10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி

10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகவிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டின் தீபாவளியும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில மாதங்களில் ஒன்பது முறை அறிவிக்கப்பட்டு அனைத்து ரிலீஸ் தேதிகளும் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு வந்ததால் தனுஷ் ரசிகர்கள் பெரும் … Read more

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளர் இருப்பதுண்டு. அந்த வகையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக மீராமிதுனையே நெட்டிசன்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவி மற்றும் தமிழக போலீஸ், தமிழக அரசு மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில் அவர் கூறியதாவது: தற்போது என்னை … Read more

ஆன்லைன் சினிமா டிக்கெட்: களத்தில் குதிக்கும் அமேசான்

ஆன்லைன் சினிமா டிக்கெட்: களத்தில் குதிக்கும் அமேசான் ஆன்லைன் வர்த்தகத்தில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் கால்பதித்து வணிகம் செய்து வரும் நிலையில் தற்போது அடுத்ததாக சினிமா டிக்கெட் விற்பனையும் செய்யவுள்ளது அமேசான் நிறுவனம் ’புக் மை க்ஷோ’ ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனத்துடன் இணைந்து சினிமா டிக்கெட்டுகளை விற்பனை செய்ய உள்ளது இதற்காக அமேசான் நிறுவனத்தின் செயலியில் சினிமா டிக்கெட்டுக்கு என ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more

சிறையில் கண்ணீர் வடிக்கும் 50 பிகில் கைதிகள்

சிறையில் கண்ணீர் வடிக்கும் 50 பிகில் கைதிகள் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தியேட்டரில் அதிகாலை சிறப்பு காட்சி திரையிடப்படவில்லை என்று ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதும், இதனையடுத்து சம்பவம் நடந்த அன்று 32 விஜய் ரசிகர்களும் நேற்று 18 ரசிகர்களும் என மொத்தம் 50 ரசிகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் தற்போது சிறையில் இருக்கும் பிகில் கைதிகளை பார்த்து அவர்களுடைய பெற்றோர்கள் … Read more

மீண்டும் ரீமேக் ஆகும் ‘பிங்க்’: அஜித் கேரக்டரில் பிரபல நடிகர்

மீண்டும் ரீமேக் ஆகும் ‘பிங்க்’: அஜித் கேரக்டரில் பிரபல நடிகர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் தல அஜித் நடித்து இருந்தார் என்பதும் அந்தப் படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளார். இது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த … Read more

ரஜினிக்கு மத்திய அரசின் சிறப்பு விருது: அரசியல் லாபத்திற்கா?

ரஜினிக்கு மத்திய அரசின் சிறப்பு விருது: அரசியல் லாபத்திற்கா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு விருதை ஒன்றை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இன்று செய்தியாளர்களை சற்று முன் சந்தித்த மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் ’நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு விருது வழங்குவதாக அறிவித்தார், மேலும் இம்மாதம் கோவாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த விருது … Read more

இந்த அதிவேகம் விஜய்க்கு மட்டும் தானா? தமிழக அரசுக்கு தமிழ் நடிகை கேள்வி!

இந்த அதிவேகம் விஜய்க்கு மட்டும் தானா? தமிழக அரசுக்கு தமிழ் நடிகை கேள்வி! விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி விஜய் ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்றது. இந்த படம் ஒரே வாரத்தில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் ரிலீசான அக்டோபர் 25-ஆம் தேதி அதிகாலை காட்சி பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் மட்டும் ஒரு … Read more

பரவை முனியம்மா மருத்துவசெலவு: கண்டுகொள்ளாத அரசு, கருணையுடன் நடந்து கொண்ட மருத்துவமனை

சிங்கம் போல நடந்து வர்ரான் செல்ல பேராண்டி’ என்ற பாடல் மூலம் மிகப்பெரும் புகழ் பெற்றவர் பரவை முனியம்மா. கிராமிய பாடல்கள், திரைப்பட பாடல்கள் என அவர் பாடிய சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பரவின தூள் படத்தில் விக்ரமுடன் நடித்த பரவை முனியம்மாவுக்கு அதன் பின்னர் நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைத்ததால் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்தார். இந்த நிலையில் 83 வயதான பரவை முனியம்மா கடந்த சில மாதங்களாக கிட்னி பாதிப்பால் … Read more

ஜெயலலிதாவின் திரைப்படத்திற்கு எதிராக தீபா நீதிமன்றத்தில் வழக்கு!

ஜெயலலிதாவின் திரைப்படத்திற்கு எதிராக தீபா நீதிமன்றத்தில் வழக்கு! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ’தலைவி’ என்ற டைட்டிலில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து 28 ஹிட் படங்களில் நடித்துள்ளது மட்டுமின்றி ஜெயலலிதாவின் … Read more

விஜய்சேதுபதியின் 33வது பட டைட்டில் அறிவிப்பு

விஜய்சேதுபதியின் 33வது பட டைட்டில் அறிவிப்பு மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 33வது படத்தின் டைட்டில் சற்றுமுன் சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டு டைட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற அழகான தமிழ் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் நடித்து வரும் படங்களுக்கு ‘சங்கத்தமிழன்’ உள்ளிட்ட தூய தமிழ் டைட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இயக்குனர் வெங்கடகிருஷ்ணா ரோஹித் … Read more