சந்தால் மாநாடு விவகாரம் சூடுபிடிப்பு திரௌபதி முர்மு அதிருப்தி – தீவிரமாகும் அரசியல் மோதல்!!

0
240

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சர்வதேச சாந்தால் மாநாட்டில் கலந்து கொண்ட திரௌபதி முர்மு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்ததால் அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மாநாடு முதலில் பிதான்நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும் பின்னர் சிலிகுரி அருகே உள்ள கோசைன்பூருக்கு மாற்றப்பட்டதாகவும், இதனால் பல சாந்தால் சமூகத்தினர் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் குடியரசுத் தலைவர் வருகை தரும் போது மாநில முதல்வர் அல்லது குறைந்தபட்சம் ஒரு மூத்த அமைச்சர் வரவேற்குவது வழக்கம் என்றாலும், மம்தா  அல்லது அவரது அமைச்சர்கள் யாரும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து நரேந்திர மோடி இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்தார்; அதே நேரத்தில் மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவர் செயலகம் வழங்கிய நடைமுறையின் படியே வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்து குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

Previous article“ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியா யாரிடமும் அனுமதி தேவையில்லை!!
Next articleஉலக எண்ணெய் சந்தையில் இந்தியா பொறுப்பான நாடு: அமெரிக்க தூதர் பேச்சு!!