கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும்: பிரதமர் மோடி!

0
210

கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி கூறினார்.

கொரோனா பரவல், சீன எல்லை பிரச்சனை, பொருளாதார வீழ்ச்சி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அக்டோபர் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 18 நாட்களுக்கு, இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி,
‘கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உலகில் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது பொதுமக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவல் முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எம்பிக்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் பல சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். நாடு ஒன்றுபட்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

Previous articleபத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!!
Next articleநேற்றுடன் ஒப்பிடுகையில் சிறிதளவு மாற்றத்துடன் விற்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரங்கள் :?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here