உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!!
நம்மை பயத்தோடு அருவருக்க செய்யும் ஊர்வனவைகளில் ஒன்று பூரான்.இந்த ஒருவரை கடித்தால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தது என்றாலும் கடித்த சிறிது நேரத்தில் தடுப்பு,உடல் உபாதை ஏற்படத் தொடங்கும்..
பூரான் கடித்த நபர்கள் முதலில் பதட்டபடமால் இருக்க வேண்டும்.பின்னர் இதற்கு உரிய வைத்தியத்தை செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள்:-
*கருஞ்சீரகம் – 3 தேக்கரண்டி
*பால் – 3 தேக்கரண்டி (காய்ச்சாத பால்)
*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
*தேன் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 3 தேக்கரண்டி பால் சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் 3 தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூள் 1/4 எடுத்து அதில் சேர்த்து கொள்ளவும்.
பின்னர் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இந்த தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை பூரான் கடித்த இடத்தில் போட்டு மெதுவாக தேய்த்து விடவும்.பின்னர் ஒரு’காட்டன் துணி கொண்டு இதை கட்டிக் கொள்ளவும்.இப்படி செய்வதன் மூலம் பூரான் விஷம் உடனடியாக முறிந்து விடும்.
பூரான் கடி குணமாக மேலும் சில வழிகள்:-
*மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலை 1 மற்றும் மிளகு 5 எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.இந்த விழுதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து விழுங்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் பூரான் விஷம் முறியும்.
*அதேபோல் 1 கைப்பிடி குப்பைமேனி இலை மற்றும் மஞ்சள் சிறிதளவு எடுத்து அரைத்து பூரான் கடித்த இடத்தில் தடவ வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் விஷம் முறியும்.
*பூரான் கடித்த இடத்தில் சிறிதளவு மஞ்சள் தூள் வைத்தால் பூரான் விஷம் உடலில் மற்ற இடங்களுக்கு பரவாமல் இருக்கும்.