2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தடயங்கள் கண்டெடுப்பு!

0
175

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தடயங்கள் கண்டெடுப்பு!

திருவண்ணாமலை வந்தவாசி அருகே இரண்டாயிரம் ஆண்டுகள் முன் வாழ்ந்த மனிதர்களின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கீழ்நமண்டி கிராமத்தின் மலையின் அடிவாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கீழ்நமண்டி என்ற கிராமத்தில் தெற்கு பகுதியில் உள்ள குன்றில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மனிதர்களை புதைத்த ஈமக்காடு என்றழைக்கப்படும் இடுகாடு இருப்பதை கண்டறிந்தனர்.

300க்கும் மேற்பட்ட வட்ட வடிவ கல் காணப்படுகின்றது.இந்த கற்களுக்கு அடியில் பேழையில் இருந்து மனிதர்களின் எலும்புக்கூடுகள், அவர்கள் பயன்படுத்திய இரும்பு பொருட்கள், மண் குடுவைகள், பானைகள் புதைந்து இருப்பது கண்டறியப்பட்டது.

அந்தக் காலத்தில் மனிதர்களை புதைத்த இடத்தை சுற்றிலும், வட்டமாக சிறு பாறைக்கற்களை பாதியாக அடையாளம் தெரிவதற்காக வைப்பர்.

அதன்படியே, இங்கே சுமார் 3 மீட்டர் முதல் 5 மீட்டர் விட்டம் கொண்ட கற்கள் பல அளவுகளில் காணப்படுகின்றன.

இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் க.ராஜன், சு.ராஜவேல் ஆகியோர் கூறியது,

கீழ்நமண்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், பெருங்கால கல்வட்டங்கள் ஆகும். மிகவும் சிறப்பு வாய்ந்த குழிக்குறி பாறைகள் இந்த பகுதியில் நான்கு இடங்களில் உள்ளன.

இதேபோலவே, தென்னிந்தியாவில் கர்நாடகத்திலும், தமிழ்நாட்டில் புதுக்கோட்டையிலும், தர்மபுரி பகுதியிலும் கிடைத்திருக்கிறது.

பெருங்கற்கால கல்வட்டங்கள், நெடுங்கல், குழிக்குறிபாறை, இரும்பு ஆயுதங்கள் மூலம், கருப்பு சிவப்பு வண்ண பானைகள் இரும்பு உருக்காலை அந்த காலத்தில் இருந்ததற்கான அடையாளங்கள் என கூறுகின்றனர். எனவே, தமிழக அளவில் இந்த கண்டெடுப்பானது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.தொல்லியல் துறையினர் முறையாக அகழாய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 

 

Previous articleகொண்டையில் வாழைப் பூ.. உடம்பில் வாழை இலை.. வாழைத் தோப்பாகவே மாறிய அஜித்தின் ரீல் மகள்!
Next articleரூ.1 லட்சம் கோடி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ! பிரதமர் மோடி !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here