நயன்தாரா- விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரம்… அடுத்த கட்ட நடவடிக்கை.. மூவர் விசாரணை குழு!

0
254

நயன்தாரா- விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரம்… அடுத்த கட்ட நடவடிக்கை.. மூவர் விசாரணை குழு!

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் வாடகைத் தாய் மூலமாக குழந்தைகள் பெற்றதாக தகவல்கள் வெளியாகின.

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் மிகவும்  பிரமாண்டமாக நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இவர்களது திருமணத்தில் அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல் நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் நிறைவுபெற்ற நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தாங்கள் இரட்டை ஆண்குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த குழந்தைகளை அவர்கள் வாடகைத் தாய் மூலமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர்கள் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்தியாவில் வாடகைத் தாய் மூலமாக குழ்ந்தை பெற்றுக்கொள்ள பல சட்டங்கள் உள்ளன. அதில் முக்கியமானது திருமணமான தம்பதிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால்தான் வாடகைத் தாயை அணுக முடியும். அதையெல்லாம் மீறிதான் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யனிடம் கேட்ட போது “அவர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது இது சம்மந்தமான விசாரணைக்காக மூவர் கொண்ட விசாரணைக் குழுவை சுகாதாரத்துறையினர் அமைத்துள்ளது. அவர்கள் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு தகவல் அளித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Previous articleசாலைகளில் குப்பை கொட்டினால் இனி அபராதம்! வெளியானது அறிவிப்பு 
Next articleதொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் இப்படியொரு கொடுமையா? மருத்துவர் ராமதாஸ் கவலை 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here