வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரே நாளில் குணமாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

Photo of author

By Divya

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரே நாளில் குணமாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

வாய்ப்புண் மற்றும் வயிற்று புண் ஏற்பட முக்கிய காரணங்களாக மன அழுத்தம்,தாமதமான உணவு பழக்கம்,புளிப்பு மற்றும் காரணம் நிறைந்த உணவுகள் ஆகியவை சொல்லப்படுகின்றன.

இந்த பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்வது மிகவும் முக்கியம்.இல்லையென்றால் இவை அடுத்த நிலையான அல்சர் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.இந்த பிரச்சனைக்கு தண்ணீர் நிறைந்த பழங்கள்,தயிர்,மோர்,அதிக காரம் மற்றும் புளிப்பு இல்லாத உணவு போன்றவற்றை எடுத்து வருவதன் மூலம் நல்ல தீர்வு காண முடியும்.

அதேபோல் மணத்தக்காளி கீரை வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்ணுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.இந்த கீரையில் வைட்டமின் இ,டி,நீர்ச்சத்து,தாது உப்பு,புரோட்டின் உள்ளிட்டவை நிறைந்து இருக்கிறது

தேவையான பொருட்கள்;-

*மணத்தக்காளி கீரை – 1 கைப்பிடி அளவு

*சீரகம் – 1 தேக்கரண்டி

*தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி

*கல் உப்பு – சிறிதளவு

செய்முறை:-

ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 கைப்பிடி அளவு மணத்தக்காளி கீரை சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அலசிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் அலசி வைத்துள்ள மணத்தக்காளி கீரை சேர்த்து கொள்ளவும்.

பின்னர் 3 தேக்கரண்டி அளவு துருவிய தேங்காய்,1 தேக்கரண்டி சீரகம் மற்றும் சிறிதளவு கல் உப்பு சேர்த்து சில வினாடி அரைத்து கொள்ளவும்.

பின்னர் அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும்.
இதை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தோம் என்றால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் பிரச்சனை அடியோடு நீங்கி விடும்.