சேரலாதன் ராமகிருஷ்ணன் எங்களுடைய வாடிக்கையாளர் தான்-எங்கள் கிளையில் தான் வாட்ச் விற்பனை!

0
405
#image_title

சேரலாதன் ராமகிருஷ்ணன் எங்களுடைய வாடிக்கையாளர் தான் எங்கள் கிளையில் தான் வாட்ச் விற்பனை செய்யப்பட்டது என பிரபல வாட்ச் கடையின் கிளை மேலாளர் தகவல்.

சென்னையில் ரூ.3 லட்சத்திற்கு ரஃபேல் வாட்சை வாங்கியதாக கூறிய அண்ணாமலை, அதற்கான பில்லை இன்று வெளியிட்டார். அதில் சேரலாதன் இராமகிருஷ்ணன் என்ற பெயரில் கடந்த 2021ம் தேதி விற்பனை செய்ய்ப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அதில் அவருடைய தொடர்பு எண்ணும், ஜி.எஸ்.டி எண்ணும் அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை பந்தய சாலையில் இங்கிவரும் ஜிம்சன் வாட்ச் கடையின் கிளை மேலாளர் பிரசாத் என்பவரிடம் கேட்டபோது ஆம் எங்கள் கிளையில் தான் 2021 ஆம் ஆண்டு இந்த வாட்ச் விற்பனை செய்யப்பட்டது.

எனவும் சேரலாதன் ராமகிருஷ்ணன் எங்களுடைய வாடிக்கையாளர் தான் என தெரிவித்தார். அதேசமயம் தற்போது வாட்சைப் பற்றி பேசுவதற்கு உகந்த நேரமில்லை அதனால் பேட்டி கொடுக்கவில்லை என தெரிவித்தார்.

அண்ணாமலை கையில் கட்டியிருப்பது வெளிநாட்டு வாட்ச் என்றும், அது பல லட்சம் மதிப்புடையது என்றும் திமுகவினர் விமர்சித்தனர். ஆனால், அது ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் தயாரிக்கப்பட்ட வாட்ச் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, இந்த வாட்ச் வாங்கியதற்கான ரசீதை அண்ணாமலை வெளியிட வேண்டும் என திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதற்கு, வாட்ச் வாங்கியதற்கான ரசீது தன்னிடம் இருப்பதாகவும், அதை விரைவில் வெளியிடுவதாகவும் அண்ணாமலை கூறினார்.

மேலும், திமுகவின் இந்த ஆட்சிக்காலம் மட்டுமல்லாமல், கடந்த ஆட்சிக் கால ஊழல் பட்டியலும் சேர்த்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதன்படி இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ரஃபேல் வாட்ச் பில்லை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

3 லட்சத்திற்கு இந்த வாட்சை நான் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரஃபேல் வாட்சை வாங்கினேன். 2021ம் ஆண்டு இந்த வாட்சை வாங்கிய அவர், மே மாதம் என்னிடம் கொடுத்தார்” என்று தெரிவித்தார். மேலும் ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார்.

author avatar
Savitha