வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் நீங்க இந்த பாலை குடிங்க!

0
115
#image_title

வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் நீங்க இந்த பாலை குடிங்க!

எளிதில் செரிக்காத உணவு, காரமான உணவு, எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகளால் உடலில் அதிகளவு கெட்ட வாயுக்கள் தேங்குகிறது. இதனால் பொது வெளியில் நடமாட முடியாமல் பலரும் அவதிப்படுகின்றனர். இந்த கெட்ட வாயுக்களை வெளியேற்ற பாலில் சில பொருட்களை கலந்து ககுடிங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பால்
2)சுக்கு
3)மிளகு
4)பூண்டு
5)வெற்றிலை

செய்முறை:-

முதலில் 4 மிளகு மற்றும் ஒரு துண்டு சுக்கை உரலில் போட்டு இடித்து பொடி செய்து கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து எடுக்கவும். பிறகு ஒரு வெற்றிலையை சிறு துண்டுகளாக நறுக்கி உரலில் போட்டு இடித்து எடுக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும்பால் ஊற்றி சூடாக்கவும். பின்னர் இடித்து வைத்துள்ள மிளகு, பூண்டு, சுக்கு மற்றும் வெற்றிலை போட்டு நன்கு காய்ச்சவும்.

பிறகு இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்றில் தேங்கி கிடக்கும் கெட்ட வாயுக்கள் முழுமையாக நீங்கும்.