பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம்! உயர் ஜாதியினர் முதுகில் குத்திய முதலமைச்சர் ஸ்டாலின்! விழித்துக் கொள்வார்களா உயர் ஜாதியினர்?

0
76

உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு எனவும் தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதோடு அனைத்து கட்சி கூட்டத்திற்கும் தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது அதன் அடிப்படையில் தலைமை செயலகத்தில் இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் பங்கேற்று கொண்டனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் இந்த கூட்டத்தை புறக்கணித்தது. அதேபோல பாஜகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஆனால் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வரிசையில் இருக்கும் எந்த கட்சியுமே பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு சாதகமான கட்சிகளை மட்டும் ஒன்று கூட்டி அனைத்து கட்சி கூட்டம் இன்று நடத்திவிட்டு அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது, அதன் மூலமாக அனைவரின் கருத்தும் பெறப்பட்டது என்ற ஒரு மாயையை ஏற்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்று அதிமுகவினர் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே அனைத்து கட்சி கூட்டத்தில் தேசிய முதலமைச்சர் ஸ்டாலின் நீதிக்கட்சி ஆட்சியில் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. காலகாலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அதன் பிறகு தான் பள்ளி கல்லூரிகளுக்கும் நுழைந்தார்கள். கல்வியின் மூலமாக வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இன்று சமூகநீதி கொள்கைக்கு மிகப்பெரிய பேராபத்து உண்டாகியுள்ளது சமுதாயத்தில் முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் பாஜகவின் திட்டம் இட ஒதுக்கீட்டால் திறமை போய்விட்டது என்று தெரிவித்து வருபவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை மட்டும் ஏற்கிறார்கள் இதில் இருக்கின்ற சூட்சமத்தை நான் சொல்லத் தேவையில்லை. ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் நாம் எதிர்க்க மாட்டோம். வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்று சொல்வதா? மாதம் 62,000 க்கு மேல் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா பொருளாதார ரீதியில் வழங்கும் சலுகை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறினார்.

ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லும் அனைத்துமே பட்டியலினத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது பொதுவானவர்களின் கருத்தாக இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற்றவர்களின் தாழ்த்தப்பட்டவர்களே அதிகம்.

இன்றைய காலகட்டத்தில் அரசு பதவி என்ற மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்கள் சற்றேற குறைய 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் தான்.

அப்படி கணக்கிட்டுப் பார்த்தால் முதலமைச்சர் சொல்லும் அனைத்து விஷயங்களுமே தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமே பொருந்தும்.

ஆனால் முதலமைச்சர் அவர்களோ இதனை அப்படியே தலைகீழாக மாற்றி உயர்சாதி வகுப்பினர்தான் அதிகளவில் சம்பாதிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்.

இது முழுக்க முழுக்க திருமாவளவன் உள்ளிட்டோரின் ஆதரவை திமுக பெற வேண்டும் என்பதற்கான ஒரு ராஜதந்திர நடவடிக்கை என்றே கருதப்படுகிறது.

இதன் மூலமாக உயர் ஜாதி வகுப்பினருக்கு எதிராக ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை செயல்படுகிறார். என்பது நிரூபணம் ஆகிறது. ஆகவே இனிவரும் காலங்களில் ஏதாவது இந்த உயர் ஜாதி வகுப்பை சார்ந்தவர்கள் தேர்தலின் போது வாக்களிக்கும் போது அனைத்து விஷயங்களையும் யோசித்து வாக்களிக்க வேண்டும் என்பதே வெகுஜன மக்களின் கருத்தாக இருக்கிறது.