குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

0
38
#image_title

குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

நம் குடல் ஆரோக்கியமாக இருந்தலே உடலில் பல பாதிப்புகளை தவிர்த்து விட முடியும். ஒருவேளை குடல் ஆரோக்கியத்தை இழந்தால் செரிமான கோளாறு, வயிறு உப்பசம், வாயு, மலச்சிக்கல், குடற்புண் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும்.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*தேன் – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடானதும் அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஒரு டம்ளரில் ஊற்றி 1 தேக்கரண்டி தூயத் தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் குடலில் தேங்கி கிடந்த நச்சுக் கழிவுகள் முழுவதும் மலம் வழியாக வெளியேறி விடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி சாறு – 1 1/2 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

சிறிய துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கி கொள்ளவும். பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு பிழிந்து கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி தூயத் தேன் கலந்து பருகினால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*ஆளி விதை – 1 தேக்கரண்டி

*தண்ணீர் – 1 கிளாஸ்

செய்முறை:-

1 தேக்கரண்டி ஆளி விதியை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும். இதை ஒரு டம்ளர் நீரில் கலந்து பருகினால் குடலில் உள்ள நச்சு கழிவுகள் வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்கும்.