தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் பிட்டாக இருக்க இதை காலையில் 1 கிளாஸ் குடிங்க!!
நம்மில் பெரும்பாலானோர் முறையற்ற உணவு முறையின் காரணமாக எடை அதிகரித்து காணப்படுகிறார்கள். உடல் எடை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும்.
உடல் எடை அதிகரிக்க காரணம்:
*எண்ணெயில் பொரித்த உணவை உண்பது
*துரித உணவு
*அதிகளவு இறைச்சி மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு உண்பது
*முறையற்ற உறக்கம்
*மன அழுத்தம்
*உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமல் போதல்
*அதிக உணவு உண்பது
உடல் எடையை கட்டுக்குள் வைக்க செய்ய வேண்டியவை:
*தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்தல்
*வாக்கிங் அல்லது ஜாகிங் செல்லுதல்
*உடலை அசைத்தபடி வேலை செய்தல்
*எண்ணெய், கொழுப்பு அதிகம் சேர்க்கப்படாத உணவு உண்ணுதல்
*உடல் எடையை அதிகரிக்க கூடிய உணவுகளை அதிகளவில் உண்ணுவதை தவிர்த்தல்
*8 மணி நேர உறக்கம்
*ஹோட்டல் உணவுகளை தவிர்த்தல்
*கீரைகள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுதல்
*பழச்சாறு பருகுதல்
உடல் எடை குறைய எனர்ஜி ட்ரிங்க் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:-
*ஆப்பிள் சீடர் வினிகர் – 2 தேக்கரண்டி
*தண்ணீர் – 1 கிளாஸ்
ஆப்பிள் சீடர் வினிகர் ட்ரிங்க் செய்யும் முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அவை வெதுவெதுப்பானதும் அடுப்பை அணைத்து ஒரு டம்ளருக்கு ஊற்றிக் கொள்ளவும்.
அடுத்து ஆப்பிள் சீடர் வினிகர் 2 தேக்கரண்டி அளவு அதில் சேர்த்து கலந்து பருகவும். இதை காலையில் உணவு உண்பதற்கு 1/2 அல்லது 3/4 மணி நேரத்திற்கு முன் பருக வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து பருகுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் பிட்டாகவும், ஆரோக்யமாகவும் இருக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து புளிக்க வைக்கப்படுகிறது. பின்னர் இதை வடிகட்டி ஆப்பிள் சீடர் வினிகர் தயாரிக்கப்படுகிறது.
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ;ஊட்டச்சத்துக்கள்:-
*அமினோ அமிலங்கள்
*பொட்டாசியம்
*ஆண்டி-ஆக்சிடெண்டுகள்
ஆப்பிள் சீடர் வினிகர் ட்ரிங்க் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய பயன்கள்:-
*உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
*உடலில் தேங்கி கிடக்கும் நச்சு கழிவுகள் வெளியேறும்.
*உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும்.
*உடல் பருமன் குறையும்.
*பசியை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும்.
*முகம் அழகு பெற பெரிதும் உதவும்.
*முடி வளர்ச்சிக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
*அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் இந்த ட்ரிங்கை பருவது நல்லது.
*செரிமான பிரச்சனை இருபர்களுக்கு இந்த ஆப்பிள் சீடர் வினிகர் சிறந்த தீர்வாக இருக்கும்.