பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதில் உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடை?

பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதில் உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடை?

பக்ரீத் பண்டிகை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுவதாக உள்ளது.மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் பக்ரீத் பண்டிகை விழா குறித்து  மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு தாக்கலில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாடு,ஒட்டகம் போன்றவற்றை பொதுவெளிகளில் வெட்ட அனுமதிக்கக்கூடாது எனவும் விழா நாட்களின் போது ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விலங்குகள் கொண்டு வரப்படுவதாகவும், அந்த நிலையில் அரசு விதிகளை பின்பற்ற  தவறுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.இந்த வழக்கினை விசாரிக்க நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் கடந்த ஜூன் 20ஆம் தேதி பொது இடங்களில் விலங்குகளை பலியிடுவதற்கான தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகவும், மஹாராஷ்டிரா மாநில அரசு பக்ரீத் பண்டிகையை வீட்டில் வைத்து எளிய முறையில் கொண்டாடும்படியும், பொது இடங்களில் மத விழாக்களாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் இம்மனு  குறித்து விசாரிக்க ஆஜரான வழக்கறிஞர் , அரசின் கருத்துக்களை அறிந்து தெரிவிக்க கால அவகாசம் வேண்டி கோரிக்கை விடுத்தனர்.ஆனால் பக்ரீத் பண்டிகை நெருங்கியுள்ள நிலையிலும், தமிழகத்தின் ஆகஸ்ட் 31ம் தேதி ஊரடங்கு அமலில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் பொது இடங்களில் விலங்குகள் பலியிட தடை விதிக்க மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என  தமிழக அரசும், காவல்துறையினரும் உத்தரவிட்டனர்.

Read more

இரு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது! ப.சிதம்பரம்.

இரு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது! ப.சிதம்பரம்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், 2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.இது போதாது என்று இப்பொழுது இரண்டு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது (1) தொலைதொடர்பு (2) விமானப் போக்குவரத்து தொலை தொடர்பு துறையில் ஒரு பெரிய நிறுவனம் விரைவில் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விமானப் போக்குவரத்துத் துறையில் மூன்று பெரிய தனியார் நிறுவனங்களும் ஏர் இந்தியாவைப் போல் பயணிகளும் இல்லாமல் பணமும் இல்லாமல் … Read more

சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார் 

சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார் 

தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சா.கந்தசாமி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 80 ஆகிறது. இவர் 1940-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தார். இவர் 1968ல் எழுதிய சாயாவனம் என்னும் நாவல் மூலம் எழுத்துலகில் பிரபலமானார். இந்த நாவலை தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. மேலும், 1998ல் விசாரணைக் கமிசன் என்ற … Read more

வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக பயன்படுத்தும் இளைஞர்கள்!

வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக பயன்படுத்தும் இளைஞர்கள்!

வலி நிவாரண மாத்திரை, மருந்துகளை போதை பயன்பாட்டிற்காக விற்பனை செய்த இருவரை, காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை துரைப்பாக்கம், பெருங்குடி, வேளச்சேரி ஆகிய பகுதியில் வலி நிவாரணி மாத்திரை, மருந்துகளை போதைக்காக அதிகம் பயன்படுத்துவதாக துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அதன்பெயரில், போலீசார்   தனிப்படை அமைத்து கடந்த 15 நாட்களாக பெருங்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வந்தனர். இந்நிலையில், பெருங்குடி பறக்கும் ரயில் நிலையம் அருகே வலி … Read more

சாலை விரிவாக்க பணியால் மக்கள் கடும் அவதி!

சாலை விரிவாக்க பணியால் மக்கள் கடும் அவதி!

திண்டுக்கல் நத்தம் இடையிலான 35 கி.மீட்டா் நீள சாலையியை சுமார் 190 கோடி செலவில் விரிவாக்கப் அரசு கடந்த ஆண்டு திட்டமிட்டது. 7 மீட்டராக உள்ள சாலையை, 10 மீட்டா் அகலம் கொண்ட தாா் சாலையாக மாற்றி அமைக்க திட்டமிட்டனர். அதற்கான பணிகளும் கடந்த ஆண்டில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த சாலை குறுகியதாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. வர்த்தக மாவட்டம் என்பதால் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருப்பதனால் தேசிய … Read more

ஆம்புலன்ஸ் பணியாளர்களின் நேர்மைக்காக குவியும் பாராட்டுகள்!

ஆம்புலன்ஸ் பணியாளர்களின் நேர்மைக்காக குவியும் பாராட்டுகள்!

ஒரத்தநாடு அருகே விபத்தில் சிக்கி கிடந்தவரிடம் இருந்த ரூ4.20 லட்சம் ரொக்கத்தை அவரது தந்தையிடம் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒப்படைத்தனர். இதனால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது37). இவர் பல பணிகளுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலையாட்கள் அனுப்பும் பணி செய்து வருகின்றார். இவ்வாறு அனுப்பிய பணியாளர்களுக்கு இன்று சம்பளம் கொடுப்பதற்காக ரூ4.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு அதிகாலை 5 மணியளவில் ஒரத்தநாட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர் செல்லும் வழியான பாப்பாநாட்டில் தனியார் பள்ளி அருகில் இருக்கும் சாலையில் உளுந்தை காய வைப்பதற்காக நேற்று இரவே கொட்டி குவியலாக வைத்திருந்தனர். அதிகாலை என்பதால் அந்த குவியல் அலெக்சாண்டருக்கு தெரியாததால், அதில் மோதி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வந்து அலெக்சாண்டரை ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது அலெக்சாண்டரிடம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 309 ரொக்கம் இருந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ணன்(30) மற்றும் டெக்னீஷியன் தவக்குமார்(32) ஆகியோர் அப்பணத்தை பத்திரமாக எடுத்து வைத்தனர்.

உடனடியாக அலெக்சாண்டரை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் அலெக்சாண்டரின் தந்தை செல்வராஜை தொடர்பு கொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த அவரின் தந்தையிடம் ரொக்க பணத்தை ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒப்படைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ணன் மற்றும் டெக்னீஷியன் தவக்குமார் ஆகியோரின் இச்செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Read more

இது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்! கொந்தளிக்கும் மரு.ராமதாஸ்!

Dr.Ramadoss

“சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக  சுற்றுச்சூழல் துறையின் புதிய நிலைப்பாடு மக்கள் விரோதமானது!”  என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக, அந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த புதிய நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. … Read more

பஸ் விடமாட்டிங்களாயா? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு!

பஸ் விடமாட்டிங்களாயா? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு!

பஸ் விடமாட்டிங்களாயா ? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இன்றுவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தான் உள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது தமிழக அரசு. கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், அதற்கான தடுப்பூசிகள் ,தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க முடியாதது வருத்தத்திற்குரியது.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் … Read more

மீண்டும் வருகிறது பொது முடக்கம்! என்ன ஆகும் நம் எதிர்காலம்?

மீண்டும் வருகிறது பொது முடக்கம்! என்ன ஆகும் நம் எதிர்காலம்?

மீண்டும் ஒரு முடக்கம்!   ஆகஸ்டிலும் ஒரு பொது முடக்கத்தை எதிர்கொள்ளப் போகிறோம். தளர்வுகள் இருப்பதாக சொல்லிக்கொண்டாலும், பொதுப்போக்குவரத்தும், சிறிய வேலைகளில் ஈடுபடக்கூடிய முழுமையான சூழலும் இல்லாத நிலையில் ஏழை மற்றும் கீழ்நடுத்தரவர்க்க மக்களின் வாழ்வாதாரச் சூழல் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பணியிழப்புகள், சம்பள இழப்புகள், வியாபாரமின்மை முதலானவை அடுத்த மாதங்களில் உச்சங்களைத் தொடக்கூடும்.   மக்களுடைய மனநிலையிலும் விடுதலைக்கான பரிதவிப்பும் எதிர்காலம் குறித்த அச்சமும் மன அழுத்தஙளை உருவாக்கிவிடக்கூடும். வாடகை தொடங்கி பள்ளிக்கட்டணம் வரை ஏற்கனவே எல்லா … Read more

தமிழக முதல்வர்க்கு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி கவலை இல்லையா? மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வர்க்கு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி கவலை இல்லையா? மு.க.ஸ்டாலின்!

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முப்போகம் விளைந்த நிலமெல்லாம் ஒரு  போக விளைச்சலுக்கே போராடித் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், விளைந்த நெல்லையும் முறையாகக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் அலட்சியம் காட்டி வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், அதனை … Read more