பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி! மன்னிப்பு கேட்ட பிறகு பழங்குடியின இளைஞருடன் மதிய உணவு அருந்திய முதல்வர்!!

0
41

பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி! மன்னிப்பு கேட்ட பிறகு பழங்குடியின இளைஞருடன் மதிய உணவு அருந்திய முதல்வர்!!

 

ஓரிரு நாட்களுக்கு முன்னர் பாஜக கட்சியை சேர்ந்தவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தப்பட்ட  பழங்குடியினந்தை சேர்ந்த இளைஞன்  முதல்வர் சிவராஜ் சிங் சைஹான் அவர்களுடன் அமர்ந்து மதிய உணவருந்தினார். இதற்கு முன்னர் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்கள் பழங்குடியின இளைஞர் தாஸ்மத் ராவத் அவர்களின் கால்களை கழுவி அவரிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

 

மத்திய பிரதேச ம்நிலத்தான் சித்தி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர் தாஸ்மத் ராவத் முகத்தின் மீது பாஜக கட்சியை சேர்ந்த பர்வேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து பாஜக கட்சியை சேர்ந்த பிரவேஷ் சுக்லா மீது எஸ்.சி வன்கொடுமை தடுப்புச் சட்டம்,தேசிய பாதுகாப்பு சட்டம் என இரண்டு சட்டங்களுக்கு கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரவேஷ் சுக்லா அவர்கள் கைது செய்யப்பட்டார்.

 

இதையடுத்து இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர் தாஸ்மத் ராவத் அவர்களை முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்கள் அவருடைய வீட்டிற்கு அழைத்தார்.

 

அதன்படி நேற்று அதாவது ஜூலை 6ம் தேதி வியாழக்கிழமை காலையில் முதலமைச்சர் சிவ

வராஜ் சிங் சௌஹான்  வீட்டிற்கு வந்த இளைஞர் தாஸ்மத் ராவத் அவர்களின் கால்களை முதல்வர் சிவர்ஜ் சிங் சௌஹான் அவர்கள் சுத்தம் செய்து மன்னிப்பு கேட்டார்.

 

பின்னர் பழங்குடியின இளைஞர் தாஸ்மத் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவை அவருடன் சேர்ந்து அமர்ந்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்கள் அருந்தினார். இது நொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.