வறட்டு இருமல் மற்றும் சளி தொல்லை நீங்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!! 2 நிமிடத்தில் மொத்த பாதிப்பும் சரியாகும்!!

Photo of author

By Divya

வறட்டு இருமல் மற்றும் சளி தொல்லை நீங்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!! 2 நிமிடத்தில் மொத்த பாதிப்பும் சரியாகும்!!

பொதுவாக சளி மற்றும் இருமல் தொல்லை வந்துவிட்டால் நம்மை ஒரு வழி செய்து விடும்.இந்த பாதிப்போடு தொண்டை வலி மற்றும் காய்ச்சலும் கூடவே தொத்திக் கொள்ளும்.இதனால் நமக்கு பெரும் தலைவலி தான் உண்டாகும்.

இந்த இருமல் மற்றும் சளி தொல்லை சிலருக்கு ஒரு வாரத்தில் சரியாகும்.ஒருவருக்கு மாதம் கடந்தாலும் சரியாகாது.இந்த பாதிப்புக்கு இயற்கை வழிகளில் நிச்சயம் தீர்வு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*துயத் தேன் – 1 தேக்கரண்டி

*ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை அளவு

செய்முறை:-

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி அளவு துயத் தேன் எடுத்துக் கொள்ளவும்.பின்னர் 1 சிட்டிகை அளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் இதை வாயில் போட்டு சாப்பிடவும்.இந்த தேன் சாப்பிட்ட அடுத்த 5 நிமிடம் தண்ணீரோ,உணவோ எடுத்துக் கொள்ள கூடாது.ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் சில ஒருசில நாட்களில் வறட்டு இருமல்,சளி தொல்லை முழுமையாக நீங்கு விடும்.

சளி இருமல் பாதிப்பு குணமாக மற்றொரு ரெமிடி:-

தேவையான பொருட்கள்;-

*துளசி – 7

*கற்பூரவல்லி – 2(மீடியம் சைஸ்)

*மிளகு – 3 அல்லது 4(இடித்தது)

*மஞ்சள் – 1/4 தேக்கரண்டி

*தேன் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பவுலில் 7 துளசி இலை மற்றும் 2 கற்பூரவல்லி இலைகளை சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுத்தம் செய்யவும்.

அடுத்ததாக அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள துளசி இலை மற்றும் கற்பூரவல்லி இலைகளை கிள்ளி போட்டுக் கொள்ளவும்.

தொடர்ந்து ஒரு உரலில் 3 அல்லது 4 கருப்பு மிளகு சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.அதை கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளவும்.அதோடு சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி சேர்க்கவும்.

இவை நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.பின்னர் ஒரு டம்ளரில் வடிகட்டி அதில் தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகவும்.இவ்வாறு செய்வதன் மூலம் சளி மற்றும் இருமல் பாதிப்பு சரியாகும்.