ஆம்புலன்ஸ் பணியாளர்களின் நேர்மைக்காக குவியும் பாராட்டுகள்!

ஆம்புலன்ஸ் பணியாளர்களின் நேர்மைக்காக குவியும் பாராட்டுகள்!

ஒரத்தநாடு அருகே விபத்தில் சிக்கி கிடந்தவரிடம் இருந்த ரூ4.20 லட்சம் ரொக்கத்தை அவரது தந்தையிடம் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒப்படைத்தனர். இதனால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது37). இவர் பல பணிகளுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலையாட்கள் அனுப்பும் பணி செய்து வருகின்றார். இவ்வாறு அனுப்பிய பணியாளர்களுக்கு இன்று சம்பளம் கொடுப்பதற்காக ரூ4.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு அதிகாலை 5 மணியளவில் ஒரத்தநாட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர் செல்லும் வழியான பாப்பாநாட்டில் தனியார் பள்ளி அருகில் இருக்கும் சாலையில் உளுந்தை காய வைப்பதற்காக நேற்று இரவே கொட்டி குவியலாக வைத்திருந்தனர். அதிகாலை என்பதால் அந்த குவியல் அலெக்சாண்டருக்கு தெரியாததால், அதில் மோதி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வந்து அலெக்சாண்டரை ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது அலெக்சாண்டரிடம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 309 ரொக்கம் இருந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ணன்(30) மற்றும் டெக்னீஷியன் தவக்குமார்(32) ஆகியோர் அப்பணத்தை பத்திரமாக எடுத்து வைத்தனர்.

உடனடியாக அலெக்சாண்டரை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் அலெக்சாண்டரின் தந்தை செல்வராஜை தொடர்பு கொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த அவரின் தந்தையிடம் ரொக்க பணத்தை ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒப்படைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ணன் மற்றும் டெக்னீஷியன் தவக்குமார் ஆகியோரின் இச்செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Read more

இது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்! கொந்தளிக்கும் மரு.ராமதாஸ்!

Dr.Ramadoss

“சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக  சுற்றுச்சூழல் துறையின் புதிய நிலைப்பாடு மக்கள் விரோதமானது!”  என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக, அந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த புதிய நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. … Read more

பஸ் விடமாட்டிங்களாயா? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு!

பஸ் விடமாட்டிங்களாயா? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு!

பஸ் விடமாட்டிங்களாயா ? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இன்றுவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தான் உள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது தமிழக அரசு. கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், அதற்கான தடுப்பூசிகள் ,தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க முடியாதது வருத்தத்திற்குரியது.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் … Read more

மீண்டும் வருகிறது பொது முடக்கம்! என்ன ஆகும் நம் எதிர்காலம்?

மீண்டும் வருகிறது பொது முடக்கம்! என்ன ஆகும் நம் எதிர்காலம்?

மீண்டும் ஒரு முடக்கம்!   ஆகஸ்டிலும் ஒரு பொது முடக்கத்தை எதிர்கொள்ளப் போகிறோம். தளர்வுகள் இருப்பதாக சொல்லிக்கொண்டாலும், பொதுப்போக்குவரத்தும், சிறிய வேலைகளில் ஈடுபடக்கூடிய முழுமையான சூழலும் இல்லாத நிலையில் ஏழை மற்றும் கீழ்நடுத்தரவர்க்க மக்களின் வாழ்வாதாரச் சூழல் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பணியிழப்புகள், சம்பள இழப்புகள், வியாபாரமின்மை முதலானவை அடுத்த மாதங்களில் உச்சங்களைத் தொடக்கூடும்.   மக்களுடைய மனநிலையிலும் விடுதலைக்கான பரிதவிப்பும் எதிர்காலம் குறித்த அச்சமும் மன அழுத்தஙளை உருவாக்கிவிடக்கூடும். வாடகை தொடங்கி பள்ளிக்கட்டணம் வரை ஏற்கனவே எல்லா … Read more

தமிழக முதல்வர்க்கு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி கவலை இல்லையா? மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வர்க்கு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி கவலை இல்லையா? மு.க.ஸ்டாலின்!

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முப்போகம் விளைந்த நிலமெல்லாம் ஒரு  போக விளைச்சலுக்கே போராடித் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், விளைந்த நெல்லையும் முறையாகக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் அலட்சியம் காட்டி வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், அதனை … Read more

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சித் தகவல். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது சொந்தப் பாட்டியால் கிணற்றில் வீசப்பட்ட இளம் பிஞ்சுகள். கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி குடிகாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் திருஞானசம்பந்தம் இவர் ஒரு சலவைத் தொழிலாளி இவரது மனைவி கீர்த்தனா இவர்களுக்கு அமுதினி ,ரிஷிகா என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாமியார் ஊரான தியாகதுருகத்திற்கு தனது 2 … Read more

பாட்டியே தனது இரண்டு பேத்திகளையும் கொன்ற சம்பவம்: கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்!

பாட்டியே தனது இரண்டு பேத்திகளையும் கொன்ற சம்பவம்: கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்!

கள்ளக்குறிச்சி அருகே பாட்டியே தனது இரண்டு பேத்திகளையும் கிணற்றில் தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். இவருடன் மனைவி கீர்த்தனா மற்றும் இரண்டு மகள்கள் அமுதினி (வயது 2), ரிஷிகா (வயது 4) உள்ளனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ‌தான் தனது மாமியார் வீடான தியாகதுருகத்திற்கு தனது பிள்ளைகளையும் மனைவியையும் திருஞானசம்பந்தம் அழைத்து … Read more

தொடரும் வழிப்பறி: சென்னையில் பரபரப்பு!

தொடரும் வழிப்பறி: சென்னையில் பரபரப்பு!

சென்னை பாடியில் இரவு அலுவலக பணி முடிந்து வீட்டிற்குச் சென்ற ஒருவரை மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடியில் டி.வி.எஸ் நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தில் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். எப்போதும் போல் பணியை முடித்துவிட்டு அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் வழக்கமாக வரும் இருசக்கர வாகனத்தில் அன்று பெட்ரோல் இல்லாத காரணத்தால் வண்டியை தள்ளிக்கொண்டே … Read more

ஆகஸ்ட் முதல் இனி ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் கிடையாது:? தமிழக அரசு அறிவிப்பு!

ஆகஸ்ட் முதல் இனி ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் கிடையாது:? தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் இலவசமாக கொடுக்கப்பட்டு வந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இனிவரும் மாதங்களில் இலவசமாக கிடையாது என்று தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வைரஸின் தாக்கம் மற்றும் மக்களின் இயல்புநிலை பாதிக்காத வண்ணம் தமிழக அரசு அவ்வபோது  சில தளர்வுகளுடன் ஊரடங்கை  அறிவித்தது. நாளையுடன் ஆறாம் கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் உள்ளது. மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா? … Read more

+1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

+1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

+1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு பிளஸ்-1 பொது தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ்-2வின் ஒரு பாடத்திற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அவர்கள் செய்திகள் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் பேசியவாறு தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in இந்த இணையதளங்களின் வழியே மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் … Read more