வேலை தேடுகிறீர்களா? இன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் உடனே பங்கேற்றுக் கொள்ளுங்கள்!

0
235

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர் வேலை வழங்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகிறார்கள். சென்னையில் இருக்கின்ற அனைத்து வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளனர்.

இந்த வேலை வாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி ஆலந்தூர் சாலையில் இருக்கின்ற ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இருக்கின்ற மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் டிகிரி ஆகிய கல்வித் தகுதியை பெற்ற எல்லோரும் பங்கேற்றுக் கொள்ளலாம்.

இந்த முகாமில் இருவதற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று கொண்டு காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர் இந்த முகாம் மூலமாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் இந்த முகாமில் பங்கேற்றுக் கொள்ள எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கோ. வீரராகவராவ் தெரிவித்துள்ளார்

Previous articleஇந்த ஒரு காயில் இத்தனை மருத்துவ பயன்களா! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!
Next articleவாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here