நகசுத்தி உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்போ இதை செய்து தீர்வு காணுங்கள்!!

0
64
#image_title

நகசுத்தி உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்போ இதை செய்து தீர்வு காணுங்கள்!!

நம் நகம் மற்றும் கால்களில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளால் உருவாகும் நோய் பாதிப்பு நகசுத்தி ஆகும். இவற்றை கண்டுகொள்ளாமல் இருந்தோம் என்றால் கை மற்றும் கால் விரலில் செப்டிக்காகி ஆபத்தான நிலையைக்கு நம்மை கொண்டு சேர்த்து விட்டுடும்.

பொதுவாக இந்த நகசுத்தி விரல்களின் அல்லை பகுதியில் உருவாகக் கூடியவையாக இருக்கிறது. இதனால் விரல்களில் வீக்கம், வலி ஏற்பட்டு நம்மை படுத்தி எடுக்கும். இதனை இயற்கை முறையில் வீட்டிலேயே சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:-

வேப்பெண்ணெய் – 1/2 தேக்கரண்டி

கற்றாழை ஜெல் – 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் 1/2 தேக்கரண்டி வேப்பெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் கற்றாழை மடலில் இருந்து எடுத்த ஜெல் 1/2 தேக்கரண்டி சேர்க்கவும். அதோடு 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்திக் கொள்ளவும். கலவை சூடானதும் அடுப்பை அணைக்கவும்.

இந்த பேஸ்டை நகசுத்தி இருக்கும் விரல்களில் மெதுவாக தடவி விடவும். இவ்வாறு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை நகசுத்தி இருக்கும் விரல்களின் மேல் தடவ வேண்டும்.

இதனால் நகங்களில் இருக்கும் அழுக்கு, காயங்கள், வீக்கம் உள்ளிட்டவை நீங்கி விரல்களில் மீண்டும் நகசுத்தி வராமல் இருக்கும். இந்த வீட்டு வைத்தியம் விரைவில் நல்ல பலனைக் கொடுக்கும்.