மதம்சார்ந்த பெயர்கள் சின்னங்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு!! உச்சநீதிமன்றம் தள்ளுபடி!!

மதம்சார்ந்த பெயர்கள் சின்னங்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு!! உச்சநீதிமன்றம் தள்ளுபடி!!

மதம்சார்ந்த பெயர்கள், சின்னங்களை பயன்படுத்தும் அரசியல்கட்சிகளுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக சையது வசீம் ரிஸ்வி தாக்கல் செய்த பொதுநல மனுவில், வாக்காளர்களை கவர மதம்சார்ந்த பெயர்கள், சின்னங்களை பயன்படுத்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அரசியல்கட்சிகளுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் சில அரசியல் கட்சிகள் இவற்றை பயன்படுத்தி வருகின்றன. அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷா … Read more

ஈரநில அளவையாளர் வீட்டில் 11 பவுன் – ரூ.70 ஆயிரம் பணம் திருட்டு!! மர்மநபர்கள் கைவரிசை!

ஈரநில அளவையாளர் வீட்டில் 11 பவுன் - ரூ.70 ஆயிரம் பணம் திருட்டு!! மர்மநபர்கள் கைவரிசை!

ஈரோட்டில் நள்ளிரவில் துணிகரம் நில அளவையாளர் வீட்டில் 11 பவுன் – ரூ.70 ஆயிரம் பணம் திருடி மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிக் யூனிட் பகுதி- 3 சேர்ந்தவர் தமிழரசு. பால் வண்டி டிரைவராக உள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கவின்ராஜ் என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். கவின்ராஜ் கோத்தகிரியில் நில அளவையாளராக பயிற்சி பெற்று வருகிறார். முத்தம்பாளையத்தில் கவின்ராஜ் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கீழ்தளத்தில் வீட்டின் உரிமையாளரும், … Read more

சேலம் மாவட்டம் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்!

சேலம் மாவட்டம் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்!

சேலம் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம். சேலம் கன்னந்தேரி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் விழாவில் ஆபாச நடனம் ஆடியதால் சர்ச்சை. சேலம் எடப்பாடி அருகே கன்னந்தேரி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடன நிகழ்ச்சி நடத்த கிராம மக்கள் காவல்துறையில் அனுமதி கேட்டனர். ஆனால் காவல்துறையிலனர் அனுமதி அளிக்கவில்லை.இதனால் விழா குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதிப்பெற்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி … Read more

நாகர்கோவில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது!

நாகர்கோவில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது!

நாகர்கோவிலில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவர் தனது வீட்டின் காம்ப வுண்டுக்குள் விலை உயர்ந்த சைக்கிள் ஒன்றை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது சைக்கிள் மாயமாகி இருந்தது. இதை யடுத்து ராஜீவ் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் … Read more

விழுப்புரம் அருகே 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு!

விழுப்புரம் அருகே 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு!

விழுப்புரம் : ஜானகிபுரம் பகுதியில் 6 வயது கொண்ட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, 14 முதல் 17 வயதுடைய 4 இளைஞர்கள் கடந்த 29 ஆம் தேதி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, சிறார் மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாட்டம்!

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாட்டம்!

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாடப்பட்டது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தினம் ஆளுநர் மாளிகையில் கொண்டாட்டம். பிற மாநில ஆளுநர் மாளிகைகளில் தமிழ்நாடு உருவான தினத்தை கொண்டாடினால் சிறப்பாக இருக்கும், விழாவில் பங்கேற்ற மராட்டிய மாநில தொழிலதிபர் கருத்து தெரிவித்தார். தமிழக ஆளுநர் மாளிகையில் முதல்முறையாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தினம் இன்று கொண்டாடப்பட்டது. வரும் காலங்களில் இந்த விழா இன்னும் சிறப்பாக கொண்டாடப்படும் … Read more

பணம் மற்றும் பரிசுகள் கொடுத்து மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது – மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு பதில்!

பணம் மற்றும் பரிசுகள் கொடுத்து மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது - மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு பதில்!

பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு அளித்துள்ளது. தஞ்சை லாவண்யா தற்கொலைக்கான மூல காரணத்தை கண்டறிய என்ஐஏ, சிபிஐ அல்லது என் எச் ஆர் சி மற்றும் என் சி பி ஆர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று … Read more

என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!

என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!

என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கத்தாழை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள 683 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தற்போது முக்கிய பிரச்சினையாக என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை உள்ளது. உரிய இழப்பீடு மற்றும் நிரந்திர வேலை … Read more

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இந்த வாரம் முதல் தொடக்கம்!!

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இந்த வாரம் முதல் தொடக்கம்!!

வரும் கல்வி ஆண்டில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு , இந்த வாரத்தில் இருந்து துவங்குகின்றன . இது குறித்த அறிவிப்பு இரு தினங்களில் வெளியாகும் என உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வரும் 8 ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இதை அடுத்து உயர்கல்வி சேர்க்கைக்கான பணிகள் பல்வேறு துறைகளிலும் வேகம் எடுத்து இருக்கின்றன. குறிப்பாக, பொறியியல் படிப்பில் அதிக அளவில் மாணவர்கள் சேர்வதால் இது குறித்த எதிர்பார்ப்பு … Read more

வெயிலால்..100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை!

வெயிலால்..100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை!

வெயிலால் 100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை. மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி காட்பாடி அடுத்த கரிகிரி ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர். கோடை தொடங்கியதில் இருந்து வேலூரில் அதிகப்படியான வெயில் கொளுத்தி வருவதால் மதியம் வரை 100 நாள் வேலை செய்வதில் சிரமம் உள்ளது. ஆகவே கோடை … Read more