100 வயதிலும் மூட்டு மற்றும் முதுகு எலும்பு வலிமையாக இருக்கும் இந்த சத்து உருண்டை சாப்பிட்டு வந்தால்!!

Photo of author

By Divya

100 வயதிலும் மூட்டு மற்றும் முதுகு எலும்பு வலிமையாக இருக்கும் இந்த சத்து உருண்டை சாப்பிட்டு வந்தால்!!

இன்று மூட்டு வலி,முதுகு வலி வருவது சாதாரண ஒரு பாதிப்பாக மாறிவிட்டது.முன்பெல்லாம் முதுமையில் சந்திக்க கூடிய பாதிப்பாக இருந்த மூட்டு மற்றும் முதுகு வலி இன்றைய மோசமான உணவுமுறை பழக்கத்தால் இளம் தலைமுறையினரை பாதிக்கும் நோயாக உருவெடுத்து விட்டது.

ஆரம்ப நிலையிலேயே இதை கவனித்து உரியத் தீர்வு காண்பது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து
2)பாதாம் பருப்பு
3)நிலக்கடலை
4)நாட்டு சர்க்கரை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் கருப்பு உளுந்து சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதே வாணலியில் 1/2 கப் வேர்க்கடலை போட்டு லேசாக வறுத்து ஆற விடவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் கருப்பு உளுந்து,வேர்க்கடலை மற்றும் 1//4 கப் பாதாம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

இந்த சத்து உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி,எலும்பு தேய்மானம்,முதுகு வலி வாழ்நாள் முழுவதும் ஏற்படாது.