தொடரும் வழிப்பறி: சென்னையில் பரபரப்பு!

0
187

சென்னை பாடியில் இரவு அலுவலக பணி முடிந்து வீட்டிற்குச் சென்ற ஒருவரை மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாடியில் டி.வி.எஸ் நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தில் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். எப்போதும் போல் பணியை முடித்துவிட்டு அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் வழக்கமாக வரும் இருசக்கர வாகனத்தில் அன்று பெட்ரோல் இல்லாத காரணத்தால் வண்டியை தள்ளிக்கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அம்பத்தூர் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள், வெங்கட்ராமனை கத்தியால் அவரது தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர்.

மயக்கமடைந்த வெங்கட்ராமனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொரட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று, திருமுல்லைவாயலை சேர்ந்த உலகப்பன், ஒரகடம் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரும் இரவு பணி முடிந்து வீடுதிரும்பிக்கொண்டிருந்த நிலையில் இதே 3 மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் மணிபர்ஸை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த 10 நாட்களில் மட்டும் 30க்கும் மேற்பட்டோரிடம் இதுபோன்ற வழிப்பறி நடைபெற்றிருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇந்தியாவின், தற்போதைய இறக்குமதியும் பொருளாதார வளர்ச்சியின் நிலை?
Next articleபங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here