மலக்குடலில் இறுகி கெட்டி படிந்த மலம் இளகி வெளியேற “வெற்றிலை கசாயம்” செய்து குடிங்கள்!
துரித உணவு, பதப்படுத்தபட்ட உணவு, மாவு சத்து நிறைந்த உணவு ஆகியவற்றால் மலசிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். முறையாக மலம் வெளியேற வில்லை என்றால் உடலில் பல நோய்கள் ஏற்படும்.
எனவே மலக்குடலில் தேங்கி கிடந்த மலம் அடித்துக் கொண்டு வெளியேற வெற்றிலை கசாயம் செய்து குடிங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வெற்றிலை ஒன்று
2)கடுக்காய் பொடி 1 ஸ்பூன்
3)விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
செய்முறை:-
உரலில் ஒரு வெற்றிலையை போட்டு இடித்து எடுக்கவும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் இடித்த வெற்றிலை சேர்த்து சூடாக்கவும்.
பிறகு ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடி போட்டு மிதமான தீயில் நன்கு காய்ச்சிக் கொள்ளவும். வெற்றிலை மற்றும் கடுக்காய் பொடி நன்கு கலந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
அதன் பின்னர் ஒரு கிளாஸில் இந்த பானத்தை வடிகட்டி ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து குடிக்கவும். காலையில் குடித்தால் உடனடி பலன் கிடைக்கும். இந்த பானத்தை ஒரு நாள் மட்டும் குடித்தால் போதும் குடலில் தேங்கி கிடந்த மலம் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்.