கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது?  முதல்வர் சொன்ன அறிவுரை !!

0
102
#image_title
கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது?  முதல்வர் சொன்ன அறிவுரை!
கோடைகால வெப்பத்திலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
இந்த கோடை கால வெப்பநிலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் பொதுமக்கள் பல்வேறு விதங்களில் அவதியடைந்து வருகின்றனர். வெயில் அதிகமாக இருக்கும் போது வெளியே செல்லக்கூடாது, நீர் அகாராங்களை பருக வேண்டும் என மருத்துவர்களும் பல அறிவுரைகள் கூறினாலும் அது போதுமானதாக இருப்பதில்லை. குறிப்பாக யாரும் அதை பின்பற்றுவதும் இல்லை.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். கூட்டத்தில் கோடைகால வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
1) கோடை வெப்பத்தை எதிர்கொள்வதற்கான அரசின் முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும்
2) திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்கள் மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
3) அரசு மருத்துவமனைகளில் போதிய ஓ.ஆர்.எஸ். இருப்பு வைக்க வேண்டும்; வெப்ப அலை தாக்கத்திற்கு உள்ளாவோருக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்து இருப்பு வைக்க வேண்டும்
4) மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர், இளைப்பாறும் கூடங்கள், அவசர மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்
5) 100 நாள் திட்டப்பணியாளர் உள்ளிட்டோர் பணிகளை முன்கூட்டியே தொடங்கி முடிக்க வேண்டும் – என்பனவற்றை கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.