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் என வரிசையாக திமுகவை ஆக்கிரமித்து கொண்டு இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் செய்யும் செயலை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்று உடன்பிறப்புகள் புலம்பி கொண்டு வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து! எச்சரிக்கும் சீமான்

0

அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து! எச்சரிக்கும் சீமான்

உலக வெப்பமயமாதல் காரணமாக அமேசான் காடுகளின் அழிவு என்பது அந்த பகுதிக்கான பாதிப்பு மட்டுமல்ல உலக முழுவதும் இதனால் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

அமேசான் காட்டில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த காட்டுத்தீ தற்போது வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் அங்கு மொத்தமாக 73000 காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இதில் 90% காட்டுத் தீ இன்னும் அணையவில்லை. நாளுக்கு நாள் அமேசான் காட்டில் காட்டுத் தீ புதிதாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த அமேசான் தீ தொடர்பாக தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் சீமான் சார்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரேசில் நாட்டிலுள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ அணையாது இரு வாரங்களாக கொளுந்துவிட்டு எரிகிற செய்தி உலகம் முழுக்க வாழும் சூழலியல் ஆர்வலர்களிடையே பெருங்கவலையையும், சூழலியல் குறித்த பேரச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்தப் பூமிப்பந்திற்கே ஆக்சிசனைத் தரும் அமேசான் காடுகளில் ஏற்பட்டிருக்கிற இக்காட்டுத்தீ கடந்தாண்டு ஏற்பட்டதைவிட 86 மடங்கு அதிகம் என எச்சரிக்கிறார்கள் சூழியல் செயற்பட்டாளர்கள்.

அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து! எச்சரிக்கும் சீமான்

சூழலியல் குறித்தப் பார்வையோ, அக்கறையோ இல்லாத பிரேசில் அதிபர் போல்சோனரோ அமேசான் காடுகளின் அழிவைத் தடுக்க எவ்வித முன்முயற்சியையும் எடுக்காதிருப்பதும், அமேசான் காடுகளில் இருக்கிற கனிம வளங்களை வேட்டையாடுவதற்குக் கடைவிரிக்கிற வகையில் அந்நாட்டின் சூழலியல் கொள்கையை வகுத்திருப்பதும் வேதனைக்குரிய செய்திகளாகும்.

ஒட்டுமொத்த உலகில் மனிதர்கள் சுவாசிக்கக்கூடிய ஆக்சிசன் மூச்சுக்காற்றில் 20 விழுக்காட்டினை அமேசான் காடுகளே தந்து உதவுகின்றன. அத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணியினைச் செய்வதாலேயே அமேசான் காடுகளை உலகின் நுரையீரல் என அழைக்கிறார்கள். அத்தகைய அதிஉன்னதக் காடுகளில்தான் தற்போது காட்டுத்தீ பரவி மிகப்பெரிய இயற்கை சீரழிவு ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாக ஈரப்பதமின்மையால்தான் காட்டுத்தீ ஏற்படுகிறது. ஆனால், தற்போது ஈரப்பதம் இருந்தும் அமேசான் காடுகள் தீப்பிடித்து எரிவதற்குக் காரணம் முழுக்க முழுக்க காடுகளை அழிக்கும் ஆளும் வர்க்கத்தின் வரம்பற்ற இயற்கைச் சுரண்டல்தான் எனத் தெரிவிக்கிறார்கள் சூழலியல் பேரறிஞர்கள்.வரும் நூற்றாண்டில் இப்பூவுலகு எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரும் சிக்கலாக இருக்கப்போவது புவி வெப்பமாதலும், காலநிலை மாற்றமும்தான்.

அதனை உலகின் மிக முக்கியமானச் சூழலியல் செயற்பட்டாளர்கள் அத்தனைப் பேரும் உறுதிசெய்துவிட்டார்கள். அதனைத் தடுக்க உலகின் முதன்மை நாடுகள் யாவும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் இயற்கைக்கு எதிரான செயற்பாட்டை இன்னும் அந்நாடுகள் நிறுத்தியபாடில்லை. பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிற இந்நாட்டின் பிரதமர் மோடி ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பேசுகிறபோது, ‘இயற்கையைப் பாதுகாக்கிற பாரம்பரியத்தில் வந்த இந்தியா ஒருபோதும் இயற்கைக்கு எதிரான வேலையினைச் செய்யாது’ என முழங்கினார்.

அவர் இட்டிருக்கிற ஒப்பந்தத்தின்படியும், அவர் கூறியிருக்கிற கூற்றின்படியும், பூமியைப் பிளந்து மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எனப் புதைபடிம எரிபொருட்களை ஒருபோதும் எடுக்கக்கூடாது. மேலும், இயற்கை சமநிலையை நிலைநிறுத்த காடுகளைக் காக்க வேண்டும். புதிதாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். ஆனால், அதனைச் செய்யாது காடுகளில் வாழும் பூர்வக்குடிகள் மீது அத்துமீறி தாக்குதல் தொடுத்து அவர்களை அவர்களது மண்ணைவிட்டு வெளியேற்றி வனவேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

நாட்டில் இருக்கிற இயற்கை வளங்களை தனியார் முதலாளிகளின் இலாபவெறி வேட்டைக்குத் தாரைவார்த்து அதனை இரையாக்க அத்தனைச் சட்டங்களையும் முதலாளிகளுக்கு ஆதரவாக வளைத்துக் கொண்டு இருக்கிறது இந்தியாவை ஆளும் மோடி அரசு.புவி வெப்பமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதால் கடல்நீர் மட்டம் உயர்வடைந்து உலகம் முழுக்கக் கடற்கரையோரப் பகுதிகள் யாவும் வரும் நூற்றாண்டில் பெரிய அழிவைச் சந்திக்கும் என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதனால், லண்டன், நியூயார்க், ஷாங்காய், தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட உலகின் பெருநகரங்கள் தங்களது நிலப்பகுதியைக் கடற்கோளுக்கு இழந்து, இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக மாறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான வங்காளதேசம் 2100ஆம் ஆண்டு கடலில் மூழ்கி வாழ்வதற்குத் தகுதியற்ற நிலமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து! எச்சரிக்கும் சீமான்

2050ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொள்ளப் போகும் சிக்கலை உணர்ந்து, அந்நாட்டின் நகரான ஜகார்த்தாவிலுள்ள தலைநகரை மாற்ற முடிவெடுத்துள்ளது இந்தோனேசியா.காலநிலை மாற்றத்தால் உலகமே விழிபிதுங்கி நிற்கிற தற்காலச் சூழலில் உலகின் அரிய வாழ்விடமாக விளங்கும் அமேசான் காடுகள் அழிவது மிகப்பெரிய சூழலியல் அசமத்துவத்தையும், மோசமான தாக்கத்தையும் உருவாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் தீவிரமாக இயங்க வேண்டிய நெருக்கடி நிலையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணித்து வந்த அமேசான் காடுகள் காட்டுத்தீயால் அழிவுக்குள்ளாகியிருப்பது மிக மோசமான எதிர் விளைவுகளை உருவாக்கும். சூழலைக் காத்து வந்த அமேசான் காடுகள் அழிந்து வருவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் ஒருபுறமிருக்க, மறுபுறம் தீப்பிடித்துள்ளதால் அவை அதிகப்படியானக் கார்பனை வெளியிட்டும் வருவதால் மிகவேகமான காலநிலை மாற்றத்தை உருவாக்கும் அபாயம் இருக்கிறது.

‘தற்போது பூமியில் வெளியாகும் கார்பனை உள்வாங்க போதிய மரங்கள் இல்லை’ என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது பி.பி.சி. இது பூவுலகின் கடைசி காலம் என எச்சரிக்கிறார்கள் சூழலியல் நிபுணர்கள். வேறு கிரகத்திற்குப் பயணப்படுங்கள் என எச்சரித்துவிட்டுச் சென்றிருக்கிறார் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங். அழிவின் விளிம்பில் இருக்கிற இயற்கை அன்னையைக் காக்க காடுகளால் மட்டுமே முடியும்.

அதனை அழியவிடுவது இப்பூமிப்பந்தை மிகப்பெரும் அழிவிலேயே கொண்டுபோய் நிறுத்தும். ஆகவே, இயற்கைத்தாயின் மடியாக விளங்கும் அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து. மானுடக்குலத்தின் அழிவுக்கே வழிவகுக்கும் பெருந்தீங்கு என்பதனை உணர்ந்து இனியாவது சூழலைக் காக்க அணியமாவோம், என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

வேலை வாங்கி தருவதாக 600 பெண்களை ஆபாசமாக படமெடுத்த சென்னை வாலிபர்

0

வேலை வாங்கி தருவதாக 600 பெண்களை ஆபாசமாக படமெடுத்த சென்னை வாலிபர்

தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த 600 பெண்களிடம் வேலை தருவதாகக் கூறி அவர்களுடைய நிர்வாண புகைப்படங்களை வாங்கியதாக சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் வேலை தேடும் பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 29 வயதான திருமணமான பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம், தனக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி தன்னை மயக்கி நிர்வாணப் புகைப்படங்களை பெற்றதாக சென்னையைச் சேர்ந்த ஆண் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து பல மாத தீவிர தேடுதல் மற்றும் விசாரணைக்குப் பின்னர் சென்னையைச் சேர்ந்த 33 வயதான சாப்ட்வேர் எஞ்சினியர் ராஜ் செழியன் என்ற பிரதீப்பை தெலங்கானா காவல் துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தான் இந்த க்ளெமெண்ட் ராஜ் செழியன் என்ற பிரதீப் என்பவர். இவரது மனைவியும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவிக்கு பகல் நேரத்தில் வேலை, செழியனுக்கு இரவு நேரத்தில் வேலை. இதனால், பகல் நேரத்தில் இவருக்கு பொழுது போகாததால், செழியன் போலியான வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் ரிசப்ஷனிஸ்ட் ஆக பணியாற்ற பெண்கள் தேவை என்று தன்னுடைய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் செழியன் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை நம்பி நாடு முழுவதிலும் இருந்து பல பெண்கள் அவரை வேலைக்காக தொடர்பு கொண்டுள்ளனர். இதன் மூலமாக அவர்களின் போன் நம்பரைப் பெற்று பிரதீப் என்ற பெயரில் செழியன், நேர்காணல் செய்துள்ளார்.

பின்னர், அவர்களிடம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெண் HR தங்களிடம் பேசுவார் என்று கூறி, மேலும் வேலை உறுதியாகக் கிடைக்கும், ஆனால் அவர்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நம்பிக்கை தரும் விதமாக பேசிய இந்த செழியன் பேச்சை அந்தப் பெண்களும் நம்பியுள்ளனர். அதன் பிறகு, அந்தப் பெண்களை தொடர்பு கொண்டு பேசி மயக்கி, வேலை உறுதியாக கிடைக்கும் நல்ல சம்பளம் என்று வார்த்தைகளில் ஆசையை தூண்டி, அவர்களிடமிருந்து நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுள்ளார். இவ்வாறு நம்பிக்கை தரும் வகையில் பேசிய செழியனின் பேச்சில் மயங்கிய பெண்களும் அவர்களது புகைப்படங்களை அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து, அடுத்தகட்டமாக நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியீடுவேன் என கூறி பயமுறுத்தி அவர்களை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு, ஆடைகளைக் கழற்றுமாறு மிரட்டி அதனையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதுமட்டும் அல்லாது இதற்காக அவர்களிடமிருந்து பணமும் பெற்றுள்ளார். இப்படி அவர் 16 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 600 பெண்களிடம் பேசி ஏமாற்றி நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வேலை வாங்கி தருவதாக 600 பெண்களை ஆபாசமாக படமெடுத்த சென்னை வாலிபர்

செழியனிடம் சிக்கிய பெண்களில் 60 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். அவரிடம் சிக்கியவர்களில் ஒரு சிலரே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் தமிழ் பெண்களிடம் இப்படி பேசினால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் தமிழக பெண்களை செழியன் பெரும்பாலும் தேர்வு செய்யவில்லை. இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த அனைத்து உண்மைகளும் தற்பொழுது வெளியே வந்துள்ளது.

கடந்த ஓராண்டாக இந்த மோசடி செயலில் ஈடுபட்டு வந்து தற்போது சிக்கிய இந்த செழியனிடமிருந்து 2 செல்போன்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து அந்த செல்போன்களை தடவியல் சோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், செழியனிடம் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திராவிட அரசியல் இது தானா? திமுகவை பட்டியலிட்டு விமர்சிக்கும் பாஜகவின் ஹெச்.ராஜா

0

திராவிட அரசியல் இது தானா? திமுகவை பட்டியலிட்டு விமர்சிக்கும் பாஜகவின் ஹெச்.ராஜா

கடந்த முறை பாஜக ஆட்சி அமைத்ததை விட இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது தமிழக அளவில் திராவிட அரசியல் பேசும் அரசியல் கட்சிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,திராவிட கழக தலைவர் வீரமணி போன்றோர் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களையும் எதாவது காரணம் கூறி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்யும் விமர்சனத்தில் பெரியார் கொள்கை,திராவிடம்,திராவிட மண்,பெரியார் மண்,திராவிட அரசியல் என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தமிழகத்தில் திராவிட அரசியல், பெரியார் மண் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அரசியல் நிலைப்பாடு குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் எவையெல்லாம் திராவிட அரசியல் என்று பட்டியலிட்டு ஹெச். ராஜா திமுகவை விமர்சனம் செய்திருக்கிறார். சமூக வலைத்தளமான ட்விட்டரில் திமுகவின் திராவிட அரசியல் என்ன என்பதை பட்டியலாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

திமுகவை விமர்சனம் செய்யும் வகையில் வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாவது.

  • சாராய ஆலையை நடத்தியபடியே, ‘டாஸ்மாக்’கை மூடச் சொல்வது.
  • இந்தி சொல்லி கொடுக்கும் பள்ளி நடத்திகொண்டு, இந்தியை எதிர்ப்பது.
  • கர்நாடகாவிலிருந்து தண்ணீர் தரவில்லையென போராட்டம் நடத்தியபடியே, ஜோலார்பேட்டை தண்ணீரை சென்னைக்கு தர மாட்டேன் என அறிவிப்பது. 
திராவிட அரசியல் இது தானா? திமுகவை பட்டியலிட்டு விமர்சிக்கும் பாஜகவின் ஹெச்.ராஜா
  • தன் பிள்ளைகளை பல லட்சம் ரூபாய் கட்டி, பள்ளிகளில் படிக்க வைத்து, அதே கல்வியைக் கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும், ‘நவோதயா’வை எதிர்ப்பது.
  • இந்து நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசியபடி, பிற மதக் கூட்டங்களில் பங்கேற்பது.
  • கோடிக்கணக்கான ரூபாய் குவித்து, ஊழலை நடமாட விடமாட்டோம் என்பது தான் திராவிட அரசியல்.

ட்விட்டரில் ஹெச்.ராஜா பதிவிட்டுள்ள இந்தப் பட்டியல்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்நிலை!

0

தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவர சோதனையில் இறங்கி உள்ளனர், இலங்கை வழியாக 6 தீவீரவாதிகள் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் தமிழகத்திற்கு நுழைந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்ததை அடுத்து பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளது. ‌‍‌‌ ‌‍‍ கோவையில் தீவீரவாதிகள் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருப்பதால் அந்த மாவட்டம் முழுவதும் தீவிர காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தெரிகிறது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம், வேளாங்கண்ணி ஆலய திருவிழா போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகளை சீர்குலைக்க தீவீரவாதிகள் திட்டம் தீட்டி உள்ளதாக தெரிகிறது! ‌ இதனையடுத்து கோவை முழுவதும் மாநகர காவல்துறையினர் அதிரடியாக பல சோதனை சாவடிகளை அமைத்து சோதனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் சந்தேகபடும்படி இருக்கும் நபர்கள் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கும்படி காவல்துறையினர் கேட்டுள்ளனர்! ‌ காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த உளவுத்துறை தெரிவித்ததை தொடர்ந்து தீவிரவாதிகள் தங்கள் கோழைத்தனத்தை நிரூபிக்க தமிழகம் பக்கம் திரும்பி உள்ளதாக தெரிகிறது!

ஒரு தமிழரை தெலுங்கராக அடையாளப்படுத்துவதா? கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள்

0

ஒரு தமிழரை தெலுங்கராக அடையாளப்படுத்துவதா? கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள்

ஆகஸ்டு 22 இரண்டாம் தேதியான நேற்று முன்தினம் சென்னை மக்கள் சென்னையின் பிறந்த நாளினை பெரு மகிழ்வோடு கொண்டாடினர். ஆம் நேற்றோடு சென்னைக்கு வயது 380 முடிந்து 381 ஆரம்பித்து விட்டது. பிறந்த நாள் தொட்டு இன்று வரை சென்னையானது அசுரவளர்ச்சி அடைந்து வருவது மட்டுமின்றி தன்னை மென்மேலும் வலுப்படுத்திக்கொண்டே வருகிறது.

என்ன தான் மிகப் பெரிய மாநகரமாக வளர்ந்திருந்தாலும் அதற்கான விதையைப் போட்டது சென்னையின் அன்றைய மண்ணின் மைந்தர்களான பச்சைத் தமிழர்கள் ‘தாமல் சகோதரர்கள்’ ஆவர். ‘சென்னப்பநாயகர் பட்டினம்’ என்பதே சென்னையின் முழுப்பெயர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த சென்னப்பநாயகரின் மகன்களே காஞ்சிபுரம், தாமல் பகுதியைச் சேர்ந்த வேங்கடப்ப நாயகர் மற்றும் அய்யப்பநாயகர் ஆவர்.

ஒரு தமிழரை தெலுங்கராக அடையாளப்படுத்துவதா? கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள்

ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி யானது இந்தியாவில் தங்களது வணிகத்தளத்தை அமைக்க கடலோரத்தில் இடம் தேடியபோது அவர்கள் தேர்ந்தெடுத்ததே பழவேற்காட்டிற்கு தெற்கே இருந்த மாதரசன்பட்டினம் என்னும் ஊரின் அருகில் இருந்த இடம் ஆகும். கிபி 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரியான் ‘ப்ரான்சிஸ் டே ( FRANCIS DAY) ‘ என்பவர் பூந்தமல்லியைத் தலைநகராகக் கொண்டு மாதரசன்பட்டினத்தை ஆட்சி செய்த தாமல் சகோதரர்களிடம் அந்த இடத்தில் வணிக மையம் அமைக்க கோரிக்கை வைத்த பொழுது அதற்கு அவர்கள் ஒரு நிபந்தனையோடு சம்மதம் தெரிவித்தனர்.

புதிதாக அமையவிருக்கும் வணிக நகருக்குத் தங்கள் தந்தையாரின் பெயரை வைக்கவேண்டும் என்ற நிபந்தனை தான் அது. அதற்கு ‘ப்ரான்சிஸ் டே’ அவர்கள் சம்மதிக்கவே ஒப்பந்தமானது தங்கத்தகட்டில் பொறிக்கப்பட்டது. அதன்படி வணிக மையம் ‘சென்னப்பநாயகர் பட்டினம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஒரு தமிழரை தெலுங்கராக அடையாளப்படுத்துவதா? கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள்

இந்த சென்னப்பநாயகர் என்பவர் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த பல்லவர்கள், காடவராயர்கள், சம்புவராயர்கள் வழிவந்தவர்கள் ஆகும். ஆகவே சென்னையானது முழுக்க முழுக்க தமிழர்களுக்குச் சொந்தமான மாநகரமாகும்.

இந்த தகவலானது சென்னை தினக் கொண்டாட்டத்தை தன்னிச்சையாக நடத்திய சென்னை மக்கள் அளித்த வரலாற்றுத் தரவுகள் மூலம் அறியப்பட்டது ஆகும். (பாட்டாளி மக்கள் கட்சியின் கிளை அமைப்பான ‘பசுமைத்தாயகம்’ சென்னை நாள் கொண்டாட்டத்தில் சென்னப்பநாயகர் க்கு அரசுவிழா எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்) இவர்கள் மேலும் கூறியதாவது,

சென்னப்பநாயகர் தெலுங்கர் என்பது போன்ற செய்திகள் இணையதளப் பக்கங்களில் காணக் கிடைப்பதாகவும் அவை உண்மையல்ல என்றும், சென்னப்பநாயகர் வேளிர் வழிவந்த பச்சைத்தமிழர் என்பதை வலராற்றுத் தரவுகளோடு நிறுவுவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகக் கூறினர்.

இந்த பெருமைக்குரிய தமிழரை தெலுங்கராக இணையதளத்தில் அடையாளப்படுத்த முயற்சிக்கும் நபர்களை கண்டித்து அதை சரி செய்யுமாறு தமிழ் ஆர்வலர்களும்,பாட்டாளி மக்கள் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.