தினந்தோறும் ஷூட்டிங் முடிந்ததும் என் ரூமுக்கு வருவது தான் அவரது வேலை.. ஷோபன் பாபு குறித்து சுவாரஸ்ய தகவல்!!

0
374
His job is to come to my room after shooting everyday.. Interesting information about Shoban Babu!!
His job is to come to my room after shooting everyday.. Interesting information about Shoban Babu!!

தினந்தோறும் ஷூட்டிங் முடிந்ததும் என் ரூமுக்கு வருவது தான் அவரது வேலை.. ஷோபன் பாபு குறித்து சுவாரஸ்ய தகவல்!!

70 ஸ் ஹீரோக்களை பட்டியலிட்டால் அதில் முதல் ஐந்து இடத்தில் ஷோபன் பாபு இருப்பார். இவர் புராண கதைகள் காதல் காட்சி என அனைத்திலும் தனது தத்ரூபமான நடிப்பால் மக்கள் மனதை வென்றவர். இதனால் இவருக்கு பெண்கள் ரசிகர் கூட்டம் அதிகம் என்றே கூறலாம். அதுமட்டுமின்றி ஷோபன் பாபு உடன் நடிக்கும் நடிகைகளிடம் பழகும் விதமும் மிகவும் பாராட்டுவதற்குரிய விதமாக இருக்கும்.

இதனால் பல ஹீரோயின்கள் இவரிடம் தானாக வந்து பேச முன் வருவர். இது குறித்த சுவாரசியமான பதிவை எழுத்தாளர் ஜெயக்குமார், பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், சோபன் பாபு மற்றும் சந்திரகலா இணைந்து நடித்த படம் தான் சம்பூர்ண ராமாயணம். இந்த படத்தில் நடிக்கும் நடிகை தினந்தோறும் ஷோபன் பாபு தங்கி இருக்கும் அறைக்கு செல்வார். இது சரியானதாக இருக்காது என்று எண்ணி இதனை தவிர்ப்பதற்காகவே ஷோபன் பாபு நாங்கள் இரவு நேரத்தில் கேம் பயர் போடும் இடத்திற்கு வந்துவிடுவார்.

அதுமட்டுமின்றி கேம் பயர் முடிந்ததும் தன்னை அவரது அரைக்க அழைத்து சென்று பாட்டு பாட சொல்வார். தொடர்ந்து பல நாட்களாக இது நடந்து வந்ததால் காரணம் ஏதும் எனக்கு தெரியவில்லை. நாளடைவில் தான், ஒரு ஹீரோயின் தனது அறைக்கு வருவது சரியானதாக இருக்காது பார்ப்பவர்கள் தப்பாக நினைப்பார்கள் என்று எண்ணி ஷோபன் பாபு தன்னை அவரது அறைக்கு தினம்தோறும் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் இப்படி மற்றவர்களுக்கும் தனக்கும் எந்த ஒரு கெட்ட பெயரும் வரக்கூடாது என்று எண்ணியவர் ஜெயலலிதாவுடன் பழகும் பொழுது அப்படியே மாற்றம் அடைந்திருந்தார். இவராகவே தானாக சென்று ஜெயலலிதா அவர்களின் அருகில் உட்கார்ந்து பேசுவார். அப்படித்தான் இவர்களின் காதல் காவியம் ஆரம்பித்தது என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Previous articleதமிழ்நாடு 0/0.. ஆந்திரா + பீகார் 41 ஆயிரம் கோடி!! பட்ஜெட்டில் லாபமடையும் கூட்டணி கட்சிகள்!!
Next articleஉயிரை பறிக்கும் டெங்கு மலேரியா மற்றும் பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?